”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

சிவாஜி விவசாயிகளின் மன்னன்

சிவாஜி கோன் ஹோட்டா ?- நாங்கள் பன்சாரேக்கள்  !

          ஒளரங்கசீப்பை எதிர்த்த ஒரே இந்து மன்னன் வீர சிவாஜி என்று இன்று வரை நமது பாடப்புத்தங்களும் போதித்து வந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் சிவாஜி என்ற அந்த பிம்பம் தாய் மகன் பாசம் மட்டுமல்ல, விவசாயிகளோடு, குடிமக்களோடு சம்மந்தப்பட்ட பிம்பம், மதவெறியர்கள் சொல்வதைப் போல் அவர் இந்து மதத்தின் பிரதிநிதியாக இருக்க வில்லை. உண்மையில் சிவாஜி யார்?


      ( சிவாஜி கோன் ஹோட்டா )  மஹாராஷ்டிராவின் அவர் வாழ்ந்த காலத்தில் அந்த பகுதி மக்களின் உரிமைகளுக்காக வாழ்ந்த மன்னாக விளங்கியவர் என்று  உண்மைகளை புட்டுப் புட்டு வைத்தார் கோவிந்த பன்சாரா. 

          சிவாஜி என்ற வாளேந்திய பிம்பத்தை வைத்து இளைஞர்களுக்கு தவறான சிந்தாந்த பயிற்சியை வழங்கி வரும் இந்துமுன்னணி, ஆர்எஸ்எஸ், சிவசேனா போன்றவைகள் மதவெறியை ஊட்டி வந்தன. இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள்   உள்ளிட்ட  அனைவரையும்  சிவாஜி  சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்களை நேசித்தவர். விவசாய நிலங்களை பாது காத்து விவசாயிகளுக்கு கொடுத்தவர். என்று தனது சிவாஜி கோன் ஹோட்டா என்ற சிறு புத்தகத்தின் மூலம் ஆதாரப்பூர்வமாக சிவாஜியின்  பிம்பத்தை மாற்றி அமைத்ததை  மதவெறி அமைப்புகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த புத்தகம் 2 லட்சத்தை தாண்டி விற்பனையானது. மக்களிடையே கேள்விக்கணைகளை உருவாக்கியது.  சிவாஜியின் படையில் 35 பட்டாலியன் இஸ்லாமியர்கள் படை இருந்தது என்பது வரலாற்று உண்மை.,  

          மேலும்  வெள்ளையனை வெளியேற்ற வெகுமக்களை திரட்டியதில் முக்கிய பங்காற்றிய  தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சிலை வைக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. அந்த காந்தியை கொன்ற கோட்சேவிற்கு சிலை வைக்க அடிவருடிகளை வைத்து கோரிக்கை வைத்து கொண்டு இருக்கிறது மோடி அரசு. இதை கண்டித்து தொடர்ச்சியாக குரல்கொடுத்தவர். அதனால் அவருக்கு ஒரு எச்சரிக்கை வந்தது. “தும்ச்சா தபோல்கர் காரு’’ ( தபோல்கருக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் ) என்று, எச்சரிக்கையை மதிக்கவில்லை.  மதவெறியர்களின் ஆட்சியில் சுதந்திரமாக நீ பேசிவிட முடியுமா? என்று சுட்டு கொன்று இருக்கிறார்கள் சகா.பன்சாரே அவர்களை. 

           தோழர். பன்சாரே வெறும் சமூக சீர்திருத்த கருத்துக்களை மட்டும் முன்வைத்திருக்கவில்லை. உழைக்கும் மக்களின் தலைவராக, பீடித்தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவராக பரிணமித்தவர். அதனால் தான் மொத்த மஹாராஷ்டிராவும் ஒரு நாள் பந்த் நடத்தி தனது அஞ்சலிiயும், மதவெறியர்களுக்கு கண்டனத்தையும் பதிவு செய்தது.

          நரேந்திர தபோல்கர்  பிள்ளையார் பால் குடித்ததாக வதந்தி பரவியபோது அதை இல்லை என ஆதாரத்தோடு மறுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அறிவியல் பூர்வமான உண்மைகளை வைத்து தனது வாழ்நாள் முழுவதும் மூடநம்பிக்கைகளுக்கு கொள்ளி வைத்தவர் தபோல்கர். அவரின் படுகொலையன்று மராட்டியத்தின் வீதிகளில் அண்ணா, அண்ணா என்ற சத்தம் தான் அதிகம் கேட்டது. தற்போது நாங்கள் நரேந்திர தபோல்கர்கள், நாங்கள் பன்சாரேக்கள் என்ற முழக்கம் தான் தற்போது அதிகம் கேட்க ஆரம்பித்துள்ளது.  மூடநம்பிக்கைக்கு எதிராக பலியான இந்த இருவரின் முதல்பெயர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே. நம்பிக்கை பெயர்களில் அல்ல, செயல்களில் மட்டுமே என நிலைநிறுத்தியுள்ளனர்.

          மூலைகரம் வரி, பிராமணர்கள் வரும் போது தாழ்த்தப்படடவர்கள் எதிரில் வரக்கூடாது, கட்டிடங்கள் கட்டும் போது களப்பலிக் கொடுப்பது, பெண்ணுக்கு திருமண மாகவில்லையென்றால் தோஷம் கழிக்க திருமண முறைகள், பொட்டு கட்டி விடுதல், தேவதாசி முறை, விதவை திருமண எதிர்ப்பு, பால்யவிவாகம், விதவைகளுக்கு மொட்டையடித்தல், உடன்கட்டை ஏறுதல், சதிக்கொடுமை, கடவுள் நம்பிக்கை பெயரால் தாவரம், விலங்கு, கற்களை வணங்குதல்  என்ற மூட நம்பிக்கைகள் பல நுhறு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த மூட நம்பிக்கைகளை  எதிர்த்து தான்  ஏராளமான சமய சீர்த்திருத்தவாதிகள் போராடியுள்ளனர்.

          ஒரு தபோல்கரும், ஒரு பன்சாரேவும் மட்டுமா? இல்லை  இராமனுஜர், இராஜாராம்மோகன்ராய், தயானந்த சர°வதி, வள்ளலார், ராமகிருஷ்ண பரம்ஹம்சர், வைகுந்தர், விவேகானந்தர், ஜோதிராவ் பூலே, ஸ்ரீ நராயணகுரு,  லாலாலாஜபதிராய், திலகர் இவர்கள் எல்லோரும் இந்து சமய ஆன்மிகவாதிகள், இவர்கள் எல்லோரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால் கண்மூடிதனமான சா°திரங்கள் பொய்யாக போகட்டும் என்றவர்கள். வள்ளலார் சாதி சமயம் பொய் என்றார்.  பசித்தவனிடம் பகவத்கீதையை பேசாதே, சாப்பிட இரண்டு ரொட்டி துண்டு கொடு என்றார் விவேகானந்தர். 

          இன்றும் சமூக போராளி பாவண்ணா வாழ்ந்த கர்நாடகத்தில்,  சுட்ட பழம், வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என ஒளவையிடம் நாகரிகமாக தமிழ் கடவுள் முருகன் கேட்டதாக கந்தபுராணம் கூறுகிறது. அந்த முருகன் கோவிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையின் மீது தலித்கள் படுத்து உருண்டால் தோல் நோய்கள் போய்விடும் என்று சொல்வது கொஞ்சமும் பகுத்தறிவுக்கு ஒப்பாகாத செயல். இதற்கு நீதிமன்றங்களும் இருவேறு தீர்ப்புகளை கொடுக்கிறது. தற்போது அறிவியல் பூர்வமாக ஆய்ந்து வழங்க வேண்டிய தீர்ப்புகளே நம்பிக்கை அடிப்படையில் வழங்கப்படுவது ஆபத்திலும் ஆபத்தானது.

          இத்தகைய மூடநம்பிக்கைதான் செவ்வாயிக்கு மங்கல்யான் அனுப்பினாலும் எலுமிச்சை கட்டி பூஜை செய்துதான் அனுப்ப வேண்டும் என திட்ட இயக்குனரே  செயல்படும் அளவிற்கு அறிவியல் பார்வை இல்லாத நிலை உள்ளது. இதனால்தான் நாட்டின் பிரதமர் தைரியமாக  பிளா°டிக் சர்ஜரி புராண காலத்திலேயே சாத்தியமாகிவிட்டது. அன்றே புஷ்பக விமானம் 16 வகையான இயந்திரங்களோடு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் வரலாற்றை திரித்து உண்மைக்கு மாறாக நரேந்திரமோடியே பேசினால் அவருக்கு கீழ் இருக்கும் சங் பரிவாரங்கள் எப்படி அறிவியலை வளர்க்கும். அதனால்தான் நோபல் பரிசு பெற்ற அமர்த்தய சென் நாளந்தா பல்கலைகழக துணைவேந்தராக நீடிக்கக்கூடாது என்ற நெருக்கடியும். அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக உள்ளது. இப்படி மூடநம்பிக்கையின் உச்சகட்டமாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதன் உச்சகட்டதான் இன்று இவர்கள் தேவதாசி முறையை சட்டமாக்கிவிடலாம் என சொல்லுமளவிற்கு சென்றுள்ளார்கள்.


          எனவே இன்றைய தேவையில் அறிவியல் பார்வை வளர்த்த சிந்தனை சிற்பி சிங்காரவேலரும், மகாகவி பாரதியும், ஜீவானந்தமும், இஎம்எஸ்ம், தபோல்கரும், பன்சேரேவும் தேவை. 

நன்றி /- இளைஞர் முழக்கம் 

பாபர் மசூதிக்கு பின்னால்


சாமி இல்லையினு சொன்னவங்க யாரும் கோயில இடிக்கல, சாமி இருக்குனு சொல்லறவன்தான் இடிச்சுட்டு இருக்கான், ஏதாவது கலவரம் நடந்தா மக்கள் பழையதை மறந்துவிடுவார்கள். அதனால் ஊருக்குள் ஒருகலவரம் உண்டு பண்ணுவோம், நம்ம செஞ்ச தப்பெல்லாம் மக்கள் மறந்துறுவாங்க. அனுதாபத்தை சொல்லி ஓட்ட வாங்கிடலாம். இது அமைதிப்படை படத்தில் வரும் வசனம் மட்டுமல்ல., இந்திய நாட்டில் காலம் காலமாக கடவுள் பெயரால் ஏராளமான போர்களும் அழிப்புகளும், மக்கள் அவதிப்படுவதும், உயிரிழப்பதும் சர்வசாதாரணமாக நடந்து வந்துள்ளது.

வலதுசாரி சக்திகள் தங்களது அரசியலை முன்னெடுக்க இந்த உத்தியை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறர்கள். இதன் தொடர்ச்சிதான் 1925ல் ஆர்எஸ்எஸ் என்ற இயக்கம் தோன்றியதன் பின்னணியில் தங்களது செயல் திட்டத்தின் தொடக்கமாக மதத்தை சொல்லி, பதட்டத்தை உருவாக்கி படிப்படியாக தங்களது நிலையை தக்க வைத்துக் கொண்ட பிஜேபி, தற்போது தனிப்பெரும்பான்மையை, ஆர்எஸ்எஸ், கார்ப்ரேட் கூட்டணியின் கலந்து செய்த கலவையாக ஆட்சிப்பொறுப்பிற்கு மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்துள்ளனர்.

இன்றைய நிலையில் பொதுசிவில் சட்டம், அரசியல் சட்டப்பிரிவு 370, ராமர் கோவில் கட்டுவது என்ற முழக்கங்களை பிஜேபி எழுப்புவது என்பது மதரீதியான பதட்டத்தை சிறுபான்மையினர் மத்தியில் உருவாக்கி அதற்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தை திரட்டிட வகுப்புவாதம் என்ற கருத்தியலை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை அடைய முயற்சிக்கிறது. இதற்காகவே பல தருணங்களில் அது ஏராளமான கலவரங்களுக்கு திட்டமிட்டு நடத்தியது. இதில் இறந்து போனவர்கள் சாதாரண உழைப்பாளி மக்களே. தனக்கு நெருக்கடி வரும் தருணங்களில் எல்லாம் அடையாளம் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுக்கிறது.

ஆர்எஸ்எஸ் துவங்கிய காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த சுதந்திரப்போராட்டத்தையே மதக் கண்ணோட்டத்தில் தான் அணுகியது. மத அடிப்படையில் சுதந்திர தேசம் அமைக்கப்பட வேண்டும் என்று வாதிட்டது ஆர்எஸ்எஸ் அமைப்பு. அதன் அன்றைய தலைவர் வி.டி.சாவர்கர், “இராணுவத்தை இந்துமயமாக்குங்கள், இந்து தேசத்தை இராணுவ மயமாக்குங்கள்“ என்றார். இதன் மறுவடிவம் தான் மோடி இன்று நடைமுறைப்படுத்தும் அரசுஎந்திரம் அனைத்தையும் காவி மயமாக்குவோம்.

அதற்காகவே கற்பனைக்கெட்டாத நம்பிக்கை சார்ந்த பிரச்சனைகளை நிரந்தரமாக வைத்துக் கொண்டு அவ்வப்போது எழுப்பி வருகிறது. வி.டி,சாவர்கர், கோல்வாக்கர், ஹெட்கேவர் போன்றவர்கள் தொடர்ந்து இந்து தேசம் உருவாக வேண்டும் என்றனர். இந்த பின்னணியில் இராமர்கோவில் கட்டுவது மட்டுமல்ல, இடிக்கப்பட்ட பாபர் மசூதி இவற்றின் பின்னணி என்ன-? உண்மையான வரலாறு என்ன?


500 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த பாபர் மசூதி ஆர்எஸ்எஸ், பிஜேபியினரால் கரசேவையினர் என்ற பெயரில் திரட்டி இடித்தார்கள். இதில் குற்றவாளி யார்? இடித்தவர்கள் யார்? நடந்தது என்ன? தண்டனை என்ன-? இதனை தொடர்ந்த கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பங்கள் எங்கே உள்ளது? இப்படி கேள்விகள் ஏராளம்.,

1949 ஆம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி நள்ளிரவு பாபர் மசூதிக்குள் அபிராம் தாசு எனும் சந்நியாசியின் தலைமையில் ஒரு சிறு கும்பல், பாபர் மசூதியின் தொழுகை அழைப்பாளர் முகமது இஸ்மாயில் தடுத்ததையும் மீறி அவரை தாக்கிவிட்டு இராமர் சிலையை வைத்துவிட்டு அடுத்தநாள் காலை பத்திரிக்கைகளில் இராமன் அவதரித்துவிட்டார் பாபர் மசூதிக்குள் என்று பிரச்சனைக்கு அச்சாரம் போட்டார்கள். அயோத்தி காவல் நிலையத்தில் அபிராம் தாசு, ராம் சகல் தாசு, சுதர்சன் தாசு மற்றும் அடையாளம் தெரியாத 60 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 147(கலகம் விளைவித்தல்), பிரிவு 448(அத்துமீறி நுழைதல்), பிரிவு 295 (வழிபாட்டுத் தலத்தை அசுத்தமாக்குவது) எப்ஐஆர் பதியப்படுகிறது. வழக்கை பதிந்த ராம் தியோ துபே எனும் காவல் அதிகாரி மசூதியிலும், வெளியிலும் விசாரணை நடத்தி, அத்துமீறல் நடந்ததையும், தாக்குதல் நடத்தியதையும் அங்கிருந்த காவலர், நேரில் கண்ட பொதுமக்கள் சாட்சியங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த நிகழ்வுக்கு பின்பு, ஆர்எஸ்எஸ்ம் அதன் பட்டாளங்களும் இரண்டு பொய்களை மிக சாதுர்த்தியமாக சொல்லி வந்தது. ஒன்று பாபர்மசூதி நீண்ட நாட்களாக தொழுகை நடத்தப்படவில்லை. இரண்டாவது இராமர் தனது பிறப்பிடத்தில் சுயம்புவாக தோன்றிவிட்டார் என 1992 டிசம்பர் 6 பாபர்மசூதி இடிக்கப்படும் வரை இந்த கட்டுக்கதையை வலுவாக பிரச்சாரம் செய்தார்கள்.

உண்மையில் 1947ல் பைசாபாத் மாவட்ட நீதிபதி நாயர், அன்றைய உபியின் இந்து மகாசபை தலைவர் திக் விஜய்நாத், பல்ராம்பூர் அரசர் மூவரும் ஒரு யாகத்தின் போது கூடிய நேரத்தில் சாவர்க்கரின் திட்டம் என திக் விஜய்நாத், இந்தியாவில் அன்னியர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில்களை மீட்டெடுப்பது. இதற்கு மாவட்ட நீதிபதி நாயர் உதவுவதாக வாக்கு கொடுத்துள்ளார். 1949 காந்தி கொலைவழக்கில் சாவர்கர் விடுதலை செய்யப்பட்ட பின்பு இந்து மகாசபையினருடன் சேர்ந்து தீட்டிய திட்டத்தின் அடிப்படையில் பரமஹம்சு இராமாயண மகாசபைக்கு தலைவராக தேர்வு செய்து அவரோடு கோபால் சிங் விஷ்ராத், நீதிபதி நாயர், அயோத்திநகர நீதிபதி குருதத்சிங் மறைமுகமாக பங்கெடுத்தனர்.

இவர்களின் உதவியோடு இந்துமகாசபையும், இராமாயண மகாசபையும் அயோத்தியில் பல நிகழ்ச்சிகளை திருவிழாக்கள், பூஜைகள் என விளம்பரப்படுத்தி தொடர்ச்சியாக நடத்தினார்கள். இந்த சாமியார்கள் சீதை பெண் என்பதால் வணங்காமல் ஆணாதிக்கத்தோடு இராமனை மட்டும் வழிபடுபவர்கள். ஆனால் இராமன் திருமணநாள் என்று சொல்லி ஒரு கொண்டாட்டத்தை 1949ல் வலிய நடத்தினார்கள். மசூதி அருகில் இருந்த இஸ்லாமியர்களிடம் வீண் சண்டைசெய்து வம்புழுத்தனர், இஸ்லாமியர்களின் மயானங்கள் சேதப்படுத்தப்பட்டது. தரப்பட்ட புகார்கள் அனைத்தும் மாவட்ட, நகர நீதிபதிகளால் புறந்தள்ளப்பட்டது. சிலைகளை அப்புறப்படுத்தாமல் தள்ளிப்போட்டார் நீதிபதி. பின்னால் வந்த ஆட்சியாளர்களாலும் இது வாக்கு வங்கி அரசியலுக்கு அற்புதமாக பயன்படுத்தப்பட்டது.


இந்த விதைதான் வளர்ந்து 1992ல் பாபர்மசூதி இடிப்பில் முடிந்தது. இடையில் தூண் பூஜை, கரசேவை, ரதயாத்திரை, செங்கல் பூஜை, மசூதி இடிப்பு என்பதில் முடிந்தது. மதசார்பின்மையை வலுவாக பேசும் காங்கிரஸ்தான் 1949லும் சரி, 1992லும் சரி ஆட்சியில் இருந்தது. அப்போது நீதிமன்றங்களில் மதசார்பின்மையை பாதுகாப்போம், வழிப்பாட்டு தளங்களை சேதப்படுத்த மாட்டோம் என்று சொன்ன பிஜேபியும், இந்துமகாசபையும் தான் சிலையை வைத்ததும், அதனை சொல்லியே மசூதியையும்இடித்தார்கள். இராமர்பிறந்தாரா? பாபர் கெட்டவரா? என்ற விவாத்திற்கு வலு சேர்க்க ஏராளமான ஆவணங்கள் அரசு காப்பகங்களிலேயே உள்ளது. படித்து பார்த்தால் இராமர் எந்த அயோத்தியில் பிறந்தார் என்பதை கண்டறியவே பல லட்சம் ஆண்டுகளாகிவிடும்.

மசூதி இடிக்கப்பட்டபோது குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்ட அத்வானியும், உமாபாரதியும் மீது வழக்கு பதியவே பல ஆண்டுகள் ஆனாது. தற்போது பல ஆண்டுகள் ஆகியும் விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரன் கமிஷன் ஆணையத்தின் அறிக்கை 900 பக்கங்களை கொண்டது. இதில் வாஜ்பாய், எல்.கே.அத்வானி, அசோக்சிங்கால், சுதர்சன், குஷபாவ் தாக்கரே, முரளிமனோகர்ஜோசி, பிரமோத் மகாஜன், விஐயராஜேசிந்தியா உட்பட 11 அதிகாரிகள் மற்றும் அமைப்பினர் தொடர்பு இருப்பதாக சுட்டி காட்டப்பட்டது, சிபிஐ விசாரணை என்ன ஆனது தெரியாது என சொல்லிவிடலாம். 

1992 ஜூலையில் மசூதி இடிப்புக்கு முன்பு நாடாளுமன்றத்தில் அத்வானி சொன்னது குறிப்பிடத்தக்கது. “1985ல் 2 தொகுதியும், 1991ல் 117ம், பெற்றோம். நாங்கள் அயோத்தி பிரச்சனையை கையில் எடுத்ததாலேயே எங்களுக்கு இந்த வெற்றி சாத்தியமானது“என்றார். பாபர்மசூதி இடிப்புக்கு பின் தான் 1998ல் 179ம், 1999ல் 182ம், பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி பெயரில் காவிக்கும்பல் ஆட்சியை பிடித்தது. இன்று அனைத்தையும் மாற்ற நினைக்கிறது.

1992 டிசம்பர் 6-13ம் தேதிக்குள் மசூதி இடிப்பின் பின்னணியில் நடந்தகலவரத்தில் பலியானவர்கள் 1200பேர். இதனை தொடர்ந்து மும்பையில் 1993 ஜனவரியில் நடந்தகலவரத்தில் 557 பேர் இறந்தனர். தினமும் 125 கோடிரூபாய் இழப்பு ஏற்பட்டது. 1993 மார்சில் மும்பை குண்டுவெடிப்புகளில் 257 பேர் இறந்தனர். இதனையொட்டி அமைக்கப்பட்ட கிருஷ்ணா கமிஷன் அறிக்கை பிஜேபி, சிவசேனை தலைவர்களை குற்றவாளியாக்கியது. 



இந்தியா ஒர் இறையாண்மையுள்ள நாடு, நாட்டில் அனைவருக்கும் வழிபடும்உரிமை சமமாக பாவிக்கப்பட வேண்டும். பிரிவு 14-21வரையிலும், 25வது பிரிவும் சமஉரிமை பேசுகிறது. ஆனால் அதை மறுத்து இன்று இராமர்கோவில் கட்டுகிறோம் என்று மசூதியை இடித்த கூட்டம், இன்று ராமர்பெயரை சொல்லி சேதுகால்வாய்திட்டத்தையும் தடுத்துநிறுத்தியுள்ளது. மக்கள் ஒற்றுமையை அழித்து, பிரிவின் விளிம்பில் தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்த துடிக்கிறார்கள். அதை தடுத்து நிறுத்துவது இன்றைய தலையாய கடமை.

நன்றி 

இளைஞர் முழக்கம்

மாத இதழ்