”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

சட்டத்தை பாதுகாக்க போலீசா ? மீற போலீசா ?



உத்தப்புரம் மறுக்கப்பட்ட நீதி

எங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் தீண்டாமையின் பெயரால் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுமானால் அதற்காக சரியான முறையில் போராட எங்களை தவிர வேறு யாரும் இல்லை.


ரு ஐஜி,

ரு டிஐஜி, ஒரு

ஸ்பி, 4 ஏடிஎஸ்பி, 7

டிஎ

ஸ்பி,

36 இன்ஸ்பெக்டர், 154 சப்இன்ஸ்பெக்டர், 311 ஆயுதக்காவலர் உள்ளிட்டு 1787 காவலர்கள், 14 இடத்தில் மைக்செட் கட்டி,

தடுப்புகள் வைத்து, நுற்றுக்கணக்கான ரோந்து வாகனங்களும், தண்ணீர் பீய்ச்சும் வாகனம், கண்ணீர் புகை வாகனம், குண்டெறி வாகனம் உள்ளிட்டு உத்தபுரம் பகுதியிலும், மதுரைநகர் அதனை சுற்றிய பகுதிகளில் ஒரு கமிஷனர், இரண்டுதுணை கமிஷனர், 6 உதவி கமிஷனர்கள், 15க்கும் மேற்பட்ட ஆய்வாளர்க

ள், 50க்கும் மேற்பட்ட இளம் ஆய்வாளர்கள், விரைவு அதிரடிப்படை, ஒட்டடைபடை,ஆயுதப்படை, புளுபடை, கறுப்பு படை என நூற்றுக்கணக்கான காவலர்கள் புடை சூழ மைக்செட் கட்டி காவல் சோதனை சாவடிகள் அமைத்து சட்ட ஒழுங்கை பாதுகாத்தார்கள் தமிழகத்தின் கன்னியமிகு காவல்துறையினர்.

எதற்கு இந்த பில்டப் என்று பார்த்தால் ஐயா ஆட்சிக்கு களங்கம் வந்துவிடக்கூடாது,. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் ஆகவே நாங்கள் இங்கே வந்துள்ளோம் என காவல் அடிவருடிகள் உரையாட மேலதிகாரிகள்

ஏசி வாகனங்களில் அமர்ந்து வேடிக்கை பார்த்தது.

துக்கு இந்த ஆர்ப்பாட்டம் பரபரப்பு என்று பார்த்தால்.. பொது கோயிலுக்குள் வழிபட செல்லக்கூடாது என்று ஒரு தரப்பினர் ஆதிக்க வெறியோடு சொல்ல.. காலம் காலமாக உழைத்து உழைத்து ஓடாய் போன நாங்கள் பார்த்து கட்டி, பேசி வாழ்நத முத்தலமன் கோயிலில் முத்தலமனை தரிசிக்க யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் உரிமை கேட்டு போராட,..

வழிபாட்டுத் தலங்கள் எல்லோருக்கும் பொதுவானவை. இதில் எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரையும் அனுமதிக்க மறுப்பதோ பாரபட்சம் காட்டுவதோ சட்டவிரோதமானது என்று பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளன. இந்த நிலையில் அரசியல் சாசனத்தையும், நீதிமன்ற தீர்ப்புகளையும், நீதிமறுக்கப்பட்ட மக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டிய தமிழக காவல்துறை ஆட்சியாளர்களின் ஏவலாக ஆதிக்க சக்திகளின் அநியாயங்களை பாதுகாத்தது.

சட்டத்தின் காவலர்கள் சட்டத்தை மீறி சிரிப்பு போலீசா சீரியசான போலீசா என்று பட்டிமன்றம் வைத்திடும் அளவிற்கு ஒருத்தர் 32 ஆக்ட் அமலில் உள்ளது, ஆக கூட்டம் கூடாது என்கிறார். இன்னொருத்தர் 41

போலீஸ் ஆக்ட் அமலில் உள்ளது என்கிறார். எப்ப வேண்டுமானலும் காவல்துறை அதிகாரி சட்ட ஒழுங்கை பாதுகாக்க சட்டத்தை கையில் எடுக்கலாம் என்று போராட்ட தலைவர்களிடம் துணை கமிஷனர் சின்னசாமி திருவாய் மலர்ந்தார். இத்தனை நாள் சட்டம் கையில் இருந்தும் என்னத்த கிழிச்சீங்க என்று முழக்கம் எழுப்பினால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத்தான் நாங்க என்று சிறுபிள்ளைத்தனமாக கீறல் விழுந்த ரெக்கார்டாக சொல்லிக்கொண்

டே கைது செய்து காமெடி தர்பாரை அரங்கேற்றியது திமுக அரசின்

போலீஸ்.

உத்தபுரம் தலித் மக்களுக்கு முத்தாலம்மன் கோவில் அரசமர வழிபாடு என்பது தொன்று தொட்ட உரிமையாகும். 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பஞ்சாயத்து மூலம் தலித்துகளின் 1989ம் ஆண்டு இந்த உரிமை பறிக்கப்பட்டது. கட்டப்பஞ்சாயத்து தண்டனைக்குரியது என நீதிமன்றமும், தமிழக அரசும் பலமுறை உத்தரவிட்ட பிறகும், கட்ட பஞ்சாயத்தின் மூலம் கோயிலுக்கு

வெளியே விரட்டியது ஒரு சாதி வெறிபிடித்த கூட்டம். இதையடுத்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களது பகுதிக்குள் வருவதைத் தடுக்க ஆதிக்க சமூகத்தினர் ஊரில் சுவர் எழுப்பி, பொதுப்பாதையில் கூட நடமாட விடாமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை தடுத்து விட்டனர். இதன் காரணமாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பல கிலோமீட்டர் சுற்றி முக்கியப் பகுதிகளுக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டது.


இந்த நிலையில் ஆலய வழிபாட்டில் தீண்டாமையை, சாதிய வேறுபாட்டை இந்தியாவின் அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை. வழிபாட்டு உரிமைகளை தடை செய்யக் கூடாது என்று பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், பொதுப்பாதையில் நடக்க தடையாக உள்ள இந்த சுற்றுச்சுவரை உடனடியாக தகர்த்தெறிய வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி பல்வேறு வகையில் போராட்டங்களை கையில் எடுத்ததன் விளைவாக மாவட்ட நிர்வாகம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண உத்தபுரம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையின்போது ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநடப்பு செய்ததால் சமாதானம் ஏற்படவில்லை. இதன் பின்னணியில் 2008 மே மாதம் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரகாஷ்காரத் வருகையை ஒட்டி தமிழக ஆட்சியாளர்கள் அவசர அவசரமாக ஒருபகுதி தீண்டாமை சுவரை இடித்தனர். ஆனால் இன்று வரை அந்த பாதையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தனியாக செல்ல ஆதிக்க சாதியினரும், காவல்துறையும் முழுமையாக அனுமதிக்கவில்லை.

சர்சைக்குரிய தீண்டாமை சுவற்றை அப்புறப்படுத்தியபின்னர், அப்பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தரப்படும் என்று மதுரைமாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை குடிநீர், பேருந்து நிறுத்தம் போன்ற வசதிகள் செய்துதரப்படவில்லை என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வாலிபர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் உத்தரபுரம் தலித் மக்கள் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்,

மறுக்கப்பட்ட நீதி

தீண்டாமைக்கெதிராக கேரள மாநிலம் வைக்கத்திலேயே தீண்டாமையை ஒழித்த இயக்கம் திராவிட இயக்கம் பெரியாரின் உண்மையான வாரிசுகள் நாங்கள் தான் என்று சொல்லும் கலைஞர் அவர்களின் ஆட்சியிலே தான் சாதியை பாதுகாக்கும் அரசாக. சாதியப் பார்வையோடு மீண்டும் ஒரு முறை காக்கி சட்டைகள் வைத்து சட்டத்தின் ஆட்சி மீறப்பட்டது. ஆலய வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது.

சமாதானமாய் போங்கள்..

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அருள்மொழி.. யார் சமாதானமாய் போவது. குட்ட குட்ட குனிந்து அடுக்கி வைக்கப்பட்ட மூட்டையில் அடிமூட்டையாக உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் ஆதிக்க சாதியினர் வீட்டு சாக்கடை நீர் தொடர்ந்து செல்கிறது. அதற்கான வடிகால் வசதி செய்து மூடி போட்டுக் கொடுங்கள் எங்கள் குழந்தைகளை சுகாதாரத்தோடு பாதுக்காக்க வேண்டும் என்று எழுப்பப்பட்ட கோரிக்கைகள் இன்று வரை ஆட்சியாளர்களின் செவிப்பறையில் பட்டு எதிரொ

லித்துக் கொண்டே தான் இருக்கிறது. மழையிலும், வெயிலிலும் நனைந்து கொண்டே இருக்கிறோம், பேருந்து நிறுத்தத்தில் ஒரு நிழற்குடை அமைத்துக்

கொடுங்கள் என்றால் தலித் மக்களின் சம்மந்தியான ஆட்சியாளர்களுக்கு நிதி வசதி இல்லை. சரி

டி.கே. ரங்கராஜன் மாநிலங்களவை உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கினால் அதை கூட செலவு செய்ய மாட்டேன் என்று மறுக்கும் நிலை.. இதனையெல்லாம் சுட்டி காட்டி சில மாதங்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்ட ஆட்சியரின் அழைப்பின் பேரில் ஆர்ப்பாட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு சென்றால், ஆட்சியர் செத்த பொறுங்கள். ஒரு போன் வருகிறது என்கிறார். போனில் பேசியவுடன் இவர்கள் உரிமை கேட்டு பேசுகிறார்கள் கைது செய்யுங்கள் என வயதானவர்கள் என்றுகூட பாராமல் ஆண், பெண், குழந்தைகள் என அனைவ்ரையும் துவைத்து எடுக்கிறது கடமைவீரர்களான காக்கி சட்டை கும்பல்..

பேச்சுவார்தையில் ஈடுபட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களையே துவைத்தெடுத்த தமிழகக் காவல்துறை. தற்போது மீண்டும் ஒரு முறை ஒரு மாதத்திற்கு முன்

பே சட்டத்தின் ஆட்சியை லாக்குங்கள் என அறிவிப்பு கொடுத்து, கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம் என நடத்திவிட்டு அதன் பின்புதான், சட்டத்தை லாக்க மறுத்தால் போராடுவோம் என்று போராடத் தயாரானால் உத்தபுரத்தை யுத்தபுரமாக தமிழகத்தை ஆளும் கலைஞர் அரசு மாற்றிவிட்டது.

பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலே நடத்த முடியாமல் இருந்த மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் கிராமங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினரின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்பே முற்போக்கு எண்ணம் கொண்ட ஜனநாயக அமைப்புகளின் உதவியோடு மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் அங்கு தேர்தலை நடத்தி மக்கள் பிரச்னைக்குத் தீர்வு காண அரசின் பல்வேறு சிறப்பு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல், உத்தபுரம் கிராமத்திலும் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட சிறப்பு நலத்திட்டங்களை அரசு அறிவித்து, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

ஒடப்பராய் இருக்கும் ஏழையப்பர், உதையப்பராகிவிட்டால் ஒர் நொடிக்குள் ஒடப்பர், யரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிடுவர் உணரப்பா நீ.. என்ற பாவேந்தரின் வார்த்தைகளை 1960களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது தமிழகத்தின் வீதிகளில் பேசி வந்த திமுக அரசே.. இன்றும் இந்த வாசகங்கள் உயிர்ப்புடன் உள்ளது என்பதே உத்தப்புரம் உழைக்கும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை நடத்திய போது பார்க்க முடிந்தது..

..