”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.
வாமன அவதாரமாக வியாபம்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது, அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது, திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற புகழ்பெற்ற தமிழ் சினிமா பாட்டு ஒன்று உண்டு. ஆனால் இங்கு சட்டம் போடும் கூட்டமே திருட்டை வளர்க்கும் கூட்டமாக உள்ளது.

பிரச்சனையே இது தான், ரகசிய காப்பு பிரமாணம், அரசியல் சாசனத்தை காப்பேன் என்று சொல்லி பதவியேற்கும் அரசாங்கத்தின் தலைவர்கள், அரசின் தலைவர்கள் தான் நாட்டுக்கே தெரியாமல் தேசத்திற்கு துரோகம் செய்த குற்றவாளிகளுக்கு, கொலைக்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு மனிதாபிமான உதவி செய்து குற்றச்செயல்களை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த பின்புலத்தில் நாம் பார்த்தால் எங்கும் வியாபித்து இருப்பது தான் வியாபம் என்று புது விளக்கம் கொடுக்கும் அளவிற்கு தங்கு தடையற்ற ஊழலின் உச்சக்கட்டம்தான் வியாபம் என்று பட்டையக் கிளப்புகிறார்கள் பாரதீய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர் முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரை,. இந்தியாவில் நடைபெறும் பெரும் பகுதி ஊழலுக்கு அடிப்படை கார்ப்ரேட்கள், அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகள்  என்ற முக்கோண கூட்டுத்தான்,.

புராணத்தில் இரணியன் பிரகலாதனிடம் நீ வணங்கும் நாராயணன் இந்த துhணில் இருக்கிறானா? என்று கேட்க, பிரகலாதன் நாராயணன் துhணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று பதிலாளிப்பான்,. மோடி அரசில் கேட்டால் ஊழலும், லஞ்சமும் அனைத்திலும் வியாபித்து இருக்கிறது. 3000 பேர் குற்றம் சாட்டப்பட்டு,  1800 பேர் சிறையில் கம்பி எண்ணுகிறார்கள். 500 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். இவர்கள் அனைவரும் மத்தியபிரதேசத்தை சார்ந்தவர்கள் மட்டுமல்ல,. உபி, ராஜ்°தான் ஆகிய மாநிலங்களையும் சேர்ந்தவர்கள்தான்,.  இன்று நாடாளு மன்றம் முடங்குகிறது. நிமிடத்திற்கு 2.5லட்சம் ரூபாய் வீணாகிறது. அனைத்தும் மக்கள் வரிப்பணம் என்கிறார்கள். ஆனால் உண்மையில் முடக்குவது யார்,.

49 பேர் வியாபம் ஊழலின் தொடர்ச்சியாக  இறந்துள்ளார்கள். குற்றவாளிகள் மீது 12 டன் எடையுள்ள காகிதங்களில் வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  இதுவரை நடந்த ஊழல்களில் பெரிய ஊழல் என்கிறார்கள். 1.40 கோடி பேர் எழுதிய தேர்வில் 86 லட்சம் பேர் ஆள்மாறட்ட தேர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் முக்கிய துறைகளான மருத்துவம், பொறியியல், காவல்துறை, உயர்கல்வித் துறை, வருவாய்துறை உள்ளிட்ட துறைகளில் தேர்வு செய்வதற்கு மத்திய பிரதேச தொழில்நுட்ப தேர்வு வாரியம் ( வியாசயலிக் பரிக்சா மண்டல் என்ந ஹிந்தி மொழியின் சுருக்கம் “வியாபம்’’ ) நடத்திய தேர்வுகளில் தான் இத்தனை ஊழல்..

இந்த ஊழலை வெளிகொண்டு வந்ததில் சமூக ஆர்வலர் ஆஷி° சதுர்வேதிக்கு மிகப்பெரிய பங்குள்ளது. அவரது தாயாருக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக 2009ல் மத்தியபிரதேசம் குவாலியரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த மருத்துவர்களுக்கு அடிப்படை மருத்துவம் கூட தெரியாத நிலையில் குத்து மதிப்பாக சிகிச்சை நடந்துள்ளது. இதனால் அவரது தாயார் மரண மடைகிறார். இதை கண்ட சதுர்வேதி மருந்துகடைக்காரருக்கு தெரிந்த மருந்துகள் கூட 5ஆண்டுகள் எம்பிபிஎ° படித்து வந்த மருத்துவர்களுக்கு தெரியாதது எப்படி என்ற கேள்விதான்? அவரை இந்த மருத்துவர்களின் கல்வித் தகுதியை பற்றியும், அவர்கள் படித்து வந்த விதம் குறித்தும் ஆய்வு செய்ய அதன் பின்னணியில் வந்தததுதான் இந்த வியாபத்தின் பிரமாண்ட ஊழல்கள்,. இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளால் 14 முறை கொலை முயற்சி என்பது சதுர்வேதி மீது நடத்தப்பட்டுள்ளதில் இருந்து வியாபம் வழக்கின் தன்மையை நாம் புரிந்து கொள்ள முடியும்.

பத்திரிக்கைகளுக்கு சதுர்வேதி அளித்த பேட்டியில் அப்பாவிகள்  தினம் தினம் இந்த அறைகுறை வைத்தியத்தால் சாகடிக்கப்படுகிறார்கள். இதை முடிவுக்கு கொண்டுவர  வேண்டும் என்ற தன்மையில் விசாரணையை துவக்கினேன். மருத்துவக்கல்லுhரியில் சேருவதற்கு மத்தியபிரதேசத்தில் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வு எழுதுவது குறித்த செயல்பாட்டை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளியான வசூல் ராஜா எம்.பி.பி.எ° என்ற திரைப்படத்தை பார்த்தால்  எப்படி தில்லுமுல்லு செய்து நுழைவுத் தேர்வு எழுதி மருத்துவக் கல்லுhரியில் கமல் சேருகிறார் என்பதை தெளிவாக காட்டி -யிருப்பார்கள்,.
1. புளூடூத் கமல் வைத்து கொள்ள மருத்துவக் கல்லுhரி பேராசிரியர்  கேள்வித்தாளுக்கான விடையை சொல்லிக்கொண்டே இருப்பார்,. அவரும் சரியாக எழுதி தேர்வில் வெற்றி பெறுவார். இது ஒரு நடைமுறை,.
2. தேர்வு எழுத வேண்டியவரின் விண்ணப்பத்தில் அவரது புகைப்படம் இருக்கும், தேர்வு எழுதும் மையத்தில் அவருக்காக தேர்வு எழுதுபவரின் புகைப்படம் ஹால் டிக்கெட்டில் இருக்கும். தேர்வு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு செல்லும் நேரத்தில் அவரது விண்ணப்பத்தில் புகைப்படம் மாற்றப்பட்டிருக்கும் இது இரண்டாவது வகை
3. நுழைவுத் தேர்வு எழுதாமலேயே எழுதியதாகவும், தேர்வு பெற்றதாகவும் முடிவுகள் வெளிவருவதற்கு நபருக்கு ரூபாய் 15 லட்சம் முதல் 18 லட்சம் வரை பணம் கிங் பின் குரூப் மூலம் ஏற்பாடு செய்யப்படும்.
4. இந்த தேர்வுகள் அனைத்தும் மருத்துவத் தேர்வுக்கு மட்டுமல்ல,. பொறியியல், அரசு வேலைகள், காவல்துறைப்பணிகள் என அனைத்திற்கும் ஒருவருக்காக வேறொரு இடத்தில் வைத்து தேர்வெழுதி அதை உரிய முறையில் தேர்வு கட்டுப்பாட்டுத்துறையில் சேர்த்து ரிசல்ட் வெளிவர வைத்துவிடுவார்கள்,.
என்று தேர்வுகளில் நடக்கும் தில்லுமுல்லுகள் பல வகையென ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இப்படிப்பட்ட ஊழலின் ஊற்றுக்கண்ணை சதுர்வேதியோடு, இணைய தள நிபுணர் பிரசாந்த் பாந்தே, சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் ராய் ஆகியோரின் தொடர்ந்த முயற்சி காரணமாக  ஆரம்பகட்ட தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.  இதனையொட்டி தேர்வு மையங்களில் காவல்துறை உதவியோடு ஆய்வு செய்யும் போது ஆள் மாறாட்டம் செய்தவர்கள் பலர் சிக்கினர். குருவிகளை பிடிக்க போய் கழுகுகளும், வல்லுhறுகளும் சிக்கிக்கொண்டன.

1982ல் வியாபம் அமைப்பு உருவாக்கப்பட்டு அரசு வேலைக்கான தேர்வுகள் நடத்துவது துவங்கப்பட்டது. இதில் 2008ல் இருந்து முறைகேடான விசயங்கள் நடைபெற துவங்கிவிட்டன. 2009ல் மருத்துவக் கல்லுhரி தேர்வுகளுக்கான விடைத்தாள் தேர்வுக்கு முன்பே கசிய விடப்பட்டது. 2013ல் 20 பேர் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். இதன் தொடக்கம் என்பது மத்தியபிரதேசம் மட்டுமல்ல,. டில்லி ஹஐஐஆளு  முதுநிலை மருத்துவ தேர்வின் போதே சுமார் 15 லட்சம் ரூபாய் வரை கொடுத்து மோசடி செய்து அனுப்பியுள்ளனர். இதில் மிக முக்கியமான புள்ளியான மொகித் சந்தராய் பங்கு அதிகம்

இந்த வியாபம் ஊழலில் தேர்வாணைய கட்டுபாட்டாளர், துணை மற்றும் உதவி கட்டுப்பாட்டு அதிகாரிகள், பங்கஜ்திரிவேதி, சி.கே.மிஷ்ரா, நிதின் மொகிந்திரா, நிதின்மகேந்திரா ஆகியோரின் கை நீண்டுள்ளதை இன்று கண்டுபிடித்துள்ளனர்.  இவர்களுக்கு உதவிடுவதற்கு கிங் பின் என்ற பெயரில் ஒரு குழு மரு.ஜெகதீ° சாகர், மரு.சஞ்சீர் சிலிபாகர், சஞ்சய் குப்தா,  போன்ற பல்வேறு குழுக்கள் இதில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த ஊழல் குறித்து தகவல்கள் வெளிவரத்துவங்கிய பின்னணியில் மத்திய பிரதேசத்தில்  மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் என கண்துடைப்பு நாடகம் நடத்த  பின்புலத்தில் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளின் பெயர் பட்டியல் மத்தியபிரதேச கவர்னர் ராம் நரேஷ் யாதவ், அவரது மகன் சகிலேஷ் யாதவ், ஜபல்பூர் மருத்துவகல்லுhரி முதல்வர் டி.கே. சாக்கலே, மற்றொரு டீன் அருண் சர்மா, விகர் சிங் தாக்கர் மற்றும் முதல் குற்றவாளியான கல்வியமைச்சர் லட்சுமி காந்த் சர்மா, ஒ.பி.சுக்லா, சுதிர் சர்மா, ம,பி பிஜேபி தலைவர் ஷா மற்றும் அவரது மகன், காங்கிர° எம்எல்ஏ வீர்சிங் பகூலியா, பிஜேபி மாணவர் அணி தலைவர்கள், ஆர்எ°எ° அமைப்பை சேர்ந்த சுரேஷ் சோனி, வருவாய் இணை ஆணையர் ரவிகாந்த் திவேதி, ஐபிஎ° அதிகாரி ஆர்.கே. சிவ்ஹாரே போன்று 3000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  பல நபர்கள் இதில் கைது செய்யப் பட்டனர்.  ஏறத்தாழ1930க்கும் அதிகமானவர்கள் சிறையில் உள்ளனர்.

2009 நவம்பர் 21ல் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட வீர் சிங் தாக்கர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் துவங்கி  மத்தியபிரதேச கவர்னரின் மகன் சகிலேஷ் யாதவ், மருத்துவ மாணவர் நாம்ரடே தாமோர், பயிற்சி  காவல்துறை இளம் ஆய்வாளர் அனாமிகா சிக்கர்வார் உள்ளிட்டு இதுவரை 49 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர்.

இந்த பின்னணியில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கேட்ட போது மத்தியபிரதேச அரசு மறுத்த நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்தியாவில் ஊழல் வழக்கில் பண மோசடி, இட மோசடிதான் நடந்து கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் 49 பேர் வரை கொலை மற்றும் தற்கொலைகள் நடந்துள்ளது இதன் ஆணி வேர் எங்கு வரை நீண்டு இருக்கும் என்பது தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

இது 5 மாநிலங்கள் வரை பரவியுள்ளன. இந்த தேர்வு முறை என்பது தமிழகத்திலும் அவ்வப்போது வெளிப்படும் நிலையை நாம் கண்டதுண்டு. தேவை என்பது வெளிப்படையான விசாரணைகளும், பதவி விலகல்களும், உரிய தண்டனைகளும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு  நீதியும், நிவாரணமுமே பொருத்தமானதாக இருக்கும்.

பல தருணங்களில் தமிழக பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளின் போது தேர்வுக்கு முன்பே விடைத்தாள் வெளியான சம்பவங்களை பார்த்திருக்கிறோம். தமிழகத்திலும் உள்ள மருத்துவ, பொறியியல், விவசாய கல்லுhரிகளுக்கான கவுன்சிலிங்கில் சமீப காலமாக 568 பொறியியல் கல்லுhரிகளில் உள்ள 2,00,658  இடங்களுக்கு, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை  1,54,238. இதிலும் ஒரு பகுதி பங்கேற்கவில்லை. 25 கல்லுhரிகளில் ஒரு இடம் கூட பூர்த்தியாகவில்லை. தற்போது பல கல்லுhரிகள் விற்பனைக்கு உள்ளன என்ற தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய விசயம் வெளிவரும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

இதன் பின்னணியில் தான் பேருந்து நடத்துனர், ஓட்டுனர், டிஎன்பிஎ°சி  நடத்திய ஏராளமான தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் பணியில் சேருவதற்கும், இட மாற்றத்திற்கும் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுவதும், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் ஊழல்களும், இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதன் மூலம் பல லட்சம் கோடி தேசத்தின் சொத்துக்கள் சூறையாடப்படுவதும் போன்ற ஏராளமான ஊழல்கள் நடைபெற்றுக்கொண்டேஇருக்கிறது.  நவீன, தாராளமயக், தனியார்மயக் கொள்கைகளின் விளைவாக இது போன்ற ஊழல்கள், லஞ்சங்கள் என்பது இன்று கீழ்நிலையில் இருந்து மேல் நிலைவரை அதிகளவில் புரையோடிப் போயுள்ளன.

நேற்று வரை பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை லோக்பால் சட்டம், ஊழல் குறித்து பேசிய அன்னா ஹசாரே போன்றவர்கள் இன்று ஏன் பேச மறுக்கிறார்கள். 49பேர் இறந்துள்ளனர், கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், அரசமைப்பின் மாநில தலைவர் கவர்னர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து இந்த சமூக ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும் பேச மறுக்கின்றனர்.

மறுபுறம் இந்திய நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,  ராஜ°தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் அரசியல் சாசன மரபுகளுக்கு மாறாக செயல்பட்டுள்ளனர், மஹாராஷ்டிரா, ராஜ°தான், இமாச்சல் பிரதேசம் போன்ற இடங்களில் பல துறைகளில் ஊழல்களில் மாநில முதல்வர்கள், அமைச்சர்களே ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 113 பி (3) ஊழல் பற்றி சரியான முறையில் சுட்டிக்காட்டுகிறது. “ஊழல் என்பது செய்வது மட்டுமல்ல, செய்ய வேண்டியதை செய்யாமல் விடுவதுமாகும்.’’(ஊடிசசரயீவiடிn அநயளே nடிவ டிடேல யஉவள டிக உடிஅஅளைளiடிn ரெவ யடளடி யஉவள டிக டிஅளைளiடிn ) என்பதை சரியான முறையில் சுட்டிக்காட்டி உறுதியான லோக்பால், லோக்ஆயுக்தா சட்டங்களுக்காக இந்திய நாடாளுமன்றத் திற்குள்ளேயும், வெளியேயும் இடதுசாரிகள் மட்டுமே நேர்மையோடு ஊழலுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள்,

இடதுசாரிகள் முதலமைச்சர்களாக, அமைச்சர்களாக, நாடாளுமன்ற, சட்டமன்ற, எதிர்கட்சித்தலைவர்களாக பொறுப்பில் இருந்துள்ளனர். ஊழல் குற்றசாட்டுகள் கடந்த 68ஆண்டு சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒருவர் மீது கூட வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இது போன்ற முன்னுதாரணமானவர்களை நாம் ஏன் பார்க்க மறுக்கிறோம் என்பது சிந்தித்து பார்க்க வேண்டிய அம்சம். அவர்கள் கார்ப்ரேட் கொள்ளைக்கு எதிராக, இயற்கை வளச் சுரண்டலுக்கு எதிராக இருக்கிறார்கள். இது கார்ப்ரேட்களின் ஆதரவாளர்களான ஊடகங்கள், அதிகார வர்க்கம் போன்றவைகளுக்கு எதிரான விசயம் எனவே அவர்களை முன்னிறுத்த தயக்கம் காட்டுகின்றனர்.  எனவே உழைக்கும் மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுக்கான அரசியல் எது,. யார் தங்களுக்காக களத்தில் நிற்பவர்கள் என்பதை,..