”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

கோலமிடுகிறேன்

[01/02, 14:21] Muthukannan: கனவுகள் நம்மை புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும். ஆதலால் தான் மாமனிதர்கள் கனவு காண சொல்கிறார்கள் ஆம், சிறகை விரி விண்ணில் பற பார்வையால் படமெடு கடந்த காலத்தை நிகழ்காலத்தில் நின்று வாசி,.. உனக்கான எழுத்தும் சொல்லும் வாகை சூடும் [02/02, 07:36] Muthukannan: காட்டை ஆண்ட ரூசியின் அகோர உருமல், சாமான்யர்களை வேட்டையாடும் ஏகாதிபத்திய செருக்கு, உன்னை வீழ்த்தும் வேடன் நாங்களே [02/02, 07:41] Muthukannan: உனது முகம் பார்க்க எண்ணினேன் இதழை விரித்து புன்னகையும் செய்துவிட்டாய் [02/02, 08:03] Muthukannan: அன்பின் உரைகல்லாய் நீ ! மலராத மொட்டும் மலர்ந்த புன்னகையும் இணைப்பின் வாசல் நீ... [02/02, 13:46] Muthukannan: மலர்களின் ராணியாய் நீ அதனால் தான் அதிகம் நேசிக்கப்படுகிறாயா ? இங்கேயும் வர்க்கம் தான் ஒளிந்துள்ளதோ ? [03/02, 08:25] Muthukannan: உன்னிலும் பல முகங்களா ? ஆனால் உனது இதழ் விரித்த புன்னகை எப்போதும் போல் [04/02, 07:07] Muthukannan: இறுகிய பாறையிலும் தனித்த அழகாய் மிளர்கிறாய் உனது காதல் பாறையையும் கசிய வைத்தது ! [04/02, 07:23] Muthukannan: பட்டுபோனாதாக சோகம் கீதம் இசைத்தது சமூகம்.. என்னை துளிர்க்க வைத்து உனது ஈரம், இப்போது பேசு படுபொருள்... போதியின் அடியில் இப்படி ஒரு அன்பு கிடைத்திருந்தால் புத்தனாகியிருப்பானா? சித்தார்த்தன்? [17/03, 22:29] Muthukannan: என் வீட்டு பறவை வானில் மட்டுமல்ல மண்ணை துளைத்தும் பறக்கும் ஆற்றல் படைத்தது... என் வாசலில்,.. கண்ணும், விரலும் சந்திக்க மலர்ந்தது புதிய மலர்களாய் கோலங்களில் இப்போது இலவம்பஞ்சாக எனது மனம் உயர பறக்கிறது நியூட்டனின் மூன்றாம் விதிமட்டுமல்ல.. உனது பேச்சும் பார்வையின் ஆழம் என்னை உந்தி தள்ளுகிறது.. கோலம் வரைகிறேன்< 19.3.23 ஆரக்காலின் மையம் நீ அன்பின் இணைப்பில் சக்கரமாய் சுழற்றுகிறாய் ! உன் விரலின் நுணியில் காந்தல் மலராய் மலர்கிறேன்., 20. 3.23 அகத்தின் அழகு முகத்தில் தெரியும் மூத்தோர் வாக்கு,.. சிந்தையின் அழகு கை வண்ணமாய் ! மகிழ்வின் நிறங்களில் மட்டுமல்ல மருந்திலும் மஞ்சளுண்டு கருத்தை கச்சிதமாய் இதயத்தில் இணைத்த கோலமாய் வாழிய பல்லாண்டு ! 21.3.23 அகம், புறம் அன்பு, வீரம் துக்கம், இன்பம் உணர்ச்சிகளின் குவியலை அறுகோணமாக்கி இயற்கையின் அதிசயம் கண்டாய்.. ஆம் ஒன்றின் ஒன்றாக ! உயிரின் உயிர்ப்பே மலர்தலில் உள்ளது ! [22/03, 07:24] Muthukannan: வெள்ளி இழையை தோரணமாக்கி தகித்திடும் வெம்மையை தணித்திடும் சின்ன இலைகளின் வான குடையாய் ! இரைத்தெறிந்த வெள்ளி மீன்களை கோல வலையில் அன்பால் கட்டிய வித்தையை எங்கு கற்றாய் ? தோழி.. ஓ காலை புலர்ந்ததோ ! [22/03, 07:35] Muthukannan: தங்கள் சித்தம் அம்பறா துணியின் அம்பு நான்! வில்லில் பூட்டி நாணேற்றுகிறீர் இலக்கில் நான்... 23.3.23 சிறு புன்னகை கோபக் கடலை உள்ளிழுக்கும் ! சிறு கோபமும் பெருங்கடலை கொதிக்க வைக்கும் ! வாழ்வியல் அழகை புள்ளிகளின் இணைப்பில் மலர வைத்துள்ளாய்! எவன் சொன்னான் கோலம் பெண்களின் வேலையென்று ! ஊன்றிப் பார் அது வாழ்வியலை சொல்லும் அற்புத கலை! ஒவ்வொரு நாள் புன்னகையை படம் பிடிப்பது.. உன் விரலில் அது உயிர் பெறுகிறது ! புள்ளியின் இணைப்பு கவிதையின் கருவாகிறது. உள்ளடக்கத்தில் இருந்து உருவமாவது இயங்கியல் விதி., 24.3.23 அறுசுவை கொட்டிய குடுவையாய் இதழின் இணைப்பே மலரின் 🌹 அழகு சிற்பியின் நேர்த்தியாய் அடுக்கிய இதழ்கள் எங்கள் குருதியில் நனைந்த சிவப்புமல்லியே ! ஆக்டோபஸ் ஆய் கொள்ளை கொள்கிறாய்,. 25.3.23 சூரிய புரவிகளே புழுதியின் உயர்தலில் உங்களின் திசை வேகம் எதற்கு இந்த ஆர்ப்பரிப்பு மதியிழந்தவர்களின் அதிகாரத்தை எதிர்த்த கோபமா ? உங்களோடு வருகிறோம் சக்கரவியூகத்தை உடைதெறியும் வித்தை கற்றவர்கள் நாங்கள் அபிமன்யுயல்ல பார்த்தசாரதிகளாய் !! வருகிறோம்... 26.3.23 [26/03, 09:27] Muthukannan: ஒன்றாய் இதழ்விரித்து ஒன்றாய் இதழ் குவித்து மஞ்சத்தில் மலர்ந்து நிற்கிறாய் எண்ணத்தில் கோலமிட்டாய் எதற்கு சிறைகதவு அன்னமாய் நீந்தி அகிலம் சுற்றிடுவோம் ! மனிதம் வளர்க்கும் மனங்களை பெற்றிடுவோம்... [26/03, 09:29] Muthukannan: பெண்மை மறுக்கும் சனாதானத்தை ஒவ்வொரு குத்திலும் கதற வைத்தாய் தங்க பெண்ணே நின் புகழ் வாழ்க ! மகரந்தமாய் சிந்தனை காந்தமாய் மொழி மின்சார புன்னகை உன்னில் கண்டேன் இருந்தும் தலை கவிழ்வது ஏனோ ? நீ என்ன சங்க காலப் பெண்ணா ? தலைநிமிர் புதுமைப் பெண்ணாய் ! 28.3.23 தோகை விரித்தாடுகிறாய் கருமேகம் கருக்கொண்டதோ ! படரும் பரவசம் ஆனந்த நடனத்தில் கண்டேன் ! 29.3.23 மொட்டில் நிறமொன்று மலர்தலில் நிறமொன்று உருமாறுதலில் குணமாறுகிறாய் மகரந்தமாய் ஈர்க்கிறாய் நிலை மறுப்பில் ஒன்றின் மேல் ஒன்றாய் செடி மரமாகிறது தோட்டம் காடாகிறது வாழ்வு வளமாகிறது,.. சுழலும் ஏணியாய்! 30.3.23 தேசத்தின் தேவை செங்குழல்களே ! அபாயம் அளிப்பவனின் நிறம் அபாயம் அழிப்பவனின் நிறம் இயற்கையின் சமநிலை காப்பான்கள் செங்குழல் வீரர்களே ! செங்குருதியின் புதல்வர்களே... 31.3.23 அன்றலர்ந்த புன்னகை அருமருந்தே ! இறுங்கிய இதயத்தை உருக வைக்கும் மாமருந்து ! இறுகினலும் உருகினாலும் இதயத்தின் துடிப்பு நிற்பதில்லை ! கொழுப்பின் அடைப்பு வலியை உருவாக்கும் மருத்துவனின் கவனிப்பே அடைப்பை சரி செய்யும் நீ அன்பை விதைக்கும் மருந்துவனாய் இரு ! 1.4.23 விழியில் பட்டாம்பூச்சி விளியில் ஆனந்த யாழின்.. இசையாய், களித் துள்ளலில் பயணிக்கிறாய் காந்தள் மெல் விரலில் கோலமிட மறந்தாய் ! கதிரவனின் ஒளியில் கரைகிறது பொழுது,.. உனக்கான தேடலில் புது சொல் கிடைக்கிறது,.. 2.4.23 சிவந்த மண் வாசம் சுவாசித்தேன் எத்தனை மனித குருதிகளின் வாசம் குருதியிலேது நிறபேதம் மதபேதம் மனித மதத்தால் வாசம் பரவுகிறது,... மன்னர்களின் வரலாற்றை அறிந்த என்னால் மன்னர்களின் வராலாற்றை படைத்த மக்களின் வரலாற்றை காண இயலவில்லை,.. 3.3.23 இதயங்களின் இணைப்பில் கட்டியதால் காலம் சாட்சியாய் தாஜ்மகால் ! இது மக்களை வருத்திய மன்னனின் காதல் கதை ! கல்லறை காதல்லல்ல ! தேவை அகம் கடந்த புறமாய் காதல் வா்க்கத்தில் வளர வேண்டும்.,.. தையல் சொல் கேளேல் ஓளவையின் மூதுரை கடந்து தையல் சொல் கேளென்ற செல்லாமாவின் பாரதியாய் காதலால் புது பூபாளம் செய்வோம்... வறுமையே வாழ்வான ஜென்னி- மார்க்ஸ் செல்லம்மா- பாரதி ரூப்ஸ்கயா- லெனின் வாழ்வே வழிகாட்டுகிறது [04/04, 00:23] Muthukannan: ஆழிசூல் உலகு தொட்டு குலைகளினுடே காலியை மீட்டு கிளவி நிரப்பி கிலி மறுத்து தோள் சாய்த்து பாழியாய் பாலிவு கொண்டு பாழிவு பொங்க மல்லிகை சூட பாளி மீறா தோழனாய் இலக்கிட்ட தோழியே கொஞ்சம் தோள் கொடு!.. இது ஜென்னி- ஏங்கல்ஸ் தோழமையின் வார்ப்பு ... அர்த்தம் கர்ப்பம் சூழ்ந்த காலம் தொட்டு, ஒன்றுமில்லா விசயத்திற்கு மனத் தடுமாற்றம் இருந்து வருகிறது.. அதனை சொல்லும், மொழியும் கண்ட பின் ஆறுதலில் மன நிம்மதி அடைந்தார்கள்.. அச்சம், பயம் மறுத்து வீரமூட்டும் தோளும், நட்பும் கொடுக்கும் போது அழகு நிறைந்த, மேன்மையான, பொழிவான, எல்லை மீறாத நட்பும், தோழமையும் கிடைப்பது அரிது. நீ கிடைத்துள்ளாய் எனது சோகம் கடத்தும் தோளாவாய்.. அனைத்திலும் வெற்றி மாலை சூட இலக்கை தீர்மானித்த தோழியே ! தோழமையின் அர்த்தம் கண்டு வாழ்நாளெல்லாம் வாழ்ந்த ஏங்கல்ஸ்- ஜென்னியின் வார்ப்புகள் நாம்... புல்லறுத்து, நெல் சேர்த்து, உணவிடும், உழவனின் உழைப்பு, பாழ்பட்டும் பயிரிட்டு, மக்கள் பயனுற கரம் கோர்ப்பவன்... வாய்ப்பை மறுத்து வானும், வயலும் நம்பி வாழ்வை நடத்துபவன்,.. இயற்கையின் தோழன்... 05.04.23 கனவே கலைந்து போ காரியம் கைகூட வேண்டும்!! எனது கனவு பெரியது ஆம் தேசத்திற்கானது எம் மக்களுக்கானது ! கனவே என்னை கனவு காண களம் காண அனுமதி காலம் சொன்னது கண்விழி களமாடு எல்லாம் சாத்தியமே ! காலை வணக்கம் .... 06.04.23 வளி,வழி செயதி வலியாகிறது, வழி வழியாக கால் கடுக்க காலாற நடந்தோம்., வலிகள் கடந்தன புரிதலில் தோழமை முற்றா உறவே.. வளியும் வழியும் நம் பக்கம் ! 7.4.23 யாத்திரை யில் நித்திரையற்று ஆனந்தத்தின் முடிவுறா தொடராய் கதைகள் பேசி புரிதலின் ஆழம் தொட்டு இலக்கு ஒன்றுபட ஆன்ம பலம் பெற்று கடந்த காலத்தை நிகழ்காலத்தில் தரிசித்து,.. எதிர்காலம் நம் கையில் நம்பிக்கை விதைத்த யாத்திரை,.. கண்கள் பலவாயினும் காட்சி ஒன்றானது செவிகள் பலவாயினும் செய்தி ஒன்றானது உதடுàகள் வேறாயினும் குரல்கள் ஒன்றானது,.. பிரிந்த கரங்கள் இணைந்ந கரங்களானது,. கருத்திலும், காட்சியிலும் இலக்கு தெளிவானது ஆம் மக்களுக்கானது,.. பாவம் கழித்து புண்ணியம் தேடியதல்ல பாவஙகளற்ற சமத்துவத்திற்கான யாத்திரை துவங்கிவிட்டோம்,.. அதே ஆனந்தத்தோடு கரம் பிடி ! கரை சேர்ப்போம் 8.4.23 உரவோர் உரு அறியா உறவோர் சூழல் அறியாது உறுக்குவது மூடர் செயல் தோலன் அல்ல நான் ஒறுத்துவதற்கு தோழனாய் பரிவு காட்டு ! 10.4.23 குளிரும் நிலவொளியா இல்லை தகிக்கும் சூரிய ஒளியா பார்வைகள் மாறிக் கொண்டே உனது பார்வையின் ஒளி காண ஒவ்வொரு காத்திருப்பும் யுகமாய் கழிகிறது,.. நிலை பார்வையில் காந்த அலையாய் பரவுகிறது காலம் நகர... விழியில் குவியும், குழியுமாக உன் நினைவுகள்..., நேற்று நானுறைத்த உண்மை இன்று பொய்யாகிறது இன்று நானுறைக்கும் பொய் நாளை உண்மையாகும்,.. உண்மையும், பொய்யுமாய் காதலே கவிதையாகிறது !... [10/04, 21:44] Muthukannan: மீண்டும் பூத்தது மல்லிகை மனம் வீசுகிறது மாமதுரை தாண்டி [10/04, 21:47] Muthukannan: அன்பை பழகும் அழகிய நடை 12.4.23 வாடாமல்லியே சிவந்து மலர்ந்தால் மலர்களின் ராஜாவாக! இதயம் இரண்டின் ஒற்றை துடிப்பாய் அன்பை விதைக்கும் தூதுவனே இனிய ரோஜாவே 13.4.23 பொங்கி வரும் கடலலைகள் தனித்து வருவதில்லை ! இரு துருவ இணைப்பிலே புது பாதை தெரியுது ! இயற்கையில் இரு முரண்களின் இணைப்பிலே இயக்கமுள்ளது ! தனித்த குணம் அதிகரிப்பின் அதன்வழி புதிய படைப்பாகிறது ! எதுவாயினும் இரண்டினின் முரணில் ஒன்றின் செயல் ! விரக்தியா? வீரமா ? இரண்டும் உணர்வின் வெளிப்பாடு ! ஆரக்காலின் இணைப்பு தனித்து இல்லை ஒற்றை புள்ளியின் இணைப்பில் உள்ளது மலர்களின் மகரந்த குழல்கள் ஒற்றை தண்டில் சூல் கொண்டுள்ளது பொங்கிடும் கடலைகள் தனித்து வருவதில்லை தனித்த பாதையாயினும் இரு கர உழைப்பில்தான் சாத்தியம் முரண்களின் இணைப்புக்குள்தான் இயக்கமுள்ளது போர்களே தவறாகும் போது, தனித்து போரிடுவது சரியாகுமா? உணர்வும், உணர்ச்சியும் முரண்பட்ட அம்சங்கள் உணர்வு அறிவுபூர்வமானது நிரந்தரமானது உணர்ச்சி தற்செயலானது, முரண்களை அதிகரிக்கும்., அறிவின் முன்னெத்தி நீ என்றால் உழுகும் ஏராக பின் வருவோம்.,.. உணர்ச்சிக்கு ஆட்படாத தோழமையே நமக்கானது.., 14.4/23 ஆதியின் பிறப்பை அஞ்ஞானமாய் மெய்யாஞானமாய் விவாத்ததின் ஊடே மெய்பொருள் கண்ட,.. பாலின சமத்துவத்தை கோதையும், ஓளவையுமாய் உயர்த்திய நாகரிக செழுமையும், பெருமைமிகு தமிழின் மகளே ! முக்கனியோடு வாழ்த்து சொல்ல நினைத்தேன் ! இருக்கட்டும் .. கனிக்கு மூத்தவள் மலர்.. அவள் வழியே வாழ்த்துக்கள்.. தொல் தொன்று தொட்டு தமிழ் போல் வாழ்க நீ ! ஆண்டாள் கண்ணனுக்கு சூடிய பாமாலை திருப்பாவையானது.. இங்கு காலையில் கோலத்தில் எழுத்தை கோர்க்க மலர்ந்த்து இயற்கையின் வரலாறு,.. ஓவியத்தை வீதியில் சமைப்பதும்,.. உணர்வை புள்ளி, கம்பி குறுக்கு, நெடுக்கு என ஒன்றில் துவங்கி இணைக்க கோபுரமும் வாசல் வரும் அழகிய கலை கோலக்கலை ! அதை வளர்க்கும் தீவிர தமிழாய் வளர்க 15.4.23 [15/04, 07:47] Muthukannan: நெற்றி,கழுத்து, நெஞ்சு, இடையென சுட்டி ஆபரணத்தால் ஒரு பெண் அலங்கரித்துக் கொள்வாளோ அது போல் உன் வீட்டு வாசல் தன்னை சுட்டி ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டதோ ! [15/04, 07:51] Muthukannan: மங்கும் பார்வை மி்ன்மினியாய் ஒளி அருகில் பார்த்தேன் உனது விரலின் சக்தியில் உயிர் பெற்ற வெண்கல மணி மின்னுகிறது... 16.4.23 இயற்கையே நிறைமதி வாழ்வை அளி பொற்சுடர் மேனியும் கருமைநிற முகமும் கள்ளமற்ற உள்ளமும் வாழ்வாகட்டும் ! ஆம் இயற்கையே உன் இருப்பில் எனக்கான இடத்தை காட்டு ! பொழுதும் பொழுதை பயனுற செய்திடு ! காலை வணக்கம்... [17/04, 07:54] Muthukannan: கனவா நனவா மயிலின் ஆனந்த நடனத்தை வாசலில் கண்டேன் சித்திரம் உன்னிடம் பழக கண்டேன் ! இமை திறந்தால் அதே காட்சி நற்காலைபொழுது வணக்கமாய் ! [17/04, 08.51] Muthukannan: எப்போதும் சிவந்திருக்கும், கோபமோ, புன்னகையோ ஒவ்வொரு இதழ் விரிப்பிலும் மாறாது சிவந்த புன்னகை மட்டுமே,. உன்னின் இயல்பே தனித்த சிறப்பு [18/04, 07:20] Muthukannan: ஆண்டின் ஆறுபொழுதில் முதுவேனில் காலத்தில் வெம்மை தணிக்கும் ஓடையாய் மாறேனோ ! பசுமை பூக்கும் வழியாய் மாறேனோ ! ஒடையின் படகாய் கரையேற்று,... அன்பின் ஒளியால் விளக்கேற்று,.. புலர்ந்த பொழுதில் வணக்கம்.. [18/04, 22:41] Muthukannan: தூங்கா இரவின் நண்பன், நம்மை புரிய வைக்கும் ஆசிரியன், இதயத்துடிப்பை அதிகரிப்பவன், நமக்கானவன்,.. கனவை விதைப்பவன், நனவாக்க ஊக்கம் கொடுப்பவன் ,.. [19/04, 07:46] Muthukannan: வாடிய பயிருக்கு கண்ணீர் சொரிந்து காற்றை கடன் வாங்கா கற்பக மரங்கள் நட்டு உயிர் காற்றை உற்பத்தி செய்யும் தோட்டகாரியே ! நின் பணி சிறக்க காலை கதிரவன் வாழ்த்துகளோடு உன்பக்கம் ! [19/04, 23:07] Muthukannan: துவாரகையின் மைந்தன் மூச்சு காற்றின் மோதலில் துவாரத்தில் எழும் இசை உலகை மயங்க வைக்கிறது உன்னை உறங்க வைக்காதா ? குறிலும் நெடிலுமாய் எழும் ஓசையே உனக்கான தாலாட்டு.. நல் உறக்கம் உனதாகட்டும் தோழி 20.4.23 பட்டாம் பூச்சியாய் வாழ்க்கை... மனம் கவர்ந்த மலராய் ஆனாலும் பிடிப்பதற்கு இருவிரல்கள் தேவை மனங்களின் தேவைகளில் மலர்களின் மனங்கள் உள்ளது உள்ளங்களின் தேவையறிவதில் காலம் நாழிகையாய் கடக்கிறது... பூத்து தொங்கும் மலர்கள் உன் விரலில் வீதியின் வாசலில் தோட்டாமாய் மாறுகிறது ! கதிரவன் ஒளிக்கீற்றால் , மின்னும் உங்களைப் போல் , மின்னட்டும் இந்த நாள் உங்களுக்கு.... [20/04, 23:10] Muthukannan: தூக்கம் அழைக்கிறது, இமைகள் மூட, படடாம் பூச்சியாய் கனவுலகில் நுழை, காலையில் புதிதாய் பிறந்தெழுவாய், அழகிய துயில் கொள்ள இரவா வணக்கம்... [21/04, 07:39] Muthukannan: பற்றுதல் தேடி கொடியாய் படர்கிறாய் படர்ந்து பயனளிக்கிறாய் கண் கண்டதூரத்திலே கவருகிறாய் என் மன வீதியிலே சக்கரமாய் சுற்றுகிறாய்! கதிரவன் ஒளியில் தட்டி எழுப்புகிறாய் வீதியில் கோலங்களும் செடிகளில் மலர்களும் பூத்துவிட்டது இன்னுமென்ன கனவு 22.04.23 செயற்கை நுண்ணறிவு காலம் இயந்திரமயமே எல்லாமாக இயந்திர மனிதனுக்கே இங்கு வேலையில்லை ! மைக்ரோசாப்ட் நீக்குகறது ! எனினும் திராவிட மாடல் மனித வேலையை கூட்டுகிறது.. உலகம் வேலை நேரத்தை எட்டை ஆறாக்க சொல்கிறது திராவிட மாடலோ எட்டை பன்னிரெண்டாக்குகிறது ! இன்று சட்டமிட்டு விரும்பினால் வேலை செய்யட்டும் ! நாளை தற்கொலை செய்து கொள்ள தனிச் சட்டம் விரும்பினால் தற்கொலை செய்யலாம்.. யார் குடி கெடுக்கும் சட்டமிது ? உடைமையாளனுக்கு பேசும் அரசே உழைப்பவனை ஏன் மறந்து போகிறாய் ? ஓடப்பராய் இருக்கும் ஏழைகளை வஞ்சிக்காதே ! உறக்கம், வேலை, ஓய்வு மூன்று ஆரக்காலில் சக்கரம் சூழலட்டும் தடுமாறாதே நிமிர்ந்து நட ! எட்டுமணி நேரமென்ற உலகவிதியை மாற்றாதே ! [23/04, 07:25] Muthukannan: அன்பை உணவாக ஊட்டுகிறாய் ! காத்திருப்பில் தவிக்க விடுகிறாய் ! விநாடியும் நத்தையாய் நகருகிறது ! யாரும் எட்டாத உயரத்தில் அழகிய மாளிகை கட்டினாய் ! வாழக்கையின் பயணத்தை ரசிக்கக் கற்று தந்தாய்! எனக்கும் சிறகு முளைக்கிறது.. பறக்க பறக்க பறத்தலின் கடத்தலில் புதிய உறவு முளைக்கிறது ! சூரிய சந்திரர் கள் எனது நண்பர்களாக விண்மீன் தோட்டத்தில் கருமேக புகை மூட்டத்தில் விளையாடுகிறோம் ! ஒற்றை இதயமாக... [23/04, 23:15] Muthukannan: விண்மீன்கள் வீட்டிற்குள் வந்து கனவுப் பா சொல்கிறது மின்மினியாய் கனவுகள் துயில் மறந்த இரவுகள் இன்று துயில் நிறைந்த இரவுகளாய் [24/04, 06:58] Muthukannan: புலரும் பொழுதுகளில் இலைகள் பிரியும் இலையுதிர் காலமே நீ இலை உதிர்ப்பது மீண்டும் பிறப்பதற்காக ! காலை புலர்தலில் நீ வரையும் ஓவியமும் பழையன கழித்து புதிதாய் பிறக்கிறது ! உன் வீட்டு மலரைப் போல் அழகாய் ! [24/04, 07:13] Muthukannan: புத்தரின் புன்னகையும் அழகிய தீப ஓளியும் மீண்டும் காலை வணக்கம் சொல்ல தோன்றியது [24/04, 23:42] Muthukannan: கருநீல குருவியே இமைக்காமல் பார்ப்பது ஏனோ ? துயிலை மறந்தாயா ? துயில் உன்னை மறந்ததா ? கனவாய் போகாது நம்பிக்கையாய் கூடு சேர்... வாழ்வின் உயரங்களை நீ அடைவாய் சற்றே அயர்ச்சி தீர்.. இரவின் வணக்கங்கள் [25/04, 06:49] Muthukannan: சூரியன் பாக்குது புவியிலே இங்கே ஒரு சூரியன் வீதியிலே விண்மீன்களை கோல வலையில் வீசி எறிந்து கொண்டு இருக்கிறது.. நாணத்தில் அதன் முகம் சிவக்க செவ்வானம் சிவக்குது... [25/04, 07:02] RM: வாழ்த்துக்கள் வான் மேகமே ! "சே"வின் நண்பன் ஆனாய், என் நண்பனும் கூடத்தான், இப் பூமியில் நடக்கும் அநீதி கண்டு, [25/04, 22:51] Muthukannan: தூறலின் நடுவே அந்த புகை மேகங்கள் பொம்மலாட்டம் காட்டுகிறது காட்சிகள் மாறினாலும் முகம் மாறுவதில்லை… உன் புன்னகையே ஒளியாய் பரவுகிறது துயிலாத இரவின் கனவாய் வருகிறாய்… அயலானாய் வந்து செல்கிறாய்… நிலவே உன்னை பூட்டி வைக்கும் வித்தையை யார் கற்று தருவார்கள் ? [26/04, 06:28] Muthukannan: கைபற்றுதலில் இடம் மாறுவதும் எந்த பக்கத்தின் வலைக்குள் சென்றாலும் வெற்றியும் தோல்வியுமாக இருவரில் ஒருவருக்கு தெரிந்தே விளையாடுகிறோம் ! இடைவிடா போராட்டத்தின் ஏற்றுக் கொண்ட சமன்நிலை ! ஆம் மனவலிமை உடல் ஆரோக்கியம் மகிழ்ச்சி விளைவுகளின் தொடக்க காரணம் விளையாட்டு ! இனிப்பு.. 🍁எண்ணத்தில் முத்தமிட்டாய் காலமெல்லாம் இதழ்கள் இனிக்கின்றன... மகிழ்ச்சி.. 🌷குளத்தில் வீசும் பொரிகள் அலைபாயும் மீன்கள் அவரவருக்கு அவரவர் மகிழ்ச்சி.. [26/04, 23:12] Muthukannan: இயற்கையே .. இளவேனில் கழித்து முதுவேனில் காட்டும் சித்திரையின் வெயிலே நாள் முழுவதும் என் மீது நீருற்றுகிறாய் ? மனமறிந்து செய்கிறாயா ? மனமறிய செய்கிறாயா ? மனம் குளிர கொஞ்சம் அந்த மேகத்தை அனுப்பு சின்ன சின்ன துளியாய் மழை பொழியட்டும் ரசித்து கூத்தாடும் என்னை இயற்கையோடு சேர்த்து கட்டு ஒவியமாக்க துரிகையோடு ஒவியனை அனுப்பு [26/04, 23:16] Muthukannan: மலராத மொட்டிற்குள் மணம் ஒளிந்திருக்கும் மலரும் தருணத்திற்கு பூச்சிகள் காத்திருக்கும் இரவின் விடிதலில் உயிர்களின் தேடல்கள் முற்றாத பரிணாமமாய் 27.4.23 உழைப்பும் உற்பத்தியுமே ! விலங்கிலிருந்து மனிதனை வேறுபடுத்தியது உண்பவன் ஒருபக்கம் உழைப்பவன் மறுபக்கம் உழைப்பை மேம்படுத்த சமூகமே உழைக்க வேண்டும் ! சுரண்டும் தனியுடைமை தகர்ந்து சமத்துவம் அளிக்கும் சமூகவுடைமை மலர வேண்டும்... தனியுடைமை காக்கும் மூடநம்பிக்கைகள் தகர வேண்டும்... உழைப்புக்கேற்ற கூலி பேரம் பேசவே போராட வேண்டியுள்ளது.. நாங்கள் கேட்பதோ வாழ்வதற்கேற்ற ஊதியம் ! நீங்கள் கொடுப்பதாக சொல்வது சலுகை.. நாங்கள் கேட்பது உரிமை ! .. உரிமை முழக்கத்தின் தினமே மேதினமே ! உனக்காக நான் தயாராகிறேன் வாழ்வதற்கேற்ற ஊதியம் வேண்டும் வாழ்வதற்கான வாய்ப்புகள் வேண்டும் சமத்துவ பண்பாடு வேண்டும் வர்க்கமற்ற சமூகம் மலர வேண்டும் இயற்கை இணைத்த சமூகம் வேண்டும் போர் முழக்கமில்லா புவி வேண்டும் மேதினி முழுமையும் பட்டொளி பரவ வேண்டும்.. செங்கொடியின் நிழலில் உழல வேண்டும் உழைப்பாளிகளின் உரிமை திருநாளில் சபதமேற்போம் ! [29/04, 06:50] Muthukannan: முதுவேனில் காலத்து மலர்கள் பூத்துக் குலுங்குகிறது,.. வண்ண வார்த்தைகளில் கோலமிட்டாய் சங்கிலி தொடராய் நீள்கிறது ,.. தூக்கமற்ற இரவுகளில் நினைவுகளே மருந்தானாது சிறு சிறு சண்டைகளே உறவுகளை பலமாக்குகிறது,.. கற்றலில் புரிதலில் அனுபவத்தில் கற்றுக் கொடுத்த தோழியே எப்போதும் ஆனந்த யாழை மீட்டு... 30.4.23 வெண்ணிதழே தியாக திருநாளை பார்த்து நீயும் சிவந்து கொண்டாயோ ? இல்லை அநீதி கண்டு அனிச்சையாய் சிவக்கும் என் தோழியின் முகம் கண்டு சிவக்கிறாயா ? எதுவாயினும் நிறங்களின் சிறப்பே சிவப்பு 1.5.23 கனவுக்கும், காதலுக்கும் இடையில் காலமெல்லாம் வறுமையில் மக்களின் வறுமை நீங்க புத்தொளி தந்தவனே! போராட்டம் போராட்டம் மந்திர சொல்லாய் வாழ்க்கையாய் தரித்தவனே ! ஜென்னியின் காதலையும் ஏங்கல்சின் தோழமையும் ஒரு சேர பருகியவனே மார்க்ஸ் எனும் மாமுனியே காலம் கடந்து நிற்கிறாய் ! உன் பின்னே நாங்களும் மாற்றத்தின் திறவு கோளாய்! [02/05, 07:49] Muthukannan: காலை பொழுதின் நாயகன் நான் கதிரவன் மேகத்தில் ஒளிந்து கண்ணாம்பூச்சி விளையாடுகிறேன் ! அன்பால் கட்டுண்டவன் தனது இயல்பை கொஞ்சம் மாற்றுகிறேன்.. சுட்டுவிடாமல் மனம்கவர் உள்ளத்தை காட்சியாய் காண்கிறேன். இதோ அவள் முகம்.. சிறு வெளிச்சத்தில் செவ்விதழ் புன்னகையில் யுகமும் நாழிகையாய் மாறுதடி .. சின்னஞ்சிறு அன்பில்தானே ஜீவன் இயங்குது.. உறவின் நிழலில் களைப்பாறுவோம்.. அன்பு உயிர்களுக்கானது.. நானும் இயங்குகிறேன்.. புதிய ஏஐ களே அன்பு கொள்கிறது ! படைப்பின் ஆதாரம் நானல்லவா ? நானும் அன்பை தேடுகிறேன் ! காட்டுமல்லி வாசத்தில் இயற்கையின் ஊடே செல்கிறேன்.. மைனாக்கள் உரையாடி வழிசொல்கிறது.. வீதிக் கோலங்கள் என்னை வரவேற்று வாழ்த்துச் சொல்கிறது ! மகிழ்ச்சி பிரவாகம் மழையாய் ஊற்றெடுத்து உயிர்களை நனைத்துவிட்டேன்.. அன்பில் திளைத்துவிட்டேன் !!! [02/05, 07:52] Muthukannan: மார்க்சை வாசிப்பது வாழ்வின் படிக்கல் போராட்டத்தின் உரைக்கல் மாற்றத்தின் உலைக்களம் 2.5.23 புன்னகை தவழும் முகமும், காந்தப் பார்வையும், எப்போதும் உனதாகட்டும். கனவுகள் இனிதாகட்டும், நனவாய் மாற இரவு வணக்கங்கள், 3.5.23 கோடை மழையின் சாரலிடையே வாடை வீசும் மகரந்தமே ! விண்மீன்களை கோர்த்துக் கட்டிய புன்னகையே ! இமையாத இமை கொண்டு இதழ்களில் இழுக்கின்றாய் பெளர்ணமி நிலவாய் உன்னில் கரைகிறேன் ! அன்பால் கோலமிடுகிறாய்.. புள்ளிகளாய் சிக்கிக் கொண்டேன்... 4.5.23 [04/05, 06:40] Muthukannan: காலை பொழுதில் யாத்திசையும் மணம் பரப்பும் மலர்கள்.. இதழை தாங்கும் குழலும் குழலின் அழகாய் இதழும் இணைந்ததே பூவின் அழகு ! கவர்தலில் தேனீகள் ! இதழின் கீறல்களாய் தேனின் சூல்கள் தேடலில் தேனீயின் மகத்துவம் இயற்கையின் தேடலறிய இப்படி.... தூவான சாலையில் கதைகள் பலபல பேசி நடை பயில்வோம் [05/05, 07:21] Muthukannan: இன்றைய பொழுது இனியபொழுது.. கை வைத்ததால் நீர் தந்த வைகைஆற்றிலே இறங்குகிறேன் ஒருபுறம், கோடிக் கண்கள் கோடிக் குரல்கள் தீமை மறந்து வேற்றுமை கடந்து ஒற்றை குரலில் முழங்குகின்றன எந்த உடையில் இன்று வருவார் என கண் பூக்க செர்ரியாய் பூத்துக் குலுங்குது ஏ மனசு ! என் பரபரப்பை சித்திர வீதியில் சித்திரமாய் வரைந்து விட்டாய்.. மறுபுறம் அழகரின் வருகையை போல் உலகம் உய்விக்க வந்த மாமுனி மார்க்ஸ் அவதரித்த இன்று மகிழ்ச்சியாய் கோடி குரல்கள் மார்க்சியம் வெல்லட்டும் என்று ,.. ஆம் இன்று உரக்க சொல் இரண்டும் மக்களுக்கானதென்று 06,05,2023 சமூகம் என்னை செதுக்கியதால் நான் கம்யூனிஸ்ட் ஆனேன்.. கம்யூனிசம் என்னை மனிதனாக்கியது ! மனிதம் என்னை சமூக செயல்பாட்டாளானாக மாற்றிவிட்டது.. [06/05, 07:51] Muthukannan: நேற்று விதைத்தாய் இன்று முளைக்கிறேன் பண்படுத்து ! தென்னை ஓலையின் ஒசையாய் சலசல என்று உனது குரல் என் மனதில் இறங்குகிறது.. சூரியனாய் ஒளிரும் மார்க்சியத்தின் மூலவர்களை இதயங்களுக்குள் செலுத்துகிறாய் ! நெற்றி சுட்டியை வீதியில் பரப்புகிறாய் ஆனந்த பேரலையை நெஞ்சில் உருவாக்குகிறாய்! நான் கேட்க நினைப்பதை நீ ஓவியமாய் வரைகிறாய் ! நான் கேட்ட ஜென்னி மார்க்ஸ் யை உயிர்ப்புடன் நிறுத்திவிட்டாய்... 05/5/23 படைப்புத் தொழிலையும் தொடங்கிவிட்டாய்... உனக்கான தேடலில் எழுத்துக்கள் எனக்கு வரமாகிறது.. ஓவ்வொரு பொழுதும் வார்த்தை தேடலில் புதிதாக பிறக்கிறேன்... இரவுகளை கனவுகள் திருடுகிறது திருடிய கனவுகளை தேடுகையில் தூக்கம் தொலைந்து விடுகிறது.. 6.5.23 fb நேற்று விதைத்தாய் இன்று முளைக்கிறேன் பண்படுத்து ! தென்னை ஓலையின் ஒசையாய் சலசல என்று உன் குரல் மனதில் இறங்குகிறது.. நெற்றி சுட்டியை வீதியில் பரப்புகிறாய் ஆனந்த பேரலையை நெஞ்சில் உருவாக்குகிறாய்! நான் கேட்க நினைப்பதை நீ ஓவியமாய் வரைகிறாய் ! உனக்கான தேடலில் எழுத்துக்கள் எனக்கு வரமாகிறது.. ஓவ்வொரு பொழுதும் வார்த்தை தேடலில் புதிதாக பிறக்கிறேன்... இரவுகளை கனவுகள் திருடுகிறது... திருடிய கனவுகளை தேடுகையில் தூக்கம் தொலைந்து விடுகிறது.. வாழ்வின் வசந்தங்களை வறியவர்களுக்கு வழங்கி மகிழ்ந்திட வாழ்வின் வளங்களை சமூகமயமாக்கிடுவோம்.. உழைப்பாளியின் குரல்களை உரக்க சொல்லிடுவோம்... அடையாளங்களில் மயங்கியவனை வர்க்கமாய் தட்டி எழுப்பிடுவோம்.. தோழமையின் இலக்கணமாவோம் ! வறுமையே வாழ்வானோம் நம்மால் வறுமையே செத்துவிடும் ! நாம் நமக்கல்ல ! மக்களிடமிருந்து நாம்.... 7.5.23 நீ கரம் நீட்டினாய் பற்றினேன் புதிய பாதை தெரிந்தது., நீ பார்த்தாய் ! கண்டு கொண்டேன் அன்பான இதயம் கிடைத்தது... நீ பேசினாய் செவிமடுத்தேன் புதிய மொழி கிடைத்தது.. நீ கோபம் கொண்டாய் ! உள் வாங்கினேன் புதுச் சிந்தனை படைத்தது நீ செதுக்கினாய் கல்லாய் கிடந்தேன் சிற்பமாய் உயர்ந்தது.. புலரும் பொழுதுகளில் சிற்பியாய் செதுக்கிறாய் ! கைமாறு என் செய்வேன்.. கையறுநிலையில் நான் நீயே வழி்நடத்து.. இறகாய் மிதந்து வருகிறாய் இருளகற்றும் ஒளியாய் என்னுள் இறங்குகிறாய் ! உறங்கா இரவை விட்டு செல்கிறாய்,. என் சோர்வை தூரத்தும் அறிவு காற்றே ! இறகை எனக்காக விட்டுவிடு ! நானும் கனவு கடலில் பறக்கிறேன் ! மனம் குளிர்ந்தது நீ இரைத்த நீர் துளிகளில் புழுதியாய் பார்த்தனர் என்னை... 8.5.23 உன் விரல் இடுக்கில் நழுவும் துகள்களை ஓவியமாக்குகிறாய் கண் பூக்க பார்க்கிறார்கள் என்னை... எப்போதும் என்னை கூட்டு பெருக்கு கழி அழகாகிறேன் எனக்கான நேரத்தை நீ வகுக்கும்போது... [04/05, 23:05] Muthukannan: மனித இதயங்களே இயந்திரமாகிறது! எனக்கான இதயத்தை எப்படி பாதுகாப்பேன். அன்பை விதைக்கும் மனித மனங்களை உருவாக்க புதிய குருதிகள் தேவைப்படுகிறது... இதயத்தின் இயல்பை மாற்றாமல் சிவப்பு திரவத்தை அளித்தால் பாதுகாக்க முடியும்.. எங்கும் எதிலும் சிவப்பு.. இதயம் காப்பது சிவப்பு [09/05, 07:05] Muthukannan: வீதியெல்லாம் மணம் வீசுகிறாய்! இன்றென்ன படைகிறாய் எதை வரைகிறாய் புலரும் பொழுதுகளில் சிறு தாமதமும் பரபரப்பை கூட்டுகிறது பறக்கும் தும்பியின் ரீங்கார ஓசை அமைதியானால் பரபரப்பு கூடுகிறது என்ன ஆச்சு என்று... [09/05, 07:10] Muthukannan: கோபம் அன்பின் வெளிப்பாடு இயலாமையின் உச்சகட்டம் ! அநீதி கண்டு கொதிப்பது என இருவகைப்படும் ! தோழர்களிடம் வெளிப்படுவது அன்பின் வகை... இது ஒரு டீ யில் ஆறிவிடும்! [09/05, 07:16] Muthukannan: அன்பு அமைதி கோபம் முக்கோணத்தில் இணைத்து வாழ்வின் வசந்தத்தை பூக்களாய் வீதியில் தோரணமிட்டாய்! பிரம்மனை தோற்கடித்தாய்! 10.5.23 [09/05, 23:16] Muthukannan: பால் நிலா பொழிய வெண் தாமரை மலர அந்திம வெளிச்சத்தில் தோள் சாய்த்து நடை பயில்வோம்.. தோழமை போற்ற ஆற்றங்கரையில்... இனிய உறக்கம், மெலிதான கனவு, இரவு விடிய விடியலுக்காய் வணக்கம், [10/05, 07:24] Muthukannan: கோடை வெயிலை குடை கொண்டு மறைக்கிறாய் மறந்து துளிக்கும் மழைக்குமல்லவா குடைவிரித்து விட்டாய் ! [10/05, 07:24] Muthukannan: வீதியில் குடை ஊர்வலம் காண பூத்துக் கிடக்கிறது கண்கள் ஆயிரம் ! பூக்களே கொஞ்சம் நிமிருங்கள் பகலின் ஒளி இரவிலும் நீள்கிறது பகலென்று நம்பி உறங்காமல் இருக்கலாமா ? சரி நீங்கள் விழித்திருக்க நான் மட்டும் உறங்குவதா ? சிறு நேரம் கதைப்போமா ? காட்டை அழிப்பவனை அன்பை மிதிப்பவனை மதம் கொண்டு அலைபவனை சேற்றில் முளைத்த செந்தாமரை என்பான்.. சற்று பார்த்து முகம் திருப்புவான்.. மனிதம் இழந்த மனிதர்களை என்ன செய்வது.. கதைப்போமா ? காட்டு தீயில் கருகிய நம் முன்னோரை பற்றி கதைப்போமா ? இயற்கை கண்ணி அறுக்கும் கயவர்களை களையெடுப்பது பற்றி கதைப்போமா ? நீயும், நானும் இயற்கையின் குழந்தைகள்,.. அன்பை சமத்துவ அறத்தை விதைப்போம்.. பறப்பதில் காலத்தை கடத்துகிறேன்.. டார்வினை சுமக்கிறேன் இதோ என் முதுகில் சாப்ளின் இறக்கைகளில் பிக்காசோவும், எங்கெல்சும் எனது உயிர் விசையாய் ஜென்னி மார்க்ஸ் சக்தியாய் பாரதியுமாய் காலத்தை சுமக்கிறேன் வண்ணத்துப் பூச்சி நான்.. வா கதைத்திடுவோம்.. இரவை மறந்து... உன் பார்வையின் சிறு பொறியும் காட்டு தீயாய் பற்றுகிறது.. நீ பேசும் ஒற்றை வார்த்தை தென்மேற்கு பருவமழையாய் கோப கனலை கொட்டி அழிக்கிறது.. ஒவ்வொரு விசாரிப்பிலும் உயிர்ப்பிக்கிறது மனசு.. விடியும் பொழுதுகளின் வணக்கமும், வாழ்த்துமாய்.. காலை வணக்கம்.. புள்ளியை இணைப்புது கோலமென்றிருந்தேன் இப்போது புரிகிறது கலையென்று ஒவ்வொரு பொழுதும் சிற்பியின் நேர்த்தியோடு வரைகிறாய் பூவின் மகரந்தத்தையும் விட்டுவிடாது வரைகிறாய்.. அதனால் மலர்கள் அனைத்தும் வீட்டு வாசலில் பூத்துக் குலுங்குகிறதோ ? [13/05, 00:22] Muthukannan: கண் இமையா சக்தி வேண்டும் விடியும் நாழிகையில் புதிய சிந்தனை வேண்டும். நழுவும் வார்த்தைகளை கண்டறியும் அறிவு வேண்டும் எனை திருத்தும் அறிவுச் சுடர் எப்போதும் கற்றுத்தா [13/05, 00:27] Muthukannan: என் பேனாவின் மை வற்றுகிறது.. இன்னொரு பேனா கொடு.. புதிதாய் கொடு புதியன எழுதுகிறேன். கேள்வியை எழுப்பி பதிலை திருத்துங்கள் எப்போதும் மாணவன் நான் 13.5.23 மலரும் மொட்டின் அழகு இதழ்கள் காலம் கழிகிறது ஒவ்வொன்றாய் கழிகிறது ஆம் ஒன்றை மறுத்து புதிதாய் ஒன்று உறவுழந்த இதழ்களின் ஊர்வலம் வீதிகளில் நெட்டை மரங்களின் கண்ணீர் துளிகள் ! எப்போதும் நனைந்த இதழ்கள் நனையாதிருக்க குடை தந்தது நட்பு ! [13/05, 22:46] Muthukannan: வாடா மலரே நீ மட்டும் தான் ஒளி அகன்றும் வாடாமல் இருக்கிறாய் ! உனது புன்னகையில் ஒளிர்கிறது இருள்.. [13/05, 23:00] Muthukannan: குளிரூட்டும் வெண்ணிலவே அழகிய கடற்கரை மணலில் விளையாட வருவாயா ? இல்லை இரவை கடத்தி சூரியனோடு விளையாட செல்கிறாயா ? நாளெல்லாம் உழைத்தவர்கள் ஓய்வில் உன்னொளியில் கதைகளாடப் போகிறோம் ! உன்னொளி தந்து கதைகளை துவக்கு ! நீ தான் கோடி ஆண்டுகளாய் மலர்கிறாய் நீ கண்ட கதைகளை சொல்... கதை கேட்க ஆசை ! என் தோழியாய் இருந்தால் கதைக்க ஆரம்பித்திருப்பாள்.. ம்ம் சொல் நிலவே... [14/05, 23:32] Muthukannan: பட்டாம் பூச்சியாய் பறந்தேன் உனது கோபப் பார்வையில் இறகு பொசுங்க கீழே விழுகிறேன், கையேந்தி பிடிக்கிறாய். உண்மை உணர்ந்து சற்றே மூச்சு காற்றாய் என்மேல் வீசினாய், இறகு முளைத்து மீண்டும் பறந்தேன். சூரியனுக்கும், பட்டாம் பூச்சிக்குமான உரையாடல் [15/05, 07:27] Muthukannan: புலர்தலின் அறிவிப்பாய் கீச்சல்கள் ! உணவைத் தேடி செல்லும் பறவைக் கூட்டத்தின் அழைப்புகள் ! இருத்தல் சொல்லும் செண்பகப்பூ மகரந்தமாய் மணம் வீசி எழுப்புகிறது ! இயற்கையின் நிகழ்வை சித்திரக் கூடத்தில் ஓவியமாய் வரைகிறாய்.! கலையை கலைவாணியே உன்னிடம் கடன் கேட்க மெய் மறந்து நிற்கிறேன்... வார்த்தைகளற்று.. [15/05, 08:04] Muthukannan: புத்தக பக்கங்களின் வரிகளில் பூக்களாய் மலர்கிறேன்.. உனது வாசிப்பு சுவாசிப்பானதால்.. [15/05, 20:37] Muthukannan: பசி பழகு அறிவு பசி கலை பசி வயிற்று பசி எந்த பசி பசியை ரசி பசியும் படிந்து போகும் வறியவனின் பசியை விடவா நம் பசி,.. [15/05, 22:09] Muthukannan: கொடியிலும் மெலிதாய் நீ, இறகில் இசை அமைக்கிறாய் ! உன் இறகிற்கு துரிகை எங்கு தைத்தாய் ! மெலிதனும், மெலிதாய்... இணையுடன் இணைந்த பயணம் காலமறியாது... பறத்தலில் காலத்தை மறக்கிறாய் ! பினீக்சின் வாரிசே ! [15/05, 22:12] Muthukannan: இதயத் துடிப்பின் சத்தமும் உன் நினைவும் எப்போதும் நிற்காது 16.5.23 இரவின் மடியில் துயில் கொண்ட என்னை, தட்டி எழுப்பிய வசந்த கால மழைமலரே ! இடைவிடா பூத்தலும் இடைவெளியை நிரப்பும் ஊதாவே, சோவியத்தின் மலரே ! மலர்களின் மத்தியில் தனியே மிளர்கிறாய்... 17.5.23 ஞாயிறு ஒளியில் மின்னுகிறதோ உந்தன் முகம் ! இல்லை உன் முகம் கண்டு சூரியன் மின்னுகிறதோ ! ஓவ்வொரு நடையும் ஒவ்வொரு மொழியும் புதிய பயணத்தின் துவக்கப் புள்ளியாகிறது.. ஒவ்வொரு பொழுதும் காலை வாழ்த்து செய்திக்காக தவமிருக்கிறது ! பதிலளிக்க வார்த்தைகளை தேடுகிறேன்.. ஆம் சூரிய சிறகுகளை பெற்று வானில் பறக்கிறாய் சிறகற்று உனது பறத்தலில் மகிழ்கிறேன்.. 17.5.23 மயங்கும் மாலை பொழுதில் கடல் அலையே காற்றோடு இசைந்து சிம்போனி வாசிக்கிறாயா ? இசைப் பறவையே இறகுகளில் இசை மொழி எழுதுகிறாயா ? இயற்கையின் விதியில் குழந்தை மனமாய் விளையாடுகிறாய் ஆர்ப்பரித்த உங்கள் இசையில் மகிழ்ந்து.. புத்தனின் அழகு பூக்கும் அந்த மெளன புன்னகையாய் யுகம் கடந்தது.. புலர்ந்த பொழுதில் கோடி நிலவின் ஒளியாய் முகம் மலர கண்டேன்.. எப்போதும் இது தொடர இயற்கை வரமளிக்கட்டும்... கடல் அலையாய் எழுத்துக்கள் கிடைக்கிறது ஆனால் கோர்க்கத்தான் முடியவில்லை, வார்த்தைகளை தேடுவதில் பயணம் நீண்டு கொண்டே செல்கிறது. வானில் உள்ள விளக்குகள் எல்லாம் அலையும் காற்றில் அசைவதால் எழுத்துக்களை கோர்ப்பதில் தாமதம்.. கலங்கரை விளக்கு தெரியாமல் தத்தளித்த எனக்கு,.. ஆம், அலைகளின் ஏற்றத்திற்கேற்ப பயணிக்கும் படகாய் பயணிக்கும் போது வார்த்தைகள் கிடைக்கும் இருவார்த்தைகளில் சொல்லிவிட்டாய்! ஆம், நிதானமாகவும், உறுதியாகவும் இருந்தால் பயணத்தில் வெற்றி உறுதியென்று... [20/05, 07:34] Muthukannan: ஞாபகத்தில் இருக்க வேண்டிய ஒன்று ஞாபகம் மறந்து ஞாபகமற்று போகிறது.. மறந்த ஞாபகம் உன் முகம் கண்டு ஞாபகம் வந்தது.. ஆம் 1000 ரூ கள்ளப்பணம் ஒழிக்க 2000 ரூ வந்ததில் ஞாபகம் வந்தது.. 2000 ரூ வாபஸ் என்றதும் ஒழிந்த கள்ளப் பணம் என்னாச்சு ஞாபகம் வந்தது. நோட்டில் இருந்த சிப்பை எடுக்க வாபஸ் என்றதும்.. வங்கிவாசல் கியுவில் நின்று மரித்தவர்கள் ஞாபகம் வந்தது.. [20/05, 08:18] Muthukannan: பாலையில் படியும் தடம் விநாடி பொழுதே ! அடித்து துவைக்கும் காற்றில் அகல்கிறது ! மாறுதல் என்பதே முடிவான ஒன்று ! [20/05, 08:46] RM: மணற்பரப்பில் பதியும் உன் கால் தடம், வாழ்க்கை பயணத்தில், மாற்றத்திற்கான பாதையிலும் , படியட்டும்...
கம்யூனிஸ்டாய் இருப்பது காலத்தின் தேவை’ - செ.முத்துக்கண்ணன் தீக்கதிர் நாளிதழ் மார்ச் 12, 2023 ‘‘நீங்கள் எந்த பக்கத்தில்... இரு வேறு உலகங்கள், இரு வேறு நீதிகள்; வாழ்வின் மதுரங்கள் அனைத்தும் ஒருபுறம், கசப்பும் தண்ணீரும் கலந்தொழுகும் இன்னொருபுறம்’’ - மாக்சிம் கார்க்கி வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்டுகளின் எதிரிகள் “எங்களுக்கு வாக்களிக்கவில்லை, உங்கள் வீடுகளைக் கொளுத்துகிறோம்; எங்களை வெற்றி பெற வைக்கவில்லை, உங்கள் வருமானத்தைத் தடுத்திட உங்கள் இரப்பர் தோட்டங்களை எரிக்கிறோம். இதையும் தாண்டி உங்கள் சித்தாந்தம் காப்பாற்றும் என்றால் அதன் அடையாளமான உங்கள் கட்சி அலுவலகங்களை உடைத்து நொறுக்கு கிறோம்..!” ஆம், 2023 மார்ச் 2 திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி கடந்த முறை பெற்ற அதே அளவு வெற்றியைப் பெற முடிய வில்லை என்ற வெறித் தனத்தின் உச்சம். கடந்த 5 ஆண்டுகளாக திரிபுரா முழுவதும் கம்யூனிஸ்டு களை அழித்து விடுவோம் என்று கொக்கரித்து கடும் தாக்குதலை நடத்தி 25 கட்சி தோழர்களை படுகொலை செய்து, பல்லாயிரக்கணக்கான தோழர் களுக்கு கொடுங்காயம் ஏற்படுத்தி, வீடுகளை நொறுக்கி, வாழ்வாதாரத்தின் மீது அரசு எந்திரத்தின் உதவியோடு தாக்குதல் நடத்திய பின்பும், அங்கு கம்யூனிஸ்டுகள் மீண்டெழுகிறார்கள் என்ற ஆத்திரமே, இப்போது கொலைவெறித் தாண்டவம் ஆடுகிறது. பாஜக குண்டர்கள், மார்ச் 2க்கு பின்னால் கடும் தாக்குதலில் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்லாது பாஜக விற்கு எதிராக கருத்து சொன்ன, வாக்களித்த, போராடிய அனைவரையும் கூட தாக்கி வருகிறார்கள். விசாரிக்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இது நேற்று இன்று அல்ல, ஆளும் வர்க்கத்தை யும், முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ அமைப்பை யும் எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கம் பிறந்தது முதலே இத்தகைய அடக்குமுறையை எதிர்கொண்டு வருகிறது. இயந்திர இரைச்சலை மீறிய உரிமை முழக்கம் திருப்பூரில் 1978ல் விலைவாசி உயர்வுக்கேற்ப தங்களது குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும்; பண்டிகை விடுமுறை சம்பளம், இன்னபிற சட்ட சலுகைகளை கேட்டு சங்க வித்தியாசமின்றி ஒன்றுபட்ட போராட்டத்தை பனியன் அண்டு பொதுத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தலை மையில் 40 நாட்கள் நடத்தி போராடி வெற்றிபெற்றது. இதன் வெளிச்சத்தில் மங்கலம் பகுதியில் விசைத்தறிப் போராட்டம் சிஐடியு தலைமையில் போராடியது. இதில் அப்பகுதி கிராமங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அணி திரண்டனர். குறிப்பாக பட்டியலின வகுப்பை சார்ந்த வர்கள் படிப்படியாக ஈர்க்கப்பட்டு போராட்டக் களத்தை நோக்கி வந்தனர். எம்ஜிஆரின் அபிமானி களாக அதிமுக வாக்கு வங்கியாக இருந்தது அன்று வர்க்கமாகத் திரண்டு செங்கொடித் தொழிற்சங்கத்தின் பின்னால் அணிவகுத்தது கடும் அதிருப்தியை அதிமுக விக்கு ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் கடும் ஆயுதங்களைக் கொண்டு மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு தொழிற்சங்கத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான முன்னணி தோழர்களையும், வீடுகளையும் தாக்கினார்கள். இதில் 14 முன்னணி தோழர்களின் வீடுகள் கடும் தாக்குதலுக்குள்ளாகின. அன்று இந்தச் சம்பவத்தை கண்டித்து திருப்பூரில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளி வர்க்க தோழர்கள் கண்டனம் முழங்கி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்தியது, எச்சரித்தது. இருந்தும் ஆளும் வர்க்கத்தின் ஆத்திரமும், சுரண்டல் வேட்கையும், ஒரு சேர, இதன் தொடர்ச்சிதான் அன்புத் தோழர் சீராணம்பாளையம் பழனிசாமி எதிரிகளால் வெட்டி வீழ்த்தப்பட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட தோழர்களின் குடும்பங் களைப் பாதுகாக்க தொழிலாளி வர்க்கம் பொருளா தார உதவி செய்து வீடுகளை புனரமைத்தது. இந்த ஒற்றுமையும், வலுமிக்கப் போராட்டமும், வர்க்க உணர் வின் முன்பு முதலாளி வர்க்கம் பணிந்து வந்தது. வரலாற்றைக் கற்றறிதல் இந்த வரலாற்றை அறிந்து அதற்காக தன்னையும் இளமைக் காலம் தொட்டு அர்ப்பணித்துக் கொண்டு நற்பணியிலும், விளையாட்டிலும், எழுத்தறிவு புகட்டுவதிலும் இதர தோழர்களோடு இணைந்து தனக்கான அரசியல் பாதையை வகுத்துக் கொண்ட வர்தான் பாலரத்தினம் என அன்போடு அழைக்கப் பட்ட தோழர் இரத்தினசாமி. போராட்டத்தின் உறைவிட மாக இடுவாய் கிராமத்தை மாற்ற தோழர்களோடு ஒன்றுபட்டு போராடினார். கட்சியின் செல்வாக்கு நாள்தோறும் வளர்ந்து வந்த சூழலில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 1996ல் அனைத்து அரசியல் இயக்கங்களும், ஆதிக்க மும் ஒன்று சேர்ந்து ஒரே அணியாக நின்றபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இடுவாய், செட்டிபாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், முதலிபாளையம் பகுதிகளில் தனித்து நின்று ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றது. அப்போது இடுவாயில் ஊராட்சிமன்ற தலைவராக தோழர் கே.ரத்தினசாமியும் தேர்வு செய்யப்பட்டார். “கற்பதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக் கிறது, எனவே கற்றுக்கொள், சாதியின் தொடர் சங்கிலி அறு; பார்ப்பனீய வேதங்களைத் தூக்கி எறி; கல்வி பெற்றால் சாதியையும், வேதங்களையும் தூக்கி எறியும் அறிவும் வந்து விடும்” என்றார் சாவித்திரிபாய் பூலே. இதனைச் செயல்படுத்தும் விதமாக இடுவா யில் குமரன் நூலகத்தை துவங்கி “மனித சிந்தனை களை தளையிட்டு கட்டிய விலங்குகளை எல்லாம் தகர்த்தெறிய வேண்டும் என்பதற்காக எவர் ஒருவர் தன் வாழ்க்கையெல்லாம் பாடுபடுகிறாரோ அவரே மனிதர்” என நூலகத்தின் சார்பில் உதயம் இதழில் ஆசிரியர்குழு தலையங்கத்தில் எழுதினார்கள். அதன்படி நடந்தவர் இரத்தினசாமி. ஒரு கம்யூனிஸ்டுக்கு உண்டான எளிமையோடு, உழைக்கும் மக்களின் உற்ற தோழனாக, முன்வரிசை களப்பணியாளனாக, மக்களின் சேவக னாகப் பணியாற்றினார். கம்யூனிஸ்டாய் இருந்தது... விவசாயக் கிணறுகளில் தண்ணீர் விற்பனையை தடுத்து விவசாயத்தை பாதுகாத்தது; ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலத்தை எடுத்து 1200 ஏழை எளிய குடும்பங்களுக்கு பட்டா போட்டு கொடுத்து பாரதிபுரம் என்ற ஊரை உரு வாக்கியது; பட்டியலின மக்களுக்கு குடிநீர், சுடுகாடு, தெருவிளக்கு, தொகுப்பு வீடு கட்டி சமத்துவ வாழ்க்கை யை உறுதி செய்தது; தலித் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக நின்று அவர்களின் வழிபாட்டு உரிமை யை பாதுகாத்தது; பாழ்பட்டிருந்த இடுவாய் ஊராட்சி நடுநிலைப்பள்ளியை புனரமைத்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியது... - இப்படி கட்சியின் செல்வாக்கும், இரத்தினசாமி யின் பணியும் ஓங்கி வளர்வதைப் பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள் 1998 ஏப்ரலில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இரவில் எழுத்துப்பணி செய்து கொண்டு இருந்த தோழர் இரத்தினசாமியை கத்தியால் குத்தி, வாயில் விஷத்தை ஊற்றி காட்டில் வீசிச் சென்றனர். உயிருக்கு போராடிய அவர் மருத்துவ சிகிச்சைக்குபின் மீண்டும் ஊராட்சித் தலைவராக பணியாற்றினார். இந்த நிலையில் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில், மக்கள் செல்வாக்கின் காரணமாக இரண்டாம் முறையும் ஒரு சேர எதிர்த்து நின்ற தரப்பினரை தோற்கடித்தார். முன்னிலும் ஆழமாக மக்கள் சேவையும், பணியும் தொடர்ந்தது. அயராது பாடுபட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சக்தியினர் 2002 மார்ச் 12 இரவு தோழர் இரத்தினசாமி அவர்களை கொடூரமான முறையில் கொலை செய்து, கொன்றதற்கான 8 காரணங்களை ஒரு அட்டையில் எழுதி அருகிலிருந்த மரத்தல் கட்டித் தொங்க வைத்துச் சென்றார்கள். அதில், “நீ கம்யூனிஸ்டாக இருப்பது, சக்கிலியர் களுக்கு சப்போர்ட் செய்தது, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருந்தது, ஆக்கிரமிப்புகளை அகற்றியது. மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது” என்பது உள்ளிட்டு 8 காரணங்களை எழுதி வைத்தனர். அவர்கள் சொன்ன காரணங்கள் கம்யூனிஸ்டுகளின் பாலபாடம். மக்களுக்கு பணியாற்றுவது; கடைசி சொட்டு குருதி உள்ளவரை போராடுவது; தேவையென்றால் தியாகம் செய்வது. “வாழ்நாளில் பெரும்பாலும் மனித குலத்திற்காக சேவை செய்வதற்கு ஏற்ற வகையில் ஒரு சூழலை நாம் ஏற்பாடு செய்து கொண்டால் எத்தனை சுமைகளும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது’’ - என்ற காரல் மார்க்சின் வார்த்தையை அர்த்தப்படுத்தி யவர் தோழர் இரத்தினசாமி. மக்களிடம் அந்த மகத்தான பணியை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுத்து வருகிறது. அதன் விளைவு தான் 18 ஆண்டுகள் கழித்து 2019ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இரத்தினசாமியின் வாரிசுகளாக கம்யூனிஸ்ட்கள் 1008 வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் தோழர் கே.கணேசனை வெற்றிபெறச் செய்து, கம்யூனிஸ்டு களின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை மக்கள் கட்டியெழுப்பினார்கள். உண்மையை உரக்கச் சொல்வது இதுவரை இல்லாத அளவு இந்தியாவில் வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில் புலம்பெயரும் தொழிலாளர்களும், நிரந்தரமற்ற வேலையும் அதிகரித்து வருகிறது. அணி திரட்டப்பட்ட தொழில்களிலேயே ஒப்பந்தமுறை, தினக்கூலி என தொழிலாளர்கள் எந்த விதமான சட்ட சலுகையும், உரிமைகளும் இல்லாமல் பணியாற்றுகின்றனர். தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நாளுக்கு நாள் உரிமை மீறல்களும், சுரண்டல்களும் அதிகரித்து வருகின்றன. முறைசார தொழிலாளிகளின் கோரிக்கைகளை உயர்த்தி பிடிக்க தடையாக, தொழி லாளிவர்க்கத்தின் மத்தியில் போலி தேசபக்தியும், மதவெறி சக்திகளின் தவறான பிரச்சாரங்களும், பொய் செய்திகளும், வதந்திகளும் கிளப்பி விடப்படு வதையும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை யில் பாஜக இரட்டை வேடம் போடுவதையும் திருப்பூரில் பார்த்து வருகிறோம். அதே போல் சமூக ஒடுக்குமுறையும் திட்டமிட்டு மனு (அ)தர்மத்தின் அடிப்படையில் நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்படுகிறது. உழைப்புச் சுரண்டலையும், பாலின சுரண்டலையும் வருணத்தின் பெயரில் நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர். இதற்கெதிரான பிரச்சாரத்தை இந்தியா முழுவதும் செங்கொடி இயக்கம் வலுவாக முன்னெடுத்து வருகிறது. ஏப்ரல் 5ல் கிராமப்புற தொழிலாளிகள், விவசாயிகள், நகர்ப்புறத் தொழிலாளிகள் பெற்ற உரிமைகளை பாதுகாக்க தலைநகர் தில்லியில் அணிவகுக்க உள்ளார்கள். தொழிலாளி வர்க்க உணர்வை வளர்த்தெடுக்க தோழர் கே.ரத்தினசாமியைப் போன்று திரிபுராவின் தற்போதைய 3 தியாகிகள் போன்று நாடு முழுவதும் உள்ள தியாகிகளின் குருதி உரமாகட்டும். இவர்களது நினைவை நெஞ்சில் ஏந்தி களப் போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்! கட்டுரையாளர் : சிபிஐ(எம்), திருப்பூர் மாவட்டச் செயலாளர்