”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

அப்பாவின் தாலாட்டு
அரவிந்தன்
திருப்பூர்,






கண்ணான கண்மணியே கண்ணுறங்கு சூரியனே
தேசம் காத்தல் செய்ய
உன் சேவை தேவையப்பா.. ( கண்ணான )

அந்தி சாயுவதும்,
அடுத்தநாள் எழுச்சிக்கப்பா..
அன்பான கண்மணியே
ஆர்ப்பரித்து நீயுறங்கு.. ( கண்ணான )

காலம் மாறுமப்பா
கண்மணியே நீ நம்பு..
கஷ்டம் தீரணும்னா.
கட்டாயம் போராடு.. ( கண்ணான )

முல்லைக்கு தேர் உண்டு,
மயிலுக்கு போர்வை உண்டு,
ஓளவைக்கு கனியுண்டு,
மக்களுக்கு என்ன உண்டு? ( கண்ணான )

உன் சேவை தேவையப்பா..
உலகம் மாறிடவே..
ஊர் வெளி மக்களெல்லாம்
ஊருக்குள்ள வரவேணும்..
ஒன்னா சேர்ந்து வாழ
உன் சேவை தேவையப்பா..( கண்ணான )

சாதி, மதம் நமக்கில்லை
சண்டையெதும் வேண்டமே..
ஆணும், பெண்ணும் சமமாக
அன்போடு வாழ்ந்திடணும்..
பெண்ணடிமை தீர்ந்திடவே..
பேதமற்று வாழ்ந்திடவே..
எழுந்து நின்று போராட
இப்ப நீ கண்ணூறங்கு.. ( கண்ணான )