”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

சிறுமை கண்டு பொங்குவாய்





“ஆண்களோடு, பெண்களும்  சரி நிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே” என்றார் மகாகவி பாரதி,.. தான் வாழ்ந்த 39 ஆண்டுகளில் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, பெண்களை ஆராதித்து, பெண்விடுதலைக்காக, பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த பாரதியும், பெரியாரும், அம்பேத்காரும், பாவேந்தரும், பட்டுக்கோட்டையும், அகல்யாரங்கனேக்கரும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும், ஜானகியம்மாவும் என பெண்களுக்காக குரல் கொடுத்தோர் ஏராளம். இவர்கள் வழியில் பெண் சமத்துவத்திற்காக இன்று நாம் போராடி வருகிறோம். தான் வாழ்ந்த 23 வயதிற்குள் ஒட்டுமொத்த இந்தியாவை தட்டியெழுப்பிய மனிதனாக இளம் இந்தியாவின் அடையாளமாக மாறிப்போன மாவீரன் பகத்சிங் “மனிதகுலவரலாறு அனைத்துமே இளைஞர்கள், இளம்பெண்களின் இரத்ததால் எழுதப்பட்டது’’ என இளம் பெண்களின் வரலாற்று பாத்திரத்தை சரியாக பதிவு செய்தவனின் வழித்தடத்தில் தமிழகத்தில் இளம்பெண்களின் விடியலுக்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இளம்பெண்கள் மாநில மாநாட்டை புதுக்கோட்டையிலே அக்டோபர் 27,28 நடத்துகிறது.



பெண்களுக்கு  எதிரான வன்முறைகள்

இன்றைய சமூகத்திலும், குடும்ப உறவுகளிலும் பெண்களின் மீதான வன்முறை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ரோமபுரியில் அடிமைகளின் எழுச்சிக்கு தலைமை தாங்கிய °பார்டகசின் காதல் மனைவி வர்ஜினியா துவங்கி தற்போது வரை பெண்கள் மீதான வன்முறையும், ஒடுக்குமுறையும் நீடித்து வருகிறது. செல்வ கொள்ளைக்காக நடைபெறும் ஒவ்வொரு யுத்தங்களின் இறுதியில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளே அதிகம் நிகழ்கிறது.

இந்திய சூழலில் காலம் காலமாக விதவை மறுமணத்தினை மறுத்திடுவது, குழந்தை திருமணம், பொட்டு கட்டிவிடுதல், தேவதாசிமுறை, உடன்கட்டை ஏறுதல் என்ற சதிக்கொடுமை, பெண்சிசுகொலை உள்ளிட்ட ஏராளமான ஒடுக்குமுறைகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது,. சுதந்திரப்போராட்ட காலம்தொட்டே இதற்கு எதிரான சமூக சீர்திருத்த கருத்துக்கள் வலுப்பெற்றிருந்தாலும் பல சட்டங்கள் வந்தாலும் ஆளும் வர்க்கங்களின் பிற்போக்குதனமான கருத்தியல் என்பது இன்றும் தொடர்கிறது. பிறந்த பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் ஒருபுறம், மறுபுறம் பெண்களின் திருமண வயதை 16 என மாற்றவேண்டும் என்ற கோஷங்களில் இவர்களை புரிந்து கொள்ள முடியும்.

பொதுவாக பெண் என்கிற பாலினத்தின் மீதான ஒடுக்குமுறையோடு, சாதிய ஒடுக்குமுறையும் சேர்ந்து நவீன அறிவியல் யுகத்திலும் பெண்களை வீட்டிற்குள் பூட்டிவைக்கும் ஏற்பாட்டையே செய்து வருகிறது. அரசும், நிலபிரபுத்துவ, பிற்போக்கு சிந்தனையாளர்களின் நடவடிக்கைகளை கண்டும் காணாமல் விட்டு விடும் நடவடிக்கைகளையே மேற்கொள்கிறது. ஆளும் வர்க்கங்களின் சிந்தனைகளின் செயல்தளமாக உள்ள இந்த ஆட்சியாளர்கள், உழைக்கும் மக்களின் கடும் எதிர்ப்பும். போராட்டமும் வீரியமாகும் போது நீதிமன்ற தலையிடுகளும் சேர்ந்து பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முயற்சிக்கிறது.


“பெண்ணுக்கு வீடு உலகம், ஆணுக்கு உலகமே வீடு” போன்ற பழமொழிகள், சிலேடை பேச்சுகளில் கூட பெண்களுக்கு எதிரான சாடலே அதிகம் உள்ளது. குடும்ப பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்ற மனுதர்மவாதிகளின் தாக்குதல் ஒருபக்கம், மறுபக்கம் வேலைக்கு செல்லும் பெண்கள் கூட வீட்டிற்கு திரும்பியவுடன் வீட்டிற்கு வெளியே காலணிகளை மட்டுமல்ல, தங்களது சமத்துவத்தையும் கழட்டி வைத்துவிட்டே நுழையும் நிலைதான் உள்ளது.

பெண் என்றால் வீட்டின் வேலைகாரியாக, சமையல்காரியாக, தாதியாக, தாசியாக, தாயாக. தலைவியாக, வழிகாட்டியாக ஏழுகுணங்களை கொண்டு இருக்க வேண்டுமென சொல்லிவிட்டு தலைவியாக, வழிகாட்டியாக ஆணே இருந்து கொள்ளட்டும் என்று அடிமையாக மட்டுமே பெண்களை திருமண உறவுக்குள் நிலைநிறுத்தும் சடங்குகளும், சம்பிரதாயங்களும் பெண்களுக்கெதிரான நீண்டகால வன்முறையாகும். “சனியன் பிடிச்சவ சந்தைக்கு போனாலும் புருசன் அகப்பட மாட்டான்!” என வீடுகளில்  ஏற்படும் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு கூட பெண்ணையே காரணம் சொல்லும் சமூகமாக புரையோடிபோயுள்ளது. படி தாண்டதவள் பத்தினி என சொல்லி தொழுநோயாளியானாலும் கூடையில் சுமந்து போய் தாசிவீட்டில் விடும் மனைவியாய் இருக்க வேண்டும் என புராண கால நளாயினி கதைகளை கற்பின் அடையாளமாய் சொல்லி வருகிறது.

“கற்பு நிலையென வந்தால் ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்” என்றார் மகாகவி பாரதி. ஆனால் இன்று காதல் திருமணம், கலப்பு திருமணம் என்றால் கூட முதலில் தாக்குதலுக்கு உள்ளாவது பெண்களே.. கல்விநிலைய வளாகங்கள், வேலைசெய்யும் இடங்கள், பொதுஇடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையும், சீண்டல்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. திருமணமான அத்தைபொண்ணும் கிண்டலுக்குரிய பொருள் என்கிற சாதிய பெருமைதான் இன்று கௌரவ கொலைகளாக இந்திய சமூகத்தில் மாறி நிற்கிறது.

உதாரணத்திற்கு தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் 14 மாவட்டங்களில் மட்டும் 7309 வழக்குகள் காவல்நிலையத்தில் பெண்கள் மீதான வன்முறை குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 500 வழக்குகள் வரையே விசாரிக்கப்பட்டுள்ளது என மகளில் நல ஆணையம் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. அதிகாரவர்க்கத்தின் அனைத்து விதமான அத்துமீறல்களும், ஒடுக்குமுறையும் நிகழ்த்தப்படும் பகுதியாக பெண்களும், தலித்களும், பழங்குடியினரும் உள்ளனர். கீழ்வெண்மணியும், வாச்சாத்தியும், சின்னாம்பதியும், நாலுமூலைகிணறும் சாட்சிகளாக உள்ளன.பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக வந்தாலும், பல தீர்ப்புகள் உயர்சாதி அணுகுமுறையோடு பாலியல் வன்முறையில்


உலகமயச்சூழலில் பெண்கள்


பெண் என்றால் அழகு, அந்த அழகை தக்க வைக்க  முன்னாள் உலக அழகி  மார்ஜரி வேல° கூறியது போல “எப்போதும் எந்த நேரத்திலும் நாம் அழகாக இல்லையென்றால் நம்மை யாரும் நேசிக்க மாட்டார்கள்’’ என்ற கருத்தை பெண்களின் பொதுபுத்தியாகவும், அதே போல ஆண்கள் என்றால் வீரம், வலிமை, ஆளுமை என்ற பொதுபுத்தியும் காலமாக உருவாக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய உலகமயமாக்கல் காலத்திலும் பெரு முதலாளித்துவ நிறுவனங்களின் லாபவெறிக்காக சினிமாக்கள், தொலைக்காட்சி தொடர்கள், பத்திரிக்கை போன்ற ஊடகங்களின் உதவியோடு இதே கருத்தை நிலைநிறுத்தி வருகிறது. இதனடிப்படையில் விவசாயம் உள்ளிட்டு பெரும்பகுதி அணிதிரட்டப்படாத தொழில்களில் ஒரே பணியில் உள்ள ஆண், பெண் இருவருக்கும் வேறுபட்ட கூலிகளே இன்றும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பெரும் உழைப்பு மற்றும் பொருளாதார சுரண்டல் நிகழ்த்தப்படுகிறது.

1990களின் புதிய பொருளாதாரக் கொள்கையின் தராக மந்திரமான தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகள் புதிய தலைமுறைக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளது என நுகர்வியத்தை ஊக்குவிக்க முதலாளித்துவ நிறுவனங்கள் ஊடகங்களின் மூலம் குடிமக்கள் சமூகத்தில் நவீனம் என்கிற பெயரில் ஒருவிதமான பொதுபுத்தியை உருவாக்குகிறது. வரலாற்றாசிரியர் கே.என்.பணிக்கர் “நம் மீது திணிக்கப்பட்டுள் இந்த நவீனம் என்பது மேம்போக்கானது, முரணானது இந்தியாவின் மிக நவீனமான பெருநகர் மும்பையில் 62 சதம் மக்கள் குடிசைகளிலும், நடைபாதைகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.  இவர்களுக்கு குடிநீரும், கழிப்பறையும் கிடையாது. நவீனம் என்ற பெயரில் நாட்டின் நலன், மிகச் சிறு பகுதியினரின் நலனுக்கு சமமாகப் பாவிப்பது அடிப்படையில் மிகத்தவறான வியாக்கியானமாகும்’’ என்கிறார்.

முதலாளித்துவ நிறுவனங்களின் லாபவெறி நுகர்வியத்தை ஊக்குவித்து தனி மனித உரிமையின் மீது அத்துமீறலை தொடர்ந்து செய்து வருகிறது.. மனித உரிமைச் சட்டபிரிவு 2(&டவ;) படி 1, வாழ்க்கை உரிமை, 2. சுதந்திர உரிமை, 3. சமத்துவ உரிமை, 4. தனி மனித மாண்பு ஆகியவைகளை காலில் போட்டு உலகமய ஏகபோகம் நசுக்குகிறது. குறிப்பாக அவுட் சோர்சிங் என்ற பெயரால் மூளை சலவை செய்யப்பட்ட மனித இயந்திரங்களை கொண்டு லாப வெறியோடு நிதியை திரட்டும் நடைமுறையை ஏகபோக நிறுவனங்கள் நடத்தி வருகிறது. , “நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை, ஞாயிற்றுகிழமையும் பெண்களுக்கு இல்லை’’ என்ற மொழிக்கேற்ப அதிக உழைப்பு சுரண்டலுக்கு ஆளபவர்களாக பெண்கள் உள்ளனர்.


அதேபோல் அழகுகலை, சருமக்கலை, உடல் ஆரோக்கியம் என சுஷ்மிதா சென்னும், ஜஸ்வர்யா ராயும், லாரா தத்தாவும் உலக அழகிகள் ஆனாலும் ஆனார்கள்.. இந்திய அழகுத்தொழில் இன்று சுமார் ரூ 12,000 கோடி மதிப்பிற்கு வளர்ந்துள்ளது. நம்முடைய மரத்தடி சலுhன்கள் எல்லாம் இன்று உலகமய பின்னணியில் பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. இத்துறையிலும் சலுhன் நிர்வாகி, பியூட்டி ஸ்பா நிர்வாகி, தோல் பராமரிப்பு, மணமக்கள் மேக், ஃபேசன் ஷோ மேக்கப், சினிமா நட்சத்திரங்களுக்கான ஹேர் ஸ்டைல், மேக்கப், உடை அலங்காரம், ஆயுர்வேதம், மசாஜ், ஜலக்கீரிடை என பல்வேறு உப பிரிவுகள் அதற்கென ஸ்பெசலிஸ்டுகள் என்பதோடு இத்துறையிலும் ஆராய்ச்சி, விரிவாக்கம் என இளம்பெண்களையும், இளைஞர்களையும்  &டவ;ர்த்து தங்களது லாபப்பசியை போக்கி கொள்கிறது.  இந்திய சந்தையில் ஹிந்துஸ்தான் லீவர், டாபர், ஹிமாலயா, மரிக்கோ, எல் ஓரியல், மோடி ரெவ்லான், பையோடீக், லக்மே, ஏவோன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள்  தங்களது வலைப்பின்னல்களை விரிவாக்கி வருகின்றன.. மூலிகை மருந்து சார்ந்த அழகுசாதன பொருட்களின் உலக சந்தை மட்டும் சுமார் ரூ 3,000 கோடி அளவிற்கு உள்ளது. இந்தளவிற்கு இந்திய பெண்களை குறி வைத்து உலகமயம் நுகர்வெறியை வேகமாக வளர்த்தெடுக்கிறது.


பெண்களை ஆற்றல்படுத்த

பெண்களை ஆற்றல்படுத்த ( நுஅயீடிறநச டிக றடிஅநn) வேண்டும் என்ற கோஷத்தை முன்னிறுத்தி முற்போக்கு இளைஞர், மாதர் அமைப்புகள் உலகம் முழுவதும் போராடி வருகின்றன. ஆற்றல்படுத்துவதென்றால் “கல்வி, வேலை, சுகாதாரம், நிர்வாகம், பொருளாதார மேம்பாடு, சுயமரியாதை, அதிகாரத்தில் சட்டரீதியான உரிமை’’ வழங்கவேண்டும் என்ற உயரிய நோக்கோடு இளம்பெண்களுக்கான போராட்டத்தை நடத்தி வருகிறது டிஒய்எப்ஐ.

“உண்டி சுருக்குதல் பெண்டிற்கழகு” என பெண்களுக்கு கிடைத்த கொஞ்சநஞ்ச சத்தான உணவையும் வீட்டில் உள்ள ஆண்களுக்கு கொடுத்துவிட்டு வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என பழமொழிகளை வக்கனையாய் சொல்லி கொடுத்து சமூகம் தொடர்ந்து பெண்களை ஏமாற்றி வருகிறது. இதனால் இந்தியாவில் இரத்தசோகை நோய் பாதிப்பில் 51 சதம் பெண்கள் ஆட்பட்டுள்ளனர். இதில் பிறந்த 3 வயது பெண்குழந்தைகளில் 80 சதம் பேருக்கு ஊட்டசத்து குறைவு உள்ளது என அரசின் பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கிறது. கர்ப்பிணி பெண்களில் ஆண்டுக்கு 3.6 லட்சம் தாயும் சேயும் பிரசவகால மரணத்தை சந்திக்கின்றனர். பெண்களுக்கான முழுமையான சுகாதாரத்திட்டங்கள் என்பதை உறுதியாக நடைமுறைப்படுத்துவதே பிரச்சனைகளை தீர்க்கும் நுழைவாயிலாகும்.

மக்கள் தொகை கட்டுப்பாடு என்றால் கூட பெண்களுக்கான கருத்தடை முறைகளே அதிகளவில் முன்னுக்கு வைக்கப்படுகிறது. ஆண்களுக்கு அதை வற்புறுத்துவதில் ஏற்றதாழ்வான நிலைபாடே நீடிக்கிறது. நவீன சாதனங்கள் சமையல் பயன்பாட்டிற்கு வந்தும் பெண்ணே சமைக்கும் நிலை,. சமூகத்தில் நீண்ட காலமாக இருந்து வரும் ஆண்களின் குடிப்பழக்கம் முதலில் தாக்குவது பெண்களையே. “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” போன்ற பத்தாம் பசலிதனமான கருத்துக்களுக்கு சாவுமணி அடிப்பதே பெண்விடுதலையை வேகப்படுத்தும்.

விஞ்ஞானவளர்ச்சியின் நவீன காலமான 21ம் நுhற்றாண்டில் மூடநம்பிக்கையின் பெயரால் சாமியார்களின் ஏமாற்றுவேலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஆன்மீகத்தில் கூட பெண் கடவுள்கள் பத்தினிகளாகவும், ஆண் கடவுளுக்கு பல மனைவியரும் என்றுதான் கூறப்படுகிறது. பிரேமானந்தா முதல் நித்தியானந்தா வரை ஊடகங்களின் பரபரப்பு செய்தியானாலும் பெண்களின் மீதான பாலியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியான அரசியல் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அரசியல் சாசனத்தின் 42 சட்ட திருத்தம்“விஞ்ஞான மனோபாவத்தை வளர்த்துக் கொள்வது” குடிமக்களின் அடிப்படைக் கடமை என்று வரையறுக்கிறது. இதை கடைக்கோடி கிராமத்தில் உள்ள பெண்வரை கொண்டு செல்ல வேண்டியது அரசின் கடமை.. அதில் அரசு தவறுவதிலும் ஒரு அரசியல் உள்ளது.

பெண்ணடிமைத்தனத்தின் முதல் எதிரி வறுமை, அறியாமை, ஆணாதிக்கம், மூடநம்பிக்கை போன்றவைகளுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை குறித்து அரசியல் சாசனம் வரையறுத்தாலும் அரசின் அரசியல் உறுதியின்மையும், மத, சாதிய, இன, பிராந்திய ரீதியான அடையாளத்தின் பின்னால் உள்ள வாக்கு வங்கியை மனத்தில் கொண்டு செய்யப்படும் சமரசமும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். அரசியல் சாசனத்தின் 4 துhண்களில் பிரதான பொறுப்புகளுக்கு சில பெண்கள் வந்துவிட்டாலும் எல்லாம் தலைகீழாக மாறிவிடும் என்ற நம்பிக்கையும் சமூகத்தில் விதைக்கப்படுகிறது. ஆட்சிப்பொறுப்புக்கு வரும் பெண்கள் கூட யாரின் பிரதிநிதியென்றால் முதலாளித்துவ-நிலபிரபுத்துவ வர்க்கங்களின் நலனை கருத்தில்கொண்டே ஆட்சி நடத்துகிறார்கள். ஆகவே மாற்றம் என்பது அடிப்படையில் நிகழ வேண்டும்.

“குடும்பம் என்பது ஜனநாயக பண்புகளை தாங்கும் தொட்டிலாக இல்லை” என ஐ.நா அறிக்கை கூறுகிறது.  அப்படிப்பட்ட குடும்பங்களில் முதலில் ஜனநாயகத்தையும், பெண் குறித்த சரியான புரிதலையும், உருவாக்க வேண்டும். சமூகத்தின் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சமமான உரிமைகளும், திருமணம், குடும்ப சொத்து, குழந்தை பெற்றெடுப்பது போன்றவைகளில் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற கருத்தியலை மாற்றியமைக்கும் உறுதியான நடவடிக்கைகள் அரசினால் மேற்கொள்ளப்பட வேண்டும். “நச்சரிக்கும் குடும்ப வேலைகளில் இருந்து பெண்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும்” என்றார் லெனின்,.

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்தும்”  போராட்டத்தை சமூகத்தளத்தில் தொடர்ந்து நிகழ்த்தி வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இளம் பெண்கள் மாநில மாநாட்டை நடத்துகிறது. “ஒளி படைத்த கண்ணினாய், உறுதி கொண்ட நெஞ்சினாய்”, “புவியை நடத்து பொதுவில் நடத்து” என்ற கோஷங்களை தாங்கி வா.. குயிலியின்,          கல்பனதத்தின், ஜான்சியின், லட்சுமியின் வாரிசுகளாய் அணிதிரண்டு வா,..

No comments:

Post a Comment