”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

தமிழகத்தில் தலித்களின் நிலை


“நமது கடவுள் சாதியை காப்பாற்றும் கடவுள், நமது மதம் சாதியை காப்பாற்றும் மதம், நமது அரசாங்கம் சாதியை காப்பாற்றும் அரசாங்கம் என தந்தை பெரியார் கூறுவார். அப்படிப்பட்ட சாதியை காப்பாற்றும் நட்வடிக்கையை காலம் காலமாக ஆளும் வர்க்கங்கள் பல வடிவங்களில் செய்து வருகின்றன. இந்தியாவில் இனக்குழுக்களுக்குள் அகமண முறைகள் நீடித்த்தன் தொடர்ச்சியாக சாதி ஒரு தனி வர்க்கமாக நிறுவப்பட்டது, சமூக உற்பத்தி உறவுகளிலும், நிலவுடைமைகளில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்கில் வர்க்கங்கள் ஏற்பட்டதன் பின்னணியில் வர்க்கத்திற்குள் சாதி தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடு அன்றிலிருந்து ஏற்பட்ட வேலைப்பிரிவினைகள் சாதியின் கட்டுமானத்தை உறுதி செய்தன. குறிப்பாக நில உறவுகளை அதிகம் கொண்ட இந்தியாவில் ஆளும் வர்க்கமாக திகழ்ந்த நிலப்பிரபுக்கள், ராஜாக்கள், மன்னர்கள் சாதிய பாகுபாட்டை உறுதிப் படுத்தி கட்டிக்காத்தனர்.

ஆரியர்களின் வருகைக்கு பின் வர்க்கத்திற்குள் இருந்த ஏற்றத்தாழ்வு சாதியாக கெட்டிப்பட ஆரம்பித்த்து, பிராமணியம் ஆளும் வர்க்கத்தின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதாக இருந்த்து. அது புறமண முறை தடை செய்த்து. இன்று புறமண முறைக்கு ஆதரவான சட்டங்கள் இருந்தாலும், அகமண முறையே சாதியை நிலைத்திருக்க வைக்கும் காரணியாக இருப்பதால் அதனை பிராமணியம் வளர்த்தெடுக்க அனைத்து வித சதிகளையும் செய்த்து. அகமண முறை நீடிக்க வேண்டுமாயின் ஆண், பெண் எண்ணிக்கையில் சமத்துவத்தை பேண வேண்டி வந்த்து. ஆண் எண்ணிக்கை குறைந்தாலோ, பெண் எண்ணிக்கை குறைந்தாலோ இயற்கையாகவே புறம்ணத்தை நோக்கி தள்ளிவிடப்படுவார்கள். இதை தடை செய்ய குறுக்கு வழிகளை பல நியதியின் பெயரில் கடைபிடிக்க ஆரம்பித்தார்கள். 1. விதவையை கணவன் உடலோடு எரித்து விடுவது ( உடன்கட்டை ஏறுவது) 2. கணவனை இழந்தவரை மொட்டையடித்து, கட்டுப்பாடுகளை விதித்து விதவைக் கோலம் பூண வைப்பது 3. மனைவியை இழந்தவன் மீது பிரம்மச்சரியத்தை விதிப்பது 4. பருவமெய்தாத சிறுமியை மணம் முடிப்பது (பால்யவிவாகம்). போன்ற நியதிகளின் அடிப்படையிலும், தெய்வத்தின் பெயராலும் அகமண முறையை தக்க வைத்து ஒரு இனத்திற்குள்ளேயே சாதிய கட்டுமானத்தை கடந்த 3000 ஆண்டுகளுக்கு மேலாக தக்க வைத்தனர். இந்த மோசடிப் பேர்வழிகளுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து சித்தர்கள் மற்றும் லோகாய வாதிகளால் நடத்தப்பட்டு வந்துள்ளது. மேற்படி கட்டமைப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மன்னர்கள் அரசாணைகள் மூலமும் இந்து மத்த்தின் தோற்றுவாயான சைவ, வைணவ மதங்களின் பெயராலும் நடைபெற்றது.

நில உடைமை சமூக அமைப்பிலிருந்து நவீன கருவிகளின் மூலம் சமூக உற்பத்தியை நோக்கி மாற்றங்கள் உருவாகி வரக்கூடிய காலத்திலும் தமிழகத்தில் சாதிய படிநிலைகளை பாதுகாக்கும் ஏற்பாடுகள் தொடர்கின்றன, இன்றும் கல்விநிலையங்கள், மருத்துவமனைகள், திருமணமண்ட்பங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஊர்கள், சாலைகளின் பெயராலும், அக மண முறைகளின் உள்ளார்ந்த விசயங்களாலும் கட்டமைக்கப்படுகின்றன.

இந்திய விடுதலைப்போராட்ட காலத்திலும் சாதிய பாகுபாட்டிற்கு எதிராகவும், சாதியின் பெயரால் நிகழும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும் வலுவான கலக குரல்கள் எழுப்ப்ப்பட்ட போதும் பிராமணியம் அதை அடக்கி ஒடுக்க அனைத்துவிதமான நடவடிக்கையிலும் ஈடுபட்டது, இதற்கிடையில் இடை நிலை சாதிகளும் பிராமணியத்தின் உட்கூறுகளை உள்வாங்கி கொண்டு தங்களையும் அதே போல் காட்டிக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்ட. அது குறிப்பிட்ட காலத்தில் பிராமணரல்லாத சாதிகள் என்ற நிலையை நோக்கியும், பிற்படுத்தப்பட்ட சாதிகளில் தொழில் அடிப்படையில் உயர் சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுப்பாட்டை வலுப்படுத்தும் ஏற்பாடும் நடந்த்து. தீண்டாமைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த தந்தை பெரியார் பலகட்ட போராட்டங்களை நடத்தினார், நீதி கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இதில் முன்னின்றது. இதன் பின் தோன்றிய திராவிடர் கழகம் இதை உரக்க பேசியது. ஆனால் அதிலிருந்து உருவான திமுக, அதிமுக, மதிமுக போன்ற அமைப்புகள் எல்லாம் இது குறித்து எந்த சிந்தனையையும் செலுத்தியதாக தெரியவில்லை. 1967ல் ஆட்சிக்கு வந்த திமுகவும் அதன் பின் அதிமுகவும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. பிராமணியத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தியவர்கள் இதர சாதியினருக்குள் இருந்த உள் முரண்பாடுகளையும், பகைமைகளையும் களைய எந்த வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் தொடர்ந்து அதை தங்களுக்கு சாதகமான வாக்கு வங்கியாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இன்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள 129 அரசு பள்ளிகளில் தலித் மாணவர்கள் ஒருவர் கூட பயிலவில்லை. மேலும் 30 பள்ளிகளில் 5 சத தலித் மாணவர்களே பயின்று வருகின்றனர். இதர பள்ளிகளில் 20 சத்த்திற்கும் குறைவான தலித் மாணவர்களே பயின்று வருகின்றனர். பள்ளிகளில் இன்றும் பல இடங்களில் தலித் மாணவர்களை கடைசி இருக்கையில் உட்கார வைப்பது. பாகுபாடு கடைபிடிப்பது போன்ற தீண்டாமையின் வடிவங்களும் இருந்து கொண்டு தான் வருகின்றன.

தலித் பகுதி மக்களின் மிக மோசமாக சந்திந்தித்துக் கொண்டு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று கல்வி நிலையங்களில் படிப்பை பாதியில் நிறுத்துவது ஆகும்,. அருந்ததியர் சமூகத்தில் இந்த எண்ணிக்கை கூடுதலாக உள்ளது என அன்னை தெரசா கிராமப்புற வளர்ச்சிக்கட்டளையின் ஆய்வு கூறுகிறது, 5 ம் வகுப்பில் 60 சதவீதமும், 8ம் வகுப்பில் 45 சதவீதமும், 10ம் வகுப்பில் 20 சதம் என்ற அடிப்படையிலே செல்கின்றனர் என்ற வேதனையான விபரம் மனித மனங்களை உறைய வைக்கிறது,

ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளின் நிலைமையோ இன்னும் கொடுமையாக உள்ளது, 1565 விடுதிகள் சேரிகளைப் போலவே காட்சியளிக்கிறது, தமிழக அரசு சிறைகைதிகளுக்கு கூட ஒரு நாள் உணவிற்கு ரூ 25 முதல் 30ம்., போலீஸ் நாய்க்கு 65 ரூபாயும் ஒதுக்குகிறது, ஆனால் கல்லூரியில் படிக்கும் தலித் மாணவனுக்கு 18 ரூபாய் ஒதுக்கிறது, இது உழைக்கும் மக்களாகிய தலித் மக்கள் குறித்த ஆட்சியாளர்களின் அக்கறை புரிய வைக்கிறது.

தமிழகத்தின் மக்கள் தொகையில் 19 சதம் தலித் மக்கள் உள்ளனர். ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் தலித் மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது, நகர மேம்பாடு என்ற பெயரால் தலித் மக்கள் சேரிகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். கூவம், பக்கிங்ஹாம் கால்வாய்., அடையாறு போன்றவற்றின் கரைகளில் பெரும் பகுதி தலித் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கென்று குடிநீர், சாக்கடை, கழிப்பறை, சுகாதார வளாகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் கிடையாது. தலித் மக்களுக்கென்று கடந்த 38 ஆண்டுகளில் 72000 வீடுகள் மட்டுமே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியாத்தால் கட்டித் தரப்பட்டுள்ளது, குடிசையில்லா நகரம் என அறிவித்து அங்கிருந்த தலித் மக்களையெல்லாம் நகரை விட்டு அப்புறப்படுத்தும் நடவடிக்கையையே அரசு செய்தது, பாதுகாப்பின்மை காரணமாக தலித்துகள் தங்கள் சொந்த சமூக மக்களின் அருகாமையிலேயே வசிக்க விரும்புகின்றனர். இந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு உட்கூறு திட்ட நிதியான ரூ 3821 கோடியை கடந்த திமுக அரசு வேறுபணிகளுக்கு திருப்பி விட்டது,

இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோதே பட்டியல் சாதியினரின் நலனை பாதுகாக்க பல பிரிவுகள் உருவாக்கப்பட்டன, அதன்படி 1979ல் சிறப்பு உட்கூறுதிட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டு பின்னர் 11 வது ஐந்தாண்டு திட்டத்தில் சப் பிளான் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது, இதன்படி ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்தும் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமை சார்ந்த மற்றும் உரிமையை பெறுவதற்கான திட்டமாக கொண்டு வரப்பட்டது, தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளில் (1995.-2010) 14298 கோடி ரூபாய்கள் மறுக்கப்பட்டுள்ளது என ஒரு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது. இந்த நிதியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாயை தலித் மக்களுக்காக நில விநியோகத்திற்கு பயன்படுத்தியிருந்தால் ஓர் ஆண்டிற்குள் அனைவருக்கும் நிலத்தை வழங்கியிருக்க முடியும்.

தமிழகத்தில் மொத்த நில உடைமையாளர்கள் 78,98,932 பேர், இதில் 9,03,548 பேரிடம். அதாவது 11 சதமான தலித்களிடம் மட்டுமே நிலம் உள்ளது, ஆனால் உண்மையில் 4 லட்சம் பேரிடம் வெறும் 2 ஏக்கர் நிலம் அளவு மட்டுமே உள்ளது, இது மொத்தநிலப்பரப்பில் 7 சதம் மட்டுமே ஆகும், குறிப்பாக மேற்கு மண்டலத்தில் மிகக்குறைவான அளவே தலித்களிடம் நிலம் உள்ளது, ஈரோட்டில் 17 சதம் தலித் மக்கள் தொகைக்கு 2 சதம் நிலமும், கோவையில் 16 சதம் தலித் மக்கள் தொகைக்கு 1.38 சதமும், நீலகிரியில் 30 சதத்திற்கு 0.90 சதம் நிலமும் என உள்ளன. தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் 4 இலட்சம் ஏக்கர் உயர் சாதியினரிடமும், மீதி 1 லட்சம் ஏக்கர் நிலமே இதர சாதியினருக்கு ஏலம் விடப்படுகிறது.

ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரிலும், மேற்கு வங்கத்திலும் சாதிய ஒடுக்குமுறையும், வன்முறைகளும் ஏராளமாக நிகழ்ந்த வண்ணம் இருந்தது. ஆனால் மேற்கு வங்க நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இதற்கு அந்த மாநிலத்தின் இடதுசாரி அரசாங்கம் காரணமாகும். ஏனென்றால் 13 லட்சம் ஏக்கர் நிலத்தில் 7 லட்சம் ஏக்கர் நிலம் (54சதம்) தலித் மக்களுக்கு வழங்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டுள்ள அவர்கள் கௌரவத்துடனும், மரியாதையுடனும் வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. என்பதை கவனிக்க வேண்டியுள்ளது, இது அந்த மாநிலத்தில் சமூக ஒடுக்குமுறை என்பதற்கு பதில் சமூக ஒற்றுமையை பேணி காத்தது. இதனால் தான் அங்கே தலித் பஞ்சாய்த்து தலைவர் மீதான வன்முறைகளோ, படுகொலைகளோ நடைபெறவில்லை.

பாரதியும், பாவேந்தனும், வள்ளலாரும், பெரியாரும் பிறந்த தமிழக கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட வடிவங்களில் தீண்டாமைக் கொடுமைகள் இன்றளவிலும் நீடித்து வருகின்றன. எவிடன்ஸ் அமைப்பு 12 மாவட்டங்களில் ஆய்வு நடத்தி விபரங்களை வெளியிட்டு உள்ளது, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தஞ்சை, நாகை, சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 213 கிராமங்களில் அந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 70கிராமங்களில் ரேசன் கடைகளில் சாதிய பாகுபாடு உள்ளது. 23 கடைகளில் தலித்கள் பிறருடன் ஒன்றாக வரிசையில் நிற்க முடியாது. 2 சத கடைகளே தலித் மக்களின் வசிப்பிடங்களில் உள்ளது. 2009ம் ஆண்டு கள்ளகுறிச்சி அருகில் தச்சூரில் காசியம்மாள் என்ற தலித் பெண்ணின் கை வரிசையில் நின்ற ஆதிக்க சாதி பெண் மீது பட்டுவிட்டது என கூறி பொது இடத்தில் அவர் மானபங்கப்படுத்தப்பட்டார்.

67 சத கிராமங்களில் சலூன் கடைகளில் முடிவெட்ட முடியாது. 68 சத கிராமங்களில் பொது குழாயில் நீர் எடுக்க தடையும் , 131 கிராமங்களில் தனித்தனி நீர் நிலைகளும் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலித் பெண்களுக்கு பிரசவத்தின் போது மருத்துவர்கள் தொடடு பார்ப்பதில்லை. மதுரை கீரிப்பட்டியில் வசந்தாமாளிகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலித் பெண் சேர்க்கப்பட்ட போது அங்கிருந்த ஊழியர் கொண்டை ஊசியால் பெண்ணின் பனிக்குடத்தை குத்தி சேதப்படுத்தியுள்ளார், தீண்டாமை ஒரு பாவச் செயல் என பாடப்புத்தங்களில் அச்சடித்து கொடுத்து விட்டு 29 கிராமங்களில் பள்ளிகளில் பாகுபாடும் காட்டப்படுகிறது. தலித் மாணவர்கள் துப்புறவு பணியில் ஈடுபடுத்தப்படுவதும், பயணங்களில் பாகுபாடு காட்டப்படுகிறது. அதே போல் பேருந்துநிறுத்தங்களில் அமருவதில், டீக்கடைகள், ஓட்டல்களில் தனி பெஞ்ச், டம்ளர்கள் எனவும் பாகுபாடு காட்டப்படுகிறது. தபால்நிலையங்களில் தலித்கள் நுழையக்கூடாது என்பதும், ஊராட்சி மன்றங்களில் தலித் தலைவர்களை இருக்கைகளில் அமரவிடாமல் தடுப்பதும் தொடர் கதையாக உள்ளது. மலம் அள்ளும் தொழிலில் இன்றும் தமிழகத்தில் 50000க்கும் மேற்பட்ட தலித் மக்கள் ஈடுபடுத்தப்படுவதாக விபரங்கள் கூறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒடைப்பட்டியில் கலையரங்கத்தில் தலித்கள் நுழைய தடையுள்ளது. பொது சுடுகாடுகளில் புதைக்க அனுமதிக்காத நிலையும் உள்ளது, பெரும் பகுதி தலித் மக்களுக்கான சுடுகாடுகள் ஓடைகளில் உள்ளன, மழைக்காலங்களில் அவைகளை பயன்படுத்த முடியாத நிலையில் எந்த வழியும் இல்லாது சாலை ஒரங்களில் புதைக்கும் கொடுமையும் நிகழ்ந்து வருகிறது, அதே போல் தலித் மக்களின் பிணங்களை ஆதிக்க சாதியினரின் குடியிருப்புகளின் வழியாக கொண்டு செல்ல முடியாத சூழலும் உள்ளது, தேனி மாவட்டம் கூழையனுர்ரில் எதிர்த்து கேட்ட சின்னாயி என்ற தலித் மூதாட்டி மீது இந்தாண்டு ஜனவரி மாதம் பெட்ரோல் குண்டு வீசி அவர் கொல்லப்பட்டார். கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் தலித் மக்கள் பொதுகுழாயில் தண்ணீர் பிடிக்கக்கூடாது என்கிற கட்டுபாட்டோடு பொது இடத்தில் செல்போன் பேசக்கூடாது, பைக் ஒட்டக் கூடாது என நவீன வடிவ தீண்டாமைகளும் நிகழ்ந்து வருகிறது.

நவீன காலத்தின் அறிவியல் வளர்ச்சிப் போக்கில் தீண்டாமை மாறும், மறைந்து போகும் என கருதப்பட்டு வந்தாலும், உண்மையில் தீண்டாமையும், சாதிய படிநிலைகளும் நவீன வளர்ச்சிக்கேற்ப தங்களது வடிவங்களை மாற்றிக் கொண்டு உயிர் வாழ்ந்து வருகின்றன. முதலாளித்துவம் தன்னுடைய நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ள அடையாளங்களின் பின்னால் ஒழிந்து கொள்ள முயற்சி செய்கிறது, அதன் பகுதியாக இனம், மொழி, சாதி, மதம் போன்றவற்றை தேவையான அளவு ஊதி பெருக்கி தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறது.

தலித் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதற்காக துவங்கப்பட்ட தலித் கட்சிகள் எல்லாம் இன்று தேர்தல் அரசியல், தமிழ் தேசியம், இன உணர்வு என பிரச்சனைகளை திசைத்திருப்புகின்றன. ஒரு பகுதி அரசியல் கட்சிகள் ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கியை நம்பி தலித்களை கைவிடும் போக்கையே மேற்கொள்கின்றன. நாம் தற்போதைய நிகழ்வுகளை பார்த்தோமானால் தெளிவாக தெரியும், நாலுமூலைகிணறு, கொடியங்குளம், வாசர்த்தி, கோட்டைப்பட்டி, தாமிரபரணி, பரமக்குடி துப்பாக்கி சூடுகளும், காவல்துறை தாக்குதல்களும், திண்ணியம், காங்கேயனுர், மேலவளவு, உத்தபுரம், பாப்பாபட்டி, கீரிபட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சினேந்தல், சிதம்பரம் நடராஜர் கோவில் என நூற்றுக்கணக்கான இடங்களின் பெயரை சொல்ல முடியும், தலித்துகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று....

ஆரோக்கியமின்மை, தரமற்ற வாழ்க்கை, குடிநீர் பற்றாகுறை, பெருகும் மக்கள் தொகை அடர்த்தி, உள்கட்டமைப்பு வசதியின்மை போன்றவையும் தலித் மக்களுக்கு மிகுந்த நெருக்கடிக்களை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் தான் சமத்துவபுரங்களை உருவாக்குகிறோம் என கடந்த திமுக அரசு பம்மாத்து செய்தது. ஊருக்கு வெளியே கட்டப்படும் சமத்துவபுரங்களால் மட்டும் சமத்துவம் வந்துவிடாது.. ஒவ்வொரு கிராமத்திலும் சமத்துவபுரங்கள் மலர வேண்டும், அதற்கு இன்றைய உத்தபுரம் எப்படிஉத்தமபுரமர்க மாறும் என அதிகார வர்க்கத்தின் ஒரு சிறுபகுதி மேற்கொண்ட முயற்சியால் சமூக ஒருபாட்டை நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் உருவாக்கினார்களோ.. அதே போல் தமிழக ஆட்சியார்களும், காவல்துறையும் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தலித் மக்களுக்கு வழங்கபடும் திட்டங்கள் யாவும் சலுகைகளோ, இலவசங்ளோ அல்ல மாறாக அவை அவர்களின் உரிமை என்கிற கோணத்திலிருந்து ஆதிக்க சாதியினரும் பார்க்க வேண்டிய அணுகுமுறை தேவைப்படுகிறது, அதை நோக்கிய போராட்டத்தை தொடர்ந்து தமிழக மண்ணில் நடத்த வேண்டியுள்ளது. கால சக்கரத்தை முன்னோக்கி நகர்த்த தடையாக இருக்கும் தீண்டாமை, சாதிய ஒடுக்குமூறைகளை முற்றாக ஒழித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.. ஆனால் கல்விநிலையம் முதல் அரசு அலுவலகங்கள் வரை இன்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆண்டுக்காண்டு நடைபெற்றாலும், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்றது என பாடப்புத்தகங்களில் அச்சடித்து விநியோகம் செய்தாலும், ஆளும் வர்க்கத்தின் உறுதியான நடவடிக்கையிலேயே தீண்டாமை ஒழிப்பை சாத்தியபடுத்த முடியும். தலித் மக்களின் மேம்பாடு என்பது ஒட்டுமொத்த உழைப்பாளி மக்களின் மேம்பாட்டோடு இணைந்தது என்கிற அடிப்படையில் சாதிய பாகுபாடுகளும், ஒடுக்குமுறைக்கு எதிரான நடவடிக்கைகளையும் வேகப்படுத்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். அதே போல் இளைய தலைமுறையும் அகமண முறையில் இருந்து புறமண முறைக்கு மாற முயற்சி செய்ய வேண்டும். அது தான் சாதிய கட்டமைப்பை ஒரு பகுதி உடைத்தெறிய பயன்படும். சமூகத்தின் பொதுபுத்தியிலும் மாற்றம் வரவேண்டும்.

புரட்சி குறித்து


m‹òŸs unkZ m©zhɉF, ey« eyk¿a Mtš..

ï‹iwa jÄHf¤âš gy òu£áfŸ cywd. ïâš òu£á v‹whš v‹d v‹W ekJ ïisa jiyKiw FH«ã¡ bfh©L ïU¡»wJ vdJ e©g® T¿dh®. mtÇl« ïJ F¿¤J ngáa Éra¤ij cd¡F fojkhf vGJ»nw‹..

òu£á v‹whš v‹d ?

ï‹iwa ïªâa k‰W« cyf KjyhˤJt Clf§fŸ ïisa rªjâÆdiu F¿ it¤J Ra xG¡f«, Ra K‹nd‰w« mj‰fhf vJî« brŒayh« vd xU F¿¥ã£l t®¡f¤â‹ ts®¢áia k£L« ikakhf bfh©L ïju bgU« gFâÆdiu áªjid ßâahf Ru©l¥gLt®fshf it¤J tU»wJ. 21« Eh‰wh©o‹ Jt¡f¤âš r_f- bghUshjhu ÃiyfËš Äf¥bgU« mrk¤Jt¤ij KjyhˤJt r_f mik¥ò Kiw cUth¡»íŸsJ. ïJ ÃÄl¤â‰F ÃÄl« trâ¥gil¤jt®fis nkY« trâ gil¤jt®fshfî«, ViHfis nkY« ViHfshfî« cUth¡»¡ bfh©L tU»wJ.

ïjid kh‰w j‰nghija njitahd bgU« âushd k¡fŸ âuŸ nghuh£l§fŸ njit¥gL»wJ. ï¥nghuh£l§fËid el¤â¡ bfh©L ïU¡F« K‰ngh¡F r¡âfis áWik¥gL¤J« elto¡ifia Clf§fŸ brŒJ tU« NHÈš.. ïªâa Rjªâu¥ nghuh£l fhy¤âš òu£áfu nghuh£l§fË‹ elto¡iffis m¿tJ mtáakh»wJ...

ïªâa njáa thâfŸ t£lhu¤âš ïJ F¿¤J jtwhd fU¤J Ãyî»wJ. òu£á v‹whš mJ btoF©LfŸ, if¤J¥gh¡»fŸ k‰W« ufáa r§f§fSl‹ ïizªâU¡F« v‹W fUj¥gL»wJ. vdnt jh‹ ïªâa muáay ik¥ò mfuhâÆš “òu£á¡fuF‰w«” ( revolunatory crime ) v‹w brh‰bwhlU« fhz¥gL»wJ. MÆD« òu£á v‹gJ ïijÉl ÉÇthd msÉš bghUŸ bfh©lJ. xU F¿¥ã£l tuyh‰W¡ fhy f£l¤ij Koî¡F bfh©L tªJ òâa bjh‹iw cUth¡F« xU K¡»a tuyh‰W Ãfœnt òu£á v‹W miH¡f¥gL»wJ.

eilKiw r_f mik¥ãš tskhf thœªJ tU« rKf¡ fhuÂfŸ, bghUshjhu t®¡f§fŸ k‰W« muáaš ÃWtd§fŸ m¤jifa mik¥ãš kh‰w« tUtij j§fŸ tskhd thœ¡if g¿nghtij m›tsî vËjhf mDkâ¡f kh£lh®fŸ. jh§fŸ K‰whf mʤbjhÊ¡f¥gL« nghJ _®¡f¤jdkhf¤ j§fŸ v⮥ig¡ fh£lhkš ïU¡f kh£lh®fŸ. muáaš k‰W« rKf t‹KiwfËš bt¿¤jdkhf ïw§fhkš ïU¡f kh£lh®fŸ. ï›thW ït®fshš Vt¥gL« mid¤J v⮥òfisí« mʤbjhʤJ bt‰¿thif NL« khbgU« tuyh‰W Ãfœnt “òu£á” v‹W miH¡f¥gL»wJ.

òu£áfu mik¥ã‰fhd gÂfŸ v‹d ?

muR v‹gJ xU F¿¥ã£l ts®¢á¡f£l¤ij v£oa rKjha¤â‹ Éis bghUshF«. vâ®kiwahd bghUshjhu ey‹fis bfh©oU¡F« t®¡f§fË‹ Ô®¡f Koahj r©ilia xG§F brŒí« fUÉahf muR cUth»wJ. ïJ Ru©Lgt®fË‹ ey‹fis ghJfh¡F« fUÉahf ïUªJ tU»wJ. ïJ Ru©l¥gLgt®fË‹ bghJ ò¤âÆid kªjkhfnt it¤âU¥gj‰fhd rfy V‰ghLfisí« brŒ»wJ. MŸnthÇ‹ ml¡FKiw fUÉahd muir cil¤bj¿a tuyhW beL»Y« MÆu¡fz¡fhd nghuh£l§fŸ eilbg‰WŸsJ. mj‹ go¥ãidfËš ïUªJ f‰W¤ nj®tJ k£Lkšy.. xL¡FKiw¡FŸshd k¡fS¡fhd nghuh£l§fis bjhl®ªJ el¤âl nt©LbkÅš, gf¤á§ T‰W¥go

“òu£áfu mik¥ã‹ ïu©L f£l§fis fl¡f nt©oíŸsJ. x‹W K‹nd‰ghL, ïu©L neuo elto¡if. ïâš K‹nd‰ghL v‹gJ bjhÊyhs®fŸ, ÉtrhÆfis nghuh£l¤â‹ K‹d gilahf âu£l nt©L«. j‰nghija nghuh£l¤â‰F ãwF ne®ikahd òu£á¡fu¤ bjh©l®fŸ k¤âÆš btW¥igí«, mte«ã¡ifí« Ú§fŸ fh©Õ®fŸ.. Mdhš Ú§fŸ ftiy¥gl njitÆšiy. cz®¢á ta¥gLjiy xJ¡» ití§fŸ.. òu£á v‹gJ fodkhd gÂ, òu£áia V‰gL¤JtJ v‹gJ jÅeg®fŸ vtuJ r¡â¡F« m¥gh‰g£lJ. mjid K‹T£ona F¿¤J it¤j njâ VnjDbkh‹¿š bfh©L tuî« KoahJ.

mJ F¿¥ã£l rKjha bghUshjhu¢ NœÃiyfË‹ _ynk bfh©L tu¥gL«. ïªj NœÃiyfËš bfhL¡f¥gL« vªjbthU thŒ¥igí« ga‹gL¤Jtnj xU§»iz¡f¥g£l xU òu£áfu f£áÆ‹ gÂahF«. òu£á¡fhd r¡âfis x‹W âu£LtJ Äf¡ fodkhd gÂ.. m¥g òu£áfu¤ bjh©l®fËlÄUªJ khbgU« âahf¤ij nt©L»wJ.

ïjid eh‹ bjËîgL¤J»nw‹. Ú§fŸ ÉahghÇahfnth ï›îyf thœÉš ek¡F njitahdt®fŸ. byÅD¡F ão¤jkhd th®¤ijfËš brhštbj‹whš “ òu£ána j§fsJ bjhÊyhf¡ bfh©l KGneu¥ òu£áahs®fns ( Professional Revolutionaries ) òu£áia jÉu ntW vªj ïy£áankh, thœehŸ gÂnah ïšyhj KGneu¤ bjh©l®fŸ. m¤jifa bjh©l®fŸ mâf v©Â¡ifÆš f£áÆš nr®¡f¥gLtJ c§fsJ bt‰¿¡fhd thŒ¥ig mâf¥gL¤J«..

ïisP® mik¥ã‹ gÂ

f£á¡F njitahd bjh©l®fis TLjyhf ïisP® ïa¡f¤â‹ _ynk bfh©L tu Koí«. ïisP® ïa¡fkhdJ go¥ò t£l§fS¡F«, muáaš tF¥òfS¡F«, J©L¥ ãuRu§fŸ, ቿjœfŸ, ò¤jf§fŸ k‰W« g¤âÇ¡iffŸ btËÆLtj‰F« V‰ghL brŒa nt©L«. ïJnt muáaš bjh©l®fis òâjhf¢ nr®¥gj‰F« mt®fË‹ gƉá¡Fkhd fskhF«..âahf« v‹W brh‹dhš KjÈš tªJ ÉF« âuŸ ïisP® âuns MF«..

“ciH¡F« ïisP®fËilna #dehaf«, nrhrÈr¤â‰fhd bghWika‰w, f£L¥ghl‰w c‰rhf« ïU¥gij T®ªJ ftÅ¡f nt©L«” vd uZa òu£áÆ‹ ehaf‹ khnkij byÅ‹ TWtJ ï‹iw¡F TLjyhf ïisP®fis âu£l nt©oaj‹ mtáa¤ij m¿îW¤J»wJ.

òu£á F¿¤J bjËthd áªjidnahL ïUªj ïªJÞjh‹ nrhrÈÞ£ FoauR r§f¤â‹ åu®fshd gf¤á§« mtuJ njhH®fS« “ nrhrÈr¤âid j§fsJ y£áakhf V‰W¡ bfh©l ã‹dÂÆš, òu£áahs®fŸ kÅjid kÅj‹ Ru©L« xU njr¤ij k‰bwhU njr« Ru©L« ï¢ rKf mik¥ig xʤJ, xU t®¡fk‰w rKjha¤â‰fhf É»nwh« v‹W«, v§fŸ nghuh£l« v‹gJ ãÇ£oÞ Vfhâg¤âa¤â‰F vâuhdJ k£Lkšy.. x£Lbkh¤j Vfhâg¤âa Kiw¡nf vâuhdJ vd ãufld« brŒjh®fŸ.”

Vfhâ¥g¤âa¤â‰F kh‰W nrhrÈrnk.. vd ïªâa #dehaf thÈg® r§f« cyf ïisP®, khzt® ÉHhit bjhl®ªJ Vfhâg¤âa v⮥ò elto¡iffhd jskhf kh‰¿ brayh‰¿ tU»wJ..

nk‰go foj« gf¤á§ foj§fŸ, f£LiufŸ EhÈidí«, rngjh® Kjš gf¤á§ tiuahd Ehiyí«, V§bfšá‹ FL«g«, jÅbrh¤J, muR, ïisP®fHf¤âš byÅÅ‹ brh‰bghÊî f£Liufis bfh©L vGj¥g£lJ.

m‹òl‹

muɪj‹,

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!


ஒரு நாட்டின் வளர்ச்சி குறியீடு அதன் மனிதவள மேம்பாட்டில் தான் இருக்கிறது.வளர்ச்சிக்கான தரமான கல்வியும், சுகாதாரமுமே மனிதவள மேம்பாடு ஆகும். சுகாதாரம் என்கிற போது ஊட்டச்சத்து மிக்க சத்தான உணவு, பாதுகாக்கப்பட்ட தூய்மையான குடிநீர், ஆரோக்கியமான சுற்றுப்புற சூழல் மிகுந்த வாழிடம் அவசியமான அடிப்படை தேவைகளாகும்.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் (5.96 சதம்) 7.21 கோடி மக்களை கொண்டு 7வது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 15.6 சதவீதம், 97 லட்சங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 72 லட்சத்து 35 ஆயிரத்து 160 பேர் என்கிற எண்ணிக்கையில் 11.59 சதவீதமாக இருந்தது. தற்போதைய 2011ல் கணக்கெடுப்பின்படி 68 லட்சத்து 94 ஆயிரத்து 821 குழந்தைகள் தான் இருக்கின்றனர். அதாவது 11.59 சதவீதத்தில் இருந்து 9.56 சதவீதமாக குறைந்துள்ளது.

சுகாதார நலத்திட்டங்கள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..என்ற முது மொழிக்கேற்ப அனைவருக்கும் சுகாதாரம் என்ற குறிக்கோளை எய்தும் நோக்குடன் தேசிய ஊரக சுகாதார நலத்திட்டம், தமிழ்நாடு சுகாதார நலத்திட்டம் என்ற இரண்டு மாபெரும் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றது பாராட்டுக்குரியது.பச்சிளங்குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 50ம் இறப்பும், பேறு காலத்தில் பெண்களின் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 212 என்பதும் உள்ள நிலையில் தமிழகத்தில் பிறந்த குழந்தைகள் இறப்பு 28 ஆகவும், பேறு கால பெண்கள் இறப்பு 80 ஆகவும் உள்ளது..தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களை மகப்பேறுக்கு பயன்படுத்தும் சதவீதம் 25 சதத்திற்கு மேல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசு தமிழக மருத்துவமனைகளை தரம் உயர்த்துவது குறித்து ஆழமான நடவடிக்கைகளுக்கு செல்வதே அனைவருக்கும் சுகாதாரம் என்ற நோக்கத்தை அடைய உதவிடும்..

தற்போது தமிழக அரசு 2011-2012 நிதி நிலை அறிக்கையில் தேசிய ஊரக சுகாதார நலத்திட்டத்திற்கு 900 கோடி ரூபாய் நிதியை செலவிடும் என கூறியுள்ளது. இது இன்று தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களை வாரத்தின் எல்லா நாட்களும், 24 மணி நேரமும் மகப்பேறு வசதிகளை அளிக்க கூடுதலாக 3 செவிலியர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களை 30 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனைகளாக தரம் உயர்த்துவ்து, ரத்த சோகையை தடுக்க கூடுதல் ஊட்டச் சத்து மேலாண்மை, ரத்த சேமிப்பு மையங்களை வலுப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே போல் தமிழ்நாடு சுகாதார நலத்திட்டத்திற்கு 194 கோடி ரூபாய்கள் ஒதுக்கியுள்ளது. இவற்றில் 108 ஆம்புலன்ஸ் சேவையை மருத்துவமனைகளுக்கு இடையேயான சேவையாக அதிகப்படுத்துவதும், மலைவாழ்மக்கள் வாழிடங்களுக்கு சிறப்பு ஊர்திகளையும், பச்சிளங்குழந்தைகளின் அவசர கால தேவைகளுக்கு மாவட்டந்தோறும் ஒரு ஊர்தி தனியாக இயக்கப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கதக்கதாக இருந்தாலும், மருத்துவர்களை கூடுதல் படுத்துவதும், தரமான மருந்துப் பொருட்களை தட்டுப்பாடின்றி கிடைக்க செய்வதும் முக்கியமானது. அதற்கு இந்த நிதிநிலை அறிக்கையில் அழுத்தம் தேவைப்படுகிறது.

ரத்த சுத்திகரிப்பு அலகு, மின் ஒலி இதய வரைவு, டிஜிட்டல் எக்ஸ்ரே, மார்பக ஊடுகதிர்பட சோதனை, மோடுலர் வகை மல்டிபேரா மானிட்டர்கள், வெண்டிலேட்டர், விஷ முறிவு சிகிச்சைக்கான உயிர் காக்கும் உபகரணங்கள் ஆகியவை தமிழ்நாடு சுகாதார நலத்திட்டத்தின் கீழ் 55 கோடி ரூபாய் ஒதுக்கி தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளே பலவற்றில் மேற்கண்ட எந்தவகையான அடிப்படை மருத்துவ உபகரணங்கள் வட இல்லாமல் பல்லை இழித்துக் கொண்டு உள்ளது. இருக்கும் இடத்திலும் அதற்கான போதிய தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாத நிலையும் உள்ளது. இதனை போக்குவதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இல்லை.. குறிப்பாக அரசு - தனியார் கூட்டு முயற்சியில் அதி நவீன ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும் என்பது மருத்துவம் காசு உள்ளவர்களுக்கே என்ற நிலையை நோக்கியே செல்லும். எனவே அரசு இதில் கூடுதல் நிதி ஒதுக்கி செய்திட வேண்டும்.

நடமாடும் மருத்துவமனை

எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளுக்கு நடமாடும் மருத்துவமனை என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது நல்ல முயற்சி.. சுற்று முறையில் சென்று சிசிக்சை அளிப்பதோடு நில்லாமல், அவசர காலத்தில அழைப்புகளுக்கு செவி சாய்த்து உடன் செல்லும் மருத்துவக்குழுவாக இதன் செயல்பாட்டை உருவாக்க வேண்டும். மலை வாழ் மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் நடமாடும் மருத்துவமனையை கூடுதல் படுத்த வேண்டும்..

சுகாதார மையங்கள் மேம்பாடு

ஆரம்ப சுகாதார மையங்கள், துணைசுகாதார மையங்கள், தாலூக்கா மருத்துவமனைகள் மற்றும் அரசு மாவட்ட மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவித்த அதிமுக அரசு தற்போது ஒரு சில அறிவிப்புகளோடு நின்றுவிட்டது. அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், காலியாக உள்ள அனைத்துப்பிரிவு பணியிடங்களை நிரப்ப எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை என்பது பெருத்த குறைபாடே ஆகும். கடந்த திமுக ஆட்சியில் 2010-2011 ஆம் ஆண்டுக்கு 5.83 ( 3888 கோடி ரூபாய் ) விழுக்காடு நிதி சுகாதாரத்துறைக்கு அரசு ஒதுக்கியது. 2011-2012 ஆம் ஆண்டுக்கு 4761 கோடி ரூபாய் நிதி சுகாதாரத்துறைக்கு அதிமுக அரசு ஒதுக்கியது. இதனை கூடுதல் படுத்திட வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள பெரும் பகுதி மக்கள் இன்றும் ஆரம்ப சுகாதார மையங்களையும், அரசு மருத்துவமனைகளையும் நம்பியே உள்ளனர். அந்த மருத்துவமனைகளில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் தரமான மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்கிட முடியும். தற்போதும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் மருத்துவர்களோ, ஊழியர்களோ, அடிப்படைக்கட்டமைப்புகளோ இல்லாத நிலையில் உயிரை பாதுக்காக்க தனியார் மருத்துவமனைகளுக்கு மக்கள் தினமும் ஒட வேண்டிய அவல நிலை உள்ளது.

சமவெளிப்பகுதியில் 30000 மக்களுக்கும், மலைப்பிரதேசங்களில் 20000 மக்களுக்கும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், சமவெளிப்பகுதியில் 5000 மக்களுக்கும், மலைப்பிரதேசங்களில் 3000 மக்களுக்கும் ஒரு துணை சுகாதார மையங்களும் என்ற விகிதத்தில் அமைக்கப்பட வேண்டும் என பரிந்துரைகள் உள்ளது. தமிழகத்தில் 1539 ஆரம்ப சுகாதார நிலையங்களே உள்ளது. ஆனால் 30000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையம் என்றால் 2403 மையங்கள் இருக்க வேண்டும். 864 ஆரம்ப சுகாதார மையங்கள் பற்றாகுறையாக உள்ளது. அதேபோல் துணை சுகாதார மையம் 5000 பேருக்கு ஒன்று என்றால் இன்று 14420 மையங்கள் இருக்க வேண்டும். தற்போது 8706 துணை சுகாதார மையங்களே உள்ளன. இதிலும் 5714 மையங்கள் பற்றாகுறையாக உள்ளன.

ஆகவே நடைமுறையில் தமிழகத்தில் இன்றும் நடந்து செல்ல சாலை வசதி இல்லாத நூற்றுக்கணக்கான மலைகிராமங்களும், வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு கிராமங்களும் உள்ளது. இதிலும் 5,000 மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் இருக்க வேண்டுமென்பது கூட பல இடங்களில் 30 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் தொகைக்குத்தான் ஒரு சுகாதார நிலையம் இயங்குகிறது. அதிலும் போதிய ஊழியர்கள் இல்லாத நிலைமை. 7 படுக்கைக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டும். அதுவும் பின்பற்றப்படுவதில்லை.

எனவே 40000க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டுள்ள தமிழகத்தில் ஊராட்சிக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையம் என்கிற அடிப்படையில் துவங்கிட நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். மலைப்பகுதிகளில் 500 மக்களை உள்ளடக்கிய அருகாமை கிராமங்களை கொண்ட பகுதிகளில் துணை சுகாதார மையங்களை அமைத்திட வேண்டும்.

எய்ம்ஸ் தரத்தில்

இன்றைய மக்கள் தொகை வளர்ச்சி, வேகமான நகரமயமாதல் சூழல், புவி வெப்பமயமாதலால் உருவாகும் புதிய புதிய நோய்களின் தாக்குதல், போதுமான வருமுன் காப்பு திட்டங்கள் என்றால் மேற்சொன்ன நிதி என்பது போதுமானதல்ல.. கட்டாயம் கூடுதல் படுத்தப்பட வேண்டியது அவசர அவசியமாகும்.. மேற்படி நிதி நிலையில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமானால் அரசின் கீழ் உள்ள பல்துறைகளில் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.

உதாரணத்திற்கு பல ஆரம்ப சுகாதார மையங்கள் கட்டப்பட்டு கடந்த ஆட்சி காலத்தில் அதை உடன் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதனை பயன்படுத்த உரிய அனுமதியும் ஆய்வும் நடத்தாமல் காலம் கடத்தியதை பார்க்க முடியும். சேலத்தில் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெசலிட்டி மருத்துவமனை 146 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு கட்டி இன்றும் பயன்படுத்தப்படாமல் முட்புதர்கள் மண்டிகிடக்கும் அவலத்தை தற்போதும் பார்க்க முடியும்..

புதுடில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக்கழக ( எய்ம்ஸ் ) மருத்துவமனைக்கு இணையாக தமிழகத்தில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட தலைமை செயலக கட்டிடத்தினை நவீன வசதிகளோடு கூடிய எய்ம்ஸ் மருத்துவமனையை போன்று மாற்றப்படும் என சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ளதையும், திருச்சியிலும் 100 கோடி ரூபாய் செலவில் நவீன மருத்துவமனை கட்டப்படும் என நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. அனைத்து அரசியல் கட்சிகளும் திமுக தவிர வரவேற்றுள்ளது. ஆனால் ஏற்கனவே இதே தரத்துடன் சேலத்தில் 11 மாவட்டங்களில் உள்ள மக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை எய்ம்ஸ் தரத்தில் அமைக்கப்படும் என 146 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு மருத்துவர்கள், பேராசிரியர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், துப்புறவு பணியாளர்கள் உள்ளிட்டு அனுமதிக்கப்பட்டு அள்ளி தெளித்த அவசர கோலத்தில் கடந்த திமுக ஆட்சியாளர்களால் அவசர அவசரமாக திறக்கப்பட்டது. இன்றைய ஆட்சியாளர்கள் போதிய அளவு பணிகள் நிறைவு பெறவில்லை என மருத்துவமனையை பூட்டி விட்டார்கள். மூன்று மேல் தளங்களை கொண்ட இந்த மருத்துவனையில் 441 படுக்கை வசதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதில் 319 படுக்கைகள் சிறப்பு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விழுப்புரம், கரூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1.1/2 கோடி மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. தற்போது மூடப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் பூர்த்தியடையாத பணிகளை உடன் நிறைவு செய்து அதனை மக்கள் பயன்படுத்திடும் வகையில் திறந்திட வேண்டும். மேலும் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, குமரி, தூத்துக்குடி, இராமநாபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையை மையப்படுத்தி தற்போது கட்டப்பட்டு வரும் அரசு இராஜாஜி மருத்துவமனையை எய்ம்ஸ் தரத்திற்கு உயர்த்திடுவது ஒட்டு மொத்த தமிழகத்தின் சென்னை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய நான்கு முனைகளில் தரமான மருத்துவ வசதி அனைத்துபிரிவினருக்கும் கிடைக்க வழி ஏற்படும்.

மாவட்ட மருத்துவமனைகளில் கட்டண பிரிவு, கட்டணமில்லாத பிரிவு என 2 பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது பொது சுகாதாரக் கோட்பாடிற்கு முரணானது. சமீபத்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் விரிவுபடுத்தப்பட்ட கட்டடத்தில் அமையபெற்ற 300 படுக்கைகளில் 100 படுக்கைகள் கட்டண பிரிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கைவிடப்பட்டு, அனைத்து படுக்கைகளையும் இலவச பிரிவாக அறிவித்து தரமான மருத்துவ சேவை வழங்கிட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட மருத்துவமனைகள்

இன்று பெரும் பகுதி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இருதய சிகிச்சை பிரிவு, சிறுநீரகத்துறை, மகப்பேறு, நரம்பியல்துறை, விபத்து சிசிக்கைப்பிரிவு, எலும்பு முறிவு போன்ற பிரிவுகளுக்கு தேவையான நவீன உபகரணங்கள், நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள், மருந்துப் பொருட்கள், செவிலியர்கள், ஆய்வக நிபுணர்கள், உதவியாளர்கள், மருத்துவப்பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள் மற்றும் அறுவை அரங்குகள் உள்ளனவா? என்றால் போதுமானஅளவு இல்லை. இதனால் பராமரிப்பும் போதிய செயலின்மை காரணமாக அரசு மருத்தவமனைகள் சுகாதார கேட்டில் சீரழிந்து வருகின்றன.

துல்லியமான ஸ்கேன் கருவிகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை எனவே வெளியே தனியார் ஸ்கேன் சென்டர்களில் எடுக்க சொல்வது ஏறத்தாழ 80 சதத்திற்கும் கூடுதலாக மேற்படி துறைகளில் உள்ளது. இது சாதாரண ஏழை எளிய மக்களுக்கு பல்லாயிரக்கணக்கான செலவுகளை அறுவைச் சிகிச்சைக்கு முன்பே ஏற்படுத்துகிறது.

உதாரணத்திற்கு சி.டி ஸ்கேன் அரசு மருத்துவமனையில் 300 முதல் 500ரூபாய்க்கு எடுக்கப்படுகிறது. ஆனால் தனியார் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் சென்டர்களில் 1500 முதல் 2500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அதே போல் எக்ஸ்ரே வசதி அரசு மருத்துவமனையில் இருந்தாலும் போதுமான அளவு அதற்கான தொழில்நுட்ப வல்லூனர்கள் மற்றும் புகைப்படச் சுருள்கள் இல்லாததால் கடுமையான சிரமத்தை பெரும் பகுதியினர் சந்திக்கும் நிலை உள்ளது.

32 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 7 மருத்துவமனைகளில் மட்டுமே எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல கூறு ( 64கூறு ) சி.டி ஸ்கேன் வசதியும் மருத்துவகல்லூரி மருத்துவமனைகளிலேயே செயல்படுகிறது. இதே போல் சிறுநீரக அறுவை சிகிக்சைக்கு பயன்படும் சிறு நீர் கல் உடைக்கும் `` லித்தோட்ரிப்சி '' கருவி மதுரை மற்றும் சென்னை அரசு மருதுவமனைகளில் மட்டும் கடந்த 2007ம் ஆண்டு தலா ரூ 1.5 கோடி மதிப்பில் 3கோடி ரூபாய்க்கு பொருத்தப்பட்டது. இந்த லித்தோட்ரிப்சி கருவி உள்ளிட்டு சிகிச்சை வசதி ஏற்படுத்த ஒரு மருத்துவமனைக்கு ரூ 1.5 கோடி மட்டுமே செலவு ஆகும என்றால் ரூ 80 கோடி நிதி ஒதுக்கினால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளக்கூடிய 32 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் இதற்கான வசதியை உருவாக்கிட முடியும்.

கூடுதலாக செய்ய வேண்டியது

· மருத்துவம் சார்ந்த அடிப்படை கல்வியையும், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் கொண்டு செல்லும் வகையில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

· அனைத்து மாவட்டத்திலும் மருத்துவகல்லூரிகள் அமைக்கப்படுவது குறித்த அறிவிப்புகள் தமிழக அரசு வெளியிட வேண்டும்.

· இரத்த உறையாமையால் ( Haemophilia ) பாதிப்புக்குள்ளாகும் ஏழை நோயாளிகளுக்கு விலை உயர்ந்த மருந்துகளை தொடர்ந்து வாங்கி பயன்படுத்த இயலாத நிலையில் அவர்களுக்கு அந்த மருந்துப்பொருட்களை இலவசமாக அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்களிலேயே தட்டுப்பாடின்றி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

· குறிப்பாக தமிழகத்தின் பெரும் பகுதி மருத்துவமனைகளில் ஆய்வக நிபுணர்கள், துப்புரவு பணியாளர்கள், உதவியாளர்கள் என்பது தற்காலிக பணியாளர்களாக மிகச் சொற்பான சம்பளத்தில் நியமிக்கப்படுகிறார்கள். துப்புரவு பணியாளர்களில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கபடுபவர்களுக்கு சொற்ப ஊதியமே வழங்கப்படுகிறது. இது அவர்களின் தினசரி வாழ்க்கையை நடத்த போதுமான ஊதியமல்ல. எனவே அவர்கள் மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் கையூட்டு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். எனவே மருத்தவமனைகள், சுகாதார மையங்களில் கூடுதலான ஊழியர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும்.

· சிக்குன்குனியா, பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதில் மிக முக்கியமான பங்கு வகிப்பது "மக்கள் சுகாதார ஆய்வாளர்கள்'. "ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள்' எனப்படும் இந்த சுகாதார ஆய்வாளர்களின் பணியிடங்கள் 50 சதவீதம் மேல் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதனை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

· அவசர சிகிச்சையின் பெயரால் மனித உயிர்களோடு விளையாடும் தனியார் மருத்துவமனைகளின் தயவுதாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அந்த மருத்துவமனையின் நிர்வாகிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும்.

· வெளிநாடுகளில் தடை செய்யப்பட் மருந்துப் பொருட்களை தமிழத்தில் விற்பனையாவது குறித்து ஆய்வு நடத்தி அந்த மருந்து பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பட்டியல் வெளிடுவதும், நடவடிக்கை மேற்கொள்வதும் அவசியமானது.