”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

உலக மயம் முதல் உள்ளுர் மயம்

இன்றைய கால முதலாளித்துவ வளர்ச்சிதான் “உலகமயமாக்கல்” அதன் செயல்முறையினை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
“ஏகாதிபத்தியத்திற்கு தேசம் என்றும் தேசபக்தி என்றும் எதும் கிடையாது. லாபம் கிடைக்கும் என்றால் தேச எல்லைகள் கடந்து கொள்ளையடிக்கும்” என்றனர் காரல் மார்க்°-ம், மாமேதை லெனினும்..
மார்க்° தனது மூலதனத்தில் “முதலாளித்துவம் வளர்ச்சி அடையும் போது சிலரது கரங்களில் மூலதனம் குவிவதற்கும் மையப்படுவதற்கும் இட்டுச் செல்கிறது.”என்றார். இன்றைய சூழலில் இந்த முதலாளித்துவ விதியின் காரணமாக பிரமாண்டமான அளவில் மூலதனம் குறிப்பிட்ட இடத்தில் குவிந்து விடுகிறது. இது லாபம் ஈட்டுவதற்காக தனது பயணத்தை தொடர வேண்டியுள்ளது. இந்த பயணம் காரணமாக முதலாளித்துவ அமைப்பு முறை தொடர்ந்து நீடிக்கிறது.
1980 களில் நிதி மூலதனத்தின் குவிமையமும், வளர்ச்சியும் பிரமாண்டமாக இருந்தது. இது 1990 களில் சர்வதேசமயமானது. இதன் வளர்ச்சி என்பது கற்பனை செய்ய முடியாத வகையில் இருந்தது. 1993ல் உலக பங்கு சந்தையில் 20 டிரில்லியன் டாலர் புழங்கியது. ( ஒரு டிரில்லியன் = லட்சம் கோடி ) இது 2001ல் 400 டிரில்லியனாக அசுரமாக விரிவடைந்து வளர்ந்தது. இதன் அடிப்படை ஊக வணிக முறையாகும். இந்த மிகப்பெரிய நிதி மூலதனத்திற்கு தங்கு தடையற்ற, எல்லைகளற்ற இயக்கத்தை அனுமதிக்கும் ஒரு உலக அமைப்பு முறை தேவைப்பட்டது. அது தான் உலகமயமாக்கல் நடவடிக்கையின் அடிப்படையாகும்.
இந்த உலகமயமாக்கல் காலத்தில் தான் உலகில் முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது.
1. சோசலிச, முதலாளித்துவ முகாம் என இரு துருவமாக இருந்த உலகில் சோசலிச முகாம்களில் ஏற்பட்ட பின்னடைவு, ஏகாதிபத்திய அமெரிக்காவை ஏக போக ஒரு துருவமாக வளர உதவி செய்தது.
2. 2001, செப்-11 இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதையொட்டி பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற முழக்கத்தை ஏற்படுத்தி ஆப்கான், இராக் உள்ளிட்ட நாடுகளின் மீது இராணுவ ரீதியான தாக்குதல் உட்பட சென்றது.
3. மூன்றாம் உலக நாடுகளை பொருளாதார ரீதியாக மறுகாலனியாத்திக்கத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை.
4. அறிவியல்,தகவல் தொழிட்நுட்ப வளர்ச்சியினை தனது லாபவேட்கைக்கு பயன்படுத்திக் கொள்ளுவது. இது மனித சமூகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு என்பதற்கு பதிலாக முதலாளித்துவ வளர்ச்சிக்கென நடைபெற்றது..
உலகமயமும்( ழுடுடீக்ஷஹடுஐகூலு) உள்ளூர் மயம் ( டுடீஊஹடுஐகூலு) இரண்டும் ஒரு நேர்கோட்டின் இரண்டு துருவங்களாக உள்ளன. உலகமயத்தின் ஒவ்வொரு பாதிப்பும் உள்ளுரின் தனி மனிதர்களையும் பாதிக்கிறது. உலகமயத்தின் லாப வெறியின் சுரண்டல் ஒவ்வொரு தனிநபரையும் குறிவைத்து செயல்படுவதில் துவங்குகிறது.
உலகமயத்தின் ஆரம்ப கட்டம் முதலாளித்துவம். இது குறிப்பிட்ட தேதியில் துவங்கியதல்ல.. 10 கோடி மக்கள் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா சென்றனர். பூர்விக அமெரிக்க மக்களின் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவில் இதன் ஆரம்ப கட்டம் 1500-1840 வா°கோடாகாமா வருகையின் போது துவங்கியது. இர்பான்ஹபீப் என்ற இந்திய வரலாற்றிசிரியர் எழுதிய நுhலில் முகலாயர் காலத்தில் பிரிட்டி° இந்தியாவின் ஆரம்ப கால கட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு பணம் முதலீடு செய்யப்பட்டது. இந்தியாவிற்கான கடல் வழி பாதை கண்டுபிடிப்பு காரணமாக
- கிழக்கிந்திய கம்பெனி, டச்சு, போர்த்து கீசியர்கள், பிராஞ்சு கம்பெனிகளின் வருகைகளும் வணிக தேடல்களும், அனுமதியும். 1600 முதல் 1857 வரையிலான கிழக்கிந்திய கம்பெனி வர்த்தக ரீதியான கொள்ளையும் நடந்தது.
- 1813 வரை இந்தியா பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாகவே இருந்து வந்துள்ளது.
- பிரிட்டிஸ் காலனி ஆட்சியில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறிப்போனது.
- பண்டைய இந்தியாவின் பொருளாதாரத்தின் அடிப்படை விவசாயம் ஆகும்.
- கடல் வழி வாணிபம், கிராமப்புறத் தொழில்கள், அறிவியல், வானவியல், சுரங்கத் தொழில், உலோகவியல், கலை மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி, இலக்கியம், பண்பாடு வளர்ந்திருந்தது.
- நீலச்சாயம், ஏலம், கிராம்பு, மிளகு, முத்துக்கள், விலையுயர்ந்த கற்கள், தந்தம், சந்தனம், தங்கம், இரத்தின கற்கள், மஸ்லீன் துணி, கஸ்துhரி, குங்குமப்பூ, போன்றவை ஏற்றுமதியும், உலோகம், தங்கம், பவளம், வைரம், வெள்ளி, குதிரைகள் இறக்குமதியும் செய்யப்பட்டது.
- கிராம சமூகம் என்பது பல நுhற்றாண்டுகளாக நீடித்து வந்துள்ளது. அடித்தட்டில் இருந்த கிராமப்புற விவசாயிகள், கூலியாட்கள் நிறுவனமயமாகிப்போன சாதீய அமைப்பு முறையினால் சுரண்டப்பட்டுவந்தனர். 6,7 நுhற்றாண்டு காலத்தில் இது கெட்டிபட்ட அமைப்பாக மாறியது.
- இந்த சாதிய அமைப்பு முறை பரிமாண வளர்ச்சி பெற்று பல மாறுதல்களை சந்தித்தது. கீழ் சாதி மேல் சாதியானது. மேல்சாதி கீழ் சாதியானது. ஒரு அம்சம் நீடித்தது. ஆளும் வர்க்கத்தின் நல்ல கருவியாக சாதிய அமைப்பு முறை பயன்பட்டுள்ளது.
- 19ம் நுhற்றாண்டின் துவக்கத்தில் பிராமண ஆதிக்கம் பண்பாட்டுதளத்திலும், அரசு பணிகளிலும் அதிகரித்தது. இதை எதிர்த்து மகாராஷ்டிராவில் ஜோதிபா பூலே 1872ல் குலாம்கிரி என்ற நுhலை எழுதினார். 1873ல் சத்ய ஷோதக் சமாஜ் அமைப்பை நிறுவினார். ஜோதிபா பூலே தோட்ட வேலை செய்யும் மாலி என்ற சாதிப்பிரிவைச் சேர்ந்தவர். இவரது நுhலும், அமைப்பும் விவசாயிகளை அதிகம் கொண்ட மராத்தா சாதித் தொகுப்பினரை கவ்வி பிடித்தது.
- கேரளத்தில் ஈழவ மக்கள் நானு ஆசான் என அழைக்கும் ஸ்ரீ நாராயணகுருவின்( 1854-1928) போதனைகளால் எழுச்சி பெற்றனர். இவர்கள் பிற்காலத்தில் கம்யூனிச ஆதரவாளர்களாக மாறினர்.
- வங்காளத்தில் பிறந்த ராஜாராம் மோகன்ராய் சமூக சீர்திருத்தவாதி எனலாம்.குடும்பச் சொத்தில் பெண்களுக்கு பங்கு, விதவை மறுமணத்துக்கான தடை, உடன்கட்டை ஏறுதல், பலதாரமண முறை, பெண்கல்விக்கு எதிரானகட்டுப்பாடு, பர்தா அணிவித்து வீட்டில் பூட்டி வைப்பது போன்றவற்றை எதிர்த்து போராடியதோடு இவைகளை சட்டபூர்வமான முறையில் தடைசெய்ய வேண்டும் என்றார். சாதிய அமைப்புமுறையை ஒழித்துகட்ட வேண்டும் என்றார்.
- கிழக்கிந்திய கம்பெனியின் லாப வேட்கை, அடக்குமுறையை எதிர்த்து ஆரம்பத்தில் இருந்தே விவசாயிகளின் கிளர்ச்சி நடைபெற்று வந்தது.
- 18ம் நுhற்றாண்டில் நடைபெற்ற சன்யாசிகள் மற்றும் பக்கிரிகளின் கலகங்கள்(1776), கிழக்கிந்தியாவில் பழங்குடியினர் நடத்திய சுவார் கலகம்(1799). இந்த போராட்டங்களுக்கு அடிப்படை பஞ்சமும் அதையொட்டி மக்கள் இறந்ததும். ஆனால் ஆட்சியாளர்கள் வரி வசூலில் மும்மரமாக இருந்தனர்.
- பல நேரங்களில் உடனடி கோரிக்கைக்காக நடைபெற்ற போராட்டங்கள் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களாக மாறின. இவைகள் ஸ்தாபனபடுத்தப்படாமல் நடத்தப்பட்டன. இலக்கு தீர்மானிக்கப்படாமல் நடைபெற்றது. குறிப்பிட்ட சமூகப் பிரிவினாரால் நடத்தப்பட்டது.
- இந்த போராட்டங்கள் சில வெற்றிகளையும் பெற்றுத்தந்தன. 1859-1860 அவுரி விவசாயிகள் கிளர்ச்சி, பம்பாய் தக்காண கலவரங்கள் காரணமாக விவசாயிகளின் நிலையை மேம்படுத்த திட்டமிட வேண்டிய நிர்பந்தத்தை பிரிட்டிஸாருக்கு ஏற்படுத்தியது.( தற்போது ரேசன்கார்டு, சுகாதாரம், கல்வி, அடிப்படை வசதி கோரிக்கைகளுக்கு பின்னால் முதலாளித்துவ, ஏகாதிபத்திய எதிர்ப்பு அடங்கியுள்ளது. )
3வது உலக நாடுகள் வளர்ச்சி என்பது பெரும் முதலீடுகளில் தொழிற்புரட்சி, தொழிற்சாலைகள் உருவாக்கம் புதிய சந்தை உருவாக்கம் இவைகளின் லாபம் வெளியேறவும், புதிய முதலீடுகளுக்கு காலனியாத்திக்கம் துவக்கம் என நடைபெற்றது.
முதலாவது கட்டத்தில் முதலீடுகள் தொழிற்சாலைகளாக இருந்தது. புதிய பகுதிகளை உருவாக்கியது.
இரண்டாவது கட்டத்தில் 1840-1890 புதிய உற்பத்திமுறை, வர்த்தகம் என வளர்ந்தது. சுதந்திர வர்த்தகம், புதிய உற்பத்தி உறவுகளில் முன்னேற்றம் அடைந்தது.
மூன்றாவது கட்டம் 1890-1950 ல் மூலதனம் ஏகபோகமாக மாறுதல், மூலதனம் வெளியேறுதல், புதிய பகுதிகளுக்கு தாவுதல், காலனியாதிக்கத்தில் ஏகாதிபத்தியம் தனது வலையை விரிவுபடுத்தியது.
மூம்பை, கோவை போன்ற பகுதிகளில் (மில்) தொழிற்சாலைகள் உருவாக்கம். புதிய தொழில்நுட்பம், புதிய தொழிற்சாலைகள் உருவாக்கம், இதே கால கட்டத்தில் விடுதலை இயக்கங்களின் வளர்ச்சி.. காலனியாதிக்க நாடுகளின் விடுதலைப் போராட்டம் வேகமடைந்தது.
புதிய காலனி ஆதிக்கத்தில் ஏகாதிபத்தியம் 1950-1995ல் அரசியல் அதிகாரத்தை கொண்டு சுரண்டுவது. யுத்தத்திற்கு பின் இக்காலத்தில் தொழில் மந்தம் ஏற்பட்டது. வளர்ச்சியும் ஏற்பட்டது. பட்டியலை பார்க்கலாம்.
1800களில் 23000 கோடி உலக உற்பத்தி இருந்தது. இதில் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பங்கு 44 சதம். உலக மக்கள் தொகை 94 கோடி ஆகும். ஆனால் 150 ஆண்டுகளில் 1950ல் 2,63,000 கோடி உற்பத்தி ஆனது. இதில் 17 சதம் மட்டுமே வளர்ச்சி அடைந்த நாடுகளின் பங்கு. 242 கோடி மக்கள் இருந்தனர்.
ரயில்வே, தொழிற்சாலை, புதிய தொழில்நுட்பம் என வந்தன. ஆனால் வளர்ச்சி யாருக்கு சென்றது. உண்iயில் வறுமையில் இறந்தவர் எண்ணிக்கை அதிகம். ஒட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி பார்த்தால்
1950-1973 = 4.9 சதம்
1973-1992 = 3.0 சதம்
1990 -2001 = 2.7 சதம் தேக்கத்தில் இருந்தது.
முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்துள்ளது. என்றால் உற்பத்தி அதிகரிப்பு அனைவருக்குமானதாக என்றால் இல்லை? ஜிடிபி யில் வளர்ச்சி விகிதம் குறைவு.. நிலக்கரி, இரும்பு, இதர தாது உற்பத்தி அதிகரித்துள்ளது. உலக யுத்ததிற்கு பின் வளர்ச்சியில் ஆட்டோமொபைல்°, அணுசக்தி, பெட்ரோல், எண்ணெய் வளம் வளர்ந்துள்ளது. ஆனால் பெட்ரோலிய விலை உயர்வு எதனால்?. உலக தேவைக்கான உற்பத்தி இல்லை.
புதிய தொழிற்புரட்சி.. தகவல் தொழில்நுட்பம், செல்போன் நம்முடைய வாழ்க்கைமுறையை மாற்றிவிட்டது. தொழில் நுட்பம் மிக வேகமாக வளருகிறது. பெரிய திரைகட்டி கம்யூட்டரில் கணக்கு போடுவது, அணு வெடி சோதனைக்கு சின்ன கணிபொறியில் பெரிய கணக்கை போடலாம். அறிவு சார்ந்த வளர்ச்சி ஏற்படுகிறது. அது பொருள் சார்ந்து இல்லை.
ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு சொந்தக்காரர்கள் யார்? யார் கட்டுப்படுகிறார்கள். புதிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உயிரி தொழில்நுட்பம் இவைகள் யாருக்கு பயன்படுகிறது. அறிவு ரீதியான வளர்ச்சி என்பது உற்பத்தியின் மீதான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இது உற்பத்தியின் மீதான தனது கட்டுப்பாட்டை உருவாக்குகிறது. அறிவு சொத்துடைமை மீதான கட்டுப்பாடுகள், உரிமைகள் இவை அனைத்தையும் மாற்றுகிறது. மூலதனம் தேசம் விட்டு தேசம் பறக்கிறது. நகருகிறது. இது நம்மை சர்வதேச நிலைகளில் ஏகாதிபத்தியம் கட்டுப்படுத்த உதவுகிறது. இரண்டாவது முக்கியமான விசயம் காட். நாம் நம்முடைய சொந்த கண்டுபிடிப்புகளை செய்தோம். பாதுகாத்தோம். உலக வர்த்தக அமைப்பு பெயரால் காட் ன் வழியாக அனைத்தையும் ஒருங்கிணைத்து சுரண்டும் ஏற்பாடு அமெரிக்கா செய்தது.
1. வர்த்தகதடையை நீக்குவது, 2. திறந்தவெளி இறக்குமதிவரியை குறைப்பது, 3.கட்டுப்பாடற்ற விற்பனையை அனுமதிப்பது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமான உற்பத்தி என்பது அமெரிக்க கம்பெனிகளை சார்ந்து அமைந்தது. அதே நேரத்தில் அது பல கம்பெனிகளை இணைத்துக் கொள்கிறது.
உலகமயச்சூழலில் சுதந்திரமான பரிவர்த்தனை, உயர் தொழில்நுட்ப உலகமயம் ( ழஐகூநுஊழ ழுடுடீக்ஷஹடு ஹளுளுநுஆக்ஷடுலு ) அபரிமிதமான வளர்ச்சியை உருவாக்கியுள்ளது. 1960, 70, 80 களில் இருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது.
1998ல் பெரும் 10 கம்பெனிகளின் மதிப்பு 85 சதம். உலக சந்தையில் தகவல் தொழில்நுட்பத்தில் 86 சதம் இவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
1970 களில் 7000 அமெரிக்க கம்பெனிகள் இருந்தது. இன்று 2,80,000 இணைக்கப்பட்ட கம்பெனிகள் உள்ளிட்டு 44,000 பெரும் நிறுவனங்களாக வி°வ ரூபமெடுத்துள்ளது.
ஒட்டு மொத்த உலக உற்பத்தியை விஞ்சும் வகையில் 200 கம்பெனிகளின் லாபம் மற்றும் மதிப்புகள் உள்ளது. 49 நாடுகளில் உள்ள 51 முதல் 100 கம்பெனிகளில் உள்ளது. உதாரணம் வால்மார்ட்
உற்பத்தியும் மூலதனமும் உயர்ந்துள்ளது. தொழிலாளர் சந்தை குறைந்துள்ளது. வேலையின்மை அதிகரிப்பு. இந்த வளர்ச்சிகள் பங்கு சந்தையை அடிப்படையாக கொண்டுள்ளது. வாங்க விற்க என பங்கு சந்தைகள் நடக்கிறது. கம்யூட்டர்கள் இந்த பணியை செய்கிறது. அமெரிக்க கம்பெனிகளின் நிலையை பொறுத்து பரிவர்த்தனை நடக்கிறது.
நிதி மூலதனம் இவற்றில் விற்பனை 440 சதம், பங்கு சந்தை மூலம் 970 சதம், அந்நிய செலவாணி மூலம் 2110 சதம் என பரிவர்த்தனைகள் பணக் காகிதங்களில் நடைபெறுகிறது. உதாரணம் ரியல் எ°டேட் தொழில். இது உற்பத்தி சார்ந்தல்ல.. இவர்கள் சிறிய புரோக்கர்கள். இதன் சர்வதேச புரோக்கர்களின் நிலை வேறு.. இது சூதாட்டத்தின் ஒரு பகுதி எனலாம். தினசரி லட்டாரி சீட்டு போன்றது. இவற்றில் அரசின் பங்கை குறைப்பது. தனியார் மயத்தை முழுமைப்படுத்துவது.
நம்முடைய இந்தியாவில் பெரும் பகுதியான மக்கள் ஏழைகள். ஆடம்பர சாதனங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்பட்டது. ஒரு பகுதி இந்தியர்கள் வாங்கும் சக்தி இருந்தது. கடன் வாங்கி கூட வாங்குகிறார்கள். நம்முடைய இறக்கமதிக்கு இருந்த ஏராளமான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. உதாரணம் ரூபாய் மதிப்பு குறைப்பு..
அந்நிய செலவாணி வருகிறது அதனால்.. நிலசீர்திருத்தம், வங்கி சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்றால் அது உலக நிதி மூலதனத்திற்கு சாதகமாக செய்கிறார்கள். அமைப்பு ரீதியாக சரி செய்வது ( ளவசரஉவரசயட யனதரளவஅநவே) வங்கி, எல்ஐசி, தொழிலாளர் நலச் சட்டங்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள் உட்பட பலவற்றை அமைப்பு ரீதியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவது. இது அந்நிய செலவாணியை ஈர்க்க பயன்படும் என்கிறார்கள்.
ஏழை, ஏழையாகிறான்.. பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். தொழில் மற்றும் விவசாயத்தில் சீர்திருத்தம் என்கின்றனர். பெரும் பகுதியான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். விவசாயத்தை நம்பி உள்ளனர். வறுமை, பட்டினி, விவசாயிகள் தற்கொலை என தொடர்கிறது.
நம்முடைய பொருளாதாரம் அந்நிய மூலதனத்தை நம்பி உருவாக்கப்படுகிறது. பங்கு சந்தை சரிந்துள்ளது. அனைத்து தொழில்களிலும் சரிவை சந்திக்கும் நிலை.. விவசாய நெருக்கடி உள்ளது. சர்வதேச அளவில் நகர கிராமப்புற பகுதிகளிடையே வறுமை ஏற்றத்தாழ்வாக உள்ளது.
பணக்காரர் - ஏழை ( மேல் 20ம், கீழ் 20 ) மேல் 20 கீழ் 20
மொத்த உற்பத்தி வளர்ச்சி 80 1
ஏற்றுமதி 82 1
மூதலிடு 68 1
தொலைபேசி 74 1.5
தனிநபர் வருமானம் 1960யை அடிப்படையாக கொண்டு 30 1
தனிநபர் வருமானம் 1997யை அடிப்படையாக கொண்டு 74 1
நாம் ஏகாதிபத்திய உலகமயமாக்கலை எதிர்க்க வேண்டும். இன்றைக்கு ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டமும் அதிகரிக்கிறது. ஆப்கானி°தான் மற்றும் மேற்கு ஆசியா, சீன மற்றும் சோசலிச நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடது சாரிகள் வெற்றி என்பது நம்பிக்கை அளிக்கிறது.
பிரான்சில் பாரீ° கம்யூனில் புரட்சி 70 நாட்கள் வெற்றி பெற்றது.லெனின் 1917 ல் ரஷ்ய புரட்சியின் போது சொன்னது. பாரீ° கம்யூனின் 70 நாள் வெற்றி ஒரு படிப்பினை.. அதனை கற்றறிய வேண்டும் என்றார். அதனால் 70 ஆண்டுகள் ரஷ்யாவில் புரட்சியை பாதுகாக்க முடிந்தது. இன்றைக்கு உலகம் முழுவதும் நடைபெற்ற புரட்சிகளை பற்றி கற்றறிய வேண்டும். 500 ஆண்டுகள் வரலாறு உடைய முதலாளித்துவத்தை ஆழமாக படித்தறிய வேண்டும். இதன் அடிப்படையை கண்டறிய வேண்டும். மக்களை சுரண்டும் உலகமயமாக்கலை எளிதாக மாற்ற முடியாது. உலக புரட்சிகர நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இதற்கெதிராக உறுதியாக போராடும் இடதுசாரி ஜனநாயக சக்திகளை நம்முடைய தேசத்தில் நாம் வளர்தெடுக்க வேண்டும்.
28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், 1618 மொழிகள், 6400 சாதிகள், 6 மிகப்பெரிய மதங்கள், தனித்துவமிக்க 6 இனக்குழுக்கள், பெரிய அளவிலான 29 வகையான மதப்பண்டிகைகள் என இந்திய தேசம் இன்று வேற்றுமையிலும் ஒற்றுமையாக உலக அரங்கில் முன்னேறி கொண்டு இருக்கிறது. ஆனால் இதற்கேற்றாற்போல் உழைப்பு சக்திகளின் வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சியோடு இணைந்து நிற்கிறாதா? என்றால் இல்லை எனலாம்…
அரசின் தவறான பொருளாதார கொள்கையின் விளைவாக இந்திய விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இன்றைய இளைய தலைமுறை விவசாயத்தின் மீதான பிடிமானத்தை கைவிட்டு நகரப்புறங்களை நோக்கி இடம் பெயர்வது மிக வேகமாக நடைபெறுகிறது.. ஒளிரும் இந்தியா என மத்திய தர மக்களின் வாழ்க்கையை மட்டும் காண்பித்து, ஒளிராத ஒட்டுமொத்த இந்தியாவின் நிலையை 43 சதம் கல்வியறிவு இல்லாத இந்திய பாமரர்களை பற்றி, ஒரு நேரம் உணவில்லாமல் உறங்க செல்லும் 20 கோடி மக்களை பற்றி,, சுத்தமான குடிநீர் வசதி இல்லாத 70 சத கிராமப்புற மக்களை பற்றி மூடி மறைக்கப் பார்க்கிறது ஊடகங்கள்..
நாடு விடுதலையடைந்து 62 ஆண்டுகளுக்கு பின்னால் கிராமப்புற மற்றும் நகர்புறத்தில் அடித்தட்டில் உள்ள கோடானுகோடி இளைஞர்களை உலகமய நுகர்வியமும், ஊடகங்களும், ஆட்சியாளர்களின் கொள்கைகளும் தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது.
90 சதமான இளைஞர்களின் வாழ்க்கை நிலையை ஒளித்து வைத்துவிட்டு குறிப்பிட்ட 0.01 சத பணக்கார இளைஞர்களின் வாழ்க்கையை இந்திய இளைஞர்களின் ஒளிரும் வாழ்க்கை நிலைதான் இந்திய இளைஞர்களின் வாழ்க்கை நிலை என ஊதிக்கொண்டே இருக்கிறது.. இவைகளின் வஞ்சகத்தை, குள்ளநரித்தனத்தை தோலுரித்துக்காட்ட வேண்டியது இன்றைய இளைஞர்களின் கடமையாகும்..
இன்றைய உலகமயச்சூழலில் இளைஞர்களை ஆழமாக ஆட்கொண்டு இருப்பது “விரும்பிய வாழ்க்கை பெறுவதற்கு,.. எதுவும் செய்யலாம்.. சுயமுன்னேற்றம், சுயபுகழ், உன்னைப்பற்றி மட்டுமே சிந்தி,.. அடுத்தவன் வாழ்க்கையை அவன் பார்த்துக் கொள்வான்.” என உலகமயம் நுகர்வியத்தை அடிப்படையாக கொண்டு தொடர்ந்து மூளையை சலவை செய்து கொண்டு இருக்கிறது.
இதனால் இளைஞர்கள் தன்னுடைய வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றவாறு சுயநலத்தை முன்னிறுத்தி எப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தாலும் முன்னேறு என சொல்லும் தொலைகாட்சி தொடர்களும், நிகழ்ச்சிகளும்..
மறுபுறம் ஒரு பகுதி விளையாட்டுவீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் என மிகப் பெரிய பட்டாளம் பெரும் பன்னாட்டு கொள்ளைக்கார நிறுவனங்களுக்கு ஆதரவாக விளம்பரம் என்ற பெயரால் இளைஞர்களின் சிந்தனையை மழுங்கடிக்கும் நடவடிக்கையை தொடர்ந்து செய்து வருகிறார்கள்..
உலகளாவிய அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது லாப வெறி காரணமாக தன்னுடைய ஏகபோக வளர்ச்சியை, செல்வாக்கை விஸ்தரிக்கும் நடவடிக்கையை தொடரும் வகையில் இன்று பல நாடுகளில் தொழில், நிதி, சந்தை, தகவல்தொடர்பு, அழிவுக்கான ஆயுதங்கள் தயாரிப்பு என தனது வலையை அனைத்து தளங்களிலும் விரிக்கிறது.
“உலகமயமாக்கலின் தற்போதைய கட்டத்தின் அடிப்படையான அம்சம் என்பது மூலதனத்தின் செயல்பாட்டின் மீதுள்ள தடைகளை நீக்குவதன் மூலம் அதிகபட்ச லாபத்தை ஈட்டுவதற்கான வெறித்தனமான முயற்சியே ஆகும். இதுதான் ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் முக்கியமான தன்மையாகும்”..
இதில் கோடிக்கணக்கான படித்த திறமை மிக்க தொழில்நுட்ப அறிவுபடைத்த இளைஞர்களை கொண்ட பெரிய பட்டாளத்தின் மத்தியில் சில லட்சக்கணக்கான இளைஞர்களை மட்டும் அவுட் சோர்சிங் முறையில் மேற்கண்ட தளங்களில் பயன்படுத்துகிறது. இதர படித்த இளைஞர்களை ஏக்கத்திற்குரியவர்களாக தொடர்ந்து வேலையில்லா படையில் சேர்த்துவிட்டு வேடிக்கை பார்க்க வைக்கிறது. ஏதாவது ஒரு வேலை எப்போது கிடைக்கும் என ஏங்கி இருக்கும் இந்த இளைஞர்கள் மத்தியில் தன்னுடைய லாப வெறிக்காக பல்வேறு சாகசங்களை ஏகபோக நிறுவனங்கள் செய்து வருகின்றன.
உதாரணத்திற்கு, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, ஐடிபிஐ, கோடாக் மகேந்திரா, போன்ற வங்கிகள் தற்போது வாகனம் வாங்க கடன், வீட்டுக் கடன், தனிமனித கடன் என கொடுக்கிறது. கடனை, வட்டியை, அசலை திருப்பி செலுத்த கால தாமதம் செய்யும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பொருள்களை மீட்டு வர ஒரு கூலிப்பட்டளத்தை உருவாக்கி வருகிறது. அந்த கூலி பட்டாளத்திற்கு தற்போது விற்பனைக்கு சேல்ஸ்எக்ஸ்கியூடிவ், டெலிகாலர், டீம் மேனேஜர், ஒருங்கிணைப்பாளர், வசூலிப்பதற்கு, கடன் கொடுப்பதற்கு என பல பிரிவுகளில் எம்பிஏ, எம்சிஏ, எம்காம், எம்எஸ்சி, எம்எப்டி, பிகாம் உள்ளிட்ட பல்வேறு பட்ட படிப்புகளை முடித்த இளைஞர்களை பயன்படுத்தி வருகிறது.
சொற்ப சம்பளத்தில் கௌரவமான வேலை.. கழுத்தில் கட்ட டை, காலுக்கு சூ, வாகனம், செல்போன் கட்டாயம் வேண்டும்.. இப்படி நாகரீக கோமாளிகளாக வலம் வர வைக்கும் இந்த இளைஞர்களின் வேலை என்கிற கனவு நிரந்தரமானது தானா ? என்றால் இல்லை என்றே சொல்லலாம்.. எப்போது வேலையில் இருந்து நீக்கப்படுவோம் என இவர்களுக்கே தெரியாது.. இப்படிப்பட்ட டிப்டாப்hன இளைஞர்களை நவீன கூலிகளாக பயன்படுத்தும் அவலத்திற்கு காரணம் வேலையில்லா திண்டாட்டமே.. இந்த வேலையில்லா திண்டாடிகளுக்கு “விரும்பிய வாழ்க்கை பெறுவதற்கு,.. எதுவும் செய்யலாம்.. சுயமுன்னேற்றம், சுயபுகழ், உன்னைப்பற்றி மட்டுமே சிந்தி,.. அடுத்தவன் வாழ்க்கையை அவன் பார்த்துக் கொள்வான்.” என போதிக்கிறது உலக மயம்..
கணிணித் துறையில் உள்ள மென்பொருள் இன்ஜினியர்களின் நிலையும் இதைவிட கொடுமையானதாக உள்ளது. வருமானம் ஒரளவு வருகிறது. 3 முதல் 5 வருடங்களில் சம்பாதித்துக் கொள்ளலாம்..பின்பு சந்தோசமாக வாழலாம் என 12 மணி நேரம் முதல் 16, 18 மணி நேரம் வரை கணிணியில் மென் பொருள் தயாரிக்க உழைக்கும் நிலை.. இதில் பெரும் பகுதியான இளைஞர்கள் மூளை சோர்வு ஏற்பட்டு வாழ்க்கையையே இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெண்கள் நிலை இதில் மிக மோசமானதாக உள்ளது. கால் சென்டர் என்ற பெயரில் இரவு நேரங்களிலேயே பணியாற்ற வேண்டிய நிலை..
கார்ப்ரேட் கலாச்சாரம் துhங்காமல் பணியாற்றுவதை திறமையாக, சிறப்பாக செயல்படுகிறார் என வர்ணிக்கிறது. இதனால் ஏற்படும் துhக்க கோளாறு பற்றி தெரியா வண்ணம் அவர்கள் வேலை வாங்கப்படுகின்றனர். தற்போது சென்னை போன்ற மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் வாரத்திற்கு 7-10 பேர் இப்பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய கால் சென்டர்களில் பணியாற்றும் 20-30 வயதிற்குள் இருக்கும் இளைஞர்கள், இளம்பெண்களில் 34 சதவீதம்பேர் பல்வேறு விதமான துhக்க கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படி பொருளாதாரத்தை தேடுகிறோம் என்ற பெயரில் தங்களது வாழ்க்கையை பல இளைஞர்கள் பணயம் வைத்து வாழ்க்கையில் முன்னேற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு தள்ளிவிடப்படுகிறார்கள். அதன் மறுவடித்தை பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
எம்எல்எம், மார்கெட்டிங், பேஷன் ஷோ, மாடலிங், மிஸ், மிஸ்டர் கூவம் முதல் உலக போட்டிகள் வரையென படையெடுக்கும் பட்டாளமாக மாற்றப்படுகின்றனர். இவைகள் அனைத்திலும் போதிக்கப்படும் ஒரே விசயம் சுய முன்னேற்றம் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. “ மார்க்ஸ் மூலதனத்தை பற்றி சொல்லும் போது சொன்னது.. 50 ரூபாய் லாபம் கிடைக்கும் என்றால் நேர்மையை மீறும். 100 ரூபாய் லாபம் கிடைக்கும் என்றால் சட்ட திட்டங்களை மீறும். 200 ரூபாய் லாபம் கிடைக்கும் என்றால் மனித உரிமைகளை மீறும். 300 ரூபாய் லாபம் கிடைத்தால் உரிமையாளனை துhக்கிட்டால் கூட அதை தடுக்காது லாபத்தை நோக்கி மட்டுமே செல்லும்.” என மூலதனத்தின் லாப வெறியை சுட்டி காட்டுகிறார்.
தனி மனித உரிமையை மீறக்கூடிய நடவடிக்கையை தொடர்ந்து செய்து வருகிறது.. தனி மனித உரிமையை வற்புறுத்தும் மனித உரிமைச் சட்டபிரிவு 2(ஈ) படி 1, வாழ்க்கை உரிமை, 2. சுதந்திர உரிமை, 3.சமத்துவ உரிமை, 4. தனி மனித மாண்பு ஆகியவைகளை காலில் போட்டு உலகமய ஏகபோகம் நசுக்குகிறது. குறிப்பாக அவுட் சோர்சிங் என்ற பெயரால் மூளை சலவை செய்யப்பட்ட மனித இயந்திரங்களை கொண்டு லாப வெறியோடு நிதியை திரட்டும் நடைமுறையை ஏக போக நிறுவனங்கள் நடத்தி வருகிறது.
வருடந்தோறும் இந்தியாவில் மட்டும் 9.3 மில்லியன் ( 93 லட்சம் ) பட்டதாரிகளை இந்திய கல்வித்துறை உருவாக்குகிறது. இவர்களில் சுமார் 3 சதம் பேருக்கு பெயரளவுக்கான வேலை என்பது கிடைக்கிறது. இந்த சூழலில் கணிணித்துறை மற்றும் இதர சேவைத் துறைகளில் பணியாற்றும் இளைஞர்களை 2015ல் செல்வ செழிப்புள்ளவர்களாக உலகமயம் மாற்றிவிடும். மாஸ்டர்கார்ட் நடத்திய ஆய்வில் 2015ம் ஆண்டில் ஒரு இளைஞன் ஷாப்பிங்கிற்காக 14.4 பில்லியன் டாலர், பொழுது போக்கிற்கு 8 பில்லியன் டாலர், பயணம் மற்றும் ஒய்வுக்காக 13.6 பில்லியன் டாலர், வாகனம், செல்போன், கம்ப்யூட்டர்களுக்காக 8.9 பில்லியன் டாலர், சுகாதாரம் மற்றும் மருந்துக்கு 6.4 பில்லியன் என மொத்தம் 51.3 பில்லியன் டாலர் (20,961 கோடி ரூபாய் ) நுகர்வுக்காக செலவிடப்படும்.. அதற்காக பொருளாதாரத்தை தேட இப்போதிருந்தே துhண்டப்படுகிறார்கள் என மேற்படி ஆய்வு தெரிவிக்கிறது.
மேற்கண்ட ஆய்வு சுட்டிக்காட்டுவது யாதொனில் பொருளாதார தேடல் வாழ்க்கையை அனுபவிக்க, 2015ல், 2020ல் சந்தோசமாக இருக்க,.. இப்போது மூளையை சோர்வாகும் அளவிற்கு நோயை விலை கொடுத்து வாங்கு, நல்ல துhக்கத்தை துறந்திடு, மன உளைச்சலை அதிகப்படுத்து, நேரம் பார்க்காமல் உழை... என ஒவ்வொரு தனி மனிதனையும் குறி வைத்து செயல்படுகிறது உலகமயம்.
அமிர்தானந்தாமயி, ரவிசங்கர், சுகபோதானந்தா, வேதாந்திரி மகரிஷி, சத்குரு போன்றவர்களும், ஆன்மிக அமைப்புகளும் மனதை அமைதிப்படுத்துகிறோம் என்ற பெயரில் இவர்களிடையே, மேலும் உழைப்பை செலுத்து... உனது நிறுவனம் வளர்ந்தால் நீ வளர்வாய்.. திறம்பட உனது நிறுவனத்திற்காக உழைப்பை செலுத்து.. உனது திறமையால் உனது நிறுவனம் மேம்பாடு அடையட்டும் என தியானம் என்ற பெயரில் போதித்துக் கொண்டே இருக்கிறார்கள்..
“இளமையில் தொலைத்து முதுமையில் தேடு”.. என நுகர்வியத்தை துhண்டிவிட்டு தற்போது கொள்ளை லாபம் பார்க்கும் ஏகபோக நிறுவனங்களின் ஏஜெண்டுகளாக மேற்படி அமைப்புகள் செயல்படுகின்றன.
ஐ.டி மற்றும் ஐ. டி சார்ந்த தொழில்கள், ஜவுளி, ஆடை, ஆட்டோமொபைல்ஸ், ரியல் எஸ்டேட், கட்டுமானம் போக்குவரத்து, தொலைதொடர்பு ஆகிய துறைகளில் மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. தற்போது 15 கோடி இளைஞர்களின் சாரசரி வருட வருமானம் ரூ 1.5 லட்சம் இது 2011ல் 75 கோடி இளைஞர்கள் இந்த வருமானத்தை சம்பாதிப்பார்கள் என ஆசையை துhண்டி விடும் ஏற்பாட்டை திட்டமிட்டு செய்து வருகிறது.
இதற்கு தேவையான படிப்புகள் என பல்வேறு தொழில்நுட்ப படிப்புகளை படியுங்கள் உடனடி வேலை என கனவுகளை துhவுகின்றனர். இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான பொறியியல் கல்லுhரிகள் தங்களது கல்வி வியாபாரத்தை கனஜோராய் நடத்தி வருகின்றனர். தற்போது தமிழக அரசு 40 சுயநிதி கல்லுhரிகளில் நீதிபதி ராமன் கமிட்டி தீர்மானித்த அதிகபட்ச கல்விகட்டணத்தையும் தாண்டி அதிக விலையில் பாடப் பிரிவுகளை மாணவர்களுக்கு விற்றுள்ளனர் என கண்டறிந்துள்ளது.. இது ஒரு பகுதி தான்..
அதேபோல் அழகுகலை, சருமக்கலை, உடல் ஆரோக்கியம் என சுஷ்மிதா சென்னும், ஜஸ்வர்யா ராயும், லாரா தத்தாவும் உலக அழகிகள் ஆனாலும் ஆனார்கள்.. இந்திய அழகுத்தொழில் இன்று சுமார் ரூ 12,000 கோடி மதிப்பிற்கு வளர்ந்துள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமான இத்துறையில் இளைஞர்கள் சம்பாதிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளது என அனைத்து ஊடகங்களும் மாற்றி மாற்றி ஊதிக் கொண்டே இருக்கின்றன.. குறிப்பாக ஹிந்துஸ்தான் லீவர், டாபர், ஹிமாலயா, மரிக்கோ, எல் ஓரியல், மோடி ரெவ்லான், பையோடீக், லக்மே, ஏவோன் போன்ற இந்திய- பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது வலைப்பின்னல்களை விரிவாக்கி வருகின்றன.. மூலிகை மருந்து சார்ந்த அழகுசாதன பொருட்களின் உலக சந்தை மட்டும் சுமார் ரூ 3,000 கோடி அளவிற்கு உள்ளது.
நம்முடைய மரத்தடி சலுhன்கள் எல்லாம் இன்று உலகமய பின்னணியில் பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. இத்துறையிலும் சலுhன் நிர்வாகி, பியூட்டி ஸ்பா நிர்வாகி, தோல் பராமரிப்பு, மணமக்கள் மேக், ஃபேசன் ஷோ மேக்கப், சினிமா நட்சத்திரங்களுக்கான ஹேர் ஸ்டைல், மேக்கப், உடை அலங்காரம், ஆயுர்வேதம், மசாஜ், ஜலக்கீரிடை என பல்வேறு உப பிரிவுகள் அதற்கென ஸ்பெசலிஸ்டுகள் என்பதோடு இத்துறையிலும் ஆராய்ச்சி, விரிவாக்கம் என இளைஞர்களை ஈர்த்து வருகிறது..
மேலும் நகர்ப்புற இளைஞர்களின் கார்ப்ரேட் கலாச்சாரத்திற்கு 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி ஹிண்டு நாளிதழிலில் வந்த செய்தி அதிர்ச்சி அடைய வைக்கிறது. சட்டீஸ்கார் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனக்கு செல்போன் பேன்சி நம்பர் வேண்டும் என்பதற்காக ரூ 15 லட்சம் கொடுத்து பெற்றுள்ளார் என்பது வசதியான பணக்கார இளைஞர்களின் வாழ்க்கையை சொல்கிறது. ரிலைன்ஸ் அம்பானி ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் செலவில் 60 அடுக்குமாடி வீட்டை தனது குடும்பத்திற்காக கட்டுகிறார்.. அவர் திறமையாக உழைத்ததால்தான் முன்னேற முடிந்தது என உபதேசிக்கிறது. அவரது திறமை எப்படிப்பட்டது என நாடறியும். ( 2008ம் ஆண்டு அம்பானிக்கு அரசு அளித்த வரிச் சலுகை மட்டும் ரூ 47000 கோடியாகும் )
அதே நேரத்தில் இன்னும் ஒரு பகுதி நகர்புற இளைஞர்களின் வாழ்நிலை என்பது மிக மோசமான நிலையிலேயே உள்ளது.. இவர்களின் வறுமையை, வேலையின்மையை அற்புதமான கருவியாக கொண்டு பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக அரசுகள் பயன்படுத்துகிறது..
அரசாங்கத்திற்கு சொந்தமான மின்சார வாரியம், தொலை தொடர்பு துறை, வங்கி, போக்குவரத்து, மருத்துவமனைகள் உள்ளிட்ட மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் சேவைத்துறைகளில் கூட பல பணிகளை தனியார்மயமாக்கி ஒப்பந்த வேலை, தினச்சம்பளம் எந்தவிதமான சட்ட பாதுகாப்பு, வேலை பாதுகாப்பும் இல்லாதவர்களாக மாற்றி உழைப்பை சுரண்டும் நடவடிக்கை தொடர்கிறது. அரசு சார்பில் நியமிக்கப்பட்ட அர்ஜூன் சென் குப்தா கமிட்டி தனது ஆய்வறிக்கையில் கூட இந்தியாவில் நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான கூலிக்கு வேலை செய்பவர்கள் 83 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர் என்கிறது.
உதாரணத்திற்கு தகவல் தொடர்பு துறையில் ஒப்பந்த தொழிலாளருக்கு ரூ 60ம், சுகாதாரத்துறையில் மருத்துவமனை பணியாளராக உள்ள ஒப்பந்த தொழிலாளருக்கு ரூ 33ம் என மிக சொற்பான சம்பளமே ஒரு நாளுக்கு வழங்கப்படுகிறது. இவர்களுக்கான “உச்சபட்ச நம்பிக்கை கால் காசினாலும் கவர்மெண்ட் காசு” நிரந்தரமா கிடைக்காத என்ற நம்பிக்கையே கொத்தடிமையாக வேலை செய்ய வைக்கிறது..
ஆரம்ப சுகாதாரம் ஓர் பார்வை ?
ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான தேவைகளில் ஒன்று கல்வி, இரண்டு வேலை, மூன்று சுகாதாரமான வாழ்க்கை.. இவற்றில் கல்வியையும், வேலையையும், வணிகமயமாக்கிவிட்ட ஆட்சியாளர்கள் தற்போது சுகாதாரத் துறையை லாபம் கொழிக்கும் வணிகமாக மாற்றிக் கொண்டு அப்பட்டமான பொய்களை பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் பேசிக் கொண்டு இருக்கிறது.. அனைவருக்கும் சுகாதாரத்தை வழங்குகிறோம் என்று..
குடிநீரை வணிகப் பொருளாக மாற்றிவிட்டு குடிநீர் பற்றாகுறை தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில் வாட்டர் பில்டர் வாங்கி வைத்து குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடியுங்கள் என மக்களை கிண்டல் செய்யும் செய்பவர்களாக ஆட்சியாளர்கள் மாறி வருகிறார்கள்..
இந்திய குடும்பங்களில் 24 சதமும், தமிழகத்தில் 41 சதமும் மருத்துவத்திற்கு என மக்கள் செலவு செய்கின்றனர். இந்த சூழலில் உலக அளவில் நடைபெற்ற சுகாதாரத்திற்கான மாநாடுகளில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதனடிப்படையில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஒரு ஒன்றியத்தில் 3 முதல் 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட வேண்டும். சுமார் 5000 மக்கள் தொகை இருந்தால் ஆரம்ப சுகாதார துணை மையமும், 30000 மக்கள் கொண்ட பகுதியாக இருந்தால் முக்கிய மையமாகவும் ( வட்டார அளவில் ) செயல்பட வேண்டும் என அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன..
ஒரு துணை மையத்தில் 2 மருத்துவர்கள், மருந்துகள் வழங்குமிடம், பரிசோதனைக்கூடம், 6 படுக்கைகள், வெளிநோயாளி பிரிவு, பிரசவ அறை என கட்டாயம் இருக்க வேண்டும்.. அதேபோல் முக்கிய சுகாதார மையத்தில் ( வட்டார அளவில் ) உள்ள மருத்துவமனைகளில் 4 டாக்டர்கள், 30 படுக்கைகள், 24 மணி நேரம் செயல்படும் இரத்த வங்கி, 7 செவிலியர்கள், ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளோடு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல் உள்ள நிலையில் தமிழகத்தில் இந்த விகிதாசாரத்தில் உள்ளதா ? என்றால் நிச்சயம் பல்வேறு இடங்களில் பற்றாகுறையான நிலையே நீடிக்கிறது.. இது தான் அரசு சுகாதாரத்துறையில் காட்டும் ஆர்வம்..
இதற்கு நாம் மாற்றாக வைக்கும் திட்டம் நிலசீர்திருத்தம், அன்னிய மூலதனத்திற்கான கட்டுப்பாடுகள், இந்திய பொருளாதாரத்தின் சுயசார்பை பாதுகாப்பது. இதற்கு மதசார்பற்ற தன்மையை பாதுகாப்பது, வகுப்புவாத பாசிச சக்திகள் ஆட்சிக்கு வராமல் தடுப்பது முக்கியமாகும். இதற்கான தொடர் போராட்டத்தை நடத்திட வேண்டியுள்ளது.
1928ம் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நவஜவான் பாரத் சபா வெளியிட்ட அறிக்கையை இன்றைய இளைஞர்கள் நினைவுபடுத்திக் கொள்வது ஒன்றே அவர்களின் வளர்ச்சியை, முன்னேற்றத்தை, இந்திய சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யும்.. அந்த அறிக்கை,.
“ஒரு தேசத்தின் உருவாக்கம் தங்களது சொந்த நலன்களையும், சுகங்களையும், உயிர்களை காட்டிலும் தங்களது நாட்டு நலனையே பெரிதெனப் பேணும் ஆயிரக்கணக்கான பெயர் தெரியாத ஆண்கள், பெண்கள் தியாகங்களையே வேண்டுகிறது ” இளைஞர்கள் சுதந்திரமாக, அமைதியாக பரபரப்பு ஏதுமின்றி பொறுமையாக சிந்திக்கட்டும். இளைஞர்கள் முழு மனதோடும், உண்மையோடும் சேவை, துன்பம், தியாகம் என்ற மூன்று குறிக்கோள்களை வழிகாட்டியாக கொள்ளட்டும்..
“ தியாகிகள் சிந்தும் செங்குருதி உணவிலேயே
இளம் சுதந்திரப் பயிர் செழித்து வளரும் ”

வாழ்க்கையை தேடி…

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வேலை தேடி திருப்பூர் வருவது தொடர்ந்த வண்ணதபகம் உள்ளது. இப்படி வாழ்க்கை தேடி இடம் பெயர்ந்த மக்களில் பெரும் பகுதியினர் 5 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் திருப்பூர் நகரத்தில் வசிக்கக்கூடிய நிலைமை உள்ளது. இதில் குறிப்பாக திருப்பூர் மாநகரத்தில் உள்ள 80க்கும் மேற்பட்ட குடிசைப்பகுதிகளில் சாதாரண ஏழை எளிய மக்களே வசிக்கும் நிலை உள்ளது.
திருப்பூர் மாநகராட்சியின் 2005 ஆம் ஆண்டு கணக்குப்படி இக்குடிசைப்பகுதிகளில் சுமார் 25,000க்கும் மேற்பட்ட குடும்பங்களும், 1.25 லட்சம் மக்கள் வாழும் நெருக்கடி மிக்க பகுதியாக உள்ளது. இங்கு வாழும் மக்கள் இட நெருக்கடியின் உச்சத்தில் வாழ வேண்டிய அவலத்தில் உள்ளது. இதன் விளைவு சிறிதான அறைக்கே கூட ஆயிரக்கணக்கான ரூபாய் வீட்டுவாடகை கொடுக்க வேண்டிய நிலையும், ஒரே வீட்டில் 6 பேர் 7 பேர் என வாழ்க்கை நடத்த வேண்டிய நிலையில் உள்ளது.
வறுமையின் கொடுமை காரணமாக வாழ வழியில்லாமல் குற்றாலம் அருகில் துவங்கி சங்கரன் கோவில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வரை ரயிலிலும், பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை வழியாக வால்பாறை டீ எ°டேட்டுகளுக்கு எப்படி கொத்தடிமைகளாக 1930 களில் மக்கள் வெள்ளையர்களால் நடக்க வைத்தே கழுதை பொதி சுமப்பதைப் போல அந்த கிராமப்புற இளம் கூலி களை ஆண், பெண் இருபாலரையும் தோட்ட வேலைக்கு கொண்டு வரப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்டார்கள்.
இந்த கஷ்டங்களை எதிர்த்து போராட முடியாமல் அந்த கிhhமப்புற கூலி தொழிலாளிகள் தங்களது ஊர் தொழிலாளி யாராவது அந்த கொத்தடிமைகளில் இருக்கிறானா? என பார்த்து அவர்களோடு இணைந்து வாழும் சூழல் இருந்தது. ஏனெனில் தன்னுடைய கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து கொள்ள தன்னை போல ஒரு சக தொழிலாளியை தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
அதைப் போல் இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம் போன்ற பகுதிகளில் இருந்து இளம் பெண்களை அழைத்து வந்து பணிபுரிய வைக்கும் நிலை உள்ளது. அதே போல் தனது ஊரை சேர்ந்த, தனது சொந்த சாதியை சார்ந்தவர்களை அடையாளம் கண்டால் அவர்களோடு குறிப்பிட்ட ஊர்களில் சேந்து வாழும் நிலை உள்ளது.
இடம் பெயர்ந்த மக்களின் சமூக கலாச்சாரம் என்பது அவர்களை ஒரு குறிப்பிட்ட மையங்களில் குவிமயமாக வாழ வைக்கிறது. பணிப்பாதுகாப்பு, பணிச்சுமை, தனது குடும்ப பாதுகாப்பு உணர்வு ஆகிய காரணிகளின் காரணமாக இடம் பெயர்ந்த இம்மக்களின் வாழ்வாதாரம் என்பது தற்போது கேள்விக் குள்ளாக்கப்படுகிறது.
இதனால் சொந்த ஊர், சாதி ஆகியவைகள் முன்னுக்கு வரும் சூழல் ஏற்படுகிறது. அனைவருக்குமான கல்வி, பாதுகாப்பான வேலை, சுகாதாரம் என்கிற போது எங்கு வேண்டுமானாலும் வாழலாம் என்ற நிலை ஏற்படும். அது மறுக்கப்படும் போது அதை பெற ஜனநாயக பூர்வமான போராட்டத்தை நடத்துவதற்கு பதிலாக சாதிய ரீதியாக சுருங்கிக் கொண்டு தனது இனத்திற்கான சலுகைகள் வேண்டும், முன்னுரிமை வேண்டும் என்ற கோசத்தோடு திருப்பூரில் பல்வேறு சாதிய அமைப்புகள் உழைப்பாளி மக்களை தங்கள் பின்னால் அணி திரட்டும் போக்கு என்பது உருவாகி வருவது வேதனைக்குரியது.
இடம் பெயர்ந்து வந்த உழைப்பாளி மக்களும் தங்களது சொந்த அனுபவத்தில் இருந்து வாழ்வதாரத்திற்கான போராட்டத்தினை நடத்துவதற்கு பதில் சமரசம் செய்து கொண்டு கிடைப்பதை வைத்து வாழ்க்கை நடத்துவது என்ற நிலையே உள்ளது. இதனால் உழைப்பாளி மக்களின் ஒற்றுமை என்பது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
கிராமப் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டு, விவசாயம் பாழ்பட்டு ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால் தொடர்ந்து வேகவேகமாக கிராமத்தை காலி செய்து விட்டு நகரத்தை நோக்கி இடம் பெயருதல் நடைபெற்றுவருகிறது. விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்தது. இடம் பெயருதலை வேகப்படுத்துகிறது.
இடம் பெயர்ந்து வந்துள்ள உழைப்பாளிகளின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து அனைத்துத் தரப்பு மக்களின் ஒருங்கிணைந்த போராட்டமே இதற்கு தீர்வாகும்.. ஒரு குறிப்பிட்ட மாவட்டம், சாதி, ஊர் என ஒதுக்கி வைக்காமல் அனைவரும் உழைப்பாளிகள் என்ற அடிப்படையில் ஒன்றுபட்ட போராட்டத்தை அனைவருக்குமாக அம்மக்களை ஜனநாயக நீரோட்டத்தில் இணைக்கப்பயன்படும்.
1. நகர, ஒன்றிய பகுதிவாரியாக கூடுதலான சமூக நலக்கூடங்களை கூடுதலாக அமைப்பது.
2. குடியிருப்பு பகுதிகளுக்கு வாரம் ஒரு முறை மருத்துவக்குழு தொடர்ந்து ( மொபைல் மெடிசன் ) செல்வதும், மருத்துவ சேவை செய்வது முக்கியம்.
3. அனைத்துவிதமான சட்ட பாதுகாப்புகளை உறுதி செய்வது.
4. கல்விநிலையங்களை கூடுதல் படுத்துவதும், இலவசக் கல்வி என்பதை உறுதி செய்வது.
5. இடம் பெயர்ந்த மக்களின் சமூக பழக்க வழக்கங்களை அங்கீகரிப்பது. அவர்களின் பண்பாட்டை வளர்த்தெடுப்பது. சமுக நல்லிணக்கத்தை உருவாக்குவது.
6. அவர்களின் வேலைக்கான உத்திரவாதத்தை உறுதிப்படுத்துவது.
7. பொழுது போக்கு அம்சங்களுக்கு பகுதி வாரியாக புதிய குழந்தைகளுக்கான பூங்காக்கள், நுhலகங்கள், சாலையோர பூங்காக்கள் மற்றும் கலையரங்கங்கள் உருவாக்குவது.
அரவிந்தன்

குட்டி ஜப்பான் திருப்பூர்

தேசம் என்பது மண் மட்டுமல்ல
மக்களும் கூடத்ததான்.



தமிழகத்தின் வேலைவாய்ப்பு களஞ்சியமென ( குட்டி ஜப்பான், டாலர் சிட்டி ) அனைவராலும் அழைக்கப்படும் திருப்பூர் தாலுhக்கா 21 ஊராட்சிகள், இரண்டு நகராட்சிகள், ஒரு மாநகராட்சியை உள்ளடக்கிய பகுதியாகும். ஏறத்தாழ 6.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.
இந்தியாவின் பின்னாலாடை தொழிலின் தலைநகரம் திருப்பூர் எனப்படுகிறது. தற்போது 2007 ஆம் ஆண்டு மட்டும் 1,12,000 கோடி ரூபாய் ஏற்றுமதி மூலம் பெறப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தைக்கு 14,000 கோடி ரூபாய் என்ற அளவில் தேவை உள்ள தொழிலாக பனியன் தொழில் வளர்ந்து வருகிறது.
தமிழகத்தின் தென், வட, மத்திய மாவட்டங்கள் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வேலை தேடி திருப்பூர் வருவது தொடர்ந்த வண்ணம் உள்ளது. இப்படி வாழ்க்கை தேடி இடம் பெயர்ந்த மக்களில் பெரும் பகுதியினர் 5 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் திருப்பூர் நகரத்தில் வசிக்கக்கூடிய நிலைமை உள்ளது. இதில் குறிப்பாக திருப்பூர் மாநகரத்தில் உள்ள 80க்கும் மேற்பட்ட குடிசைப்பகுதிகளில் சாதாரண ஏழை எளிய மக்களே வசிக்கும் நிலை உள்ளது.
திருப்பூர் மாநகராட்சியின் 2005 ஆம் ஆண்டு கணக்குப்படி இக்குடிசைப்பகுதிகளில் சுமார் 25,000க்கும் மேற்பட்ட குடும்பங்களும், 1.25 லட்சம் மக்கள் வாழும் நெருக்கடி மிக்க பகுதியாக உள்ளது. இங்கு வாழும் மக்கள் இட நெருக்கடியின் உச்சத்தில் வாழ வேண்டிய அவலத்தில் உள்ளது. இதன் விளைவு சிறிதான அறைக்கே கூட ஆயிரக்கணக்கான ரூபாய் வீட்டுவாடகை கொடுக்க வேண்டிய நிலையும், ஒரே வீட்டில் 6 பேர் 7 பேர் என வாழ்க்கை நடத்த வேண்டிய நிலையில் உள்ளது.
இந்த குடிசை பகுதிகள் நோய் நொடிகளின் உற்பத்தி மையங்களாக மாறும் அளவிற்கு மிகவும் மோசமான முறையில் சுகாதாரமற்று உள்ளது. திருப்பூரின் நொய்யல் ஆற்று அருகில் குடியிருப்பவர்கள் நிலைமை இன்னும் மோசமாக எந்த விதமான அடிப்படை கட்டமைப்புகளும் இல்லாத நிலையில் உள்ளது. கழிப்பறை, சாக்கடை, குடிநீர், சாலை, தெருவிளக்கு என்பது போதுமானதாக இல்லாத நிலை நீடிக்கிறது.
மேலும் கடும் இட நெருக்கடியோடு மக்கள் குவிமயமாக வாழும் நிலை உள்ளது. இதனால் பல ஆண்டுகள் குடியிருந்தும் வீட்டுமனைப்பட்டா இல்லாத நிலையில் எந்த விதமான அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால் தான் பட்டா கேட்டு போராட்டம் என்றால் ஆயிக்கணக்கில் மக்கள் திரளும் நிலை உள்ளது. இதற்கு நல்ல உதாரணம் திருப்பூரில் கடந்த 2006ம் ஆண்டு செப்-21 தேதி அன்று நடைபெற்ற பட்டா கோரி மனு கொடுக்கும் போராட்டத்தில் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.
ஒரு தொழிலாளி தனது சம்பளத்தில் பெரும் பகுதியை வீட்டுவாடகைக்கும், உணவுக்கும், மருத்துவத்துக்கும் செலவு செய்யும் நிலையிலேயே இருக்கிறது. இதனால் தனது எதிர்கால சந்ததியை படிக்க வைக்க எந்த வித ஏற்பாடும் இல்லாமல் சிறு வயதிலேயே குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும் நடைபெறுகிறது.
கல்வி என்பது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படை. இன்றைய சமூகத்தை மேம்பட்ட சமூகமாக மாற்றி வைக்கப்பட வேண்டும் என்றால் வாழ்க்கை குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாக, எதையும் அறிவியல் பூர்வமாக ஆராயக்கூடிய தன்மையையும், பண்பட்ட சமூகத்தை வளர்த்தெடுக்கவும், தனி மனித வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் பயன்படக்கூடிய வகையில் கல்வி என்பது வழங்கப்பட வேண்டும்.
இன்றைய நவீனத்தை உள்வாங்கிக் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் கல்வியை கொடுக்க வேண்டும். அதற்கு தேவையான தொழிற் நுட்ப அறிவை வழங்கக் கூடிய கல்விநிலையங்கள் திருப்பூர் நகரத்தில் உள்ளதா ? என்றால் இல்லை.
நுhற்றுக்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகள் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என திருப்பூர் கல்வி மாவட்டத்தில் உள்ளது. இதில் ஆண்டு தோறும் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் வெற்றி பெற்று வெளிவரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 6000க்கும் மேற்பட்டவர்கள் ஆகும். ஆனால் திருப்பூர் தாலுhக்காவில் இரண்டு அரசு கலைக்கல்லுhரியும், இரண்டு தனியார் கலைக்கல்லுhரியும், ஒரு நர்சிங் கல்லுhரியும், ஆடை வடிவமைப்பு கல்லுhரியும், ஒரு தனியார் பொறியியல் கல்லுhரியும் திருப்பூர் நகரத்தில் உள்ளது.
இது ஆண்டு தோறும் உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் சேர்க்கை தகுந்த எண்ணிக்கையில் இல்லாத நிலையில்தான் உள்ளது. தமிழகத்தில் ஆரம்பக் கல்வியில் சேரும் 100 மாணவர்களில் 6 மாணவர்கள் மட்டுமே உயர்கல்விக்கு தகுதி பெறுகின்றனர். மீதி 94 பேர் பள்ளிகளில் பல்வேறு நிலைகளில் இடையில் பள்ளியை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான அடிப்படை காரணம் குடும்ப சூழல், பாடத்திட்டத்தில் உள்ள குளறுபடிகள், பாட திட்ட முறை, கல்விநிலையச்சூழல் ஆகியவையே இதற்கு காரணம் ஆகும். இன்றும் திருப்பூர் நகரத்தில் இயங்கும் பனியன் நிறுவனங்களில் உயர்நிலைப்பள்ளியில் படிக்க வேண்டிய மாணவர்கள் ஆயிரக்கணக்கில் அடுக்கி கட்டுதல், கைமடித்தல், ஒவர்லாக், பேட்லாக், காஜாபட்டன் டெய்லராக, உதவியாளராக சொற்ப சம்பளத்திற்கு பணிபுரியும் நிலை என்பது உள்ளது. அந்த இளம் சிறார்களின் கல்வி என்பது கனவாக போகியுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் தான் படிக்கும் கல்விநிலையங்களில் ஆசிரியர் பற்றாகுறை, வகுப்பறை இல்லாமை, குடிநீர், கழிப்பிடம், சைக்கிள் நிறுத்தம், ஆய்வக அறை, விளையாட்டு மைதானம், நுhலகம் போன்ற எந்தவிதமான அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத நிலை இன்றும் நீடிக்கிறது. இந்த நிலைதான் மாணவர்களை படிப்படியாக பள்ளி இடைவிலகலை ஏற்படுத்துகிறது. மேலும் கல்வி நிலையங்களில் நிலவும் ஜனநாயக பூர்வமற்ற தன்மை என்பது மாணவர்களை சமூகத்தின் பால் அக்கறையற்ற நிலைமையையும், படிப்பின் மீதான வெறுப்புணர்வையும் பெரும் பகுதி உருவாக்குகிறது. இது பள்ளி இடைவிலகலை அதிகரிக்கிறது.
அனைவருக்குமான கல்வி என்பதை உறுதிப்படுத்த ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரையான அனைத்து நிலைகளிலும் மத்திய, மாநில அரசுகள் கூடுதலான நிதி ஒதுக்கிட வேண்டும். அதே போல் பல்லாயிரக்கணக்கான அன்னிய செலவாணி நிதியை அளிக்கக்கூடிய திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி கூடுதலான உயர் கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டும்.
அதற்கு
1. திருப்பூர் வடக்கு பகுதியில் பெண்களுக்கென தனியாக ஒரு கல்லுhரியும், பள்ளியும் அமைக்கப்பட வேண்டும்.
2. அரசின் சார்பில் அரசு பொறியியல் கல்லுhரி, மருத்துவக்கல்லுhரி, பல்தொழில்நுட்ப கல்லுhரி போன்றவற்றை துவக்கிட வேண்டும்.
3. திருப்பூர் பின்னலாடை தொழிலை கணக்கில் கொண்டு நவீன ஆடை வடிவமைப்புக்காக ஒரு கல்லுhரி அரசின் சார்பில் துவக்கப்பட வேண்டும்.
4. பள்ளி, கல்லுhரி மாணவ மாணவிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பேருந்துகளிலும் காலை, மாலை நேரங்களில் இலவச பயணஅட்டை பயன்படுத்த அனுமதிப்பதோடு கூடுதலான பேருந்துகளை இயக்க வேண்டும்.
5. மாணவர்களின் பயன்பாட்டுக்கான பொது கலையரங்கம், விளையாட்டு அரங்கம், அறிவியல் பூங்கா போன்றவற்றை உருவாக்கிட வேண்டும்.
6. திருப்பூர் வடக்கு ஒன்றியப் பகுதியில் ஒரு கல்லுhரி அமைத்திடுவது.
7. ஜெய்வாபாய் போன்ற அதிக எண்ணிக்கையில் மாணவிகள் படிக்கும் பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி கூடுதலான ஆசிரியர்களை நியமித்திட வேண்டும்.

பட்ஜெட் - 2010

பட்ஜெட் - 2010

1930 மார்ச் 12 அன்று சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டியை நோக்கி ஆரம்பித்த நடைபயணம் 384 கி.மீ துhரத்தை மக்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே கடந்தார் இந்த தேசத்தின் மகாத்மா என்றழைக்கப்பட்ட மோகன்தாசு கரம்சந்த் காந்தி. அன்று இந்திய தேசம் முழுவதும் பிரிட்டிசு அரசின் உப்புவரி சட்டத்தை எதிர்த்து கடும் கொந்தளிப்புகிடையே போராட தயாராகிக் கொண்டு இருந்த அந்த ஏழை எளிய மக்களிடையே ( அ°லலி என்னுமிடத்தில் ) காந்தி உரையாற்றும் போது ..
“உங்களுடைய சொந்த கிராமத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். 1700 நபர்கள் கொண்ட மக்கள் தொகைக்கு 850 மணங்கு உப்பு தேவைப்படும். 200 காளை மாடுகளுக்கு 300 மணங்கு உப்பு தேவைப்படும். அதாவது மொத்தத்தில் 1150 மணங்கு உப்பு தேவைப்படும்.
அரசு ஒரு பக்கா மணங்கு உப்பிற்கு ரூ 1.25 ( பழைய ரூ 1-4 அணா) வரி விதிக்கிறது. 1150 மணங்கு என்பது 575 மணங்கிற்குச் சமம். எனவே மொத்தவரியாக ரூ 720ஐ நீங்கள் செலுத்துகிறீர்கள்.
ஒரு காளை மாநாட்டிற்கு 2 மணங்கு உப்பு தரப்பட்ட வேண்டும். மேலும் 800 பசுமாடுகள், எருமை மாடுகள், கன்றுகுட்டிகள் உங்கள் கிராமத்தில் உள்ளன. அவைகளுக்கும் நீங்கள் உப்பு அளித்தால் அல்லது தோல் பதனிடுவோர் தோலைப் பதப்படுத்துவதற்கு உப்பைப் பயன்படுத்தினால் அல்லது உப்பை நீங்கள் உரமாகப் பயன்படுத்தினால் ரூ 720க்கும் அதிகமாக நீங்கள் வரியாக செலுத்த வேண்டி வரும்.
இவ்வளவு தொகையை நீங்கள் வரியாக ஒவ்வோர் ஆண்டும் உங்கள் கிராமத்தால் செலுத்த முடியுமா? இந்தியாவில் ஒரு தனி நபரின் சராசரி வருமானமே 7 பைசாதான் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பிறிதொரு வகையில் கூறுவதென்றால், லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு பைசா கூட வருமானம் இல்லை. ஒன்று அவர்கள் பட்டினி கிடந்து சாகிறார்கள். அல்லது பிச்சை எடுத்து வாழ்கின்றனர். இவர்கள் கூட உப்பில்லாமல் வாழ முடியாது. இவர்களுக்கெல்லாம் உப்பே கிடைக்காவிட்டால் அல்லது மிக அதிக விலையில் உப்பு கிடைத்தால் அவர்களின் துயரம் எப்படி இருக்கும் ? என மகாத்மா காந்தி உப்பு வரி சட்டத்திற்கு எதிராக கொந்தளித்துப் பேசினார்.
மகாத்மா காந்தி உரையாற்றி சரியாக 80 ஆண்டுகளுக்கு பின்னர் சுதந்திர இந்தியாவில் 83.77 கோடி பேர் நாளொன்றுக்கு ரூ 20 வருமானத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். 20 சதமான மக்கள் இரவு உண்ணாமல் உறங்கிக் கொண்டு இருக்கின்றனர். பெண்களில் 54 சதமானோருக்கு இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். பிறக்கும் 3 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகளில் 80 சதமானோருக்கு இரத்த சோகை நோய் உள்ளதாக இந்தியாவின் சுகாதார துறை கூறுகிறது.
கடந்த 2009-2010 ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ 9,53,231 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் திட்டம் சார்ந்த செலவினங்களுக்கு ரூ 2,85,149 கோடியும், திட்டம்சாரா செலவினங்களுக்கு ரூ 6,68,082 கோடியும் ஒதுக்கப்பட்டது. இப்படி முக்கியமான துறைக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ( 2005 முதல் 2008 ஆண்டு வரை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமலே இருக்கிறது )
பட்ஜெட் கூட்டத் தொடரை துவக்கி வைத்து ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அவர்கள் உரையாற்றும் போது இந்தாண்டு 8 சதவீதமும், அடுத்தாண்டு 9 சதவீதமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இருக்கும் என இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். உணவுப் பொருள் விலைவாசி உயர்வால் ஏழை எளியோர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாததே. கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது என்பது ஆறுதல் தரக்கூடியதே.. ஆனால் இந்திய புள்ளியல் துறை தரும் தகவல் எதிர்மறையாக உள்ளது. வேளாண்துறை வளர்ச்சி வீதம் மைன° 0.2 சதவீதமாக உள்ளது. இது சார்ந்துள்ள சுமார் 70 சதம் கிராமப்புற மக்களை பாதிக்கும் விசயமாகும்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதம் பேருக்கு வேளாண்துறைகளின் மூலமே வேலைவாய்ப்பு கிடைத்து வந்த சூழலில் நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் வேளாண்துறையின் பங்கு 17 சதம் மட்டுமே. இந்தியாவின் தேசிய வருவாய் ரூ 51.18 லட்சம் கோடி. இதன் படி 117 கோடி மக்களின் தனி நபர் வருவாய் மாதத்திற்கு ரூ 3,646 ஆகும். இது மாததிற்கு 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அம்பானி குடும்ப வருமானமும் தேசிய வருவாயில் வந்துவிடும் என்றால், சுமார் 84 கோடி பேரின் மாத வருமானம் சராசரியாக ரூ 600 தான் கிடைக்கும் நிலையில் எங்கே வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்தாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் ஏற்றுமதிக்கான சலுகைகள், தொழில் துறையினருக்கான ஊக்க சலுகைகள், பங்கு வர்த்தகம், அந்நிய முதலீடு, எரிபொருள் துறை, வேளாண்துறை, மானியத்தை குறைப்பது. என பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
திட்டகமிஷன் துணைத்தலைவர் மாண்டேகு சிங் அலுவலியா 9 சதம் வளர்ச்சியை அடைய வேண்டுமானால் 500பில்லியன் டாலர் பணத்தை 2011ம் ஆண்டு வரை தொழிற்துறைக்கான உள்கட்டமானத்திற்கு செலவிட வேண்டும் என்கிறார். உரமானியம், விவசாயத்திற்கு கடனுதவி, மானியங்களை படிப்படியாக குறைக்க வேண்டும் என திருவாய் மலர்ந்துள்ளார்.
ஹிரித் பரித் கமிட்டி சமீபத்தில் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை ரூ 3.5 லட்சம் கோடியை தொட்டுவிட்டது. எனவே எரி பொருள்களின் விலைகளை உயர்த்த அனுமதிக்க வேண்டும். சர்வதேச சந்தை விலையை ஒட்டி 15 நாட்களுக்கு ஒரு முறை விலை நிர்ணயிக்க பெட்ரோலிய நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும். மானியங்களை சிறுக சிறுக குறைத்துவிட வேண்டும் என அருளாசி வழங்கியுள்ளார்.
விவசாயத்துறைக்கு மானியம் கொடுப்பது வீண் விரையம், பொது விநியோகத்திற்கு மானியம் கொடுப்பது விரையம் என்றெல்லாம் இந்திய தொழில் கூட்டமைப்பினர் கூக்குரலை எழுப்புகின்றனர். ஆனால் அரசு வழங்கும் மானியங்கள் சாதாரண விவசாயிகளுக்கு செல்வதற்கு பதில் பெரும் உர, விதை மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு செல்கிறது என்பதே உண்மை.
எப்ஐசிசிஐ அமைப்பு மத்திய அரசு தொழிற்துறைக்கு தற்போது வழங்கி வரும் ஊக்க சலுகைகளை தொடர்ந்து வழங்கி வர வேண்டும். உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது இந்திய அரசு 3.60 லட்சம் கோடியை தொழிற்துறைக்காக அளித்தது. இதனால் 2 சதவீதத்திற்கு குறைந்த ஜி.டி.பி தற்போது 7.5 சதம் வரை அதிகரித்துள்ளது. எக்சை° டியூட்டியை 12 சதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்தார்கள். ஏற்றுமதியாகும் ஜவுளி உற்பத்திக்கு வங்கி வட்டி 3.5 சததில் இருந்து 2 சதமாக குறைத்துவிட்டார்கள். லட்சக்கணக்கான கோடி ரூபாயை அம்பானி, மிட்டல், டாடா போன்ற ஏழைகளுக்கு கொடுத்து பாதுகாத்த இந்திய அரசு தனது வர்க்க பாசத்தை தெளிவாக காட்டியுள்ளது. இவையெல்லாம் பட்ஜெட்டிற்கு முந்தைய சலுகைகள்.
அதனால் 68 சதம் மக்கள் நேரடியாக சம்மந்தபட்டுள்ள விவசாயத்துறைக்கு பட்ஜெட்டிற்கு முன்பே தனி அறிவிப்பாக விலை உயர்வுகளை அறிவித்து விடுகின்றனர். ஒரு டன் யூரியா விலையை ரூ 480 வரை உயர்த்தியுள்ளனர். ஏற்கனவே 12 சதம் நெல் சாகுபடி குறையும், உணவு தானிய உற்பத்தியும் 7.5 சதம் குறையும் என வேளாண் நிபுணர்கள் தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் உரத்தின் விலையை ஏற்றியுள்ளது, மேலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்துவோம் என்ற அறிவிப்புகளெல்லாம் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியதை போன்றதாகும்.
தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 100 நாட்கள், 100 ரூபாய் கூலி என கடந்த 4 ஆண்டுகளில் ரூ 39100 கோடி நிதி ஒதுக்கீட்டில் சுமார் 4 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளனர் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. உணவு தானிய உற்பத்தி குறைவும், வேலையின்மை அதிகரிப்பும் உள்ள சூழலில் இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதே சரியான செயலாக இருக்க முடியும். ஆனால் இப்போதே இந்த திட்டத்திற்கு இவ்வளவு தொகை ஒதுக்க வேண்டுமா ? என கோடீ°வர ஏழைகள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
கடந்தாண்டு பட்ஜெட்டில் மானியத்திற்கு 1.09 லட்சம் கோடி, தொழில்துறைக்கு ஊக்கத்தொகை 4.25 லட்சம் கோடி, மருத்துவம், சுகாதாரம், குடும்ப நலத்திற்கு ரூ 17994 கோடி என ஒதுக்கியதில் இருந்தே இவர்கள் யாருக்கு ஆதரவாக உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இந்த பட்ஜெட்டின் வெள்ளோட்டமாக வந்துள்ள ரயில்வே பட்ஜெட் தனியார்மயத்திற்கான வாயிற் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுத்துறை–- தனியார்துறை பார்ட்னர்ஷிப்பில் 1000 கிலோமீட்டர் புதிய இருப்புப்பாதை அமைப்பது என்ற அறிவிப்பு முழுக்க தனியார்மய நடவடிக்கையாகவே அமையும்.
ஆதாயம் தரும் திட்டங்களை எல்லாம் தனியாரிடம் விடுவது என்ற அறிவிப்பு. இந்த பட்ஜெட்டில் சிக்னல் முறைகளை நவீனப்படுத்துவது, ரயில் பெட்டி பராமரிப்பு, பயணிகளின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு, ரயில்களை தாமதமில்லாமல் இயக்குவது, ரயில்வேயில் உள்ள 1.7 லட்சம் காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய எந்த அறிவிப்பும் இல்லை. இதில் 90000 பணியிடங்கள் ரயில்வே பாதுகாப்போடு தொடர்புடையது.
கடந்த பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 450 உள்கட்டமைப்பு திட்டங்கள் ரூ 2.24 லட்சம் கோடி மதிப்பில் பொதுத்துறை–- தனியார்துறை பார்ட்னர்ஷிப்பில் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பிரணாப் முகர்ஜி அவர்கள் இந்த பட்ஜெட்டிலும் தொடரும் என அறிவித்துள்ளார்.
2010க்கான பட்ஜெட் என்பது கடுமையான பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், உணவு தானிய உற்பத்தி பாதிப்பு, பொதுவிநியோக முறை சீரழிவு இவைகளுக்கு இடையில் இந்திய தொழில் வளர்ச்சி, வேளாண் வளர்ச்சி, கிராமப்புற வேலைவாய்ப்பு, நகர, கிராமப்புற சாதாரண மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பது இவைகளுக்கான அறிவிப்பை இந்த பட்ஜெட்டிலும் எதிர் பார்க்க முடியாது.
வைரமுத்துவை வசப்படுத்திய வெண்பா

திண்டுக்கல் நகரில் இயங்கி வருகிறது ‘இலக்கியக் களம்’ அமைப்பு. மக்களின் வாழ்க் கையோடு இயைந்ததே இலக்கியங்கள் எனும் புரித லுடன் செயல்பட்டு வரும் இலக்கியக்களத்தின் ஒரு மாலைநேரச் சந்திப்பில் பெருந் திரளான மக்களோடு கல்லூரி மாணவ-மாணவி கள் ஏராளமாகக் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட் சியர் மா.வள்ளலார், ஐ. லியோனி, பேராசிரியர் குரு வம்மாள் உள்ளிட்டோர் பங் கேற்ற இந்நிகழ்வில் ‘இலக்கி யத்தின் இலக்கு’ எனும் தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை யாற்றி னார். அதிலிருந்து சில துளி கள் இங்கே:

காதலைப் பாடுவதுதான் இலக் கியத்தின் இலக்கு என்று நான்கூட நினைத்துக்கொண்டிருந்தேன். சின்ன வயதில் குழந்தை என்ன நினைக்கும் தெரியுமா? இந்த உல கைவிடப் பெரியது தாயின் மார் பகம்தான் என்று நினைக்கும். வயது வரவர இந்த உலகம் அதனி னும் பெரிதென்று தெரியவரும். நண்பர்களே, நீங்கள் தமிழ் இலக் கியத்தோடு உலக இலக்கியப் பரிச்சயமும் பெற வேண்டும்.

கலீல் கிப்ரானின் ‘புரோக்கன் விங்க்ஸி’ல் காதலன் சொல்கிறான், “என் காதலியின் கல்லறையைக் கடந்துசெல்கிறவர்கள் சருகுகளின் மேல் சப்தமில்லாமல் நடந்துசெல் லுங்கள். என் காதலியின் உறக்கம் கலைந்துவிடப்போகிறது” -என் பான். இலக்கியம் என்ன செய்கிறது தெரியுமா? யாருக்காகவோ அழுத அழுகையை உனக்குக் கொண்டு வந்து சேர்க்கிறதல்லவா? அதுதான் இலக்கியம். யாருக்கோ நேர்ந்த அனுபவத்தை, யாருக்கோ சிந்தப் பட்ட கண்ணீரை உன் கண்ணில் வாங்கி அழுவதுதான் இலக்கியம். யாருக்கோ ஏற்பட்ட வலியை உன் மேனி வாங்கிக்கொள்வதுதான் இலக்கியம். யாரோ பட்ட துயரை உன் உடம்பில், மனதில் உணர வைப்பது இலக்கியம். அவள் யார்? செல்மா கராமி என்ற அந்த லெப னானில் பிறந்த அந்தக் காதலி நாம் அறியாத பாத்திரம். லெபனானில் பிறந்த அந்த ஒருத்திக்காக வடுக பட்டியில் பிறந்த ஒருவன் சென் னையில் அழுதான் என்றால் அது இலக்கியம். வால்மீகியின் சீதைக் காக நான் அழுகிறேன். அதில் என் தாயின் துயரம், என் தந்தையின் துய ரம், எனது துயரம், என் மனைவி யின் துயரம், என் பிள்ளைகளின் துயரம் வருகிறது. எல்லா மனித னும் எல்லா அனுபவங்களையும் ஒரு பிறவியில் பெற முடியாது. எல்லா அனுபவத்தையும் ஒரே பிறவி யில் நீங்கள் பெறவேண்டுமென் றால் நீங்கள் இலக்கியவாதியாக மாறவேண்டும்.

தமிழில் மூன்று வெண்பாக் களைச் சொல்வதன் மூலமாக இலக் கியத்தின் இலக்கு எது என்று நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் தோழர்களே. ஒரு வெண்பா சிலப் பதிகாரத்திலிருந்து, ஒன்று தனிப் பாடலிலிருந்து, மற்றொன்று என் சமகாலத்திலிருந்து. சிலப்பதி காரத்தில் கண்ணகியும் கோவல னும் கூடிக்களிக்கிறார்கள். எப்படி? இரண்டு பாம்புகள் ஒன்றை யொன்று பின்னிக்கொள்ளுதல் போலவும், உலகம் நாளை அழிந்து விடும் என்று கருதிக்கொண்டவர் கள்போலவும், உலக இன்பங் களையெல்லாம் இந்த இரவே துய்த்துவிடவேண்டும் என்று கருதுபவர்கள்போலவும் அவர்கள் இருந்தார்கள் என்று இளங் கோவடிகள் சொல்கிறார். இதில் என் சுய இன்பம் தெரிகிறது. இது முழுக்க முழுக்க எனக்கான ஒரு அறம்சார்ந்த அன்பு. காளமேகப் புலவர் பனைமரத்துக்கும் விலை மகளுக்கும் ஒரு சிலேடையை வெண்பாவில் சொன்னார், அதில் புலவனின் சாமர்த்தியம் தெரிகிறது. ஒரு சமூக அழுக்குவேறு தெரி கிறது. இரண்டுமே வெண்பா தான். அது ஆணுக்கும் பெண்ணுக்கு மான முறையான இன்பம், இது முறையற்ற இன்பம். இது அற வழிக்கு வெளியே இருக்கிறது.

கவியரசர் கண்ணதாசன் தென் றல் பத்திரிகையில் ஒரு வெண்பாப் போட்டி நடத்தினார். அதில் ஈற்றடி கொடுத்துவிடுவார்கள். அது ‘பூவைமேல் எத்தனை பூ’ என்ற ஈற்றடி. இது காலங்காலமாக தமி ழில் சொல்லப்பட்ட வழக்கமான செய்திதான். மரபுவழியாகச் சிந் திக்கிறவர்கள் பெண்ணின் கண் களைக் குவளைப்பூ, காது வள் ளைப்பூ, தனங்கள் தாமரைப்பூ, கழுத்து சங்குப்புஷ்பம், விரல்கள் செங்காந்தள் மலர்கள், எனவே பூவைமேல் எத்தனைப்பூ என்று தொன்னூற்று ஒன்பது புலவர் களும் இப்படித்தான் எழுதினார் கள். இலக்கியத்தின் நோக்கம் அது அல்ல... இலக்கியத்தின் நோக்கம் வேறு. இலக்கியத்தின் நோக்கம் மக்கள். இலக்கியத்தின் நோக்கம் சமூகச் சீர்திருத்தம். இலக்கியத்தின் நோக்கம் பகுத்தறிவு என்று புரிந்து கொண்ட ஒரு புலவன் மட்டும் வேறுபட்டு எழுதினான். எல்லோ ரும் காதலியின் அழகை வர்ணித்த போது ஒரு விதவையைப்பற்றி இவன் பாட்டெழுதினான்,

“எண்ணெய் இல்லை ஏற்றபூச் சூடவகை ஏதுமில்லை

பெண்கூந்தல் இந்நிலையில் பேன்பிடிக்க பின்னொருநாள்

சாவை அவள் அண்டிச்சாய்ந்து விட்டாள் பின் அந்தப்

பூவைமேல் எத்தனைப்பூ?’”

- என்று எழுதினான் அந்தக் கவிஞன்.

அவள் உயிரோடு இருக்கையில் பூச்சூட அனுமதிக்காத இந்தச் சமூ கம், பூ வாசனையைக் காட்டாத இந்தச் சமூகம், பூப்போட்ட புட வையைக்கூட அணியவிடாத இந்தச் சமூகம் அவள் இறந்துபோன பிறகு பூவிலே பல்லக்கு, பூப்பாடை, பூத்தோரணங்கள், புதைகுழியில் பூக்கள், புதைகுழியில் பூச்செடி கள்... என்னடா இது? செத்துப் போனபிறகு என்ன சிங்காரம்? பிணத்திற்கு எதற்கு ரத்த தானம்? உயிருடனிருந்தபோது வாழ விடாத நீ பிணத்திற்கு எதற்கு சிங் காரம் செய்ய வருகிறாய்? என்று கேட்டானே, இதுதான் இலக்கி யம். இலக்கியத்தின் நோக்கம் இதுதான்.

இலக்கியத்தின் நோக்கம் போன பரம்பரையைப்பற்றிப் பாடுவது மட்டுமல்ல. நிகழ்கால மனிதனின் கண்ணீருக்கு ஆறுதல் சொல்வது இலக்கியம். அவனது துன்பத் திற்குத் தோள்கொடுப்பது இலக்கி யம். புதிய தலைமுறையைத் தூக்கிச் சுமப்பது இலக்கியம். தன்னம் பிக்கை ஊட்டுவது இலக்கியம். இலக்கியத்தின் நோக்கம் மனிதம் என்று சொல்லுங்கள். இலக்கியத் தின் நோக்கம் அறம் என்று சொல் லுங்கள். இலக்கியத்தின் நோக்கம் போரற்ற உலகம் என்று சொல் லுங்கள். இலக்கியத்தின் நோக்கம் பகுத்தறிவு என்று சொல்லுங்கள். இலக்கியத்தின் நோக்கம் முன்னேற் றம் என்று சொல்லுங்கள். இலக்கி யத்தின் நோக்கம் மனிதம், மனிதம், மனிதம் என்றே முழங்குங்கள்.”
நன்றி
தீக்கதிர், இலக்கியச் சோலை

2008 நினைவுகளிலிருந்து

2008 நினைவுகளிலிருந்து
அரவிந்தன்

உலக அரங்கில்
“ மரணித்த ஒவ்வொரு குழந்தைகளிடமிருந்தும்
விழிகளுடன்
ஒரு துப்பாக்கி பிறக்கிறது
செய்த ஒவ்வொரு குற்றத்திலிருந்தும்
துப்பாக்கி ரவைகள் பிறக்கின்றன
ஒரு நாளில் அவை உமது
இதயத்தின் மையத்தை கண்டடையும்” என்ற பாப்லோ நெரூடாவின் வரிகள் இன்று அமெரிக்காவின் கோர முகத்தால் பாதிக்கப்பட்ட தேசங்களில் எழுந்து வருகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் சர்வாதிகாரிகளை உருவாக்கி அவர்களை வளர்த்தெடுத்து 132 நாடுகளில் 700க்கும் மேற்பட்ட இராணுவ கேந்திரங்களையும், 8000 க்கும் மேற்பட்ட அணுஆயுதங்களையும் வைத்துள்ள வல்லரசாக தனது ஆக்டோபஸ் கரத்தை அமெரிக்கா வலைப்பின்னலாக விரித்துள்ளது.
அந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னை பாதுகாக்க வளர்த்தெடுத்த உலகமயமாக்கல் சர்வதேச அளவில் தாராளமயக் கொள்கைக்கு கிடைத்த பெரிய அடி அமெரிக்க பொருளாதார நெருக்கடியாகும். அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் துறையினால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக வீடு இழந்து கார் வீடுகளை கொண்டு குடும்பம் நடத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் 20 லட்சம் பேர் வீதிக்கு வருவார்கள் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2008 ல் 8 லட்சம் பேர் 10 மாதத்தில் அமெரிக்காவில் வேலை இழந்துள்ளனர். லேமென் பிரதர்ஸ், பேர்ஸ் டெர்ன்ஸ், ஃபரெட்மேக், வாஷிங்டன் ம்யுச்சுவல், இண்டி மேக் பேங்க் கார்ப் போன்ற உலகின் மிகப் பெரிய அமெரிக்கா வங்கிகள் திவாலாகி மஞ்சள் கடிதம் கொடுத்து விட்டன.
உலகின் விலைவாசி உயர்வுக்கு காரணம் இந்தியர்களின் உணவுப்பழக்கம், பெட்ரோல் விலையுயர்வுக்கு காரணம் இந்தியாதான் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டு அமெரிக்க அரசு இந்தாண்டின் காமெடியன் விருதைப் பெற்றது.
“புதிய சோசலிசக் கிராமப்புறம்” என்ற முழக்கத்துடன் சீனா தனது பொருளாதாரத்தை இதே நேரத்தில் பலப்படுத்தி வருகிறது. இப்போது உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியை தீர்க்க மீண்டும் காரல் மார்க்ஸ் நினைக்கப்படுகிறார். ஆம் 2008ன் இறுதிகளில் உலகம் முழுவதும் காரல் மார்க்ஸ், ஏங்கல்சின் புத்தகங்கள் அதிவேகமாக விற்பனையாக துவங்கியுள்ளன. ஆம்,. காத்து மாறி அடிக்க துவங்கி விட்டது.
ஏகாதிபத்திய பாதுகாவலான அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ் க்கு டிசம்பர் 14 அன்று இராக்கில் முண்டார்சு அல்சைதி என்ற பத்திரிக்கையாளர் கொடுத்த வரலாற்று சிறப்புமிக்க கௌரவம் (செருப்பு என்கிற ஆயுதத்தை கண்டறிந்து அறிமுகப்படுத்தியது). இந்த சம்பவம் புஷ்சின் 8 ஆண்டு பதவிக்காலத்தில் கரும்புள்ளியாகவே அமைந்தது என தினமலர் பத்திரிக்கை கூறியது.
வெள்ளையர் குடியேற்றத்தின் போது பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக ஆஸ்திரேலிய பிரதமர் கெவின்ரூட் பிப்ரவரியில் மன்னிப்பு கேட்டார். மார்ச் 2ம் தேதி நடைபெற்ற ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் ஆதரவாளர் திம்த்ரி மெட்வேடாவ் வெற்றி பெற்றார். மே மாதம் மியான்மர் நர்கீஸ் புயலில் 90 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர். ஆனால் கியூபாவில் புயல் தாக்கிய போது ஒருவர் கூட உயிரி இழக்கவில்லை. காரணம் இயற்கை பேரிடர் குறித்து முன்கூட்டியே அறிந்து கியூப அரசு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றது. ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிடல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. ரால் காஸ்ட்ரோ அதிபரானார். நேபாள பிரதமராக பிரசந்தாவும், சைப்ரஸ் நாட்டு அதிபர் தேர்தலில் கம்யூனிஸ்ட் தலைவர் கிறிஸ்டோபியஸ் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்க கறுப்பின மக்களுக்காக போராடிய நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக சர்வதேச போலீஸ்காரன் அமெரிக்கா அறிவித்தது. ஒன்னரை ஆண்டுகள் படாத பாடுபட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 4ம் தேதி முடிவுக்கு வந்தது மாற்றத்தை நிகழ்த்துவேன் என்ற ஜனநாயக கட்சியின் பாரக் ஒபாமா வெற்றி பெற்றார். அவரது முதல் வார்த்தை சிதறலே இந்தியாவுக்கான பிபிஓ பணியை நிறுத்த வேண்டும், காஷ்மீர் பிரச்சனையில் தலையிடுவோம் என்பது தான்.. அமெரிக்க பொருளாதார நிபுணரும், அறிஞருமான நோம் சாம்ஸ்கி சரியாகவே சொன்னார். ஜனநாயக கட்சியோ, குடியரசு கட்சியோ ஆட்சியில் இருப்பது பொருட்டல்ல. எந்த தத்துவத்தை பிரதிநிதித்துவ படுத்துகிறார்கள் என்பதே முக்கியம். இப்போதும் முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியே ஆட்சியில் அமர்ந்துள்ளார் என்றார்..
சுவிட்சர்லாந்தில் பிக் பேங் என்ற பிரமாண்ட சோதனை அணுவை பற்றிய அடுத்த கட்ட வளர்ச்சியை வெள்ளோட்டமிட்டது. ஈராக் முன்னாள் அதிபர் சதாமின் ஆதரவாளர்களை தேடி சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 9 தொழிலாளர்களை பலி கொடுக்க நேரிட்டது.
சீனாவின் சோகம் மே மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் 70 ஆயிரம் பேர் பலியானார்கள். அதையும் தாண்டி சீனா தனது சாதனையை மீண்டும் ஒரு முறை பீஜிங் ஒலிம்பிக் போட்டி நடத்தியதும், பதக்கப்பட்டிலில் முதலிடத்தை தக்க வைத்ததன் மூலம் நிரூபித்தது. லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சிமெண்ட் ஆலைகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
2008ம் ஆண்டில் பயங்கரவாத நடவடிக்கை பல நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் தொடர் தற்கொலைப்படை தாக்குதல், இலங்கையில் அரசுக்கும் எல்டிடிஇக்கும் இடையேயான போர், ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகளின் அத்துமீறியத் தாக்குதல், லெபனான், பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதல், ஆப்கான் தலைநகர் காபூலில் இந்திய துhதரகம் தாக்கப்பட்டது,
இந்தியா சந்திரனுக்கு சந்திராயனை அனுப்பி சாதனை படைத்தது. அதே இந்தியா தனது அயல்துறை கொள்கையை தனது பராம்பரியத்தில் இருந்து விலகி ஏகாதிபத்திய ஆதரவு கொள்கையை எடுத்து அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது அமெரிக்காவின் இளைய இராணுவகேந்திர பங்காளியாக மாற்றி உலக பாதுகாப்பு மற்றும் போர் நடவடிக்கையின் ஒர் அங்கமாக காங்கிரஸ் அரசு மாற்றிவிட்டது இடது சாரிகளின் எதிர்ப்பை மீறி.. அதனால் இந்தியா ஒரு கருப்பு தினத்தினை சந்தித்தது.

தேசிய அளவில்
2008ம் ஆண்டில் ஜூலை 22 என்ற கருப்பு தினத்தை இந்திய நாடாளுமன்றம் சந்தித்தது. அன்றுதான் கோடிகள் நாடாளுமன்றத்தில் கொட்டப்பட்டது அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பட்டது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் அரசு மேற்கொண்ட குதிரை வியாபாரத்தை கண்டு மக்கள் எள்ளி நகையாடினார்கள். 2008 ம் ஆண்டு ஒளிர்ந்த இந்தியனையும், ஒழிந்த இந்தியனையும் பார்க்க முடிந்தது. 83.77 கோடி இந்தியர்கள் 20ரூபாய் வருமானத்தில் வாழ்வதாக அர்ஜூன் சென் குப்தா கமிட்டி ரிப்போர்ட் கூறுகிறது.
ஒவ்வொரு நாளும் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரம் கூறுகிறது. மிகச் சிறந்த பொதுத்துறை மருந்து தயாரிப்பு நிறுவனங்களான கிண்டி, குன்னுhர், காசோலியில் இருந்த நோய் தடுப்பு மருந்து நிறுவனங்கள் அன்பான மணியான அய்யாவால் மூடப்பட்டது. இந்தியாவில் போதிய சுகாதாரமின்மை காரணமாக கர்ப்பிணி பெண்கள் 4 நிமிடத்திற்கு ஒரு பெண் இறக்கின்றனர். 58 சதம் பெண் குழந்தைகள் ஊட்டசத்து இல்லாமல் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை பற்றி கவலைப்படாத இந்திய அரசு மின்சார தேவைக்காக என காரணம் கூறி 3.50 லட்சம் கோடி ரூபாயை அமெரிக்காவிற்கு கொடுக்க அணுசக்தி ஒப்பந்தத்தை போட்டுள்ளது.
2008ல் இந்தியாவின் நாடாளுமன்றம் 46 நாட்கள் மட்டுமே கூடி சாதனைப்படைத்தது. குளிர்கால, மழைக்கால கூட்ட தொடரே இல்லாத ஆண்டாக இந்தாண்டு அமைந்தது. சுமார் 8.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எல்ஐசியில் அந்நிய மூதலிட்டை 26 சதத்திலிருந்து 49 சதமாக அனுமதிப்பது என்ற அநியாயமான முடிவையும் இந்தாண்டு எடுத்தது.
2008ல் 27 சதவீத இடஒதுக்கீடு பிற்பட்டவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கையை உருவாக்கியது. ஒரே நேரத்தில் இந்தியாவின் விண்வெளித்துறை 10 செயற்கை கோளை ஒரே ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்தி தனது வரலாற்றை சாதனையை மீண்டும் பதிவு செய்தது.
பீகாரில் வெள்ளம் ஏற்படுத்திய வடு சோகமானதாக இருந்தது. திரிபுரா, மேகலாயா, நாகலாந்து, கர்நாடகா, டில்லி, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய சட்டமன்றங் களுக்கான தேர்தலும் இந்தாண்டு நடந்து முடிந்துள்ளது. திரிபுராவில் மீண்டும் மாணிக் சர்க்கார் 60க்கு 49 என்ற எண்ணிக்கையில் மக்களின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தார்.
மதவெறியர்களின் தாக்குதல் ஒரிசா, குஜராத், கர்நாடகா, கேரளா என தொடர்ந்தது. சிறுபான்மையினர் மீதான தாக்குதல் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் ( மாலேகாவ், கான்பூர், ஐதாரபாத், தென்காசி) இந்து மதவெறி அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளது என தீவிரவாத எதிர்ப்பு படையின் தலைவர் கார்க்ரே கண்டறிந்து சொன்னது இந்தியா முழுவதும் பெரும்பான்மை மதவெறியை அடையாள படுத்த உதவியது. அவரும் மும்பையில் நடைபெற்ற தாஜ் ஓட்டல் தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க நடைபெற்ற சண்டையில் பலியானார்.
மத்திய அமைச்சர் அந்துலே அத்தாக்குதலின் பின்னணியும் கார்க்ரே பலியானது குறித்தும் கேள்வி எழுப்ப பிஜேபி, சிவசேனா போன்ற மதவெறியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, காங்கிரசும் சமாதானப்படுத்தும் விதத்தில் மதவெறியர்களுக்கு அடிபணிந்து அந்துலேவை ராஜீனமா செய்ய வைத்தது.
ஊடகத்தின் வளர்ச்சியில் வன்முறையினையும் இந்திய அளவிலும், தமிழக அளவிலும் வளர்த்தது. ஆமாம் மும்பை தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ, காவல்துறை நடவடிக்கையை காட்டுகிறோம் என்று பாருங்க, பாருங்க பாத்துக்கிட்டே இருங்க என 60 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நேரடி ஒளிபரப்பு செய்தது பயங்கரவாதிகளுக்கு இராணுவ, காவல்துறை நடவடிக்கையை கண்டு கொள்ள உதவியது. அந்தளவிற்கு அறிவாளிகளாக நமது ஊடகங்கள் இருந்தது. இதை அரசும் கண்டு கொள்ளவில்லை.
சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லுhரியில் நடைபெற்ற மாணவர்களின் சண்டையை தமிழகத்தின் ஊடகங்களும் மனம் பதற ஒளிபரப்பின. நடைபெற்ற சம்பவத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஒளிபரப்பி சாதிய துவேசத்தை உருவாக்கிய அந்த ஊடகம் பிரச்சனையின் ஆணிவேரை ஒலிப்பரப்ப மறந்தது ஏனோ அல்லது மறுத்தது ஏனோ ? இதே ஊடகம் மே மாதம் 19 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினை சார்ந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு வரக்கூடாது என தீண்டாமைச்சுவரை கட்டி வைத்து கொடுமையை பற்றியோ, மே மாதம் 7ம் தேதி அச்சுவரை இடி அல்லது இடிப்போம் என மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் பிரகாஷ் காரத் தலைமையில் நடைபெற்ற சுவர் அகற்றும் நடவடிக்கையோ ஒளிப்பரப்பவில்லையே என்ன காரணமோ..
இந்தாண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ( அபினவ் பிந்தரா)தங்கம்,(சுசில்குமார், விஜேந்தர்சிங் ) வெண்கலம் என மூன்று பதக்கங்களை பெற்று இந்தியா தனது முத்திரையை பதித்தது. அமெரிக்க வீரர் மைக்கேல் பெலிப்ஸ் 8 தங்க பதக்கங்களை நீச்சல் போட்டியில் பெற்று சாதனை படைத்தார்.
தமிழ்நாட்டின் கேரம் வீராங்கனை இளவழகி உலக கேரம் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்தியாவிற்கு அதிக வெற்றிகளை தேடித் தந்த கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவ்ரவ் கங்குலி ஒய்வு பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 42 சதங்களோடு, 12 ஆயிரம் ரன்களை கடந்து சச்சின் புதிய உலக சாதனையை படைத்தார். அனில் கும்பளே டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

தமிழகத்தில்
தமிழகத்தில் தீண்டாமைக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் உத்தபுரம் தீண்டாமைச்சுவர் அகற்றப்பட்டது. பந்தபுளியில் ஆலய நுழைவுப் போராட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் கல்கேரி ஆஞ்சனேயர் கோவில் உட்பட பல பகுதிகளில் தலித் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை நடத்தியது. இதில் டிஒய்எப்ஐ உத்தரபுரம் மக்களுக்காக நீதி கேட்டு மதுரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது.
மாநில அரசும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 50 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள் என திட்டங்களை ஏழை எளிய மக்களுக்காக துவங்கி வைத்தார். ஆனால் 100 நாள் வேலைத்திட்டத்தில் 80 ரூபாய் கூலிக்கு பதில் 45 ரூபாய் கொடுத்ததை கண்டித்து விழுப்புரம் ரெட்டணையில் போராடிய மக்களின் மீது காவல்துறை துப்பாக்கியால் சுட்டது. இ.கோட்டைப்பட்டியில் சுரேஷ் என்ற வாலிபர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியானார். உளுந்துhர் பேட்டை அருகே ஆலய வழிபாட்டில் சம உரிமை கோரிய தலித் கிறிஸ்தவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானார்கள்.
பன்னாட்டு தொழிற்சாலைகளில் சங்கம் வைக்க, கொடி கம்பம் போட முயன்ற தொழிலாளர்கள் மீது போலீஸ் தடியடி, கைது நடவடிக்கை என தொடர்ந்தது. மதவெறியர்கள் தமிழகத்திலும் தங்களது கைவரிசையை காட்டினர். சென்னை போரூரில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடிய தமுஎகச சங்கத்தினர் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தினார்கள். விழுப்புரம் அருகே கல்லறை தோட்டத்தை சூறையாடினார்கள்.
மணல் கொள்ளையை தடுக்க அரசே மணல் விற்பனை நடத்துவது என அறிவித்தது. சிறுதொழிலை பாதுகாக்க எண்ணற்ற பகுதிவாரியான வேலைநிறுத்தங்கள் பல்வேறு தொழிற்சங்கங்கள், தொழில் வர்த்தக அமைப்புகள் நடத்தியது.
2008ன் தமிழக ஸ்பெஷல் மின்வெட்டும், இலங்கை தமிழர் பிரச்சனையும் ஆகும். கடந்த 15 ஆண்டுகளில் புதிய மின்திட்டங்கள் எதுவும் தமிழகத்தில் துவக்கப்படாமல் மின்வெட்டை சமாளிக்க முடியாமல் தமிழக அரசு திணறியது, பல ஆயிரம் கோடி அந்நிய செலவாணி மற்றும் உற்பத்தியை தமிழகமும், தேசமும் இழந்தது. தமிழகத்த்து தலித் தமிழன் பாதிக்கப்பட்டு உரிமையற்று இருக்கும் போதும், இராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் போதும், வாழ வழியற்று தற்கொலை செய்து கொள்ளும் இந்திய விவசாயிகளை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் இலங்கை பிரச்சனையில் நமது தலையீடு நேரடியாக இருக்க வேண்டும் என ஒரு கூட்டம் கிளம்பியது. இலங்கை தமிழர் தாக்கப்படுவது வருந்ததக்கது. இந்திய அரசு ராஜதந்திர அடிப்படையில் இலங்கை அரசோடு பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய பிரச்சனைக்கு பதில் இன உணர்வை துhண்டியது ஒரு பகுதி. அதில் திரைப்பட துறை தனது பங்கிற்கு எண்ணெயை ஊற்றி வளர்த்தது. 2008ல் இவர்களின் அரசியலுக்கு பயன்பட்டது அப்பாவி இலங்கை தமிழர் பிரச்சனைதான்..
தமிழகத்தில் நடிகர் வடிவேலு வீடு தாக்கப்பட அவர் இதற்கான காரணகர்த்தாவை கண்டுபிடித்து அவரிடமிருந்து தமிழகத்தை பாதுகாக்க தானும் தேர்தலில் போட்டி தமிழகத்தின் 2011ல் முதல்வராவேன் என கிளம்பிவிட்டார். தமிழகத்தில் 119 நேரடி திரைப்படங்களும், 61 மொழி மாற்று படங்களும் என 180 படங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு கூடுதலாக திரைக்கு வந்துள்ளன.இதில் ஒன்பது ரூபாய் நோட்டு, தசாவதாரம், சுப்ரமணியபுரம், பருத்திவீரன் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லும்படி வந்ததுள்ளது. இதில் சாரப்பாளையம் சாமுண்டி என்ற நாவல் ( உளியின் ஓசை ) திரைப்படமாகவும், வெயிலோடு போய் ( பூ ) திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவைகளுக்கு மத்தியில் மக்களின் கோரிக்கைகளுக்காக குறிப்பாக வீட்டுமனைப்பட்டா, மலைவாழ் மக்கள்உரிமை, தொழிலாளர் நலன், விவசாயிகள் கோரிக்கைக்காக மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு இடது சாரி அமைப்புகள், வெகுஜன அமைப்புகள் தொடர்ந்து போராடியது ஒரளவு நம்பிக்கை விதையை துhவியது.
உடல்உறுப்புதான விழிப்புணர்வை இதயேந்திரனின் தந்தை டாக்டர் அசோகன் ஏற்படுத்த அங்கே உடல் உறுப்புதானங்கள் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் தலைசிறந்த இரத்ததான கழகமாக டிஒய்எப்ஐ இரத்ததான கழகம் தேர்வு செய்யப்பட்டு தமிழக ஆளுனரால் விருது வழங்கப்பட்டது.
தமிழகம் பல இளைஞர் அமைப்புகளின் மாநாடுகளை கண்டதில் டிஒய்எப்ஐ விழுப்புரம் மாநாடு வித்தியசமாக அமைந்தது. தலைவர்கள் வாழ்க என்ற கோசமில்லாமல் இளைஞனின், மாணவனின், வறியவனின் கோரிக்கைக்கான கோசத்தோடு முடிந்தது. இந்த மாநாட்டு முடிவுப்படி தமிழக வரலாற்றில் டிஒய்எப்ஐ இளைஞர் அமைப்பு குமரி, ராமேஸ்வரம், கோயம்புத்துhர் ஆகிய மூன்று முனைகளில் இருந்து 3000 கி.மீட்டர்கள் துhரம் சென்னை வரை 14 நாட்கள் நுhற்றுக்கணக்கான தனது சக்திமிக்க ஊழியர்களோடு 10000க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து சைக்கிள் பயணத்தை நடத்தி காட்டியது. இளைஞர்களுக்கான சமூக பாதுகாப்போடு கூடிய வேலை என்ற கோசத்தை முன்னிறுத்தி..
2007ம் ஆண்டு பல நிகழ்வுகளை சந்தித்து இருந்தாலும் மார்க்ஸ் நினைக்கப்படுவதும், இடது சாரி தலைவர்களின் புத்தகங்கள் உலக முழுவதும் நெருக்கடியை தீர்க்கும் ஆயுதங்களாக போப் ஆண்டவராலும், முதலாளித்துவ ஆட்சியாளர்களால் போற்றப்படுவதும் நம்பிக்கையை உருவாக்குகிறது. சரியான வழியில் இந்த பூகோளம் சுற்றிட வழிவகுக்கும்.. ஒரு கவிஞன் கூறியது போல “ இடது பக்கம் செல் என்பது சாலை விதி மட்டுமல்ல.. சமூக விதியும் கூடத் தான்” என்ற வரிகளுக்கு 2009ம் ஆண்டை வரவேற்போம்.
பயங்கரவாத, தீவிர வாத நடவடிக்கைக்கு முற்று புள்ளி வைக்க, வேலையின்மை, கல்வியின்மை, வறுமைக்கு, பசி, பட்டினிக்கு விடைக்கொடுக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு, மதவெறி எதிர்ப்பு, தலித்விடுதலை, பெண்விடுதலை, பண்பாட்டு வளர்ச்சிக்காக முன்னிலும் வேகமான செயல்பாட்டை, போராட்டத்தை உக்கிரமாக, உறுதியாக நடத்திடுவோம்.. இனி நமது பயணம் சிரமத்தை நோக்கியல்ல.. சிகரங்களை நோக்கி என நடைபோடுவோம்..