”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

உலகெங்கும் ஒரே மொழியில் பேசுபவை புத்தகங்கள் மட்டுமே!



நீதிபதி ராமசுப்பிரமணியம் இலக்கிய சொற்பொழிவு
திருப்பூர், ஜன.27-
உலகெங்கும் பல்வேறு வேறுபாடுகளைத் தாண்டி ஒரே மொழியில் பேசக்கூடிய சக்தி புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் கூறினார்.
9வது திருப்பூர் புத்தகக் கண்காட்சி - 2012ன் இரண்டாம் நாள் நிகழ்வாக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் 20வது இலக்கிய விருதுகள் வழங்கும் விழா வியாழனன்று நடைபெற்றது. தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் ஏ.முருகநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் 2010ம் ஆண்டுக்கு சிறந்த படைப்பாளிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கி நீதிபதி ராமசுப்பிரமணியம் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:
நூல்களைத் தொடர்ந்து படிப்போருக்கு ஆண்டொன்று போனால் வயதொன்று குறையும்! அந்த அளவுக்கு மனதை இளமையாக வைத்திருக்க நூல்கள் துணை செய்யும். இலக்கியத் தாகம், இலக்கியத் தாக்கம், இலக்கிய நோக்கம் இல்லாமல் ஒரு மனிதன் இருக்க முடியாது. சில புத்தகங்கள் கடந்த கால வரலாற்றைப் பதிவு செய்கின்றன. ஆனால் சில புத்தகங்கள் எதிர்கால வரலாற்றை உருவாக்குகின்றன. நாடு, மதம், இனம், மொழி, நிறம், பண்பாடு என எல்லாவற்றையும் தாண்டி உலகெங்கும் ஒரே மொழியில் பேசக்கூடியவை புத்தகங்கள் மட்டுமே! ஜெர்மனியில் பிறந்து லண்டன் நூலகத்தில் நாளொன்றுக்கு 18 மணி நேரம் படித்து கார்ல் மார்க்ஸ் உருவாக்கிய மூலதனம் புத்தகம் ரஷ்யாவிலும், சீனாவிலும் புரட்சியை ஏற்படுத்தியது.
ஒரு கவிதையால் ஐம்பதாண்டு கால வரலாற்றைக் கூட நான்கே வரிகளில் பதிவு செய்ய முடியும். அமெரிக்காவில் 1960ம் ஆண்டு வரை இனஒதுக்கல் நடைமுறை இருந்தது. ரோசா பார்க் எனும் கருப்பினப் பெண் பேருந்தில் அமர்ந்து சென்றபோது வெள்ளையர்கள் இன ஒதுக்கலைக் கடைபிடித்ததால் அங்கே மார்டின் லூதர் கிங் தலைமையில் பெரும் போராட்டம் வெடித்தது. ஒபாமா அதிபராகப் பொறுப்பேற்ற போது, 19 வயதே ஆன பெண் ஒருவர், கருப்பின மக்கள் நடத்திய அந்தப் போராட்ட வரலாற்றைப் பற்றி அற்புதமாக கவிதை வடித்தார். "ரோசா பார்க் அமர்ந்தார், லூதர் கிங் நடந்தார், ஒபாமா ஓடினார், நாளை எங்கள் குழந்தைகள் பறப்பார்கள்!" என்ற அந்த கவிதை மிகவும் புகழ் பெற்றது.
சாதாரண கடிதங்களில் பிறக்காத இலக்கியம் உண்டா? ஒரு சம்பவத்தை நாம் பார்க்கும் பார்வையில் தான் இலக்கியத்தன்மை பொதிந்திருக்கிறது. நம் கடந்த கால வரலாற்றை நாம் என்றைக்கு மறந்த போகிறோமோ, அன்றைக்கு நமது எதிர்கால வரலாற்றைப் படைக்க முடியாதவர்களாக மாறிவிடுகிறோம். மிக உயர்ந்த கவிதை என்பது பாதியை கவிஞன் சொல்ல வேண்டும், மீதியை வாசகன் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகெங்கிலும் இந்தியாவைப் போல் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை பறைசாற்றி, ஏற்றுக் கொண்டு வெளிப்படுத்தக்கூடிய ஒரு நாடு இருக்க முடியாது. நம் நாட்டைப் பாதுகாப்போம். இவ்வாறு நீதிபதி ராம சுப்பிரமணியம் கூறினார்.

டிஒய்எப்ஐ இரத்ததான கழகம் பாராட்டுவிழா



இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழும், நினைவுப்பரிசும் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு. நீதியரசர். வி.ராமசுப்பிரமணியன் அவர்கள் வாழ்த்தி பேசும் போது இங்கே அமர்ந்துள்ள வாலிபர் சங்கத்தினர் பாரதியின் வாரிசுள் என்றும் சொன்னதை பெரிதும் வரவேற்கிறேன்.
தேடி சோறு நிதம் தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடி துன்பம் மிக உழன்று பிறர்
வாட பல செயல்கள் செய்து நரை
கூடி கிழபருவமெய்தி - கொடுங்
கூற்றுக்கிரையென பின்மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போல் நான்
வீழ்வெ னென்று நினைத்தாயோ? என்று உழைப்பையும், சமூக முன்னேற்றத்திற்கான தனிநபர் பங்கையும் சிலேகித்து பாடியவன் பாரதி.. அந்த பாடல் வரிகள் உங்கள் இரத்ததான கழக மலரில் இடம் பெற்றிருந்தது. அதே போல் பொய்யாய் பழங்கதையாய்க் கனவாய் மெல்ல போனதுவே என தாயுமானவர்களின் வார்த்தைகளை உள்வாங்கிய பாரதி
அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
தன்னுடைய சுயசரிதை முடிவுரையில் குறிப்பிடுவான். அப்படி வாழ்ந்த பாரதியின் வரிகளை நீங்கள் தாங்கியதில் நான் பெருமை கொள்கிறேன். இத்தகைய பார்வை உங்களில் இருந்த காரணத்தினால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வர நான் ஏற்றுக்கொண்டேன்.
நல்ல காரியங்களை செய்வர்களை பாராட்டி மேலும் அவர்களை வாழ வைக்க வேண்டும். அதை செய்யாத ஒரு நாடு சீரழிந்து போகும். இந்த மேடை மக்களுக்கான மேடை என்று மக்களுக்காக பணியாற்றும், தியாகம் செய்யும் இளைஞர்களின் மேடையாக இருப்பதால் காவலும், நீதியும் இங்கே வந்துள்ளது. சமூகத்தினை அமைதியாக வழி நடத்த வேண்டியவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ளோம்.   சிவப்பும், கருப்பு வெள்ளையும், காக்கியும் என கலர்புல்லாக மேடை அமைந்துள்ளது.
இன்றைய சமூகத்தில் வாழ்க்கை நான்கு பெட்டிகளுக்குள் அடங்கி விடுகிறது. செல்போன் பெட்டி, கணணி பெட்டி, தொலைகாட்சி பெட்டி இந்த மூன்றிலேயே மூழ்கியவன் இறுதியில் சவப்பெட்டியில் அடக்கமாகிவிடுகிறான்.
ஆங்கிலத்தில் ஒரு திரைப்படம் ( ஹ டிககஉநசள  ய பநவேடநஅய ) எடுத்தார்கள். அதில் காவல்துறை அதிகாரி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தலைப்பிட்டுவிட்டு படத்தில் வரும் அதிகாரி அதுப்படி      நடக்கமாட்டார். அப்படியில்லாமல் மதுரை புறநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மக்களுக்கான பணியை சரியாக செய்வதால் இந்த மேடைக்கு அவரை அழைத்ததாக நிகழ்ச்சி           ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டதை நான் அங்கீகரிக்கிறேன்.
உங்களுக்கு இரண்டு செய்திகளை சொல்ல விரும்புகிறேன்
ஒன்று 1907ம் ஆண்டு பிறந்த ரிசார்டு டிட்மஸ் என்ற அறிஞர் அதிகம் படித்தவரில்லை. தன்னுடைய சொந்த முயற்சியில் ஆங்கில வார்த்தைகளை படித்து பல்வேறு துறை சார்ந்த விசயங்களை தெரிந்துகொண்டவர். அதை ஆங்கிலத்தில் ஆட்டோ டைலர்ட் என்று சொல்வார்கள்.   லண்டன் ஸ்கூல் ஆப் இன்ஸ்டியூட் என்ற கல்வி நிறுவனத்தில் அவர் இறுதி காலம் வரை அவரது அறிவிக்ககாக பேரரசியராக நியமிக்கப்பட்டு  பணியாற்றினார்.
அவர் 1970ல் கூந பகைவ சநடயவடிளோயீ டிடிம ( கசடிஅ டெடிடின னடியேவடி வடி ளடிஉயைட  யீடிடஉல ) இரத்ததானம் எப்படி சமூகத்தை பன்படுத்தும் என ஒரு புத்தகத்தை எழுதினார்.  அந்த புத்தகம் அமெரிக்க மற்றும்   பிரிட்டன் நாடுகளில் இரத்ததானம் குறித்த அரசுகளின் கொள்கைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அன்று அமெரிக்காவில் இரத்ததானம் என்பது இலவசமாக கொடுப்பதற்கு பதில் இரத்த வங்கிகள் பெரிய வர்த்தக நிறுவனங்களில் செயல்பட்டது. அங்கு இரத்த விற்பனை என்பது நடைபெற்றது. இதனை விமர்சனம் செய்து இரத்தத்தை விற்கும் ஒரு சமூகம் தனது மதிப்பீடுகளை இழந்து கீழே போகும் என்றான். பாரதி சொல்வானே படித்தான் சூது வாது செய்தால் போவான் போவான் அய்யோ என்று      அத்தகைய விமர்சனத்தை ரிசர்ர்டு டிட்மஸ் முன் வைத்தார். அதன் பின்பு அமெரிக்க குருதி கொடை குறித்து ஒரு சட்டத்தை நிறைவேற்றி குருதி கொடை விற்பனை முறைப்படுத்தியது.
அதே போல் ஸ்வீடன் நாட்டின் பொருளாதார துறை ஒரு ஆய்வை இரத்த கொடையாளர்கள் குறித்து  நடத்தியது. ஒரு குருதி கொடையாளர் குருதி தானத்தின் போது பணத்தை பெற்றுக் கொண்டு கொடுக்கிறாரா ? அதில் ஆண்கள் பெண்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என நடத்தப்பட்டதில் 52 சதம் ஆண்கள் குருதிக்கொடைக்கு பணத்தை பெற்றுக் கொண்டுதான் கொடுத்துள்ளனர். ஆனால் பெண்களில் 30 சதம் பேர் மட்டுமே பணத்தை பெற்றுள்ளனர். இதர பெண்கள் தியாக பூர்வமான சேவைக்கு    பணத்தை வாங்கக்கூடாது என மறுத்துவிட்டனர் என்று ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர். இது ஆண்கள் சமூகம் வெட்கி தலைகுனிய வேண்டிய விசயமாகும்.
இரண்டாவதாக குருதி கொடை என்பது மேலும் ஒரு நபரை உலகிற்கு அறிமுகம் செய்தது.  ஜேம்ஸ் ஹேரிசன் அவருக்கு தற்போது 70 வயதாகிறது. அவர் 13 வயது சிறுவனாக இருந்த போது அவருடைய இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தபோது  13 லிட்டர் இரத்தம் தேவைப்     பட்டது. அப்போது அவர் தனக்கு சிறப்பாக அறுவை சிகிச்சை முடிந்தால் தனது 18 ஆவது வயதில் இருந்து  குருதி தானத்தை செய்திடுவதாக சபதம் ஏற்று உறுதி மொழி தந்தார். அவருடைய இரத்தத்தை பரிசோதிக்கும் போது ஆண்டி வேக்சின் என்ற அபூர்வ வகையான குணம் இருந்தது. இது ஆர் ஹெச் பிளஸ் மற்றும் மைனஸ் காரணங்களால் தாய் சேய் இருவரிடையே ஏற்படும் குருதி குணத்தால்        ஏற்படும் சநளரள னளைநயளந ரிசஸ் நோய்  பாதிப்பால் உள்ள குழந்தைகளுக்கு அவரது ரத்தத்தை கொடுக்க முடியும். அதனால் அவர்களை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை தெரிவித்தனர். அதன் வெளிப்பாடாக கடந்த 56 ஆண்டுகளில் 984 முறை அவர் இரத்தத்தை தானமாக வழங்கியுள்ளார்.  இதனால் 22 லட்சம் குழந்தைகளுக்கு      ( 2.2மில்லியன் ) வழங்கப்பட்டு அவரது பேரக்குழந்தைகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறது.
இப்படி குருதி கொடை என்பது ஒரு தேசத்தில் புதிய சட்டத்தை உருவாக்கியது. ஒரு அறிஞரை கொடையாளரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்தது. குழந்தைக்கு எப்படி பேதம் தெரியாதோ அதைப் போல பேதமில்லாமல் அனைவரையும் வாழ வைக்கும் இந்த குருதி கொடையை செய்து வரும் வாலிபர் சங்க இரத்ததான கழகத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த நல்ல விசயங்களை உலகுக்கு உரக்க சொல்வோம். என்று உரையாற்றினார்.


காவல் துறை கண்காணிப்பாளர் திரு. அஸாரகார்க் அவர்கள் இரத்ததானத்தினை அளிக்கும் கொடையாளருக்கும், பெறுபவருக்கும் ஏற்படும் மருத்துவ பயன்களை அற்புதமாக தனது உரையில் குறிப்பிட்டார். அதே போல் சாதி, மத கலவரங்கள் நடந்தபோது மக்கள் ஓற்றுமை, அமைதியை பாதுகாக்க வாலிபர் இயக்கம் முன்னின்று போராடியதை பாராட்டியதோடு இன்றைய படித்த நாகரிகமாக சமூகம் மாறிக் கொண்டு இருக்கும் போது இன்றும் கடைபிடிக்கப்படும் தீண்டாமை போன்ற விசயங்களுக்கு எதிராக வாலிபர் சங்கம், மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் போராடி அதற்கு தீர்வு காண்பது வரவேற்க தக்கது. இவர்கள் தான் சமூகத்தை தாங்கி     நிற்கிறார்கள். இன்று இரத்ததானத்தில் சிறந்து விளங்கும் இவர்களின் இந்த இரத்தங்கள் தென்    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு காய்சலுக்கு 300 யூனிட்கள் மதுரையில் இருந்து அனுப்பப்              பட்டுள்ளதாக வந்தசெய்தி குருதி கொடையின் முக்கியத்துவத்தையும், இவர்களின் சேவையையும்   உணர்த்துகிறது. எனவே இது போன்ற சமூக சேவைகள் தொடர இளைஞர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.