”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

வாழ்க்கையை தேடி…

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வேலை தேடி திருப்பூர் வருவது தொடர்ந்த வண்ணதபகம் உள்ளது. இப்படி வாழ்க்கை தேடி இடம் பெயர்ந்த மக்களில் பெரும் பகுதியினர் 5 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் திருப்பூர் நகரத்தில் வசிக்கக்கூடிய நிலைமை உள்ளது. இதில் குறிப்பாக திருப்பூர் மாநகரத்தில் உள்ள 80க்கும் மேற்பட்ட குடிசைப்பகுதிகளில் சாதாரண ஏழை எளிய மக்களே வசிக்கும் நிலை உள்ளது.
திருப்பூர் மாநகராட்சியின் 2005 ஆம் ஆண்டு கணக்குப்படி இக்குடிசைப்பகுதிகளில் சுமார் 25,000க்கும் மேற்பட்ட குடும்பங்களும், 1.25 லட்சம் மக்கள் வாழும் நெருக்கடி மிக்க பகுதியாக உள்ளது. இங்கு வாழும் மக்கள் இட நெருக்கடியின் உச்சத்தில் வாழ வேண்டிய அவலத்தில் உள்ளது. இதன் விளைவு சிறிதான அறைக்கே கூட ஆயிரக்கணக்கான ரூபாய் வீட்டுவாடகை கொடுக்க வேண்டிய நிலையும், ஒரே வீட்டில் 6 பேர் 7 பேர் என வாழ்க்கை நடத்த வேண்டிய நிலையில் உள்ளது.
வறுமையின் கொடுமை காரணமாக வாழ வழியில்லாமல் குற்றாலம் அருகில் துவங்கி சங்கரன் கோவில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வரை ரயிலிலும், பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை வழியாக வால்பாறை டீ எ°டேட்டுகளுக்கு எப்படி கொத்தடிமைகளாக 1930 களில் மக்கள் வெள்ளையர்களால் நடக்க வைத்தே கழுதை பொதி சுமப்பதைப் போல அந்த கிராமப்புற இளம் கூலி களை ஆண், பெண் இருபாலரையும் தோட்ட வேலைக்கு கொண்டு வரப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்டார்கள்.
இந்த கஷ்டங்களை எதிர்த்து போராட முடியாமல் அந்த கிhhமப்புற கூலி தொழிலாளிகள் தங்களது ஊர் தொழிலாளி யாராவது அந்த கொத்தடிமைகளில் இருக்கிறானா? என பார்த்து அவர்களோடு இணைந்து வாழும் சூழல் இருந்தது. ஏனெனில் தன்னுடைய கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து கொள்ள தன்னை போல ஒரு சக தொழிலாளியை தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
அதைப் போல் இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம் போன்ற பகுதிகளில் இருந்து இளம் பெண்களை அழைத்து வந்து பணிபுரிய வைக்கும் நிலை உள்ளது. அதே போல் தனது ஊரை சேர்ந்த, தனது சொந்த சாதியை சார்ந்தவர்களை அடையாளம் கண்டால் அவர்களோடு குறிப்பிட்ட ஊர்களில் சேந்து வாழும் நிலை உள்ளது.
இடம் பெயர்ந்த மக்களின் சமூக கலாச்சாரம் என்பது அவர்களை ஒரு குறிப்பிட்ட மையங்களில் குவிமயமாக வாழ வைக்கிறது. பணிப்பாதுகாப்பு, பணிச்சுமை, தனது குடும்ப பாதுகாப்பு உணர்வு ஆகிய காரணிகளின் காரணமாக இடம் பெயர்ந்த இம்மக்களின் வாழ்வாதாரம் என்பது தற்போது கேள்விக் குள்ளாக்கப்படுகிறது.
இதனால் சொந்த ஊர், சாதி ஆகியவைகள் முன்னுக்கு வரும் சூழல் ஏற்படுகிறது. அனைவருக்குமான கல்வி, பாதுகாப்பான வேலை, சுகாதாரம் என்கிற போது எங்கு வேண்டுமானாலும் வாழலாம் என்ற நிலை ஏற்படும். அது மறுக்கப்படும் போது அதை பெற ஜனநாயக பூர்வமான போராட்டத்தை நடத்துவதற்கு பதிலாக சாதிய ரீதியாக சுருங்கிக் கொண்டு தனது இனத்திற்கான சலுகைகள் வேண்டும், முன்னுரிமை வேண்டும் என்ற கோசத்தோடு திருப்பூரில் பல்வேறு சாதிய அமைப்புகள் உழைப்பாளி மக்களை தங்கள் பின்னால் அணி திரட்டும் போக்கு என்பது உருவாகி வருவது வேதனைக்குரியது.
இடம் பெயர்ந்து வந்த உழைப்பாளி மக்களும் தங்களது சொந்த அனுபவத்தில் இருந்து வாழ்வதாரத்திற்கான போராட்டத்தினை நடத்துவதற்கு பதில் சமரசம் செய்து கொண்டு கிடைப்பதை வைத்து வாழ்க்கை நடத்துவது என்ற நிலையே உள்ளது. இதனால் உழைப்பாளி மக்களின் ஒற்றுமை என்பது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
கிராமப் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டு, விவசாயம் பாழ்பட்டு ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால் தொடர்ந்து வேகவேகமாக கிராமத்தை காலி செய்து விட்டு நகரத்தை நோக்கி இடம் பெயருதல் நடைபெற்றுவருகிறது. விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்தது. இடம் பெயருதலை வேகப்படுத்துகிறது.
இடம் பெயர்ந்து வந்துள்ள உழைப்பாளிகளின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து அனைத்துத் தரப்பு மக்களின் ஒருங்கிணைந்த போராட்டமே இதற்கு தீர்வாகும்.. ஒரு குறிப்பிட்ட மாவட்டம், சாதி, ஊர் என ஒதுக்கி வைக்காமல் அனைவரும் உழைப்பாளிகள் என்ற அடிப்படையில் ஒன்றுபட்ட போராட்டத்தை அனைவருக்குமாக அம்மக்களை ஜனநாயக நீரோட்டத்தில் இணைக்கப்பயன்படும்.
1. நகர, ஒன்றிய பகுதிவாரியாக கூடுதலான சமூக நலக்கூடங்களை கூடுதலாக அமைப்பது.
2. குடியிருப்பு பகுதிகளுக்கு வாரம் ஒரு முறை மருத்துவக்குழு தொடர்ந்து ( மொபைல் மெடிசன் ) செல்வதும், மருத்துவ சேவை செய்வது முக்கியம்.
3. அனைத்துவிதமான சட்ட பாதுகாப்புகளை உறுதி செய்வது.
4. கல்விநிலையங்களை கூடுதல் படுத்துவதும், இலவசக் கல்வி என்பதை உறுதி செய்வது.
5. இடம் பெயர்ந்த மக்களின் சமூக பழக்க வழக்கங்களை அங்கீகரிப்பது. அவர்களின் பண்பாட்டை வளர்த்தெடுப்பது. சமுக நல்லிணக்கத்தை உருவாக்குவது.
6. அவர்களின் வேலைக்கான உத்திரவாதத்தை உறுதிப்படுத்துவது.
7. பொழுது போக்கு அம்சங்களுக்கு பகுதி வாரியாக புதிய குழந்தைகளுக்கான பூங்காக்கள், நுhலகங்கள், சாலையோர பூங்காக்கள் மற்றும் கலையரங்கங்கள் உருவாக்குவது.
அரவிந்தன்

No comments:

Post a Comment