”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

வீர மங்கை வேலு நாச்சியார்

இந்திய விடுதலைப்போரில் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே பிரிட்டீஸ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய முதல் பெண் வீரங்கனை வீரமங்கை வேலுநாச்சியார் ஆவார். தென்னிந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மகத்தான போர் நடத்தி வெள்ளையரையும், ஆற்காடு நவாப்பையும் புறங்காண செய்த வீரமங்கை வேலுநாச்சியார்தான்.

இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு அருகிலுள்ள சக்கந்தி என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார் தம்பதிகளுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம். வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் சுட்டிதான். பத்து மொழிகள் தெரியும். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். வேலு நாச்சியார் கல்வி, ஆயுதப்பயிற்சி, நிர்வாகத் திறன் என அனைத்திலும் தேர்ச்சி பெற்றார். போர்க்களம் சென்று, வாளெடுத்துப் போர் புரியும் ஆற்றலோடு விளங்கினார். அவர் ஒரு சிறந்த வீராங்கனையாக உருவாக்கப்பட்டார். சிவகங்கைச் சீமையின் இரண்டாவது மன்னர் முத்து வடுகநாதப் பெரிய உடையத் தேவருக்கும் வேலுநாச்சியார் திருமணம் நடைபெற்று அவரது பட்டத்து ராணியானார்.

மன்னர் முத்துவடுகநாதத் தேவருக்கு பெரிதும் உறுதுணையாக பிரதானி தாண்டவராய பிள்ளை, ராணி வேலு நாச்சியார், தளபதிகளாக மருது சகோதரர்கள் இருந்தனர். நெடுநாட்களாக வேலு நாச்சியாருக்கு குழந்தைச் செல்வம் இல்லாமலிருந்தது. பின்னர் அவருக்கு ஒரு பெண் மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு வெள்ளச்சி எனப் பெயரிட்டு இளவரசியைப் பாலூட்டிச் சீராட்டி செல்லமாக வளர்த்து வந்தார்.

இந்நிலையில் முத்து வடுகநாதத் தேவர், ஆற்காடு நவாபிற்கு கப்பம் கட்ட மறுத்ததால் கம்பெனிப் படையும், நவாபின் படையும் இணைந்து காளையார் கோஉயிலில் தங்கியிருந்த முத்து வடுகநாதத் தேவர் மேல் போர் தொடுத்தன. 25-6-1772ல் நடைபெற்ற காளையார் கோவில் போரில், கம்பெனிப் படையின் பீரங்கிக் குண்டுகளுக்குப் பலியாகி, மன்னரும் அவரது இளைய ராணி கௌரி நாச்சியாரும் வீர மரணமடைந்தனர். முத்து வடுகநாதர் இறந்தவுடன் வேலு நாச்சியார் உடன்கட்டையேறி, தனது உயிரைப் போக்கிக் கொள்ள விரும்பினார். பிரதானி தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள் வேலு நாச்சியாரைச் சமாதானம் செய்து, இழந்த சீமையை எப்படியேனும் மீட்டுத் தருவதாக ராணிக்கு வாக்குறுதி வழங்கி வேலு நாச்சியாரை காத்தனர். சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடியில் தங்கியிருந்த வேலுநாச்சியார், வெள்ளச்சி நாச்சியார் முதலியோர் பிரதானி தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள் துணையுடன் மேலூர் வழியாக திண்டுக்கல்லுக்கருகிலுள்ள விருப்பாட்சிப் பாளையத்திற்குத் தப்பிச் சென்றார்.

விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால நாயக்கர், விருப்பாட்சியில் பாதுகாப்பாக தங்க வைத்தார். அங்கிருந் ஆற்காடு நவாபின் பிடியிலிருந்து இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதிகளை மீட்கவும், நவாப்பை விரட்டி அடிப்பதற்கும், ராணி வேலுநாச்சியார் திண்டுக்கல்லில் தங்கியிருந்த மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் படை உதவி கேட்டார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் மூலம் வீரமிக்க விடுதலைப்படைஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.பிரதானி தாண்டவராயபிள்ளை 8-12-1772 வேலுநாச்சியார் சார்பாக ஹைதர் அலிக்கு ஒரு கடிதமெழுதி ஐயாயிரம் குதிரை வீரர்களையும், ஐயாயிரம் போர் வீரர்களையும் அனுப்பி வைத்தால், அவர்களுடன் இணைந்து போரிட்டு, இரு சமஸ்தானங்களையும் நவாபிடமிருந்து கைப்பற்ற இயலுமென்று, அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். துரதிஷ்டமாக தாண்டவராய பிள்ளையவர்கள் படை உதவி கேட்ட ஆறு மாதங்களுக்குள் 1773ம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக உயிர் நீத்தார்.

பின்னர் வேலு நாச்சியார் தனது படைகளை சிவகங்கை பிரிவு, திருப்த்தூர் பிரிவு, காளையார் கோயில் பிரிவு என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்தார். சிவகங்கைப் பிரிவிற்கு தனது தலைமையிலும், திருப்த்தூர் பிரிவிற்கு நள்ளியம்பலம் என்பவர் தலைமையிலும், காளையார் கோயில் பிரிவிற்கு மருது சகோதரர்கள் தலைமையிலும் படைகளைப் பிரித்து வேலு நாச்சியார் அனுப்பி வைத்தார். வேலுநாச்சியார் அம்முப்படைப் பிரிவை அனுப்பி மும்முனைத் தாக்குதல் நடத்தி நவாபின் படைகளை எளிதில் வெற்றி கண்டார்

விருப்பாச்சி பாளையத்தில் தங்கியிருந்த போது வேலு நாச்சியார், அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார், மருது சகோதரர்கள் முதலியோர் திண்டுக்கல் கோட்டையிலிருந்த மைசூர் மன்னர் ஹைதர் அலியைச் சந்தித்தனர். அவர், அவர்களை வரவேற்று உபசரித்தார். ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். மேலும் ராணியுடனிருந்த சின்னஞ்சிறு சிறுமி வெள்ளச்சி நாச்சியாரைக் கண்டு மனமிரங்கி அனுதாபம் கொண்டார். அச்சிறுமி மேல் பரிவும், பாசமும், கருணையும் கொண்டார். அவர்களது தாய் நாட்டுப் பற்றையும், வீரத்தையும் கண்டு வியந்து அவர் மகிழ்ச்சியுற்று அவர்களுக்கு உதவி செய்வதாக ஆறுதல் கூறினார்.

பிரதானியின் மறைவிற்குப் பின்னர், வேலுநாச்சியார் தான் நேரடியாக அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டார். குறிப்பாக பிரதானி விட்டுச் சென்ற பணிகளில் சிவகங்கைச் சீமையின் நாட்டார்களுடன் கொண்ட ஓலைத் தொடர்புகளை, தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். தமது கணவரிடம் மிகுந்த விசுவாசத்துடன் பணியாற்றிய மருது சகோதரர்களையும் இந்த அரசியல் பணியில் வேலுநாச்சியார் ஈடுபடுத்தினார்.

விருப்பாட்சியிலிருந்து சிவகங்கைச் சீமைத் தலைவர்களுக்கு அனுப்பிய ஓலைகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. சிவகங்கைச் சீமை மக்கள் பலர், சிறுசிறு குழுக்களாக ஆயுதங்களுடன் விருப்பாட்சி போய்ச் சேர்ந்தனர். அவர்கள் ராணி வேலுநாச்சியாரைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். சிலர் அங்கேயே ராணிக்குப் பாதுகாப்பாகத் தங்கவும் செய்தனர். இதற்குள் எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.

ராணி வேலு நாச்சியாரது முயற்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு நெருங்கி வந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர்களையும், ஆற்காடு நவாபையும், ஒருசேர அழித்தொழிக்கும் திட்டத்தை உருவாக்கி அதைச் செயல்படுத்துவதற்கு ஹைதர் அலி தயாரானார். சிவகங்கைச் சீமையை ஆற்காடு நவாபின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு உதவும் படைகளைத் திண்டுக்கல் கோட்டை வந்து பெற்றுக் கொள்ளுமாறு ஹைதர் அலி, ராணி வேலுநாச்சியாருக்கு செய்தி அனுப்பினார். அதன் படி 1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 காலாட் வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் உடன் அனுப்பி வைத்தார்.

ஆற்காடு நவாபின் படைகள் வழியில் பல்வேறு தடைகளை அமைத்தன. வேலு நாச்சியாரது குதிரைப் படைகள், அத்தடைகளைத் தகர்த்தெறிந்து, பெரும் தாக்குதலில் ஈடுபட்டன. மதுரைக்கருகில் கோச்சடை என்னுமிடத்தில் கம்பெனிப் படைகளும், நவாபின் படைகளும் தடைகள் ஏற்படுத்தித் தாக்கின. வேலு நாச்சியாரது படைகள், நவாபின் படைகளைப் பாய்ந்து தாக்கித் தவிடுபொடியாக்கின. மானாமதுரை வைகையாற்றுப் பகுதியில், வேலு நாச்சியாரது படைகள், கம்பெனி படைகளைத் தாக்கி அவை ஓடி ஒளியுமளவிற்குச் சண்டையிட்டு வெற்றி பெற்றன.

வேலு நாச்சியார் படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், வெள்ளைப்படையில் உருட்டல், மிரட்டலுக்கு பயப்படாமல் வேலு நாச்சியாரை காட்டிக்கொடுக்க முடியாது என சொன்னதால் வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். தற்போது இந்த இடம் கொல்லங்குடி வெட்டையார் 'காளியமாள்' என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்தது. சிவகங்கை அரண்மனை வாயில் முற்றத்தில் பரங்கிபடையின் ஆயுத கிடங்கு இருந்தது. அதனை அழித்தொழித்தால் எளிதில் அரண்மனையை முற்றுகையை தகர்த்துவிட முடியும் என்ற நிலையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். இந்திய சுதந்திரப்போரின் முதல் மனித வெடிகுண்டாக செயல்பட்டு வெள்ளையரை ஆட்டம் காண வைத்தார். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.

1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி

நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று பூமிதாயின் மடியை அரவனைத்துக் கொண்டார்.

அந்த மகத்தான பெண் போராளி இந்திய சுதந்திரப் போரின் முதல் வீராங்கனையாக கும்பினிக்கு எதிராக போராடியவர் மட்டுமல்ல.. 1805 வேலூர் புரட்சி, 1857 முதல் இந்திய சுதந்திரப் போர் இவைகளுக்கு முன்பு வெகுமக்களை, விவசாயிகளை, பெண்களை திரட்டி மக்கள் பங்கேற்ற விடுதலைப்படை அமைத்து வெகுஜனபுரட்சி நடத்தியது மிக முக்கிய நிகழ்வாகும். உண்மையில் மக்களின் தலைவியாக இருந்து போராட்டத்தை நடத்திய வீரமங்கை வேலுநாச்சியார் என்றென்றும் நினைக்கப்பட வேண்டிய, கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய தியாகி ஆவார்.

ஜன்லோக்பால்’ - ஒரு மாற்றுக் கருத்து


ஊழலை தடுக்கும் மசோதா குறித்து ஒரு பார்வை

-கே.என். பணிக்கர்

42 ஆண்டுகளின் தயக்கத்துக்கும் தடு மாற்றத்துக்கும் பிறகு நாடு முழுவதிலும் பல் கிப்பெருகியுள்ள ஊழலை எதிர்கொள்வதற்கு ஒரு நிறுவனமய ஏற்பாடு கண்ணுக்குத் தெரி யத்தொடங்கியுள்ளது. இப்போது அரசு இயந் திரத்தை நகர வைத்துள்ளது அன்னா ஹசாரேயின் தலைமையில் நடைபெற் றுள்ள போராட்டமே. இந்த போராட்டத்துக்கு பெரு நகரங்களில் மட்டும் தன்னெழுச்சி யான ஆதரவு இருந்துது. புதுதில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் அன்னா ஹசாரே தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவக் கிய ஐந்துநாட்களுக்குள் மத்திய அரசு அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. மத்தியில் ஒரு லோக்பால் அமைப்பை நிறுவுவதற்கான குழுவை அமைத்தது. இது இந்திய அரசின் கடந்த கால அணுகுமுறையிலிருந்து வேறு பட்டதாக இருந்தது. ஆந்திரமாநிலம் அமைக் கப்படவேண்டும் என்பதற்காக காலவரை யற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்ட பொட்டி ஸ்ரீராமுலு அக்கோரிக்கைக்காக தனது உயிரை அர்ப்பணிக்க வேண்டியிருந்தது என் பதை நினைவுபடுத்திக்கொள்வோம். ராணு வப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம் ரத்து செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐரம்ஷர்மிளா 10 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

ஜன் லோக்பாலை அமைக்கும் முடிவின் பின்னணியாக அமைந்த சில நிகழ்ச்சிப் போக்குகள் இந்திய ஜனநாயகம் செயல்படும் முறை குறித்து சில அடிப்படைக்கேள்வி களை எழுப்புகின்றன. குழுவின் பரிசீல னைக்காக வைக்கப்படும் தலைப்புகளையும் குழு உறுப்பினர்களையும் முடிவு செய்வதில் அன்னா ஹசாரேஎன்ற ஒரு தனிநபர் தீர்மான கரமான பங்கினை ஆற்றியுள்ளார். மக்களின் சார்பாக குழுவில் இடம்பெற வேண்டிய பிரதி நிதிகள் அவரால் தேர்வு செய்யப்பட்டுள்ள னர். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள பல் வேறு அரசியல் கருத்துக்களின் பிரதிநிதி களுக்கு குழுவில் இடமளிக்கப்படவில்லை. அரசாங்கத்தின் சார்பாக ஐந்து மத்திய அமைச்சர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனர். குழு உறுப்பினர்களைத்தேர்வு செய்வதில் எத்தகைய ஜனநாயகக் கோட்பாடுகளும் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதைக் கூறத் தேவையில்லை.

ஊழலுக்கு எதிரான இந்த இயக்கத்தில் அன்னா ஹசாரேயின் தனிப்பட்ட செல் வாக்கு முக்கிய பங்கு வகித்துள்ளது என்ற போதிலும் அவர் உண்ணாவிரதம் மேற்கொண் டதும் அவர் விடுத்த இறுதி எச்சரிக்கையும் மிரட்டிப்பணியவைக்கும் அணுகுமுறை என்று பலரும் கூறியுள்ளனர். இத்தகைய அணுகுமுறைகளுக்கு ஒரு ஜனநாயக அமைப்பில் இடமில்லை என்பது பலரது கருத்து.

தான் ஒரு அரசியல் சார்பற்றவர் என அன்னா ஹசாரே கூறிக்கொள்கிறார். ஆனால் அரசியலின் மீதும் அரசியல்வாதிகளின் மீதும் அவரது அவநம்பிக்கை ஆழமானது. ஊழல் நோயை எதிர்ப்பதற்கு அரசியல் முறையைத் தான் அவர் நாடவேண்டியிருந்தது என்பது ஒரு முரண்பாடு. தார்மீகப்பாதையை அவர் தேர்ந்தெடுத்திருப்பார் எனில் ஊழல்களை சாத்தியமாக்கியுள்ள சமூகச்சூழல்களின் மீது அவர் கவனம் செலுத்தியிருப்பார். குடியுரிமை ஆர்வலர்கள் சிலராலும் ஆங்கிலமொழி ஊட கங்களாலும் தேசத்தின் ரட்சகர் போல சித் தரிக்கப்பட்டுள்ள இவரைக்கண்டு அரசாங் கத்தின் தன்னம்பிக்கை, காற்று பிடுங்கப்பட்ட பலூனின் நிலைக்குச் சென்று விட்டது.

எனினும் இந்த இயக்கத்தின் தார்மீக உள்ளடக்கத்தைவிட இது துவங்கப்பட்ட நேரம் தான் மக்களின் ஆதரவுக்குக் காரண மாக இருந்துள்ளது. ஆட்சி பீடத்திலுள்ள பெரிய மனிதர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நவீன தாராளமயக்கொள்கைகளும் தொழில் நிறுவனங்களின் ஆதாயத்துக்காக பொதுச்சொத்துக்களை பிரம்மாண்டமான அளவில் தாரை வார்ப்பதும் தொழில் நிறு வனங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் அரசி யல் ஆதரவுமே ஊழலுக்கான வாய்ப்பு வாசல் களை விரியத் திறந்து விட்டுள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகத்தான் செயல்பட்டுள்ளன. அவை தனியார்மயத்தை தொடர்ந்து ஆத ரித்து வந்துள்ளன. இந்தியாவை நவீனமய மாக்குவதற்கு அந்நிய மூலதனத்தை வர வேற்றுவந்துள்ளன. தாராளமயத்தால் உரு வாக்கப்பட்ட பொருளாதார சூழல்களும் முன் னெப்போதும் இல்லாத ஊழல்களும் உட னுறை நிகழ்வகளாக இருந்து வருகின்றன.

ஊழல் என்பது ஒரு சிக்கலான பிரச் சனை. இது அதிகார வர்க்கத்தின் நெகிழ்ச்சித் தன்மையற்ற போக்கிலும் பொருளாதார வாய்ப்பு வசதிகளைத் திறந்து விடுவது மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றின் மீதும் பதியவைக்கப்பட்டுள்ளது. இந்த விதத்தில் அரசே ஊழலை ஊக்குவிக்கும் காரணியாக இருக்கிறது. இதனை வெறும் அறநெறி சார்ந்த பிரச்சனையாக மட்டும் கருதக்கூடாது. சில தனிநபர்களை தண்டிப்பதன் மூலம் மட்டும் இதற்கு தீர்வுகண்டுவிட முடியாது. அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் வகுப்பு வாதிகளையும் ஆன்மீக வியாபாரிகளையும் வலதுசாரிகளையும் ஓரணியில் திரட்டியுள் ளது. அதுமட்டுமல்ல,குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு தனது ஆசிகளை வழங்கி யுள்ள அன்னா ஹசாரே, குஜராத் மாதிரி வளர்ச்சியை போற்றிப்புகழ்ந்துள்ளார். அவர் பெரிதாகப் பேசிவரும் நியாய-அநியாய அம்சங்களை இங்கே புறக்கணித்துள்ளார்.

தர்ம நியாயங்களில் நடுநிலை வகிக்க லாம் என நம்பும் ஒருவரை தேசத்தின் ரட்சகர் நிலைக்கு சிலரும் அரசாங்கமும் உயர்த்தி யுள்ளது என்பது பெரும் சோகமே. இதில் வியப்படைய எதுவுமில்லை. ஏனெனில் அமைப்புமுறை மற்றும் நிறுவனங்களை மாற் றியமைப்பதைப் பற்றிப் பேசாமல், சீர்திருத்த நடவடிக்கைகளை மட்டும் ஆதரித்து வரும் வரையில், அவர் அன்னா ஹசாரேயாக இருந் தாலும் வேறு எவராக இருந்தாலும் அவர் களைக் கொண்டாடுவதில் அரசுக்கு பிரச் சனை எதுவும் இல்லை. மாறாக அவரையே இதற்கான ஒரு கருவியாக மாற்றுவது அர சின் முயற்சியாக இருக்கும். இதன் விளை வாக அன்னாஹசாரேயும் அவரது குழுவும் இறுதியில் அரசினால் இயக்கப்படும் ஊழல் எதிர்ப்பு இயந்திரத்தின் ஆதரவாளர்கள் நிலைக்கு தள்ளப்படலாம். ஊழல்வாதிகளை தண்டிப்பதற்கான சட்டங்கள் இல்லாமலில் லை. அதற்கான அரசியல் உறுதி ஆட்சி யாளர்களிடம் இல்லை என்பதே உண்மை யான பிரச்சனை.

சமூகப்பிரச்சனைகளில் ஒரு சர்வாதி காரப் போக்குடன் அன்னாஹசாரே செயல் பட்டுவருவதற்கு சிலகிராமங்களில் அவரால் நடத்தப்படும் சமூக சேவை அமைப்புகளே நல்ல உதாரணமாக அமைந்துள்ளன. அரசும் இதே அணுகுமுறையுடன் செயல்பட்டுவரு வதை உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர் பான அரசின் சட்டமுன்வரைவிலிருந்து காணமுடிகிறது. புதிய குழுவின் பரிசீலனை யில் உள்ள ஜன்லோக்பால் சட்டமுன்வரை வின்படி அமையவிருக்கும் ஜன்லோக்பால் அமைப்பு தற்போதுள்ள நீதித்துறையின் அதிகாரவரம்புக்கு கட்டுப்படாததாகவும் சமூக வெற்றிடத்தில் இயங்குவதாகவும் இருக்கும். அது வெளிப்படைத்தன்மையற்ற தாகவும் தனது நடவடிக்கைகள் குறித்து எவருக்கும் விளக்கமளிக்கவேண்டிய கட மையற்றதாக வும் இருக்கும்.

சட்ட முன்வரைவின் நோக்கம் ஊழ லைத்தடுப்பது அல்ல. ஊழல் செய்தவரை தண்டிப்பது தான் அதன் நோக்கம். இது தற் போதுள்ள நிறுவன ஏற்பாடுகளிலிருந்து வேறுபட்டதல்ல. வெளிப்படையான அமைப்புமுறைக்கு இடமளிக்கப்பட்டால் மட்டுமே ஊழலைத் தடுப்பது சாத்தியமான தாக இருக்கும். முடிவு எடுக்கப்படுவதற்கான நிகழ்முறைகள் முற்றிலும் மாற்றப்பட்டு வெளிப்படைத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் ஊழலை சாத்தியமாக்கும் சூழலை அகற்றுவது லட்சியமாக இருக்கவேண்டும். அதற்கு தற்போதைய அரசு நிர்வாக முறை முழுமையாக மாற்றப்படவேண்டும்

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று கூறத்தக்க இன்றைய சூழலில் ஜன்லோக் பால் அமைப்பது வரவேற்கத்தக்க முன்முயற் சியே. ஆனால் இப்போது உருவாக்கமுயலும் லோக்பாலின் மூலம் ஒரு பெரும் பூதத்தை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது. இந்த அமைப்பு ஊழலுக்கு எதிராக தற்போதுள்ள அமைப்புகள் அனைத்தையும் விழுங்கி விடும். தானே சுயேச்சையான முறையில் விசாரணை நடத்துதல், குற்றவாளிக்கூண் டில் நிறுத்துதல் அகிய அனைத்து அதிகாரங் களும் கொண்ட அமைப்பாக அது இருக்கும். ஆனால் தனது செயல்பாடு குறித்து எவருக் கும் விளக்கமளிக்கவேண்டிய கடமை அதற்கு இருக்காது.எனவே அது ஜனநாயக செயல்பாட்டு முறை அனைத்துக்கும் புறம் பானதாக இருக்கும். மக்கள்அமைப்பு என்று பொருள் தரக்கூடிய ஜன் என்ற அடைமொழி இணைக்கப்பட்டுள்ள அந்த அமைப்பு அவ் வாறே செயல்படவேண்டுமானால் அதன் சர்வாதிகாரத்தன்மையும் அதிகாரக்குவிப்பும் இணைந்த அதன் கட்டமைப்பு கைவிடப்பட வேண்டும். மக்களுக்கு அதிகாரம் வழங்கும் கருவியாக அது மாற்றப்படவேண்டும். எனவே இந்த சட்ட முன்வரைவை வடிவ மைக்கும். ஆரம்பக்கட்டத்திலேயே அது ஒவ் வொரு கிராமப்பஞ்சாயத்துக்கும் விவாதத்துக் காக அனுப்பி வைக்கப்படவேண்டும்.
இதன் மூலம் தேசத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப முடியும்.

நன்றி : இந்து
தமிழில்: கி.இலக்குவன்

நன்றி : தீக்கதிர், தினமலர் பத்திரிக்கைகள்