”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

நாளை யானையின் குடல் பிடுங்கியெறியப்படும்

“வெற்றியை தீர்மானிப்பது ஆயுதங்களல்ல.. வெகுமக்களே” என்ற உண்மையை உலகுக்கு பறைசாற்றிய தீரமிகு வியட்நாம். பிரெஞ்சு, அமெரிக்க ஆதிக்கத்திற்கெதிராக போராடிய வியட்நாமியர்களை “யானையை எதிர்க்கும் வெட்டுக்கிளிகளின் போர் ’’ என்று சொன்னவர்களை பார்த்து வியட்நாமின் தலைவர் ஹோசிமின் “விமானங்களையும், பீரங்கிகளையும் எதிர்க்க மூங்கில் குச்சிகளை தவிர நம்மிடம் ஒன்றும் கிடையாது,. ஆனால் மார்க்சியம், லெனினியம் என்ற வழிகாட்டுதலில் நிகழ்காலத்தை மட்டுமல்ல,.. எதிர்காலத்தையும் பார்க்க முடிகிறது’’.  “இன்று வெட்டுக்கிளிகள் யானையுடம் சண்டைபோடுகிறது. ஆனால் நாளை யானையின் குடல் பிடுங்கியெறியப்படும்’’ என்று சொன்னது உற்சாகப்படுத்த மட்டுமல்ல,.. உண்மையில் நடந்தேறியது.
தனது வல்லமையை காட்ட வேண்டும் என்பதற்காக சரணாகதி அடைந்த ஜப்பானின் மீது 1945ல் ஹிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டுகளை போட்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த ரத்தவெறி பிடித்த ட்ரூமன் வழியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாம் யுத்தத்தின் போது  பல மடங்கு நாசகரமான நாபாம் குண்டுகளை வியட்நாம் மீது வீசி வியட்நாமிய மக்களை அடி பணிய முயற்சி செய்த ஆணவத்திற்கும், அடங்காபிடாரிதனத்திற்கும் மொத்தமாக ஆப்பு வைத்து, வெறும் முங்கில் கழிகளையும், குச்சிகளையும் வைத்தே கொரில்லா யுத்தத்தின் மூலம் பீரங்கிகளையும், விமானங்களையும், நவீன குண்டுகளையும் கொண்ட அமெரிக்காவை புறமுதுகிட்டு ஒட வைத்தனர். வீர வியட்நாம் மக்கள்,..  

வியட்நாம் - இந்திய 6 வது நட்புறவு விழா:
வியட்நாம் மக்கள் 1954 வரை பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், அதன்பின் அமெரிக்க ஏகாபத்தியத்திற்கு எதிராகவும் போராடி தங்களது நாட்டின் சுதந்திரத்தை பாதுகாத்தனர். அன்று இந்தியாவின்  பிரதமராக இருந்த பண்டிட் ஜவஹர்லாலும், வியட்நாமின் அதிபர் ஹோசிமினும் உருவாக்கிய நட்புறவும், சகோதரத்துவம், ஒருமைப்பாடும் இன்று வரை தொடர்கிறது.  அதன் தொடர்ச்சியே வியட்நாம் இந்திய 6 வது நட்புறவு விழாவாகும்.
2013 அக்டோபர் 20 முதல் 26 வரை வியட்நாமின் தலைநகரான ஹனாய், டானாங், ஹோசிமின் சிட்டி ஆகிய நகரங்களில் நடைபெற்றது. இந்தியக் குழுவிற்கு ஏஐபிஎஸ்ஓ-வின் துணைத்தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. தேவிபிரசாத் திரிபாதி அவர்கள் தலைமையில் 19 பேர் கொண்ட பிரதிநிதிகளும், 10 பேர் கொண்ட கலைக்குழுவுமென 29  பேர் கொண்ட குழு பயணம் செய்தது.
அக்டோபர் 20ம் மாலையில் இந்தியா, வியட்நாம் நாடுகளின் பராம்பரிய கலைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 21ம் தேதி வியட்நாமின் தலைநகர் ஹனாயில் துவக்கவிழா நடைபெற்றது. அதற்கு முன் உலக உழைப்பாளி மக்களின் உன்னத தலைவர்களில் ஒருவரான ஹோசிமின் நினைவிடத்தில் அஞ்சலியும், மரியாதையும் செலுத்தப்பட்டது.
துவக்கநிகழ்வில் இந்திய பயணக்குழுவின் தலைவர் தேவி பிரசாத் திரிபாதி எம்.பி., ஏஐபிஎ°ஓ-வின் பொதுச் செயாளர் பல்லக்சென்குப்தா, வியட்நாம் நட்புறவு கழகத்தின் தலைவர் ஹா மிங்யூ, வியட்நாமிற்கான இந்திய துhதர் திருமதி ப்ரீதி சரண் ஆகியோர் உரையாற்றினார்கள். ஹனாய், டனாங், ஹோசிமின் சிட்டி ஆகிய மூன்று வட, மத்திய, தென் வியட்நாமின் நகரங்களுக்கு பயணம் செய்தோம்.

தோழர் ஹோசிமின் நினைவாக
வியட்நாமின் தலைநகர் ஹனாயில் ஹோசிமின் அவர்கள் வாழ்ந்த வீடும், அவர் பணியாற்றிய அரசு மாளிகையும், கண்காட்சியகம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தோழர் ஹோசிமின் உடல் வைக்கப்பட்டுள்ள அறை பராமரிப்பு பணிக்காக நவம்பர் முதல்வாரம் வரை மூடப்பட்டிருந்ததால் அந்த அறைக்கு முன்பே அஞ்சலியும், மரியாதையும் செலுத்தப்பட்டது. அவரின் இறுதி நிமிட வாழ்க்கை குறித்த ஒளிப்பதிவு காட்சிகள் நினைவகத்தின் உள்ளரங்கில் திரைப்படமாக காட்டப்பட்டது.
தோழர் ஹோசிமின் வாழ்ந்த அந்த மூங்கில் வீடு பார்க்க மிகவும் எளிமையாக உள்ளது. தென்னைமரங்களும், மூங்கில்களும், வாழைமரங்களும் அருகில் ஒரு சிறு குளமும் உள்ள ரம்மியமான இயற்கை கொஞ்சுமிடம். எங்கும் பறவைகளின் கொஞ்சும் ஒலிகள், காற்றின் சலசலப்பில் எழும் இசையில் அமைந்த இடம். செய்தி தாள்களும், புத்தகங்களும், ஒரு தட்டச்சு எந்திரமும், படுக்கைக்கு பதிலாக பாய் விரிக்கப்பட்டுள்ளது. இதுதான் அவரின் வாழிடம். எந்த நேரமும் உழைப்பும், படிப்புமாக செயலாக்கத்தின் முன்மாதிரியாக இருந்துள்ளார்.
இது குறித்து சோவியத்தின் நிருபர் ஒருவர் பேட்டி கண்டபோது கேட்டதற்கு “ நான் அதற்கு பழகிவிட்டேன், எப்போது வேண்டுமானாலும் எழுந்து கிளம்பி விடலாம், புரட்சியின் போதும், தலை மறைவு வாழ்க்கையின் போதும் இதனை கற்றுக் கொண்டேன்.  எழுந்து புறப்பட ஐந்து நிமிடங்களே போதுமானது’’.  
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வேலை செய்கிறீர்கள் என்று கேட்ட போது “ பறவைகளோடு நான் எழுகிறேன், வானில் நட்சத்திரங்கள் தோன்றும் போது உறங்கச் செல்கிறேன்’’ என்றார்.
தோழர் ஹோசிமின் மிகக்கடுமையான உழைப்பாளி. சிறு வயது முதல் அவர் படிக்கும் காலத்தில் ரூசோவை கற்றபோது பிரெஞ்சு புரட்சியின் முழக்கமான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை எப்படி முழங்கினார். இந்த கோஷங்களின் பின்னுள்ள வரலாறு என்ன என்பதை தெரிந்துகொள்ள சிறுவயதிலேயே பிரான்சை நோக்கி சென்றார் கப்பலில். அப்போது எதுவும் தெரியாமல், உணவுக்கும், தங்கவும் என்ன செய்வாய் என்று நண்பர் கேட்டபோது “இரண்டு கைகளையும் உயர்த்தி பத்து விரல்களை காண்பித்து இது தான் மூலதனம்’’ என்றார்.
கால்சட்டையும், சுருட்டி விடப்பட்ட மேற்சட்டையும் அணிந்து கொண்டு எங்கு போக வேண்டுமென்றாலும் நடந்தே செல்லும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தார். மலைகளா? செங்குத்தான சிகரமா? வனம் அடர்ந்த காட்டுப்பாதையா ? அனைத்திலும் நடந்தே சென்றார். கேட்டபோது சொன்னார், நாளை புரட்சியின் போது பயன்படும் என்று பதிலளிப்பார்.
1930ல் வியட்நாம் கம்யூனி°ட் கட்சியை உருவாக்கியது முதல் தனது இறுதி நாள் வரை மார்க்சிய லெனினிய பாதையில் உறுதியாக நின்று அதுதான் அத்தனை செயல்களுக்கும் அடிப்படையான தத்துவம், வளரும் சமூக விஞ்ஞானம், பிரச்சனைகளின் தீர்வு அதில் தான் உள்ளது என்பதை உரக்க சொல்லி அதன் அடிப்படையில் புரட்சியின் பாதை என்ற புத்தகத்தை வியட்நாமின் புரட்சிக்கான கட்டமைப்பு குறித்து எழுதினார். அது தான் இன்று வரை வியட்நாம் கம்யூனி°ட்களின் அடிப்படையான நுhலாக போற்றப்படுகிறது.

இந்திய வரலாற்றோடு இணைந்த செம்பா பண்பாட்டு மையம்
வரலாற்று சிறப்புமிக்க டனாங் செம்பா பண்பாட்டு கலை மையத்தினையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கொரில்லா யுத்தத்தை நடத்திய குச்சி பகுதியையும் நேரில் பார்த்த போது வியட்நாமின் பல நுhறு ஆண்டுகளின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய வியட்நாமிற்கான தொடர்ப்பு என்பது 1012 முதல் 1044 வரை சோழர்கள் காலத்தில் கடாரத்தை வென்ற ராஜேந்திரசோழன் காலத்தில் கடற்கரை பகுதிகளான தென் மற்றும் மத்திய வியட்நாமின் துறைமுகப்பகுதிகளை கைப்பற்றினான்.
அப்போது தென்னிந்திய கட்டட மற்றும் சிற்பக்கலைகளையும், கோவில்களையும் அங்கே உருவாக்கினான். அது இன்று சம்பா என்றழைக்கப்படும் பகுதியில் கண்டெடுக்கப்பட்டு மிகப் பெரிய கலைகாட்சியகமாக டனாங் நகரில் பாதுகாக்கப்படுகிறது. சிவன், இந்திரன், விஷ்ணு, பிரம்மா, கணேசா, நவகிரகங்கள் மற்றும் லிங்க வழிபாடு என ஏராளமான இந்திய தெய்வ வழிபாட்டு சிலைகளின் சிதையா மற்றும் சிதைந்த பகுதிகள் கண்டெடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கலைகாட்சியகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் இது குறித்து இரண்டு வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தனர்.
அதே போல் ஹோசிமின் சிட்டி, டனாங் நகரில் உள்ள பல்வேறு கலை பண்பாட்டு மற்றும் நட்புறவு கழகங்களின் மூலம் கருத்தரங்கம், கலைப்பரிமாற்றம், உரையாடல்கள் என நடைபெற்றது. அனைத்திலும் இரண்டு நாடுகளிடையேயான உறவுகளும், மக்களின் ஒருமைப்பாடும், சுற்றுலா,  சகோதர உதவிகள் என பல தளங்களில் விவாதங்கள் நடைபெற்றது.
அமெரிக்காவை விரட்டியடித்த குச்சி
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 1975 வரை நடத்திய கொரில்லா யுத்தத்தின் வீர நினைவுகளை இன்றும் பாதுகாத்து வைத்து வருகின்றனர். குச்சி என்ற பகுதியில் ஆண்களும், பெண்களும் 4, 6, 10 மீட்டர் ஆழத்தில் பூமியில் குழிகளையும், பட்டறைகளையும் உருவாக்கி அதன் பதுங்கி இருந்து போரை நடத்தினார்கள். கையில் வெறும் கட்டைதுப்பாக்கியும், மூங்கில் குச்சிகளை வைத்துக் கொண்டு நவீன விமானங்களையும், பீரங்கிகளையும் வைத்து ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திய அமெரிக்காவை மண்ணை கவ்வ வைத்தது.  அந்த மகத்தான சாதனை செய்த வீரர்களின் நினைவுகள் இன்று அங்கு போற்றப்படுகிறது. தொடர்ந்து அந்த வரலாறு இளம் தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்து தேச இறையாண்மை கட்டியமைக்கப்படுகிறது.

வளர்ச்சியடைந்த நாகரிகம்
டனாங் நகரில் உள்ள ஆற்றுக்கு செல்ல பாதை தெரியவில்லை என்று ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் இருந்தவரிடம் கேட்டபோது அவருக்கு சரியாக புரியவில்லை. நாங்களும் அருகில் இருந்த கடையில் கேட்டு பாதையை தெரிந்து நகர்ந்தோம். 300 மீட்டர் சென்றிருப்போம். அந்த வாகன ஒட்டி தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு வந்து எங்களை வழிமறித்து நீங்கள் கேட்டது எனக்கு புரியவில்லை. எனது மனைவிக்கு பாதை தெரியும் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என சொல்ல அவரது மனைவியும் ஆற்றுக்கு செல்லும் பாதையை சொன்னார். எங்களை தேடி கண்டுபிடித்து வழியை காட்டிய இந்த உயர்ந்த பண்பாட்டை  எப்படிச் சொல்வது என தெரியவில்லை.
நாங்கள் பார்த்த ஹனாய், டனாங், ஹோசிமின் சிட்டி ஆகிய பெரு நகரங்களில் சாலையின் இரு மங்கும் லட்சக்கணக்கான இரண்டு சக்கர வாகனங்களின் அணிவகுப்பாக ஆண்களும் பெண்களும் சரிசமமாக ஓட்டி செல்வதை பார்க்க முடிகிறது. முக்கியமாக குழந்தையோடு செல்லும் பெற்றோர் உட்பட  மூவரும் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். ஹெல்மெட் இல்லாமல் யாரையும் பார்க்க முடியவில்லை. இரவு 11 மணிக்குக்கூட சாலைகளில் போக்குவரத்து சிக்கனலை மதித்து நின்று செல்வதை பார்க்க முடிந்தது.  
தென் வியாட்நாமில்  16, 17ம் நுhற்றாண்டுகளில் சர்வதேச வர்த்தக தளமாக திகழ்ந்த  ஹய்அன் ஆற்றுப்படுகை அருகில் உள்ள பழங்கால நகரம் பார்ப்பவர்களை பரவசப் படுத்தும் விதமாக இருந்தது. இங்கு வியட்நாம் பல தருணங்களில் ஆட்சி செய்த சீன, ஜப்பானிய, டச்சு, இந்திய கட்டடக்கலைகளின் தொன்மங்கள் பாதுகாக்கப்படுகிறது.  மிகப் பெரிய சுற்றுத்தளமாகவும் இன்று காட்சி அளிக்கிறது.

வியட்நாம் கம்யூனி°ட் கட்சித்தலைவர்களோடு சந்திப்பு
அன்று மதியம் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும், மத்திய நிலைக்குழுவின் செயற்குழு உறுப்பினருமான லீ ஹங் அன் அவர்களை கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் சந்தித்து உரையாடினோம். இரு நாடுகளிடையே நம்ப தகுந்த கூட்டாளியாக அனைத்து விதத்திலும் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகளில் பராமரிக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்திய வியட்நாம் நாடுகளிடையே உறவு என்பது ஆயிரம் ஆண்டுகளை தாண்டியது என்றாலும் ராஜீய ரீதியில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை வியட்நாமில் இருந்து விரட்டி அடித்து சுதந்திரம் பெற்ற 1954மாண்டு முதல் இந்திய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் வியட்நாம் தலைவர் ஹோசிமின் ஆகியோரால் ஏற்றி வைக்கப்பட்ட இந்த நட்புறவு ஜோதி அணையாமல் பாதுகாக்கப்படும் என்று இரண்டு நாடுகளின் தலைவர்களின் உரையாடலில் உறுதியேற்றனர். 1969களில் “நமது பாவேந்தரும் அன்று அமெரிக்காவை பார்த்து எச்சரித்தார் இந்திய மக்களின் சார்பாக, ஆம் “அமெரிக்காவே எச்சரிக்கை உனது இடுப்பை உடைத்து நெறித்துவிடும் வீர வியட்நாம்’’ என்று..
சோசலிச பாதையில் 50 ஆண்டுகளை கடந்து
கடந்த 50 ஆண்டுகளில் உலக அளவில் நாடுகளின் உறவுகளில், முதலாளித்துவ மற்றும் சோசலிச முகாம்களில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.  ஆனால் 1917ல் சோவியத் உருவான முதல் சோசலிச அரசும் அதனைத் தொடர்ந்து சீனா, கியூபா, வியட்நாம், கொரியா, சிலி உள்ளிட்டு ஏராளமான நாடுகளில் சோசலிச அரசுகளும் உருவானதும், உலகின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு சோசலிச முகாமின் கீழ் வந்ததும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
1930 பிப்ரவரி 3ம் தேதி வியட்நாம் கம்யூனி°ட் கட்சி உருவாக்கப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளில் வியட்நாமிய விடுதலைக்கான போராட்டத்தையும், மேற்கத்திய காலனிய ஆதிக்கத்திற்கெதிராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாகவும் வீரமிகு போராட்டத்தை நடத்தியவர்கள்.  இதன் பின்னணியிலேயே வியட்நாமிய கம்யூனி°ட் கட்சி (சிபிவி) தேச மறு கட்டுமானம், நவீனமயமாக்கல், தொழில்மயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் வழியில் அரசும் வீறுநடை போடுகிறது.
சோவியத்நாட்டில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியின் தாக்கமே வியட்நாமிய புரட்சியின் அடிநாதமாகும். தோழர் ஹோசிமின் ஒவ்வொரு நிமிடமும் மார்க்சிய லெனினிய பாதையில் செல்வதன் அவசியம் குறித்து தெளிவான பார்வையோடும், சொல்லிருந்து செயலை நோக்கி ஒவ்வொரு படியாக வியட்நாமின் வளர்ச்சி வித்திட்டவர். அவரின் வழியில் இன்று வியட்நாமின் சோசலிச அரசு 2020க்குள் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் வியட்நாமும் வந்துவிடும் என்று உறுதியாக அறிவித்து அதற்கான திட்டங்களை அமுலாக்குவதில் உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இன்று வரை வியட்நாமிய மக்களுக்கு தேச நிர்மாணம் குறித்த புரிதலையும், தேச விடுதலைப் போர் குறித்தும், ஜனநாயகம், சமூக முன்னேற்றம் பற்றியும் தொடர்ந்து மக்களுக்கு போதித்து வருகிறது. “அனைத்து மக்களும் நாகரிகமான வாழ்க்கை வாழ ஒன்றிணந்த கட்டுமானத்தை உருவாக்குவது’’ என்ற முழக்கதோடு குடிமக்கள் சமூகத்தின் ஜனநாயகமும், சமத்துவமுமான வாழ்க்கையும், பலமான தேசம், உயர்தரமான வாழ்க்கை என்பதே குறிக்கோள் என்ற அடிப்படையில் கொள்கைகள் வகுக்கப்பட்டு நிர்வாக மற்றும் அரசியல் முறை உருவாக்கப்பட்டு அனைத்து மக்களின் பங்கேற்போடு திட்டங்கள் தீட்டப்படுகிறது.

அனைவருக்கும் கல்வி, சுகாதாரம்
வியட்நாமில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆரம்பக்கல்வி முழுமையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இன்றைய தினம் வரை மேல்நிலைக் கல்வி வரை 95 சதத்திற்கும் அதிகமான கிராமப்புற மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். பள்ளிக்கல்வி அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே பராமரிக்கப்படுவதால் ஏற்றத்தாழ்வற்று சமத்துவமான கல்வி வழங்கப்படுகிறது. உயர் கல்வி கற்க வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேசப்பற்று, சுதந்திரப்போராட்ட வரலாறு, லெனினியம், மார்க்சியம் குறித்தும் கற்பிக்கப்படுகின்றன.  
அதே போல் சுகாதாரம் முழுமையாக கிடைப்பதாற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்தின் கூறுகளான  குடிநீர், ஊட்டச்சத்துமிக்க உணவு,  மருத்துவம், கழிப்பறை, துhய்மையான வீடு, குப்பைகளற்ற சுற்றுப்புறச்சூழல் இவைகளை வரும் 2017க்குள் அனைவருக்கும் வழங்கிடுவோம் என்று நம்பிக்கையோடு அரசு அதிகாரிகள் மட்டுமல்ல மக்களும், கல்லுhரி மாணவர்களும் நம்பிக்கையை வெளிப்படுத்தினர். இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் மருத்துவ சாதனங்களை பயன்பாட்டிற்கு நாடு முழுவதும் முழுமையாக கொண்டு சேர்ப்பதற்கு முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 50 சதமாக இருந்த வறுமைக்கோடு அளவு இன்று 10 சதத்திற்கும் கீழாக குறைக்கப்பட்டு மிக வேகமாக வறுமை ஒழிப்புத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.  குறிப்பாக 2010ம் ஆண்டு 14.2 சதமாக இருந்த வறுமையின் அளவு 2012ல் 9.6 சதமாகவும்,  2013ல் 7.8 சதமாக குறைந்துள்ளது.
வரும் 2017க்குள் வறுமைக்கோடு என்கிற வரையறையே இல்லாமல் வறுமையை முற்றிலும் அகற்றிடுவோம் என்று  மார்தட்டி பெருமை பொங்க வியட்நாமிய அதிகாரிகளும், பல்கலைகழக மாணவ மாணவியர்களும் சொல்வதை கேட்டால் இனம் புரிய உணர்வு மேலோங்குகிறது. இது தான் பூமியில் படைக்கப்பட்ட சொர்க்கலோகமா? என்னா ஒரு பெருமிதஉணர்வு!. ஹோசிமின் நாட்டில் அனை வருக்கும் அனைத்தையும் பகிர்ந்தளிப்போம் என்ற நம்பிக்கை,..குழந்தை முதல் பெரியவர் வரை...
சராசரியான வாழ்க்கைநிலைக்கு மேலாக 98 சதமான குடும்பங்களுக்கு சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதற்கான வாழ்நிலைச்சூழல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மகத்தான சாதனையாகும்.  அதே போல் சமூக பாதுகாப்பு திட்டத்தன் மூலம் 25 மில்லியன் பேர் வழக்கமாக பயனடைகின்றனர். மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முதியோர் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது மிகக் குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.
அதே போல் நாடு முழுவதும் இன்னும் முழுமையான முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க துவங்காத 5000 கிராமங்கள் தேர்வுசெய்யப்பட்டு கிராமத்தின் வாழ்க்கைதரத்தினை மேம்படுத்திட,  முதல்கட்டமாக 500 படித்த அறிவுஜீவி களப்பணியாளர்களை தேர்வு செய்து அந்த கிராமங்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்த அனுப்பியுள்ளது. இதற்கு வியட்நாமின் உள்துறையும், இளைஞர் நலத்துறையும் 30 வயதிற்குட்பட்ட கல்வி ஞானமுள்ள இளைஞர்களை 5 ஆண்டுகாலம் கிராமங்களில் தங்கி பணியாற்ற பணித்துள்ளது.  வரும் ஆண்டில் 300 பேர் என விஞ்ஞானப் பூர்வமான திட்டமிடலோடு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த திட்டமிட்டு பணியாற்றுகிறது.
அதனால் தான் எங்களால் ஹனாய், டனாங் ஆகிய நகரங்களில் தங்கி இருந்த 5 நாட்களிலும் ஒரு பிச்சைக்காரரைக்கூடவும், சாலையோர வாசிகளையும் பார்க்க முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அப்படி இருந்தவர்களையும் அரசு கண்டறிந்து அவர்களுக்கான மறு குடிஅமர்வு திட்டங்களையும், குடியிருப்பு வசதிகளையும், வேலை வாய்ப்பையும் உருவாக்கி தந்து மாற்றி இருக்கிறது.

வேலையின்மைக்கு எதிராக
உலகிலுள்ள ஏகாதிபத்திய நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் ஏராளமான போராட்டங்கள் வேலையின்மைக்கெதிராக நடைபெற்று வருகிறது. ஆனால் வியட்நாமில் இதே காலத்தில் சோசலிச அரசின் சாதனையாக புதிய வேலைவாய்ப்புகள் திட்டமிட்ட இலக்கினை நோக்கி எட்டி வருகிறது.  இதற்கான அரசியல் திறத்தோடு அந்நாட்டின் அரசு செயல்படுகிறது.
1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு 5.5 சதம் இலக்கு தீர்மானிக்கப் பட்டு 5.4 சதம் அடையப்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும் 1.54 மில்லியன் வேலை வாய்ப்புகளும், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 4.6 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது மிகக்குறிப்பிடதகுந்த அம்சமாகும். .
2. நன்கு பயிற்சியளிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 2010ல் 40 சதமிருந்து 2013ல் 49 சதமாக உயர்ந்துள்ளது. இது 2015க்குள் 55 சதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
3. வேலையிழப்பு காலத்திற்கான இன்சூரன்° திட்டம் உருவாக்கப்பட்டு சமூக பாதுகாப்போடு நிவாரணம் வழங்கப்படுகிறது. இதற்காக உருவாகக்கப்பட்ட திட்டத்தில் இதுவரை 21.4 சதம் அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர்.
4. ஹனாய் நகரத்தில் மட்டும் வளர்ச்சி விகிதம் 8.9 சதம் திட்டமிடப்பட்டு இந்தாண்டின் முதல் 9 மாதத்தில் 7.88சதம் அளவிற்கு எட்டப்பட்டுள்ளது.  இதில் சேவைத்துறையில் 8.9 சதமும், தொழில் மற்றும் கட்டுமானத்துறையில் 7.42 சதமும், வேளாண்துறையில் 2.35 சதமும் வளர்ச்சி கிடைத்துள்ளது.
5. பணியிடங்களில் வேலையின் பணி அமர்வு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்தகராறு தாவாக்கள் சுமூகமான முறையில் பேசி தீர்க்கப்படுகிறது. இதனால் வேலைநிறுத்தம் உள்ளிட்ட இதர நடவடிக்கைகள் குறைந்துள்ளன.

ஐந்தாண்டு திட்டங்களின் வளர்ச்சி விகிதம்
கட்சியின் 11 வது காங்கிரசும், 4 வது பிளீனமும் “நிகழ்கால அவசர பிரச்சனைகளும், கட்சி கட்டும் பணியும்’’ என்ற தீர்மானத்தை வெளியிட்டது. இதன் அடிப்படையில் 2006 - 2010 கால ஐந்தாண்டு திட்டத்தில் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 7 சதம் என்ற சாதனையை படைத்தது.  தற்போது 2011-2015 காலத்திற்கான ஐந்தாண்டு திட்ட காலத்திற்கான திட்டமிடலில் 2011- 2013 காலத்தில் இலக்கினை நோக்கி கணிசமாக முன்னேறியுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் நிலைநிறுத்தப்பட்டு, பணவீக்கம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. குறிப்பாக நுகர்வோர் குறியீட்டு எண் இந்தாண்டு முதல் 9 மாதத்தில் 4.63 சதமாக உள்ளது. 2012ம் ஆண்டைவிட 6.81 சதம் குறைந்துள்ளது.  இந்தாண்டு 8 சதத்திற்குள் நிறுத்துவது என்பதில் 7சதமாக குறைத்துவிட முடியும் என்ற சாதனையை நோக்கி செல்கிறது.
வருடத்திற்கு 10 சதம் ஏற்றுமதியை அதிகரிப்பது என்பதில் 14.4 சதம் அதிகரித்துள்ளது.  அதே நேரத்தில் இறக்குமதி 8 சதம் தீர்மானிக்கப்பட்டு 15.6 சதமாக உள்ளது. இதனால் டாலர்மயமும், தங்கமயத்திற்கும் எதிரான வியட்நாமின் டாங் மதிப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த 5 ஆண்டு திட்ட காலத்தில் 12 சதம் ஏற்றுமதிக்கு திட்டமிடப்பட்டு கடந்த மூன்றாண்டுகளில் 22 சதம் அளவிற்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது மிகப் பெரிய சாதனையாகும். அதேபோல் அந்நிய முதலீடும் 29.1 சதம் என்கிற அளவில் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு சந்தை என்பது தொடர்ந்து வளர்முகமாக உள்ளது. உழைப்பாளி மக்களின் அன்றாட பயன்பாட்டில் உள்ள மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி, மருத்துவம் ஆகியவைகளின் விலைஉயர்வு கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது.
நகரமயமாதல் என்பது 2010ல் 30.5 சதத்திலிருந்து 2013ல் 33.4 சதமாக உயர்ந்துள்ளது.  இதற்கு காரணம் உற்பத்தி சார்ந்த தொழில்மய நடவடிக்கை என்பது 2010ல் 60.2 சதமாக இருந்தது 2013ல் 78 சதம் வேகமாக உயர்ந்தது.
இக்காலத்தில் 11,410 புதிய நிறுவனங்கள் மூலம் 69.3 டிரில்லியன் வியட்நாம் டாங்          (3.26 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரேசில், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், தென் அமெரிக்கா போன்ற நாடுகள் பல ஒப்பந்தங்களை உருவாக்க முன்வந்துள்ளன.
எலக்ட்ரானிக் துறையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை கண்டு வருகிறது. குறிப்பாக  மொபைல் போன் துறையில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் இந்த ஆண்டின் இறுதிக்குள் வர்த்தகம் நடைபெறும். 15.5 பில்லியன் டாலர் முதல் 9 மாதத்தில் ஏற்றுமதியாகியுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்தகராறு மற்றும் தொழிற்சாலை சட்டங்களுக்கு உட்பட்டு ஏராளமாக தொழிற்சாலைகளை சாம்சங்,  இன்டெல், கேனான், நீடெக், ஃபியூட்சூ, பிரதர், பனாசோனிக், ரெனிச°, பாக்°கான் மற்றும் பா°க் போன்ற நிறுவனங்கள் துவக்கி வருகின்றன. இதற்கு தேவையான உதிரி பாகங்களை ஏராளமான வியட்நாமிய சிறு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. உதாரணத்திற்கு நோக்கியா நிறுவனத்திற்கு 10 உள்ளூர் தொழிற்சாலைகள் உதிரிபாகங்களை உற்பத்தி செய்து தருகின்றன.
இந்த தொழிற்சாலை மண்டலங்களில் குறிப்பாக 61 நகரங்களில் பணியாற்றும் 21 லட்சம் தொழிலாளர் களுக்கு  குடியிருப்பதற்கான வீடுகளை அரசே கட்டி தர முடிவெடுத்து முதல் கட்டமாக 2009 முதல் 2012 வரையான காலத்தில் 85. 7 மில்லியன் யுஎ° டாலர் செலவிடப்பட்டு 1 லட்சம் தொழிலாளர் களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
வேளாண்துறையை பலப்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பமும், வேளாண் மண்டலங்களும், அது சார்ந்த தொழிற்சாலைகளும் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேலும் உற்பத்தியாகும் பொருட்களை சேதராமில்லாமல் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் உத்தரவாதப்படுத்தப்படுகிறது.
இதனால் கிராம மற்றும் புறநகர் பகுதிகளின் அடிப்படையாக இருந்த மீன்பிடி, வனம், விவசாயம் ஆகியவை 2010ல் 49.5 சதமாக இருந்தது 2013ல் 47 சதமாக குறைந்துள்ளது. நாட்டின் நிலையான வளர்ச்சியில் முக்கிய பங்கை ஆற்றும் கிராமப்பகுதிகளின் கட்டுமானத்தை உறுதிப்படுத்தும் வகையில் புதிய கிராமப்புற கட்டுமானத் திட்டத்தை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இந்திய  வியட்நாம் நட்புறவு
இந்திய வியட்நாம் நாடுகளிடையே வர்த்தக ரீதியான உறவுகளில் 2012ல் 3.94 பில்லியன் யுஎ° டாலர் என்ற அளவை எட்டியுள்ளது. இதில் இந்தியா 2.15 பில்லியன் டாலர் அளவும், வியட்நாம் 1.78 பில்லியன் டாலர் அளவும் ஏற்றுமதியில் பரிமாறிக் கொண்டன. இது 2015க்குள் 7 பில்லியன் டாலர் அளவுக்கு உயருமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் கிழக்காசிய நாடுகளில் நம்பதகுந்த கூட்டாளியாக அனைத்து துறைகளில் வியட்நாம் திகழ்கிறது.  இக்காலத்தில் 86 திட்டங்களில் இந்திய கம்பெனிகள் குறிப்பாக எண்ணெய், எரிவாயு, தாதுக்கள், சர்க்கரை உற்பத்தி, விவசாய ரசாயன மற்றும் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் ஆகியவைகளில் முதலீடு செய்துள்ளன.  
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்சிஜி ஹோசிமின் சிட்டியின் 25 சத மின்சார தேவையை எரிவாயு மூலம் உற்பத்தி செய்து கொடுத்து சாதனை படைத்து வருகிறது. கியூபாவில் கூட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் ஓஎன்சிஜி ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் தான் தனியார் கையில் அனைத்து கொடுத்துவிட்டு போக அரசுகள் முயற்சி செய்கின்றது.
நாம்சியன் நீர்மின் திட்டத்திற்கு 45 மில்லியன் டாலர் செலவில் உதவி வருகிறது இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பிஹெச்இஎல்( பாரதமின்மிகு நிறுவனம்).
வியட்நாமின் தலைநகரான ஹனாயில் இந்திய “நிரந்தர பண்பாட்டு மையத்தை’’ அமைக்க விருக்கிறது. அதேபோல் நேரடியாக வியட்நாமிற்கு விமான சேவை துவக்க இரண்டு நாடுகளில் அரசு மட்ட அளவில் 2011ல் ஒப்பந்தம் போடப்பட்டு இந்தாண்டு இறுதிககுள் துவங்கும் என் எதிர்பார்க்கின்றனர்.

அனுபவங்களிலிருந்து படிப்பினை கற்றுக்கொள்ளுதல்
அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேற வேண்டிய அம்சங்கள் குறித்து வியட்நாமிய பிரதமர் நீயூன் டான் டங் கூறும் போது,.. மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்டுவதில் ஏற்பட்ட முன்னேற்றம் இன்னும் மக்களுக்கு கூடுதலான முறையில் கொண்டு சேர்ப்பதில் முன்னேற வேண்டியுள்ளது. குறிப்பாக சந்தை விலையேற்றத்தை கட்டுக்கொள் கொண்டு வர நடவடிக்கை தேவைப்  படுகிறது.
அதேபோல்  சமூக வளர்ச்சிக்கான மொத்த முதலீடு இன்னும் அதிகரிக்க வேண்டி யுள்ளது. தொழில் வளர்ச்சியும், வேளாண் பொருட்கள் ஏற்றுமதியும் மெதுவான வேகத்தி லேயே முன்னேறுகிறது. 5.5 சதம் இலக்கு தீர்மானித்து 5.4 சதமே எட்டப்பட்டுள்ளது.  அதே பண்பாட்டின் இடையூறாக நவீன சாதனமான இணையதளங்கள், ஊடகங்கள் வேறுவிதமான வாழ்வியல் முறையை கற்றுத்தருகின்றன. இதனை எதிர்த்த போராட்டத்தையும் வலுவாக நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.  
நவீன தாராள உலகமயமாக்கல் கொள்கைகளும், விரிவடைந்து வரும் உலக சந்தையும்,  புதிய நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பல்வேறு மாற்றங்களை நாடுகளின் மீது திணித்து வருகிறது. அது வளர்ச்சியையும் உருவாக்குகிறது. பல தீமைகளையும் விளைவிக்கிறது.  இந்த விளைவுகளை சரியான முறையில் உள்வாங்கிக் கொண்டு தேச கட்டுமானத்திலும்,  மக்களின் அடிப்படை வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதிலும் மாற்றம் காண வேண்டிய மிகப் பெரிய படிப்பினை கண் முன்னே உள்ளது.
தேசம் தழுவிய அளவில் எடுக்கப்படும் முன்முயற்சிகள் அமுலாக்கமும், உள்ளூர் மட்ட அளவிலும், மாகாண அளவிலும் அதே வேகத்தில் செயல்படுத்துவதில் பலகீனம் உள்ளது. இதனை கீழ்நிலை நிர்வாக அமைப்பு முறையும், கட்சியின் தலைவர்களும் கண்காணித்து முறைப்படுத்திட வேண்டும்.
இறுதியாக ஒரு சோசலிச அரசு தனது திட்டமிடலில் செயலாக்கம் குறித்து அவ்வப்போது அதன் உண்மை நிலை, புறச்சூழல், பயன்பாடு குறித்து கண்காணித்து செழுமைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் ஐந்தாண்டு திட்டத்தன் வரும் ஆண்டுகளில் 2015க்குள் வியட்நாமிய அரசும், கம்யூனி°ட் கட்சியும் செய்ய வேண்டிய முக்கியமான இலக்கை  சுட்டிக்காட்டுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 2200-2300 யுஎஸ் டாலர் (4.6கோடி டாங்) தனிநபர் வருமானத்தை 2015க்குள் ஈட்டிவிடுவோம்.
நுகர்வோர் விலைகுறியிட்டென் ஆண்டுக்கு 7 சதமாக்கப்படும்.
ஏற்றுமதி அளவு ஆண்டுக்கு 10 சத வளர்ச்சியும்,  முதலீடு ஜிடிபியில் 32 சதமாக உயர்த்தப்படும்.
ஆண்டுக்கு  3 முதல் 3.2 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடுவது.  நகர்புற வேலையின்மை அளவை 4 சதத்திற்குள் குறைத்திடுவது. பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையை 55 சதமாக உயர்த்திடுவது.
சாதாரண ஏழை எளிய மக்களின் அளவை 1.5 முதல் 2 சதத்திற்குள்ளாக குறைத்திடுவது. பின்தங்கிய மாவட்டங்களில் 4 சதம் என்ற அளவிற்கு குறைப்பது.
42 சதம் வனங்களை பாதுகாக்க கூடுதல் முயற்சி எடுப்பது.  
கம்யூன் கிளினிக் உள்ளிட்டு அனைத்து மருத்துவ வளாகங்களிலும் 10000 பேருக்கு 22.5 படுக்கைகள் என்ற அடிப்படையில் அனைவருக்கும் மருத்துவம் என்பதை உறுதிப்படுத்துவது.
பாதுகாக்கப்பட்ட துhய்மை குடிநீர் கிராமப்புறத்தில் 84 சதம் பேருக்கும்,  நகர் புறத்தல் 80 சதம் பேருக்கு கிடைத்து வருகிறது. இதனை இன்னும் கூடுதல் படுத்துவது. அதே நேரத்தில் வேகமாக சுற்றுப்புற சூழல் மாசுபாடும் அதிகரித்து வருகிறது.  இதனை எதிர்கொள்ளும் விதத்தில் கழிவு நீரை சுத்தப்படுத்தி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் அளவை 80 சதத்திற்கு உயர்த்துவது.

சொல்லிருந்து செயலை நோக்கி
உண்மையாய் இருத்தல், போற்றுதல் என்ற இரண்டு நல்லொழுக்கங்களில் ஹோசிமின் உறுதியாக இருந்தார். அடுத்தடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றார்.  வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி இந்த கோட்பாடுகளை தாங்கி நிற்கிறது. ஆம்  தொன்மையான முதாதையர்களின் வாரிசுகள், நான்காயிரம் ஆண்டுகளின் வரலாறு உடையது. அந்நிய படையெடுப்பாளர்களுக்கெதிராகவும், விடுதலைக்காகவும் போராடியவர்கள். எனவே தன் நாட்டுக்கும், மக்களுக்கும் உண்மையுடனும் நடந்து கொள்வது முதல் கடமை,.. ஒவ்வொருவருக்கும் பெற்றோர்கள் உடன் பிறந்தவர்கள் உண்டு. அவர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும், உயர்வாக மதிக்க வேண்டும், ஏனெனில் உங்களுக்கு வாழ்வு அமைத்துக் கொடுத்தவர்கள் அவர்கள். இது இரண்டாவது கடமை. இந்த இரண்டு கடமைகளான விசுவாசமும், போற்றுதலும் ஒன்றோடென்று இணைந்தவை. என்ற இந்த கோட்பாட்டை உறுதியாக பின்பற்றி நிற்கின்றன.  அதனால் தான் வெட்டுகிளிகளால் யானையின் குடலை  பிடுங்கி எறிய முடியும் என்று நம்பிக்கையோடு யுத்தகாலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் சேர்த்து சொன்னார். ஹோசிமின். ஆம்,..
“நம் மலைகள் எப்போதும் நம்மோடுதான்
நம் ஆறுகள் எப்போதும் நம்மோடுதான்
நம் மக்கள் எப்போதும் நம்மோடுதான்
அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் தோற்கடிக்கப்படுவர்
நம் நாட்டை நாம் மீண்டும் உருவாக்குவோம் புதிதாய்
இன்னும் பத்துமடங்கு அழகாக.,’’



செல்லையா முத்துக்கண்ணன்

சமூகத்தின் மீது வருத்தப்பட்டும் வருத்தப்படாமல் செய்திகளை பரப்பும் ஊடகங்களின் தொகுப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வெளிவந்துள்ளது.


இன்றைய தமிழ் சமூகத்தின் அடையாள அரசியலுக்கு ஆயுதமாக சாதிய வெறியர்களால் காதல் எதிர்ப்பு கையிலெடுக்கப்படுகிறது. உயிரினங்களின் இயல்பான காதல் உணர்வை எதிர்க்கும் அவர்கள், காதல் நிறைவேறினால் தலையே போய்விட்டது போல் இயற்கைக்கு முரணான தங்கள் அரசியலை முன்னெடுப்பதை – வருத்தப்படாத வாலிபர் சங்கம் சரியாகவே சொல்லிவிடுகிறது.
இரண்டரை மணிநேரத்தில் பாடலில், நகைசுவையில் இழையோடும் காட்சிகள் வயிறு குலுங்க வைத்துவிடுகின்றன… திரைக்கதை நகர்த்தலில் இயக்குனர் பொன்ராம் வெற்றி பெறுகிறார்.
பால்ய விவாகம் – சாதியின் பெயரால்,
பெற்றோர்களின் பயம் என்ற பார்வையில்,
பெண்ணை நீண்ட நாள் வீட்டில் வைத்திருக்க முடியாது என நியாயம் கற்பித்து தொடர்கிறது.
படிக்க வேண்டிய வயதில் பிள்ளைபெறும் இயந்திரமாக,
சமையற்கட்டில் எரியும் மரக்கட்டையாக மட்டுமே பார்க்கும் சமூகத்தில் ’பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என பாரதி சொல்லியதைப் போல – இந்தப் படமும் வலியுறுத்துவது முதல் செய்தி..

காதல் என்ற சொன்னால் காதை அறுப்பேன் என, சவால் விட்டு – பெண்ணை பூட்டிவைக்கும் கொடுமையை நிகழ்த்தும் பிற்போக்குதனமான, பழமைவாதிகளுக்கு பயந்து பெண்ணைப் பூட்டி வைத்தாலும், பெற்ற மகளின் ஆசையை, கனவுகளை மதித்து மனம் மாறும், அதே நேரத்தில் புறவெளிக்கு பயந்து நாடகமாடினாலும் காதலர்கள் வாழ வேண்டும் என்று அவர்களுக்கு பண உதவியும் செய்து தொலை தூரத்தில் சென்று வாழ வைக்கும் பெற்றோர்கள் இன்றும் உள்ளனர்.
இப்படி பயந்து ஒழியும் பெற்றோர்கள் பொதுவெளிக்கு தைரியமாக வர வேண்டும் என்று ஊருக்குள் உண்மையை சொல்லிடும் காதலர்கள், போலி கௌரவத்தை உடைத்து வெளியே வரும் அப்பனும் என்று படம் சொல்வது இரண்டாவது செய்தி.
வேலை இல்லாமல் உள்ள இளைஞர்கள் என்றால் குடியும், குட்டி சுவரும் என்று இருக்காமல் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் முயற்சி செய்து – ஊருக்கும் அடிக்கும் வம்பு தும்பு ஊரை கூட்டி வைத்து கட்ட பஞ்சாயத்து நடத்துபவர்களை ஆப்படிக்கும் விசயம் பாராட்டத்தக்கதென்றாலும், அதற்காக அவர்கள் ரிக்கார்டு டேன்ஸ் என்று யோசிப்பது பழைய பாணி நெருடல்.
இருந்தாலும் இன்றைய சாதி வெறியர்களின் காதலுக்கு எதிரான கூச்சல்களைத் தாண்டி தியேட்டர்களில் இளைஞர்களின் விசிலும், கைதட்டலும் ஒலிக்கிறது. அடையாளங்களை தாண்டியது காதல், அதற்கு பெற்றோர்களும் ஆதரவானவர்களே … என நகைச்சுவையோடு பொழுது போக்கு அம்சங்களை காதலுக்காக சொல்லி செல்லும் வருத்தப்படாத வாலிபர் சங்கமென்ற பிம்பம் வெற்றி விழா கொண்டாட்டும்.
எதார்த்தில் சமூகத்திற்கு தேவை வருத்தப்படும் வாலிபர் சங்கம். அதுதான் நிஜத்தில், சாதிய கட்டமைப்பை உடைக்கும்..
மலருக்கும் மகரந்தத்திற்கும் தேவை பூச்சிகளின், பறவைகளின், காற்றின் காதல்.. மேகத்திற்கும், பூமிக்குமான காதலின் சாட்சிதான் மழை என்றால்.. அதற்கு இது போன்ற திரைப்படங்கள் உதவி செய்யட்டும்…
நன்றி .. மாற்று 

மூடநம்பிக்கை


·          பிரேசிலில் டீக்கடைகளில் டீக்குடிக்கும் கப்புகளில் முதலில் சர்க்கரை பின்பு டீ அல்லது காபித்துள் அப்புறம்தண்ணீர் கலக்கிறார்கள். காரணம் முதலில் சர்க்கரை போட்டால் பணம் அதிகம் வரும் என்று,.. இறுதியில் போட்டால் பணம் சென்றுவிடும் என்ற நம்பிக்கை, 
  • ஜப்பானில் இன்றும் பாம்புக்கறியை சாப்பிட்டுவிட்டு  பாம்புகளின் தோல்களை சிறு சிறு துண்டுகளாக வைத்து பாதுகாப்பது, பர்ஸ், பீரோக்களில் அதிர்ஷ்டம்

·          நமது சமூகத்தில் பூனை குறுக்கே சென்றால் திரும்ப வீட்டிற்கு வந்துவிடுவோம். ஆனால் கொரியாவில் காக்காய் குறுக்கே வந்துவிட்டால் திரும்ப வீட்டுக்கு வந்துவிடும் பழக்கம் உள்ளது.

·          நமது ஊரில்நரிக்குறவர்கள் நரிவாலு, விற்பதை போல், மெக்சிகோவில் முயல் வாலை விற்கிறார், வீட்டில் இருந்தால் நல்லது என்று

·          எண், பெயர், வாஸ்து சோதிடம்,  பல்லி ஜோசியம், முயல், எலி, கிளி சோதிடம், குடுகுடுப்பை, பேய். பிசாசு, ஆவி, பில்லிசுனியம், ராசி, கிரகம், நட்சத்திரம், லக்கனம், பொருத்தம், பூ போட்டு பார்த்தல், காசு சுண்டுதல், சோளி உறுட்டுதல். குழந்தை பிறக்கும் நேரம். பெண் வயதுக்கு வரும் நேரம்

·          வைரம், மரகதம், புஷ்பராகம், கோமேதகம், பவழம் என வித விதமான விலை மதிப்பான கற்களில் யார் எதை போட்டுக் கொள்ள வேண்டும் கடவுளுக்கு எந்தக் கல் உபயோகிக்க வேண்டும் என அந்தக் காலத்தில் ஜோதிடம் மூலமே கணித்து அறிவுபூர்வமாக விளக்கங்களும் கொடுத்திருந்தனர்.

·          தங்கத்தை காலில் அணியக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்கள். இன்றும் அது போல் சில உண்மையான விஷயங்களை சொல்பவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த அறிவியல் ரீதியான உண்மையை புரிந்துகொள்ளாமல் இப்போது, சில

·          புதுப்புது பெயர்களில் கற்களை வைத்துக் கொண்டு திருமணம் ஆகவில்லையா, பிள்ளைகள் படிக்கவில்லையா, நோய்கள் குணமாக வேண்டுமா, குழந்தை பிறக்க வில்லையா என்றெல்லாம் மக்களின் பிரச்சினைகளை சொல்லி காசு பறிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது.

·          மழை வரவில்லையென்றால் அதற்கான யாக முறைகள்.  தவளைக்கு திருமணம், மிருகங்களுக்கு திருமணம். வாழைக்கு திருமணம்,

·          கட்டிடங்கள் கட்டும் போது களப்பலி கொடுப்பது.
·          பெண்ணுக்கு திருமணமாகவில்லையென்றால் தோஷம் கழிக்க திருமண முறைகள்
·          பொட்டு கட்டி விடுதல், தேவதாசி முறை
·          விதவை திருமண எதிர்ப்பு
·          பால்ய விவாகம்
·          விதவைகளுக்கு மொட்டையடித்தல்
·          உடன்கட்டை ஏறுதல், சதிக் கொடுமை
·          கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் தாவரம். விலங்குகளை. கற்களை வணங்குவது என ஏராளமான முறையில் மூடநம்பிக்கைகள் நவீன வடிவில் இன்றும் தன்னை மாற்றிக் கொண்டே இருக்கிறது, ஆளும் வர்க்கம் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டே வருகிறது. இந்த மூடநம்பிக்கையின் வடிவங்கள் சாதிய கட்டமைப்பை நொறுங்காமல் பாதுகாத்து கொண்டே வர உதவிடுகிறது. 

இப்படி பாலின பாகுபாட்டின் பெயராலும், சாதிய பாகுபாட்டின் பெயராலும் நடத்தப்படும் இந்த சமூக ஒடுக்குமுறை சுரண்டும் வர்க்கத்தின் ஆயுதமாகவும், கேடயமாகவும் ஒரே நேரத்தில் தனது சுரண்டலுக்கு பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு ஆரிய நாகரிகமான பிராமணியம் வேகமாக பரவ ஆரம்பித்த காலத்தில் அவர்கள் தங்களை அரசையும் ஆளும் சமூகமாக மாற்றிக்கொள்ள மூடநம்பிக்கைகளை, கடவுள் நம்பிக்கை, மதம், வர்ணபிரிவு, சாதிய கூறுகளை முன் வைத்தனர். அதன்படி வாழ்க்கை நெறிமுறைகளை போதித்தனர். அரசு, அரசாங்கள், சட்ட திட்டங்களை வகுத்தனர். நீதி, நெறி, ஒழுக்கம், பயம் என்பவற்றை குடிமக்களின் கடமையாகக்கினார்கள். சுரண்டலை ஆளும் வர்க்கத்தின் உரிமைகளாக்கினார்கள். 

சோழ மன்னர்கள் காலத்தில் தற்போதைய உ.வே.சு.சாமிநாதய்யரின் சொந்ந ஊரான உத்தமதானபுரம் குறித்து சொல்லும் போது இன்றைய தஞ்சை மாவட்டத்தின் காவேரி கரையின் ஓரமான ஊர்களான மங்கலங்கள் வந்த வரலாற்றையும் சொல்லி வைத்தனர். வரலாற்றின் பக்கங்களில் அரசர்களுக்கு ஆலோசனையும், அறிவுரையும் கூறும் சமூகமாக அந்தண சமூகம் இருந்தது. அரசன் அவர்கள் வழிப்படியே இருந்தான். உதாரணம் சந்திரகுப்த காலத்தில் அர்த்தசாஸ்திரத்தை உருவாக்கிய கௌடில்யரின் கூற்றும் அதை பறைசாற்றும், அதற்கு பின் வந்த சங்க இலக்கிய கால பல்வேறு இலக்கியங்கள் கூறும் செய்தியும், இதிகாச கால இலக்கியங்கள் கூறும் செய்தியும் சூத்திரனுக்கும், பெண்ணுக்கும் கல்வியையும், சமூக அந்தஸ்தையும் எப்படி மறுத்தன. அயோத்தி மன்னன் ராமனும் எப்படி பிராமணிய கருத்துகளில் ஏறி நின்று பாதுகாத்தான் என்பதையும் நாமறிவோம். 

சரி தற்போது செய்திக்கு வரும், உத்தமதான புரத்தின் அருகில் சோழமன்னன் ஒருவன் ஊர் உலா சென்று மதியம் விருந்துண்டு ஒய்வுவெடுக்க விரும்பிய போது அவனது பணியாள் ஒருவன் வெற்றிதாம்பூலத்தை மடித்துக் கொடுக்க அதை மன்னன் வாங்கி உண்கிறான். ஆனால் அங்கிருந்த அந்தண சோதிடன் மன்னன் வெற்றிலை சாப்பிட நேரம் சரியல்ல இதனால் நாட்டிற்கு கேடு ஏற்படும் என கூற., பயந்து போன மன்னன் பரிகாரம் கேட்க அருகில் இருந்த ஊரை காட்டி அங்கிருந்த பசுக்கள், மனைகள், நிலங்களை தானமாக அந்தனர்களுக்கு கொடுக்க வேண்டும் என சொல்ல மன்னனும் பயந்து அந்தணர்களை அழைத்து அந்த ஊரையே தானமாக வழங்கியதாக செய்திகள் கூறுகின்றன. இப்படி உருவான ஊர்கள் தான் மங்கலங்கள், பிரமோதயங்கள் என இன்றும் அழைக்கப்படுகின்றன. இதற்கு ஏராளமான கல்வெட்டு சான்றுகள் உள்ளன.

வேளாண் குடி மக்களை கிருஷி என்று அழைத்தனர், அந்தணர். கிருஷி என்றால் கேவலமானவன் என்று அர்த்தம். அதனால் தான் இரும்புயுக காலத்தில் கலப்பைகளில் இரும்பு பூன் பூட்டப்பட்டிருக்கும். பூமியை தங்களது தெய்வம் என்ற அந்தணர்கள், கலப்பையும், மம்பட்டியும், கடப்பாரையும் கொண்டு நிலத்தை பண்படுத்திய வேளாண் மக்களை இழிவானவர்கள் என்றனர். நிலத்தில் இறங்கிய வேலைசெய்யவேண்டியதை மறுத்த அந்தணர்கள் தங்களுக்கு கிடைத்த நிலங்களை எல்லாம் குத்தகைக்கு விவசாயிகளிடம் கொடுத்துவிட்டு அறுவடையின் போது ஒரு சிறு பகுதியை மட்டும் கொடுத்துவிட்டு மீதியை கொள்ளையடித்து சென்றனர். இதனையொட்டி உருவான பழமொழியான பகன்றை பன்னிரெண்டு என்பது தெளிவாக கூறுகிறது. பிராமணியம் எப்படி உழைப்பை சுரண்டியது என்று.. இதற்குள் உள்ள மூடநம்பிக்கையான விசயத்தை வைத்து பேசுவோம் வாருங்கள். ஒவ்வொன்றாக

அரவிந்தன், திருப்பூர்.

குடி அரசியல்


போதை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடானது என ஆளும் அரசுகள் ஒருபுறம் விளம்பரங்களை செய்து கொண்டே மறுபுறம் அரசுகளே மது விற்பனை செய்யும் அவல நிலைநீடித்து வருகிறது. இது இன்றோ நேற்றோ துவங்கியது அல்ல. இந்தியாவில் இனக்குழு காலம் தொட்டே உணவு பழக்கவழக்கத்தின் ஒரு பகுதியாக பழங்களால் உருவாக்கப்பட்ட மதுபானங்களும், போதை வஸ்துக்களும் பயன்படுத்தப்பட்டு வந்தது. வேத காலத்தில் சுராபானம், சோமபானம் என்ற குடி முறையும் இருந்துள்ளது. சொத்து, அரசு, மதம் என்பது எப்போது தோன்றியதோ அப்போதிருந்தே மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் கருவியாக மதுவும் உற்பத்தி செய்யப்பட்டது.

மது பானம் மட்டுமல்லாது, கஞ்சா, புகையிலை, அபின், ஹெராயின், கசகசா, பாக்கு போன்றவைகளில் இருந்தும் பெறப்பட்டது. உயரமான  தென்னை, பனை, ஈச்சை போன்ற ஒற்றைத்தடி புல்வகை மரங்களில் இருந்து கள் வடிக்கும் முறையும் கண்டறியப்பட்டது மட்டுமல்ல, அதனை செய்வதற்கு என்று சமூகத்தில் சாணார், ஈழவர், நளவர் என சாதிகளையும் உருவாக்கியது, இந்தியாவில் குப்த மன்னர்கள் காலத்தில் வாழ்ந்த சாணக்கியர் மதுவை விற்பது அரசின் செயல்களில் ஒன்றாக அறிவித்தார்.

உழைக்கும் மக்களிடம் இருந்து விசுவாசத்தையும், உழைப்பையும் அரசு நிரந்தரமாக பெற வேண்டுமானால் கட்டுப்பாட்டோடு கூடிய மது பழக்கத்தை அரசே பொறுப்பேற்று செய்திட வேண்டும் என அதற்கான விதிமுறைகளை உருவாக்கியவர் (அர்த்தசாஸ்திரம் 2.25 ஆம் அத்தியாயம் 17 முதல் 34 வரை ). கின்வா, மேதகம், ப்ரசன்னா என்று மூன்றுவகையான மதுபானங்களையும் குறிப்பிட்டுள்ளார். இவைகள் அரிசிமாவு, க்ரமுகா பட்டைகள், பழங்கள், பதா, லோதா, தெஜூவாதி, ஏலம், வலுகம், அதிமதுரம், திரட்சைச்சாறு, பிரியங்கு, மஞ்சள், கருமிளகு, வெல்லம் போன்றவைகளில் இருந்து மதுபான உற்பத்தி  செய்யும் முறை குறித்து சொல்லப்பட்டுள்ளது.

அதில் ஈடுபடும் மாந்தர்கள் குறித்தும், அவர்களின் வாழிடம் குறித்தும், மதுவிற்பனைக்ன மையங்கள் குறித்தும் அன்றைய காலத்தில் நிலவரிக்கு அடுத்து அதிகமான வருமானத்தை மதுவிற்பனை வரியின் மூலம் கிடைத்தது..  மது அருந்துவதற்கான குடி சாலைகள் சொகுசாகவும், பூக்களால் அலங்கரிக்கப்பட்டும், வாசைன திரவியங்கள் தெளிக்கப்பட்டும அமைக்கப்பட வேண்டும் என்றார் கௌடில்யன். அரசாங்கமே குடிசாலைகளை கட்டி பராமரிக்க வேண்டும் என்ற அர்த்த சாஸ்திரம், வேறெங்கும் மக்கள் குடிக்ககூடாது. 
குடிசாலைகளில் அதிக மதுவை சேகரித்து வைக்க அனுமதியில்லை. இங்கே சூத்திரர்களும், பஞ்சமர்களும் செல்ல முடியாத நிலையும் இருந்தது. வருணாசிரமக் கோட்பாட்டை தயாரித்த மனுவும் கூட போதை குறித்து பேசியுள்ளான். மதிரா, மத்யா என்ற சாராயவகைகளை குறிப்பிடுகிறான். இந்த குடி கலாச்சாரத்தில் இன பெருமை கொள்ளப்படுவதுதான் வேதனைக்குரியது. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு தோன்றிய மூத்த குடி, தமிழ் குடி என்ற வாசகம் மட்டுமல்ல.. சங்க இலக்கிய காலத்திலேயே சிறியகட் பெறினே எமக்கீயும், மன்னே பெரியகட் பெறினே யாம் பாடத் தாம் மகிழ்ந்துண்ணும் மன்னே என்று அவ்வை அதியமானை புகழ்ந்து பாடியுள்ளதாக (புறநானுற்று 235) குறிப்பிடுகிறது.

தற்போதைய மொழியில் சொல்வதென்றால் குவட்டர் இருந்தால் எனக்கு கொடுத்துவிடுவான், புல் இருந்தால் சேர்ந்து அடிப்போம் என்பான் அதியமான்.. என பெண்களும் குடிப்பழக்கம் பெற்றிருந்தனர். எனவே ஆண்கள் குடிப்பது மட்டும் எப்படி தவறாகும் என்ற கேள்வியை முன்வைத்து அதிபுத்திசாலிகள் குடிமக்கள் குடியை நியாயப்படுத்தும் நடவடிக்கை அன்றிலிருந்து இன்று வரை செய்து வருகின்றனர்.

கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்கு பின் அயல்நாட்டு மதுபான வகைகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. காலனிய ஆட்சியினரால் 1906ம் ஆண்டு மதுவகைகள் குறித்து ஒரு அரசாணையை வெளியிட்டனர். அதில் மிதமாக குடிப்பவர்கள் பழக்கத்தில் தலையிட இந்திய சர்க்காருக்கு எவ்வகை விருப்பமுமில்லை. அதே நேரத்தில் குடிப்பதற்கான துண்டுதலை குறைப்பதும், அதீதமாகக் குடிப்பதை தடுப்பதும் சர்க்காரின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது. 

இது ஒருவகையில் வர்ணசிரமக் கோட்பாட்டை தனது தேவைக்காக காலனிய ஆட்சியினர் பயன்படுத்திக் கொண்டனர். வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது நில வருவாய்க்கு அடுத்தப்படியாக குடிவரி இருந்தது. இந்த வரிச்சுமை அனைத்தும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையே தாக்கியது.
பலாத்காரத்தை செலுத்தி அதிகாரத்தில் இருந்தவர்கள் பொழுதுபோக்கிற்கு மதுவை பயன்படுத்தினர். ஆனால் இதரர்கள் உடல் உழைப்பை செலுத்துபவர்கள் சோர்வை மறந்து தங்களை புதுப்பித்துக்கொள்ள மது அருந்தலாம் என்றனர். ஆனால் அடுத்தநாள் உடலுழைப்பில் ஈடுபட வேண்டும். எனவேதான் இந்த கட்டுப்பாடுகளை வெள்ளையர்களும் சரி, சாணக்கியர் காலத்திலும் சரி எப்போதும் உட்கார்ந்து சாப்பிடுபவர்கள் தங்களது நலனை பாதுகாத்துக்கொள்ள தொடர்ந்து உடலுழைப்பினரை கேள்வி கேட்கும் மனோபவத்திற்கு வராமல் இருக்கும் நிலைக்கு பல காரணிகளை உருவாக்கினார்கள். அதில் மதுவும் ஒன்று என்றால் மிகையாகாது. 

ஆம் இங்கிலாந்தில் கூட தொழில் முதலாளிவர்க்கம் தோன்றிய போது, உடலுழைப்பு தொழிலாளர்களை சாராய கடைகளில் இருந்து தொழிற்சாலையை நோக்கி விரட்டியடிக்க பெரும்பாடாய் இருந்தது என்று குறிப்பிடுகின்றனர். இத்தருணங்களில் ஆளும் வர்க்கத்தின் உபரிக்கும். லாபத்திற்கும் பொருளியல் ரீதியாக நெருக்கடி வரும் போது அறவழி கோட்பாடுகளின் மூலம் குடிக்கு எதிரான கருத்தியலையும் முன்வைத்தனர். அதே நேரத்தில் ஆளும் அரசுகள் போதை பழக்கத்தை தங்களது வர்க்க நலனுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். 

இதன் நீண்ட கால பின்விளைவுகளையும், அதற்கு சமூகம் கொடுக்கும் விலையை பற்றி கவலைப்படுவதில்லை. தங்களுடைய வாக்கு வங்கி அரசியலுக்காக சமூகத்தின் பொதுப்புத்தியை திசைதிருப்பும் வேலையில் ஈடுபடுகின்றன. இப்படி முரண்பட்ட நிலையை கள் பயன்படுத்திய கல் தோன்ற காலத்தே முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் குடி மட்டுமல்லாது இதர குடிகளும் குடி குறித்த கோட்பாடுகளையும், குடிவிலக்கு குறித்த கோட்பாடுகளையும் அவ்வப்போது முரண்பட்ட நிலையில் எடுத்து வந்துள்ளன.

தமிழகத்தில் மதுவிலக்கு இந்திய விடுதலைப் போரில் அனைவரையும் இணைப்பதற்கு குடிப்பழக்கம் ஒரு தடையாக இருந்த போது அதற்கு எதிராக அன்று பெரும் பகுதி பயன்படுத்தி வந்த கள்ளுக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் மதுவிலக்கு என்பதை அமுலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 
தமிழகத்திலும் 1937ல் ராஜாஜி தலைமையில் இருந்த அரசு மதுவிலக்கை அமுலாக்கியது. அப்போது பிரிட்டிஸ் கவர்னர் அரசின் வருவாய் இதனால் பாதிக்கப்படும் என்ற போது வேறு வருவாய்களின்மூலம் நிதியை திரட்டமுடியும் என்றார். ராஜாஜிக்கு பின் ஆட்சிக்கு வந்த ஓமந்துரர் இராமசாமி ரெட்டியார், காமராஜ், பக்தவசலம் வரை மதுவிலக்கு சட்டம் நீட்டிக்கப்பட்டது. 

1967ல் ஆட்சியில் அமர்ந்த அறிஞர் அண்ணாவும் மதுவிலக்கை அமலாக்கினார்.  மதுவிலக்கை அமலாக்கினால் கிடைக்கும் வருவாய் ஒரு நொடி எனது மனக்கண்ணின் முன் தோன்றி மறைந்தது. ஆனால் அதன் பின்னணியில் அழுகின்ற தாய்மார்களின் உருவமும், குழந்தைகளின் கதறலும், தன் அறிவை இழந்த மனித முகமும் என் கண்முன்னால் நிற்கிறது. எனவே நிதி கிடைக்கும் என்பதற்காக மதுவிலக்கை ரத்து செய்ய மாட்டேன் எனக்கு பின்னால் வரும் இளைய சமூதாயத்தினரும் குடி என்றால் என்னவென்று தெரியாமல் இருப்பார்கள் என்று 1968 ஏப்ரல் 28 மதுவிலக்கு மாநாட்டில் அண்ணா உரையாற்றினார்.

1950ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியல் சாசனம் மதுவிலக்கு குறித்துஉணவு சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படைவாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும், தேவையானவற்றைத் தமது தலையாய கடமைகளாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாகப் போதையூட்டும் மதுவகைகளையும், உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருள்களையும், மருந்துக்காக அன்றி வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

சட்டத்தின் வழி ஆட்சி நடைபெறுவதாக சொல்லும் தேசத்தில் தான் மதுவிலக்கை அமல்படுத்துவது மட்டுமல்ல, மதுவிற்பனையை கூட அரசாங்கத்திற்கு மிகுதியான வருவாய் ஈட்டும் என்பதற்காக சாராயக்கடைகளை திறப்பதை என்னவென்று சொல்வது. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் என்றான் வள்ளுவ பெருந்தகை.
அண்ணாவின் தம்பி என்று தன்னை சொல்லிக்கொள்பவரும், தமிழினத்தின் தலைவர் என்று தன்னை சொல்லி கொள்பவருமான கருணாநிதி அவர்கள் 1971ல் முதலமைச்சராக இருந்த போது மதுவிலக்கை ரத்து செய்ததோடு 7395 கள்ளுக்கடைகளும், 3512 சாராயகடைகளும் திறக்க அனுமதி அளித்து குடிமக்களை வளர்தெடுக்கும் பணியை மீண்டும் துவக்கி வைத்தார். பின்னால் வந்த எம்ஜிஆர் 1973ல் மதுவிலக்கை அமலாக்கி மதுக்கடைகளை 3 ஆண்டுகளுக்கு மூடினார். பின்னர் 1981ல் கள் மற்றும் சாராயத்தை உரிமத்துடன் விற்பனை செய்து கொள்ளலாம் என்றார். 

1983ல் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் ( டாஸ்மாக் ) நிறுவனம் உருவாக்கப்பட்டு அயல்நாட்டு மதுபானங்களை உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. 2003ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அரசே மதுவை சில்லறை விற்பனையில் விற்கலாம் என்றார். இதன் தொடர்ச்சியாக திராவிட இயக்கங்களின் ஆட்சியில் மாறி மாறி இலக்கு என்பது கல்விக்காகவோ, வேலைக்காகவோ, சுகாதாரத்திற்காகவோ, ஊட்டச்சத்துக்காகவோ, இரத்த சோகைக்கு எதிராகவோ தீர்மானித்து மாற்றம் கொண்டு வர வேண்டும் என முயற்சிக்கவில்லை.

மாறாக ஒவ்வொரு முக்கிய பண்டிகை தினங்களிலும் எவ்வளவு பேரை புதிய குடிகாரர்களாக மாற்றுவது, எவ்வளவு சாராயம் விற்பது என்ற கொள்கையோடு செயலாற்றினால் இவர்களை என்னவென்று சொல்வது,. பாரதி சொல்வனே படித்தவன் சூது வாது செய்தால் போவான், போவான் அய்யோ என்று அதனைப் போல இவர்கள் நிலை மாறும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இவர்கள் வினையாற்றும் அரசியலின் பின்புலம் என்ன ? இந்த போதை அரசியல் யாருக்காக நிகழ்த்தப்படுகிறது. எதை மையமாக வைத்து செய்யப்படுகிறது. எதற்காக செய்யப்படுகிறது?
  • உழைக்கும் மக்களின் அரசியலை பேசாமல் போதையில் கணிசமான மக்கள் ஆழ்ந்திருக்க வேண்டும். சாதிய பெருமைகளை பேசுபவர்களாகவே இருக்க வேண்டும், அடிமைப்புத்தியுடனேயே இருக்க வேண்டும் என்பதற்கானதாக இருக்கும்.
  • குடிபழக்கத்தால் ஏற்பாடும் சமூக விளைவுகள்  பொருளாதார ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் பெரும் பகுதி குடும்பத்தை அமைதியற்ற சூழலுக்கு தள்ளுகிறது. இதனால் எந்த நேரமும் குடும்பத்தில் சண்டை, சச்சரவு ஏற்படுவதும், இதன் மூலம் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளுமே. இளம் வயது குடிப்பழக்கம் வேகமான உடல்சீர்கேட்டை, உயிரிழப்பை உருவாக்குகிறது. 
  • இதனால் தனித்துவிடப்படும் குடும்ப உறவுகளில் பாதிக்கப்படுவதும் பெண்களும், குழந்தைகளுமே. மேலும் இதனால் குடும்பத்தின் அனைத்து சுமைகளும் பெண்கள் மீதே விழுகிறது. குடிப்பழக்கத்தில் ஊறிப்போன ஆண்களால் பொது இடங்களில் பெண்கள் அவமானப்படுத்தப் படுவதும், அச்சுறுத்தப்படுவதும் நடைபெறுகிறது. இது தவிர்த்து குடி போதையை சாதகமாக வைத்துக் கொண்டு பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்த வண்ணமுள்ளது.
  • இப்படிப்பட்ட ஆண்களுக்கு பாலியல் வன்முறையின் போது குடிபழக்கம் வாளாகவும், அதனை எதிர்த்த தாக்குதலில் குடித்திருக்கிறான் அடித்தால் தாங்குவானா? என்ற கேள்விகளை கேடயமாக வைத்துக் கொண்டு தப்பிப்பதும் நிகழ்ந்து வருகிறது. 
  • குடும்பங்களில் குறிப்பாக 10*10 க்கு அளவுள்ள வீடுகளில் உள்ள ஆண்கள் பெண்களை பாலியல் உறவிற்கு அழைப்பதும், அத்துமீறுவதும் குடிப்போதையின் போது வன்முறையில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. 
  • இது குடும்பங்களில் குழந்தைகளின் மனநிலையை பாதிக்க செய்கிறது. மேலும் சிறுவயது குடிகாரர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதால் பெரும் பகுதி பாலியல் சார்ந்த பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டு பெண்கள் மீது சந்தேகக் கண் கொண்டு தினந்தோறும் தாக்குதல் தொடுக்கும் நிலையும் உள்ளது. 
  • இப்படி குடும்பத்தின் அமைதியான சூழலை சீர்குலைக்கும் வேலையில் போதை தினந்தோறும் செய்து வருவது மன அழுத்தத்தையும், தற்கொலை சாவுகளை அதிகரிக்க செய்கிறது.

இன்றைய சூழலில் ஆளும் வர்க்கங்கள் தனது நலன்களுக்காக போதையை விரிவான அளவில் உழைக்கும் மக்களுக்கு ஏற்றி வருகிறார்கள். கேள்விகள் கேட்கக் கூடாது என்பதற்காக என்றால் மிகையாகாது. 

தமிழகத்தில் 23000 கோடி ரூபாயும். கேரளாவில் 8000கோடியும், கர்நாடகாவில் 10,500 கோடியும் என மதுவிற்பனை நடந்ததாக தகவல்கள் கூறுகிறது. தென்மாநிலங்களிலேயே சுமார் 40000 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆண்டுக்கு நடக்கும் என்றால் எப்படிப்பட்ட சமூகத்தை இது உருவாக்கும் என்பதை நாம் கண்டறிய முடியும். கள்ளசாராயம் பெருகிவிடும் அதனால் தான் மதுவிலக்கை அமுல்படுத்தவில்லை என்று ஆட்சியாளர்கள் சொத்தை காரணங்களை சொல்லி வருகிறார்கள். 

ஆனால் உண்மையில் 2011ம் ஆண்டு மட்டும் மதுவிலக்கு சோதனையில் 1057 வழக்குகள் பதியப்பட்டுள்ளது கள்ள சாராயம் காய்ச்சியதாக.. இது டாஸ்மாக் கடைகள் வந்ததால் கள்ளசாராயம் ஒழிக்கப்பெறும் என்று அமைச்சர்கள் சொன்ன காலத்தில் தான் இத்தகைய கள்ளச்சாராய காய்ச்சலும் நடந்துள்ளது. 

சாலை விபத்துக்களின்  மூலம் மது அருந்தி வாகனம் ஒட்டியதால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது. 60 சதம் விபத்துகள் இதனால் நிகழ்கிறது. தற்போதைய சூழலில் 13 முதல் 19 வயதுக்குள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் இளைஞர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
13 வயது குழந்தைகளை குடிகாரர்களாக மாற்றிய இந்த அரசுகள் இதை ஒரு சமூக அவமானமாக கருத வேண்டும்.

போதையால் ஏற்படும் உடல்நலக்கேடு
உலக சுகாதார நிறுவனம் மதுப்பழக்கம் உடையவர்களை குடிப்பழக்கம் உடையவர்கள், குடி அடிமைகள் என்று இரண்டு வகையாக பிரிக்கிறது. உடல் உணர்வுகளை மரத்துப் போகச்செய்து உறக்கத்தை உண்டு பண்ணக்கூடிய தன்மையுடைய பொருள்களையே போதை மருந்துகள் என்று அழைக்கின்றனர். 

இந்த மருந்துகள் மூளைச் செல்களுக்குள் சென்று சிந்தனை, உணர்வு, சொல், செயல் ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும் திறன் படைத்தன. இது  மூளையின் பணியை துண்டுவது    (துண்டிகள்), தாமதப்படுத்துவது   (சோர்வூட்டிகள்), கற்பனை மற்றும் மாயத் தோற்றங்களை உருவாக்குவது (தொடு உணர்வோ, கேட்பது, பார்ப்பது இல்லாமல்  உணர்வது). 

தேவையில்லாத ஒன்றை தொடர்ந்து பயன்படுத்தும் போது அது குறிப்பிட்ட நாட்களில் தேவையுள்ள ஒன்றாக மாறிவிடுகிறது.  இப்படி  போதையை உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளில் கணிசமாக வெளிப்புற தாக்கமும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக திரைப்படங்கள், தொலைகாட்சி தொடர்கள், விளம்பரங்கள், ஐபிஎல் கிரிக்கெட், நுகர்வு வெறி அனைத்தும் போதையை ஏற்படுத்தும் கூறுகளாக இன்று வளர்ந்து வருகிறது. இது தேசத்தின் வளர்ச்சியையோ, தனி மனிதன் வளர்ச்சியையோ மையப்படுத்துவதில்லை. 

அந்த நேரத்தில் அவனின் தன்னம்பிக்கை, போர்குணம், சுயமரியாதையை கைவிட செய்கிறது. மது அருந்துதல் என்பது குடும்ப பிரச்சனைகளுக்கு தற்காலிக தீர்வாக கருதலாம்.  நிரந்தரமாக மீளமுடியாத ஆழ்கடல் பிரச்சனைக்குள் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.

போதைக்கு எதிரான சமூக நடவடிக்கை
போதைக்கு எதிராக குடி குடியை கெடுக்கும் என்று பள்ளிக் குழந்தைகளுக்கு பாடபுத்தகங்களில் கொடுத்த ஆட்சியாளர்கள் பள்ளி முடிந்து வெளியே வந்தால் பார்க்கும் முதல் கடையாக டாஸ்மாக் கடை பல்லை இளிக்கிறது. இப்படி எதிரும், புதிருமான வாழ்க்கை ஒட்டத்தில் சமூக அவலங்களுக்கு எதிரான போராட்டங்களும், இயக்கங்களும் நடந்த வண்ணமே உள்ளது. 

ஊடகங்களின் செய்திப்பக்கத்தை பார்த்தால் ஏராளமான மக்கள் வெள்ளம் கிளர்ந்தெழுந்து ஆட்சியாளர்களின் சட்டையை பிடித்து கேள்வி கேட்கிறது.. போதை என்பது ஒரு சமூக குற்றம், போதை என்பது ஒரு பாவச் செயல், போதை என்பது ஒரு மனித தன்மையற்ற செயல் என்று ஆட்சியாளர்களுக்கு எப்போது உறைக்கிறதோ,.. அப்போது மாற்றத்தின் முதல்படி தென்படும். இந்த மாற்றம் தானாக நிகழாது. 

முற்போக்கு ஜனநாயக எண்ணம் கொண்ட அமைப்புகளின் வீரமிகு போராட்டமே திறவுகோலாக இருக்க முடியும். அது தான் நமக்கு வரலாறு போதிக்கும் போதனையாகும். சமூக சீர்த்திருத்தங்களின் வரலாறாகட்டும், போதைக்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும் அனைத்தும் உணர்த்தும் ஒரே உண்மை ஏன், எதற்கு, எப்படி? என்ற கேள்விகள் ஆட்சியாளர்களை பார்த்து கேட்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

போதையை கலாச்சாரமாக்கி இன்று நிறுவனப்படுத்தப்பட்ட சந்தையாக  போதைப் பொருட்களை மாற்றிய அரசுகள் கெட்டொழியட்டும்,.. ஆளும் அரசுகள் உடனடியாக செய்ய வேண்டியது. 

  1. குடியிருப்புபகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்துவது.
  2. டாஸ்மாக் வேலை நேரத்தினை குறைத்திடுவது.
  3. 21 வயதிற்குள்ளான இளைஞர்களுக்கு போதை வஸ்துகள் கிடைப்பதை தடை செய்வது. திரைப்படங்கள், ஊடகங்கள், தொலைகாட்சி தொடர்களில் போதை குறித்து காட்சிகளை தடை செய்வது.
  4. போதை வஸ்துகள் குறித்த விளம்பரங்களை தடைசெய்வது.
  5. அரசே மதுபானங்களை விற்பதை கைவிடுவது.
  6. மதுபான விற்பனை படிப்படியாக குறைக்கும் வகையில் மதுவிலக்கை அமலாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது.
  7. குடிபோதையில் பொது இடங்கள் தகராறு செய்யும் நபர்களின் மீதும், பெண்கள், குழந்தைகளின் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு உரிய தண்டனைகளை உறுதிப்படுத்துவது.
  8. குடி மற்றும் போதை பழக்க வழக்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முற்போக்கு எண்ணம் கொண்ட இயக்கங்கள், தன்னார்வ நிறுவனங்களோடு இணைந்து அனைத்து மாவட்ட, வட்ட அளவில் பிரச்சாரங்களை அரசே முன்முயற்சி எடுத்து நடத்திட திட்டமிடல்களை உருவாக்கிட வேண்டும்.
நன்றி - செ.முத்துக்கண்ணன்
மகளிர்சிந்தனை

சாதிமறுப்பு திருமணங்களை ஆதரிப்போம்


சாதி இரண்டொழிய வேறில்லை.. ஒன்று ஆண் சாதி. மற்றொன்று பெண்சாதி உலகின் அனைத்து உயிரினங்களுக்கும்,

உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் பொது இடங்களில் குண்டு வைக்கப்பட்டிருக்கும் அதை கண்டறிய காவல்துறை தனது பணியை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்கும்இந்த பணிக்காகநியமிக்கப்பட்டிருக்கும் ஒரு காவல் துறை அதிகாரி அதற்கு முன்பு தனது மனைவியையும்குழந்தையையும் ஊருக்கு அழைத்து செல்வதாக சொல்லி பணி நிமித்தமாக தனியாக அனுப்பி வைத்துவிட்டுகுண்டுகளை கண்டறிய சென்றுவிடுவார்ஆனால் அவ்வப்போது அவரது மனைவிக்கு போன் செய்து எந்த ஊருக்கருகில் போய்க் கொண்டு இருக்கிறீர்கள்பிரச்சனை ஒன்றும் இல்லையே என கேட்டுக் கொண்டேஇருப்பார்.. காதல்பாசம்அன்புமனிதநேயம்குடும்ப உறவு என்று இயந்திரகதியான வேலைகளில் இந்த உணர்வோடு  இருப்பது  மனித இயல்புகளில் ஒன்று. ஆனால் அதைத்தாண்டி வெளிப்படும் இந்த அன்புணர்ச்சிதான் மனித இனத்தை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. அதே போல்தான் ஜென்னி மார்க்ஸ் தனது குழந்தை இறந்த போது கூட அதற்கான ஈமச்சடங்கை செய்ய பணமில்லாத தருணத்திலும்,மேல் கோர்ட்டை விற்று செலவு செய்த போதும் காரல் மார்க்ஸ் சின் மீது கடுகளவும் கோபம் கொள்ளதவர்.  வாழ்வின் பாதி நாட்கள் தலைமறைவு வாழ்க்கையும்புரட்சியும்எழுத்தும்வாழ்வும் என்றிந்தலெனினை தான் இறுதி வரை ரூப்ஸ்கயா காதலித்து வாழ்ந்தார்.. மேற்சொன்ன அனைத்தும் வாழ்வின் தேடலுக்கான பாதையில் மனித பண்பாட்டை தாங்கி வளர்த்தெடுக்கப்பட்டது என்றால் இன்றும் அதற்கானஅம்சங்கள் எதுவும் அரித்துப்போகவில்லை
.
1609 ல் வில்லியம் ஹீல் என்ற அறிஞர் ஆண் சிங்கங்கள் ஒரு போதும் பெண் சிங்கங்களை எதிர்ப்பதில்லைபெண் புலிகள் ஒரு போதும் ஆண் புலிகளை எதிர்ப்பதில்லைபிணங்களை சுத்தம் செய்யும்வல்லுறுகள் கூட தங்களில் பேதம் பார்ப்பதில்லைஎந்த உயிரினங்களும் தங்களுக்கு ஆண்பெண் வித்தியாசம் கூட பார்த்து பகை கொள்வதில்லை சேர்ந்தே வாழ்கிறது என்கிறார்ஆனால் மனித மனம் மட்டும்ஏன் இத்தனை வித்தியாசங்களை தாங்கி நிற்கிறதுதாவர இனங்கள் கூட மகரந்தச் சேர்க்கை நடத்தவில்லை என்றால் புதிய தாவர இனம் ஏதுதாவரத்தில் தேன் உட்கொள்ளும் பூச்சியினங்கள் இல்லை என்றால்மகரந்த சேர்க்கையுண்டாஇந்த இனகலப்பிற்கு ஏது சாதிபின் எங்கிருந்து வந்தது இந்த சாதி.,,  அதனால் தான் சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று சொன்ன பாரதி சாதி இரண்டொழிய வேறில்லை என்று ஆண்சாதி. பெண்சாதி மட்டுமே உலகில் உள்ளது என உரக்க சொன்னான்.

தமிழகத்தின் பாரம்பரியமும் கூட  சாதியை கட்டியளும் சனதனவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் வளர்ந்தே.. சோழர்கள் காலத்தில் சாதிய கட்டமைப்பு என்பது வலுவாக கட்டியமைப்பட்டதுஇதில்முதலில் பாதித்தது பெண்களேபின்னர் தாழ்த்தப்பட்ட மக்களாகும்காலந்தோறும் பிராமிணிய கருத்துகளோடு உயர்ந்தவன்தாழ்ந்தவன் என்ற கருத்துக்களும்அதற்கான கட்டமைப்புகளும் நிகழ்த்தப்பட்டதன்விளைவு இன்றைய தினம் சமூக எதார்த்தங்களையும்இயற்றையின் பரிணாம வளர்ச்சிக்கு எதிராகவும் ஒரு கூட்டம் சாதியை அடிப்படையாக வைத்து அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறது.

சாதி மறுப்புமதவெறி எதிர்ப்பு. பெண்விடுதலைமூடநம்பிக்கை ஒழிப்புசுயமரியதை திருமணம்சமூக நீதி என்ற கோட்பாடுகளை தாங்கி வளர்ந்த திராவிட இயக்கம் தன்னை அரசியல் இயக்கமாக மாற்றதுவங்கியதில் சாதி ஒட்டிற்கான சமரசத்தில் விழ்ந்ததன் காரணமாக இன்றைய சாதி பெருமை பேசும் அமைப்புகளுக்கு தாங்களும் ஒரு  வாக்கு வங்கி அரசியலை வைத்திருக்கிறோம்,. சாதி ஓட்டை தக்க வைக்கஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று கிளம்பி கையில் எடுத்துள்ள ஆயுதம் சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிரான “காதல் மறுப்பு ஆயுதம்“,..  இந்த காதல் மறுப்பு ஆயுதத்தை வைத்துக் கொண்டு தனது சாதிய பெருமை பாதுக்காப்பதாக சொல்லி இவர்கள் தமிழகத்தில் போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல..,

தமிழகத்தில் சைவத்தை பாதுகாப்பதற்காக 8000 சமணர்களை கழுவேற்றிக்கொன்றதாக பெரியபுராணம் கூறுகிறது. இதே தமிழகத்தில் தற்போது மத அடையாளங்களை தாங்கிப்பிடிக்கும் சாதிய அடையாளத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட சாதியஆதிக்க அரசியல் அதற்காக கௌரவக் கொலைகளையும், கௌரவத் தற்கொலைகளையும். கட்டப்பஞ்சாயத்துக் களையும் கடைபிடித்து வருகிறது. மதுரைவீரனும். முத்துப்பட்டரும் சாதிய கட்டுப்பாட்டிற்காக கொல்லப்பட்டதும் பின்னர் அவர்களையே குல தெய்வங்களாக மாற்றியதும் நாம் அறிந்ததே.. இந்த சாதிய பெருமிதமும். கட்டமைப்பும் இன்றும் தொடர்கிறது, அதன் வினைதான் இந்த கொலைகளும். தற்கொலைகளும்,.  

கடலூர் மாவட்டம் புதுகோரைப்பட்டி முருகேசன்கண்ணகி. விழுப்புரம் மாவட்டம் மறவநத்தம் சுதா-ஈரோடு அரச்சலுர் தமிழ்செல்வன். திண்டுக்கல் மாவட்டம் பழனி பண்ணாரி- திருச்சி சோமரசம் பேட்டை பிரியா. ஈரோடு மாவட்டம் பெரியார்நகர் இளங்கோ- திருப்பூர் செல்வலட்சுமி. திருவண்ணாமலை ரெட்டியார்பாளையம் துரை-தேன்மொழி. திருவாரூர் மாவட்டம்அரிதுவார்மங்கலம் லெட்சுமி-சிவாஜி,  தஞ்சாவூர் சூரக்கோட் டையைச் மாரிமுத்து-அபிராமிசென்னைசிமென்ட்ரி சாலை பகுதி டேனியல் செல்வக்குமார்-சதுரா,  சிவகங்கை மாவட்டம்,  கே.புதுக்குளம் சிவக்குமார்-மேகலா, தர்மபுரிமாவட்டம் வெற்றிவேல் சுகன்யா, திருச்சி ஜெயா-  கார்த்திக் பரமக்குடியில் 17 வயது திருச்செல்வி 1998 இல் புதுக்கோட்டையில் தலித் இளைஞர்கள் மூவர் தலித்துகள் அல்லாத பெண்களைத் திருமணம்செய்துகொண்டதற்காக ஆதிக்கச் சாதியினரால் தண்டனைக்குள்ளானார்கள்அவர்கள் மொட்டையடிக்கப்பட்டுநிர்வாணமாக்கப்பட்டுஅடித்துத் துன்புறுத்தப்பட்டார்கள்இரவு முழுவதும் கிராமச் சாலைகளில்உருள வேண்டுமென்று அவர்களுக்குத் தண்டனையும் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2009-10இல் மட்டும் சுமார் 11,483 பெண்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்அதே காலகட்டத்தில் 1,216 பெண்கள்கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்என்று எவிடென்ஸ் என்ற அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்க்கிறது. இவ்வளவையும் தாண்டித்தான் காதலுக்காக பாடப்பட்ட இலக்கியங்களும், காதலை வாழ வைத்த நாகரிகங்களில் தொன்மையான நாகரிகமாக தமிழ் கூறும் நல்லுலகம் இருந்துள்ளது.

எனவே தான் தமிழகத்தில் சாதியமறுப்பு, வருணாசிரம எதிர்ப்பு என்ற அடிப்படையில் திராவிட இயக்கத்தின் போராட்டம் இருந்தது. அதன் தொடர்ச்சிதான் 1967,ல் அண்ணா முதல்வராக இருந்தபோது,சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் மசோதாவை தந்தை பெரியாரிடம் காண்பித்தபோது, ‘மாலை மாற்றி தாலி கட்டவேண்டும் ‘’ என்றிருந்த பகுதியைப் பார்த்து ’’தாலி கட்டுவதை அவசியமாக்கத்தேவையில்லை’’ என்று திருத்தம் கூறினார்அதை ஏற்றுக்கொண்ட அண்ணாவும் அந்தப் பகுதியை நீக்கினார்அதன்பின்னரே இந்தியாவிலேயே முதன்முதலாக சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில்சட்டபூர்வமாக்கப்பட்டன.

இந்த பின்ணனியில் பார்த்தால் தர்மபுரி அருகே உள்ள செல்­லன்­கொட்­டாயைச்   சேர்ந்­ திவ்யாவும், நாயக்கன்­கொட்டாய்  நத்தம்  கால­னியைச்   சேர்ந்த இள­­ரசன்  சாதியை மறுத்து காதல் திருமணம் செய்தனர். இவர்களது காதலுக்கு குடும்பங்களில் ஆரம்பத்தில் எதிர்ப்பு வந்தாலும். ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து நடத்தி அதில் திவ்யாவின் தந்தை நாகராஜ் அவர்களை கூனி குறுகச் செய்து சாதிய பெருமையை பாதுகாக்க வேண்டும் என்று கடும் நிர்பந்த்திற்கு உள்ளாக்கியும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனை காரணமாக வைத்து ஆதிக்க சாதியினர் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் நர வேட்டை ஆடினார்கள். வீடுகளை அடித்து நொறுக்கி, தீ வைத்து பொருட்களை கொளுத்தி பல கோடி மதிப்பில் சேதப்படுத்தினார்கள். தொடர்ந்து இந்த பிரச்சனையை சாதிய ஆதிக்கமாக பாமக முன்னெடுத்து சாதிய அணிதிரட்டலையும் செய்தது. செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மரக்காணத்தில் கலவரத்தை ஏற்படுத்தியது. இதனையொட்டி ஜனநாயக அமைப்புகள், பல்வேறு அரசியல் அமைப்புகள். தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகளின் போராட்டத்திற்கு பின்பே காவல்துறை நடவடிக்கை எடுத்தது, தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறு நிவாரண உதவியை அளித்தது.

இந்த நிலையில் திவ்யா காணாமல் போனதாக இளவரசன் ஒரு வழக்கும்,  திவ்­யாவின் தாய் தேன்­மொழிஆட்­கொ­ணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தனர்அத­­டிப்­­டையில்இள­­­சனும்திவ்­யாவும் நீதி­மன்­றத்தில் ஆஜர்­­டுத்­தப்பட்­­போதுஏற்கனவே. ‘‘நான் கண­­னுடன்  செல்ல விரும்­பு­கிறேன்” என்று  திவ்யா மூன்று முறை நடைபெற்ற விசாரணையிலும் கூறி இளவரசனோடு சென்ற திவ்யா இம்முறை அவரது உறவினர்களால், சாதியினரால் நிர்பந்தப்படுத்தப்பட்டதன் காரணமாக  திவ்யா, ‘‘தனது  தந்தை தனக்­கா­கவே இறந்­ததால்தாய் தனி­யாக இருக்­கின்றார்எனவே அவ­ருடன்செல்ல விரும்­பு­கிறேன்.” என நீதி­­தி­யிடம் கூறியதால்  திவ்யாதாய்  தேன்­மொ­ழி­யுடன்  அனுப்பி   வைக்­கப்­பட்­டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் இளவரசனின் மரணம் நிகழ்ந்துள்ளது. காவல்துறையும், ஊடகங்களும் இதனை தற்கொலை என்கின்றனர். அவரது பெற்றோர்களும், உறவினர்களும் கொலை என்கின்றனர், இதனை வைத்து 10 நாட்களாக பிரேத பரிசோதனை, பல மருத்துவர்கள் பரிசோதனை, நீதிமன்ற தலையீடு என்று பத்திரிக்கைக்கும், ஊடகங்களுக்கும் நல்ல தீனியாக இளவரசன் மரணம் பயன்பட்டது. ஆனால் அடிப்படையில் கொலையோ, தற்கொலையோ அதற்கான நிர்பந்தத்தை உருவாக்கிய சாதிய அடையாளத்தை பெரும் பகுதி ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை.  இந்த சூழலில் தான் வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் எம்.பி.ராஜேஷ் தலைமையில், மாநிலத்தலைவர்கள் உள்ளிட்டு இளவரசனுக்கு அஞ்சலி செலுத்தவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவும் சென்றால் அதற்கு தமிழக காவல்துறை ஏராளமான தடைகளை விதித்தது. நெடிய போராட்டத்திற்கு பின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லி வந்தோம்.

கடந்த ஜூலை 11ம் தேதி சேலத்தில் சாதி மறுப்பு, காதல்திருமணத்தை ஆதரித்து, சமூக நீதிக்கான சிறப்பு மாநாட்டை டிஒய்எப்ஐ நடத்தியது. கடுமையான போலீஸ் கெடுபிடி திரும்பிய பக்கமெல்லாம் ஆயுதம்  தாங்கிய போலீஸ். என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று காவல் ஆணையரில் துவங்கி அடிமட்ட போலீஸ் வரை ஏராளமானோரும், திரும்பிய பக்கமெல்லாம் வீடியோ பதிவு, உளவுப்பிரிவு, நுண்ணறிவு பிரிவு, சிறப்பு காவலர்கள் என தலைவவர்களின் பேச்சை பதிவு செய்தனர். தமிழகத்தில் சுயமரியாதை இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் கட்டி வளர்த்த சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம், விதவை திருமணம், கலப்பு திருமணங்களை முன்னெடுப்போம், சாதிய கட்டுமானத்தை தகர்த்தெறிவோம் என்று சிறப்பு தீர்மானத்தோடு மாநாடு நிறைவு பெற்றது.  

மாநாட்டில் சாதியை கட்டியளும் வெறியர்களே நீங்கள் தினமும் பயன்படுத்தும் அனைத்தும் எனது சாதிக்காரன் உற்பத்தி செய்த பொருள்தான், நான் சுவாசிக்கும் காற்று என் சாதிக்காரன் உற்பத்தி செய்தது, நான் குடிக்கும் தண்ணீர் எனது சாதிக்காரன் உற்பத்தி செய்தது, என்று வாழ முடியுமா? எனது சாதிக்காரன் என்பதால் நான் வாங்கும் பொருளுக்கு விலை குறைப்பு, எனது சாதிக்காரன் என்பதால் கட்டணமில்லா கல்வி, கட்டணமில்லா மருத்துவம், வேலைசெய்யும் இடத்தில் சம்பளஉயர்வு என்று தனியாக சலுகை கொடுக்கிறார்களா? இல்லையே அப்புறம் ஏன் சாதிய பெருமையை பிடித்து குதிக்கீறிர்கள்..

தீண்டாமை ஒரு பாவச் செயல். தீண்டாமை ஒரு பெருங்குற்றம். தீண்டாமை ஒரு மனிததன்மையற்ற செயல் என ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் அரசுகள், தீண்டாமையை கடைபிடிப்பவர்களை தயுவு தாட்சண்யமின்றி சிறையில் தள்ளியிருந்தால் இந்த கொலைகளும். தற்கொலைகளும் நிகழ்ந்திருக்காது. தமிழகத்தின் திராவிட இயக்கங்கள் தொடர்ந்து தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக ஏற்படுத்திக்கொள்ளும் சமரசமே தீண்டாமை கொடுமையை நீடித்து வைக்க செய்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை சமூத்தில் தீண்டாமையை கடைபிடிக்கும் சாதியில் உள்ள வெகுஜன மக்களிடம் கருத்தியல் மாற்றத்தை அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும் என்றால் பொதுவான அரசியல் நீரோட்டமிக்க ஜனநாயக அமைப்புகளின் போராட்டங்களே மாற்றத்தை உருவாக்கும்.

ஆனால் தற்போது தமிழகத்தில் தனது சாதியின் பெருமைக்காக. விடுதலைக்காக என்று மேலும் சாதிய திரட்டலே நடைபெறுகிறது. இது சாதிய ஒழிப்புக்கோ. தீண்டாமை ஒழிப்புக்கோ பயன்படாது. அதேபோல் ஆண்ட சாதி என்று பெருமை பேசுபவர்கள் எல்லாம் இன்று இட ஒதுக்கீட்டிற்காக தன்னை இடைநிலை சாதியாக தகுதி இறக்கம் செய்து சலுகை வேண்டும் என்கிற போது எங்கே இருக்கிறது சாதிய பெருமை..
இங்கே சமூக வாழ்வியல் எதார்த்தமே மேலோங்கியுள்ளது. எனவே கேட்கப்பட வேண்டிய கேள்விகள் ஏராளம் உள்ளது. கேட்டகாமல் நெடுமரங்களென பெட்டைப்புலம்பலாய் நாம் இருந்தோம் என்றால் இந்த கட்டமைப்பை தகர்தெறியமுடியாது. தமிழகத்தில் இன்றைய சூழலில் பெரும் பகுதி மக்கள் இன்றைய நவீன தாராளமயக் கொள்கைகளின் நெருக்கடியில் மீள ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் ஒன்றுபட்ட போராட்டங்கள் வேகமாக முன்னெடுக்கப்படும் போது இந்த சாதிய எண்ணங்களை பின்னுக்கு தள்ள முடியும். பெரும் பகுதி மக்கள் அரசியலை சார்ந்து நிற்பதால் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை வலுவாக முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை கீற்றும் உள்ளது.

2006 ஆண்டு நீதிபதி மார்க்கண்டேய கட்சு , லதாசிங் / எதிர்உத்திரபிரதேச அரசுஎன்ற வழக்கில்  சாதிய சமூகம் பெரும் சாபக்கேடு என்றும் இந்த சாதிய முறை நாட்டில் உள்ள எல்லா நல்லவற்றையும்பாழ்படுத்திவிடும் ஆபத்தானத்தையும் ,அதனை ஒழிக்க சாதி மறுப்பு திருமணங்களே தீர்வுகள் என குறிப்பிட்டார்.  அரசும் ,சமூகமும் இந்த காதலர்களை பாதுகாக்கவேண்டும் . காதல் ஒரு மனித உரிமை என்றுஉரக்க பேசினார்.  இதனை இன்றைய நீதிமன்றங்களும். ஆளும் அரசுகளும் முன்னெடுக்க வேண்டும். எனவே தான் டிஒய்எப்ஐ சமூக நிதிக்கான மாநாட்டை தந்தைபெரியாரும். டாக்டர அம்பேத்காரும், சிங்காரவேலரும், சீனிவாசராவும் போராடிய பாதையில் ஏராளமான சமூக சீர்திருத்தவாதிகளின் வழியில் நின்று சாதி மறுப்பு. சுயமரியாதை. மூடநம்பிக்கை எதிர்ப்பு. பெண்விடுதலை, மதவெறி எதிர்ப்பியங்கங்களை முன்னெடுப்போம். பட்டுக்கோட்டையார் சொன்னதை போல்

“யாருமேல கீறீனாலும், இரத்தம் ஒன்னுதான், ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம் தான்“ என்ற வரிகள் தமிழகத்தின் வீதிகளில் பரப்புவோம்.
நன்றி- இளைஞர் முழக்கம்
செ.முத்துக்கண்ணன்