”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

இளைஞர் இயக்க வரலாறு





இளமை சாதிக்க துடிக்கும் வயது, சாதனைகளை உருவாக்கும் வயது, தென்றலாகவும், புயலாகவும் நினைத்த வடிவம் எடுக்கும் வயது, ஆக்கத்தின் ஆணிவேர் இளமை.

       “கல்லின் ஓசையிலிருந்தும் கருத்து பெறலாம்
       ஓடும் ஆற்றிலிருந்து கருத்து பெறலாம்’’ என்றார் ஷேக்ஸ்பியர்.

ஓவ்வொரு செயலும் கருத்தை உருவாக்கும் என்றால் உலக வரலாற்றை மாற்றிப் போட்ட ஆயிரக்கணக்கான இளம் வயதினரின் மகத்தான சாதனைகள் தான் அரசியலில், பொருளாதாரத்தில், சமூகத்தில், இலக்கியத்தில், அறிவியலில், மனித குல வளர்ச்சியில் பெரும் பங்காற்றின. இன்றும் வழிகாட்டுகின்றன.

அடிமைகளை மீட்டுடெடுக்க போராடிய °ஸ்பார்ட்கஸ், பல ஆயிரம் மைல்களை மோட்டார் சைக்கிளில் கடந்த சேகுவேராதான் இன்று உலக இளைஞர் இயக்கங்களின் அடையாளமாக இருக்கிறார்கள், 23வயதில் துhக்குகயிற்றை     முத்தமிட்ட பகத்சிங்தான் இன்றைய இந்திய இளைஞர்கள் எழுச்சியின் அடையாளமாக மாறிப் போனான். தங்களது வாழ்வால் ஒரு சமூகத்தின் அடையாளமாக மாறி இன்றும் வாழ்பவர்கள் பெரும்பகுதி இளைஞர்கள் தான்,..இளைஞன்      எப்போதும் தனித்து இருப்பதில்லை, கூட்டமாக நட்போடு, தோழமையோடு வாழ்பவன்.

மனிதர்களுக்கு இருக்கும் காலம் மிகக்குறைவானது, இந்த குறைந்த காலத்திற்குள்ளும் தனது ஆயுளில் உறக்கத்திற்கும், உழைப்பிற்கும் மூன்றில் இரண்டு பங்கை செலவிடுகிடுறான். மீதி உள்ள ஒரு பங்கு ஆயுளில் தான் சமூகம் சார்ந்து, இணைந்து சமூக வளர்ச்சியில் பங்கு கொள்ள முயற்சிகிறான். இந்த குறைவான காலத்திற்குள் ஏதாவது சாதிக்க வேண்டும், சமூகம் பயன்பெறும் வகையில் வாழ வேண்டும் என எதிர்பார்ப்பு இல்லாமல் உழைப்பவன் சமூகத்தில் என்றும் நினைக்கப்படுகிறான்.

பொதுவாக இளைஞன் என்றால் தியாகம், சேவை, போராட்டம் என்பதை தனது கருத்தியலாக கொண்டிருப்பவன். உரிய முறையில் ஊக்குவிக்கப்படும் போது அது சமூகம் சார்ந்த மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பயன்படுகிறது. இன்று அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூக சூழல், வாழ்நிலையை பொறுத்து அவனது பாதை தீர்மானிக்கப்படுகிறது. உலக இளைஞர்களின் வரலாறும் இதைதான் சுட்டிக்காட்டுகிறது. மனிதகுல வரலாறு அனைத்துமே இளைஞர்கள், இளம்பெண்களின் ரத்ததால் எழுதப்பட்டது என்றால் அது மிகையாகாது.

15 ம் நுhற்றாண்டில் காலனி ஆதிக்க நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் புதிய கடல்வழிகளை கண்டறிந்து தங்களது வணிகத்தின் மூலம் செல்வகுவிப்பை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக ஐரோப்பாவில் இருந்து  கொலம்பஸ் அமெரிக்காவிற்கும், வா°கோடாகாமா இந்தியாவிற்கும் வழித்தடங்களை கண்டறிந்து வரைபடங்களில் கடல்வழிகளை நிரந்தரப்படுத்தினர். அத்தோடு புதிய குடியேற்றங்களும், வர்த்தக கொள்ளையும், புதிய அடிமைகளை கண்டறிவதும் நடந்தேறியது.

தங்களது சந்தைபிடிக்கும், செல்வ சுரண்டலுக்கான நடவடிக்கையில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவு புதுவகையான தொழிலாளர்கள் உருவாயினர். நிலப்பிரபுத்துவத்தில் கொத்தடிமைகளாக இருந்தவர்கள் முதலாளித்துவ அமைப்புக்குள் மாறிபோது சுதந்திர அமைப்புக்குள் வந்துவிட்டதாக உணர்ந்தனர். ஆனால் முதலாளித்துவத்தின் கோரபற்களின் பிடியில், சக்கரங்களில் சிக்கிய கரும்பு சக்கையாக தாங்கள் உறிஞ்சப்படுவது அறிந்ததன் பின்னணியில் எழுச்சிகள் உருவாயின. வரலாற்றின் வளர்ச்சிப்போக்கில் குறிப்பிட்ட காலகட்டத்தில் உருவான தீர்க்க முடியாத முரண்பாடுகளாக வாழ்வதாரபிரச்சனைகளும், தலைமுறை இடைவெளியும் முன்னுக்கு வந்த போது இளைஞர்களின் எழுச்சி என்பது தவிர்க்க முடியாத செயலாக மாறியது. இதன்பின்னணியில் இளைஞர் இயக்கங்கள் உருவாக ஆரம்பித்தது.


விக்டர் ஹீயூகோ


1700 களில் துவங்கி 1900 வரை இருநுhற்றாண்டுகளாய் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பிலிருந்து தொழில்மய சமூகமாக வேகமாக மாறிவந்தது. பட்டறைகளும், கைவினைத் தொழில்களும் வணிகத்தோடு சேர்ந்து தொழில்மய கூடங்களாக மாறின. கிராமங்களின் கூட்டுவாழ்க்கை சிதைந்து நகரங்களை நோக்கிய இடப்பெயர்வு வேகமாக நிகழ்ந்தது. நகர்புற இளைஞர்களின் எண்ணிக்கை பெருகியது. 1776ல் “எல்லா மனிதர்களும் சமமாகப் படைக்கப் பட்டவர்கள்” என்ற முழக்கத்தோடு அமெரிக்க புரட்சியும், 1791ல் “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கங்களோடு நடைபெற்ற பிரெஞ்சு புரட்சியும் புதிய சிந்தனைகளை தோற்றுவித்தது.  

இப்படி 18ம் நுhற்றாண்டில் இளைஞர்களின் எழுச்சி தொடர்ச்சியாக நடைபெற்றாலும், 12 ம் நுhற்றாண்டிலிருந்தே அவ்வப்போது எழுச்சி என்பது நடைபெற்றது. இங்கிலாந்தின் 1297ல் புனித மத்தேயூ திருவிழாவினையொட்டி சாதாரண நகர உழைப்பாளி மக்களுக்கும், நீண்ட அங்கி அணிந்த உயர்தட்டு மாணவர்களுக்கும் இடையில் வன்முறை வெடித்து கலவரமாக மாறியது. இது பின்னர் “டவுன் மற்றும் கவுன் கலவரம்” என அழைக்கப்பட்டது.




இசைமேதை மொசார்ட்

சமூக, பொருளாதார, அரசியல் தளத்தில் தங்களுக்கான இடத்தை இளைஞர்கள் தேட ஆரம்பித்த போது அவர்களது ஆசைகளையும், கனவுகளையும், எதிர்காலத்தையும் எழுத்தாளர்கள் வெளிப்படுத்தினர். சமூக நெருக்கடிக்கும், அபத்தங்களுக்கும் எதிராக அன்றைய எழுத்தாளர்கள், கவிஞர்களின் எழுத்துக்கள் தீப்பொறியாய் கிளர்ந்தெழுந்தது. மான்டஸ்க்யூ, ரூசோ போன்றவர்களின் எழுத்துக்கள் இளைஞர்களை தட்டியெழுப்பியது. 


1774ல் கெதே என்ற 24 வயது இளைஞனின் “இளம்வெர்தரின் துயரம்” என்ற நாவல் ஒட்டுமொத்த ஐரோப்பிய இளைஞர்களையும் இழுத்தணைத்த ஜெர்மானிய நாவல். ஜெர்மானிய கவிஞர் சில்லர் எழுதிய “வழிப்பறிக்காரர்கள், வில்லியம் டெல்” என்ற நாடகங்கள் இளைஞர்களின் கோபக்கனலை தீப்பிடிக்க செய்தது.  செவ்வியல் இசையின் சிருஸ்டிகர்த்தா  “ஆமடியஸ் மொசார்ட் ” அரண்மனைக்குள்ளும், தேவலாயத்திற்குள்ளும் இருந்த மதம் சார்ந்த இசையை வீதிக்கு இழுத்துவந்து மக்களின் இசையாக மதச்சார்பற்ற இசையாக மாற்றிய அவரின் இசைக்குள் இளம்தலைமுறை கட்டுண்டு கிடந்தது.

முதலாளித்துவத்தின் தீமைகளும், ஊழல், சர்வாதிகாரம், வறுமை ஆகியன ஐரோப்பாவை மட்டுமல்லாது உலகம்  முழுவதும் கோலோச்ச ஆரம்பித்தது. ஐரோப்பாவில் கற்பனாவாத சோசலிசத்தை முன்வைத்த செயின்ட் சைமோன், பியூரியர், ராபர்ட் ஒவன் ஆகியோரின் கருத்துக்கள் இளைஞர்களை &டவ;ர்த்தது. இதன் பின்னணியில் இயக்கவியலை வளர்த்ததெடுத்த ஹெகல், பயர்பார்க் சிந்தனையில் & ஈர்க்கப்பட்ட இளம் ஹெகலியர்களான மார்க்ஸ்சும், ஏங்கல்சும் 1848ல் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை உழைப்பாளிகளை மட்டுமல்லாது மாணவர்கள், இளைஞர்களையும் தட்டியெழுப்பியது. பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் அதிகளவில் பங்கேற்றனர். இதுதான் ஐரோப்பிய நாடுகளில் இளைஞர்களின் எழுச்சிக்கும், தாக்கத்திற்கும், மாற்றத்திற்கான போராட்டத்திற்கும் அடிப்படையாக அமைந்தது.


பிரான்சில் புரட்சியாளர்கள், தாராளவாதிகள், அடிப்படைவாதிகள் என மூன்று பிரிவினரும் அரசியல் அரங்கில் அணிவகுத்தன் விளைவு பல பகுதிகளிலும் எழுச்சி உருவாயிற்று. இதனால் பிரான்ஸ் தும்மினால் ஐரோப்பாவிற்கு சளிப் பிடிக்கும் என்ற நிலை இருந்தது. அதே நேரத்தில் உலகை குலுக்கிய கொண்டிருந்த நெப்போலியன் 1815ல் வாட்டர்லுh என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்டபோது  ஐரோப்பா மீண்டுமொருமுறை கூறுபோடப்பட்டது. முடியாட்சி ஆட்டம் கண்டது. தொடர்ந்து அடுத்தடுத்த மன்னர்கள் பதவியேற்பதும், முடிதுறப்பதும் நடந்தது. 

பத்தாம் சார்லஸ் பதவியேற்றபோது 1830ல் நான்கு தடைச்சட்டங்களை கொண்டு வந்தான். பத்திரிக்கை சுதந்திரத்தை தடைசெய்வது, கீழ்சபையை கலைத்துவிடுவது, 75 சதவீத மக்களின் வாக்குரிமையைத் திரும்ப பெறுவது, நீதித்துறை அதிகாரத்தைக் குறைப்பது என்பன மக்களின் எதிர்பார்ப்பு எதிராக அமைந்தது. மக்களையும், பெரு முதலாளிகளையும் கோபம் கொள்ள செய்து ஆட்சியிலிருந்து நிலப்பிரபுகளோடு மோதலாக வெடித்தது. ஜூலை 27-29 மூன்று நாட்களும் கலவரத்தின் உச்சத்தில் இருந்தது பாரீஸ் கவிஞர் விகடர் ஹியூகோ போன்ற எழுத்தாளர்களும் அரசியல் களத்திற்கு உதவினர். ஹியூகோவின் ஹெர்னான் நாடகம் இளைஞர்களுக்கு புத்துயிரூட்டியது. இந்த எழுச்சியில் உருவானது தான் இளம் பிரான்சு அல்லது இளம் தலைமுறை அமைப்பாகும். பாரீஸ் பல்கலைகழக மாணவர்களின் எழுச்சி குறித்து காரல்மார்க்ஸ் குறிப்பிடும்போது “1860ல் பாரீஸ் மாணவர்கள் குழப்பமான சூழலிலும் அவர்களது உரிமைகள் பறிபோகிற சூழலிலும் தொழிலாளர்கள் பக்கமே நின்றுள்ளனர் என்பது முக்கியமானது” என்றார்.

 தொழில் முதலாளிகளின் லாபவேட்கைக்கு பெரிய எல்லைப்பரப்பை உடைய தேசங்கள் தேவை என்பதிலிருந்து பெரிய தேசமும், தேசியஅரசும், பொதுமொழியும், கலாச்சாரபாரம்பரியமும், தனி மனித உரிமை என்ற கோசங்களின் பின்னால் அணிதிரட்டலும், மறுபுறம் உழைப்பாளி மக்களின் உரிமைக்கான வர்க்க அணிதிரட்டலும் நடந்தது. பிரெஞ்சு தேசிய நாடாளுமன்றத்தில் இருசாராரும் அமர்ந்திருந்ததை வைத்து அவர்களின் கொள்கைகள் அடையாளம் காணப்பட்டது. சபாநாயகரின் வலதுபக்கம் பழமைவாதிகளும், நடுவில் தாராளவாதிகளும், இடதுபக்கம் புரட்சியாளர்களும் இருந்ததை வைத்து பின்னர் அவர்களின் அரசியல் இடது வலது என கூறப்பட்டது.



1815ல் ஜீனா பல்கலைகழகத்தில் மாணவர் சங்கம் துவக்கப்பட்டது. இதுதான் அமைப்புரீதியாக  உருவான முதல் மாணவர் அமைப்பாககும். அதிலிருந்து துவங்கிய ஒன்றுபட்ட ஜெர்மனிக்கான போராட்டம் 1871ம் ஆண்டில் ஒன்றுபட்ட ஜெர்மனி உருவானது. இந்த மாணவர் சங்கத்தினர் ஜெர்மானிய ஒற்றுமை, ஜனநாயகம், சுதந்திரம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராடினார். ஆளும் ஆட்சியாளர்களோ “ராஜதுரோக நடவடிக்கைகளின் ஊற்றுக்கண்ணாகப் பல்கலைகழகங்கள் இருக்கின்றன” என அறிவித்தனர். “எங்களது சுதந்திரத்தை யாரும் எடுத்துக்கொள்ள உரிமை இல்லை. அப்படி அத்துமீறி செய்பவர்களுக்கு எதிராக நாங்கள் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் நியாயமானதே” என பதிலுக்கு அறிவித்த மாணவர்கள் போராட்டம் 8க்கும் மேற்பட்ட பல்கலைகழகங்களுக்கு பரவியது. அரசின் ஒற்றர்கள் பல்கலைக்கழக வகுப்பறையில் அமர்ந்து போராட்டகாரர்களை பட்டியலிட்டது. போராட்டத்தின் போது அரசின் ஆதரவு கவிஞன் கோட்சூபூ, காரல்சான்ட் என்ற மாணவனால் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அரசு மாணவர் அமைப்புகளை தடைசெய்து சட்டவிரோதம் என அறிவித்தது. 
காரல் சாண்ட்


1815ல் ஜீனா பல்கலைகழகத்தில் மாணவர் சங்கம் துவக்கப்பட்டது. இதுதான் அமைப்புரீதியாக  உருவான முதல் மாணவர் அமைப்பாககும். அதிலிருந்து துவங்கிய ஒன்றுபட்ட ஜெர்மனிக்கான போராட்டம் 1871ம் ஆண்டில் ஒன்றுபட்ட ஜெர்மனி உருவானது. இந்த மாணவர் சங்கத்தினர் ஜெர்மானிய ஒற்றுமை, ஜனநாயகம், சுதந்திரம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராடினார். ஆளும் ஆட்சியாளர்களோ “ராஜதுரோக நடவடிக்கைகளின் ஊற்றுக்கண்ணாகப் பல்கலைகழகங்கள் இருக்கின்றன” என அறிவித்தனர். “எங்களது சுதந்திரத்தை யாரும் எடுத்துக்கொள்ள உரிமை இல்லை. அப்படி அத்துமீறி செய்பவர்களுக்கு எதிராக நாங்கள் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் நியாயமானதே” என பதிலுக்கு அறிவித்த மாணவர்கள் போராட்டம் 8க்கும் மேற்பட்ட பல்கலைகழகங்களுக்கு பரவியது. அரசின் ஒற்றர்கள் பல்கலைக்கழக வகுப்பறையில் அமர்ந்து போராட்டகாரர்களை பட்டியலிட்டது. போராட்டத்தின் போது அரசின் ஆதரவு கவிஞன் கோட்சூபூ, காரல்சான்ட் என்ற மாணவனால் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அரசு மாணவர் அமைப்புகளை தடைசெய்து சட்டவிரோதம் என அறிவித்தது. “நான் இந்த காரியத்தை செய்தேன் நான் சாவதாக இருந்தால் மெச்சத்தகுந்த உயரிய காரணத்திற்காகத்தான் சாவnன். விரைவான வெற்றி இளமையில் மரணம் என்பதே என் விருப்பம்” என விசாரணையின் போது கர்ஜித்த காரல் சாண்ட் பொதுஇடத்தில் தலைதுண்டிக்கப்பட்டு அமைப்பு ரீதியான இயக்கத்தின் முதல் தியாகி ஆகினான். இது மாணவர்களை, இளைஞர்களை தட்டி எழுப்பியது.












“உறுப்பினரா தலையை துண்டியுங்கள் ” என ஆஸ்திரிய அரசு அறிவிக்குமளவுக்கு 1831ல் 25 வயதே நிரம்பிய மாசினி என்ற இளைஞனால் உருவாக்கப்பட்ட இளம் இத்தாலி அமைப்பு கண்டு பயந்தே மேற்குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அரசினால் நாடு கடத்தப்பட்டு தஞ்சம் புகுந்த பிரான்சில் இருந்த இத்தாலியரை ஒன்று திரட்டி மார்செயில் என்ற இடத்தில் இளம் இத்தாலி அமைப்பை உருவாக்கிய மாசினி, காரல்மார்க்சு, ஏங்கல்ஸ் 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடும் வரை ஐரோப்பா அறிந்த கதாநாயகனாக மாசினியே அறியப்பட்டான். ஆஸ்திரிய அமைச்சர் “ஒன்றுப்பட்ட இத்தாலி என்பது புவியியல் மாயை” என கூறியபோது “ஒன்றுபட்ட இத்தாலி தவிர்க்கமுடியாதது, இளம் இத்தாலியர்கள் அதை சாதித்து காட்டுவார்கள்” என்று பதிலடி கொடுத்தான் மாசினி,.

 மாசினியின் எழுச்சியூட்டும் பேச்சும், செயலும் எண்ணற்ற இத்தாலியர்களை தட்டியெழுப்பியது. 
“ ஓ இளைஞர்களே 
 மலைகளுக்குச் செல்லுங்கள்
 ஆலைகளுக்கும், வயல்வெளிகளுக்கும் செல்லுங்கள் 
 அவர்களுடன் உணவருந்துங்கள்,
 அவர்களது உரிமைகளைப்பற்ற பேசுங்கள் 
 அவர்கள் மீதான
 எல்லையற்ற அடக்குமுறைகளை 
 உணரவையுங்கள்.” 
“உறுப்பினரா தலையை துண்டியுங்கள் ” என ஆ°திரிய அரசு அறிவிக்குமளவுக்கு 1831ல் 25 வயதே நிரம்பிய மாசினி என்ற இளைஞனால் உருவாக்கப்பட்ட இளம் இத்தாலி அமைப்பு கண்டு பயந்தே மேற்குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அரசினால் நாடு கடத்தப்பட்டு தஞ்சம் புகுந்த பிரான்சில் இருந்த இத்தாலியரை ஒன்று திரட்டி மார்செயில் என்ற இடத்தில் இளம் இத்தாலி அமைப்பை உருவாக்கிய மாசினி, காரல்மார்க்°, ஏங்கல்° 1848ல் கம்யூனி°ட் அறிக்கை வெளியிடும் வரை ஐரோப்பா அறிந்த கதாநாயகனாக மாசினியே அறியப்பட்டான். ஆ°திரிய அமைச்சர் “ஒன்றுப்பட்ட இத்தாலி என்பது புவியியல் மாயை” என கூறியபோது “ஒன்றுபட்ட இத்தாலி தவிர்க்கமுடியாதது, இளம் இத்தாலியர்கள் அதை சாதித்து காட்டுவார்கள்” என்று பதிலடி கொடுத்தான் மாசினி,. மாசினியின் எழுச்சியூட்டும் பேச்சும், செயலும் எண்ணற்ற இத்தாலியர்களை தட்டியெழுப்பியது. “ ஓ இளைஞர்களே / மலைகளுக்குச் செல்லுங்கள்/ ஆலைகளுக்கும், வயல்வெளிகளுக்கும் செல்லுங்கள் / அவர்களுடன் உணவருந்துங்கள்,/ அவர்களது உரிமைகளைப்பற்ற பேசுங்கள் / அவர்கள் மீதான/ எல்லையற்ற அடக்குமுறைகளை / உணரவையுங்கள்.” என்ற முழக்கம் இளைஞர்களை ஈர்த்தது,இளம் இத்தாலி குறித்த தனது திட்டத்தினை புதிய அரசர் சார்ல° ஆல்பர்ட்க்கு எழுதினான் மாசினி. இக்கடிதம் நிராகரிக்கப்பட்டது. இக்கடிதம் இத்தாலியர்களை கவ்விபிடித்தது. இதுவே பின்னர் பிரகடனமாக மாறியது.  மாசினி நாடு கடத்தப்பட்டதன் பின்னணியில் இளம் இத்தாலி அமைப்பு நசுக்கபபட்டது. ஆனால் 1834ல் மீண்டும் எழுந்தது ஆயுதம்தாங்கிய கிளர்ச்சியாக வெடித்தது. பிரௌன் பிரான்°கோ என்ற இளம் இத்தாலியனால் 1848 முதல் 1856 வரை போராட்டங்கள் தலைமை தாங்கப்பட்டது. தனது 36 வயதில் கொல்லப்பட்டான். 1860 கரிபால்டியின் வெற்றி மறைக்கப்பட்ட ஆல்பர்ட்டின் உடலை தோண்டி எடுத்து சொந்த மண்ணில் அடக்கம் செய்து நினைவு °துhபியை எழுப்பினன். 1872ல் மாசினி மரணமடைந்தார். இந்த இளம் இத்தாலி அமைப்பின் எழுச்சி ஐரோப்பியாவில் பல இளம் இளைஞர் அமைப்புகள் உருவாக காரணமாக அமைந்தது.

6ல் 5 பங்கு விவசாயத்தினை கொண்டிருந்த மிகப்பெரிய நாடான ருஷ்யா பொருளாதாரத்தில் மிகபின்தங்கிய நாடாக இருந்த நாட்டில் 1861க்கு பின் பண்ணையடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு ஆலை முதலாளித்துவத்தின் 25 ஆண்டு கால வளர்ச்சியில் பெரிய ஆலைகளிலும், ரயில்வேயிலும் சுமார் 27 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். ஆலை முதலாளித்துவத்தின் விளைவு தொழிற்சங்கங்கள் உருவானது. 1881 முதல் 1886 வரையான காலத்தில் மட்டும் 48 மிகப்பெரிய வேலைநிறுத்தங்கள் நடைபெற்றது. புதிய சூழலுக்கான தேவையில் இருந்து உயர்கல்வி விரிவாக்கம் நடைபெற்றது. ஆனால் சார் அரசு தன்னை தற்காத்துக்கொள்ள அதிகார வர்க்க எண்ணிக்கை மும்மடங்கு உயர்த்தியது. 

இதன் பின்புலத்தில் பார்த்தால் 1825ல் சார்மன்னன் முதலாம் நிக்கோலஸ் எதிர்த்து ருஷ்ய ராணுவத்தில் கிளர்ச்சியில் இறங்கிய இளம் அதிகாரிகள் 5 பேரின் தலைகள் கொய்யப்பட்டது. இவர்களை டிசம்பரிஸ்டுகள் என்று அழைப்பார்கள். இவர்களின் தாக்கத்தில் அடுத்தடுத்த எழுச்சி நடைபெற்றது. கம்யூனி°ட் அறிக்கை வெளிவந்த போது இந்த மோதல் புதிய கட்டத்தை அடைந்தது. டர்ச்னேவ் என்ற எழுத்தாளரின் தந்தையும் மகனும் என்ற படைப்பில் தந்தையின் பழமைக்கும், மகனின் புதுமைக்கு மிடையேயான போராட்ட வழிமுறைகளில் “நாங்கள் தகர்ப்போம், காரணம் நாங்கள் வலிமையானவர்கள், நாங்கள் அழிக்கப்பட்டாலும் எங்களது செயல்கள் நியாயமானதே” என்ற இளம்தலைமுறையினர் சவால் அந்த நாட்களின் இளைஞர்களின் குரலாய் எதிரொலித்தது. 

6ல் 5 பங்கு விவசாயத்தினை கொண்டிருந்த மிகப்பெரிய நாடான ருஷ்யா பொருளாதாரத்தில் மிகபின்தங்கிய நாடாக இருந்த நாட்டில் 1861க்கு பின் பண்ணையடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு ஆலை முதலாளித்துவத்தின் 25 ஆண்டு கால வளர்ச்சியில் பெரிய ஆலைகளிலும், ரயில்வேயிலும் சுமார் 27 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். ஆலை முதலாளித்துவத்தின் விளைவு தொழிற்சங்கங்கள் உருவானது. 1881 முதல் 1886 வரையான காலத்தில் மட்டும் 48 மிகப்பெரிய வேலைநிறுத்தங்கள் நடைபெற்றது. புதிய சூழலுக்கான தேவையில் இருந்து உயர்கல்வி விரிவாக்கம் நடைபெற்றது. ஆனால் சார் அரசு தன்னை தற்காத்துக்கொள்ள அதிகார வர்க்க எண்ணிக்கை மும்மடங்கு உயர்த்தியது. இதன் பின்புலத்தில் பார்த்தால் 1825ல் சார்மன்னன் முதலாம் நிக்கோலஸ் எதிர்த்து ருஷ்ய ராணுவத்தில் கிளர்ச்சியில் இறங்கிய இளம் அதிகாரிகள் 5 பேரின் தலைகள் கொய்யப்பட்டது. இவர்களை டிசம்பரி°டுகள் என்று அழைப்பார்கள். இவர்களின் தாக்கத்தில் அடுத்தடுத்த எழுச்சி நடைபெற்றது. 

6ல் 5 பங்கு விவசாயத்தினை கொண்டிருந்த மிகப்பெரிய நாடான ருஷ்யா பொருளாதாரத்தில் மிகபின்தங்கிய நாடாக இருந்த நாட்டில் 1861க்கு பின் பண்ணையடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு ஆலை முதலாளித்துவத்தின் 25 ஆண்டு கால வளர்ச்சியில் பெரிய ஆலைகளிலும், ரயில்வேயிலும் சுமார் 27 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். ஆலை முதலாளித்துவத்தின் விளைவு தொழிற்சங்கங்கள் உருவானது. 1881 முதல் 1886 வரையான காலத்தில் மட்டும் 48 மிகப்பெரிய வேலைநிறுத்தங்கள் நடைபெற்றது. புதிய சூழலுக்கான தேவையில் இருந்து உயர்கல்வி விரிவாக்கம் நடைபெற்றது. ஆனால் சார் அரசு தன்னை தற்காத்துக்கொள்ள அதிகார வர்க்க எண்ணிக்கை மும்மடங்கு உயர்த்தியது. இதன் பின்புலத்தில் பார்த்தால் 1825ல் சார்மன்னன் முதலாம் நிக்கோல° எதிர்த்து ருஷ்ய ராணுவத்தில் கிளர்ச்சியில் இறங்கிய இளம் அதிகாரிகள் 5 பேரின் தலைகள் கொய்யப்பட்டது. இவர்களை டிசம்பரி°டுகள் என்று அழைப்பார்கள். இவர்களின் தாக்கத்தில் அடுத்தடுத்த எழுச்சி நடைபெற்றது. கம்யூனி°ட் அறிக்கை வெளிவந்த போது இந்த மோதல் புதிய கட்டத்தை அடைந்தது. டர்ச்னேவ் என்ற எழுத்தாளரின் தந்தையும் மகனும் என்ற படைப்பில் தந்தையின் பழமைக்கும், மகனின் புதுமைக்கு மிடையேயான போராட்ட வழிமுறைகளில் “நாங்கள் தகர்ப்போம், காரணம் நாங்கள் வலிமையானவர்கள், நாங்கள் அழிக்கப்பட்டாலும் எங்களது செயல்கள் நியாயமானதே” என்ற இளம்தலைமுறையினர் சவால் அந்த நாட்களின் இளைஞர்களின் குரலாய் எதிரொலித்தது. 1883ல்  பிளக்கானவால் உருவாக்கப்பட்ட அமைப்பு பழையதை சரிசெய்து புதியபாதையை அமைத்தது. 1890 களுக்கு பின் ருஷ்ய இளைஞர்கள் சமூக ஜனநாயக இயக்கங்களை நோக்கி அணிவகுத்தனர். அது வரை இடைப்பட்ட காலத்தில் பல்வேறு தனிநபர் சாகசங்களும், பல்கலைகழக மாணவர்களின் எழுச்சிகளும், இளம் தொழிலாளர்களின் போராட்டங்களும் சார் மன்னர்களின் சந்ததியை துhங்கவிடாமல் செய்துவந்தது. 1905ல் லெனின் தலைமையில் நடத்தப்பட்ட முதல் புரட்சிக்கு பின் இளைஞர்களின் எழுச்சி என்பது சிந்தாந்தரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டது.

இளம் அயர்லாந்து அமைப்பின் தியாகமும், வீரம் செறிந்த போராட்டமும் ஒரு வரலாற்று காவியமாகும். இங்கிலாந்தின் அத்துமீறிய ஆக்கிரமிப்புக்கு எதிராக 1790முதல் 1870கள் வரை நடைபெற்றது. அயர்லாந்துகாரர்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு பின்பு தியோபால்ட் உல்பட்டோன் தலைமை ஏற்றவுடன் போர்படையாக மாற்றப்பட்டு போராடியது. இந்த போராட்டத்தில் கத்தோலிக்கர்களும், புராட்டஸ்டன்டுகளும் இணைந்து அரசுப்படையுடன் மோதினர். இதன் தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக 1823ல் டேனியல் ஒ கன்னல் கத்தோலிக்க சங்கத்தை உருவாக்கி கூடவே இணைப்பு ரத்து கழகம் என்ற அமைப்பையும் உருவாக்கி இங்கிலாந்து நாடாளுமன்றத்தோடு அயர்லாந்தின் அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட வேண்டும் என்ற கோசத்தோடு பிரிட்டிஸ் நாடாளுமன்றத்திற்கு தேர்வு பெற்றான்.

ஐரீஸ் எழுச்சியின் போது. வீரர்கள்

இளம் அயர்லாந்து அமைப்பின் தியாகமும், வீரம் செறிந்த போராட்டமும் ஒரு வரலாற்று காவியமாகும். இங்கிலாந்தின் அத்துமீறிய ஆக்கிரமிப்புக்கு எதிராக 1790முதல் 1870கள் வரை நடைபெற்றது. அயர்லாந்துகாரர்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு பின்பு தியோபால்ட் உல்பட்டோன் தலைமை ஏற்றவுடன் போர்படையாக மாற்றப்பட்டு போராடியது. இந்த போராட்டத்தில் கத்தோலிக்கர்களும், புராட்டஸ்டன்டுகளும் இணைந்து அரசுப்படையுடன் மோதினர். இதன் தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக 1823ல் டேனியல் ஒ கன்னல் கத்தோலிக்க சங்கத்தை உருவாக்கி கூடவே இணைப்பு ரத்து கழகம் என்ற அமைப்பையும் உருவாக்கி இங்கிலாந்து நாடாளுமன்றத்தோடு அயர்லாந்தின் அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட வேண்டும் என்ற கோசத்தோடு பிரிட்டிஸ் நாடாளுமன்றத்திற்கு தேர்வு பெற்றான். ஆனால் நிலப்பிரபுக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் பொறுப்பில் இருந்து விலகினான். இதிலிருந்த இளைஞர்கள் 1842லிருந்து இளம் அயர்லாந்து என்ற அமைப்பாக செயல்பட்டனர். 

இளம் அயர்லாந்து அமைப்பின் தியாகமும், வீரம் செறிந்த போராட்டமும் ஒரு வரலாற்று காவியமாகும். இங்கிலாந்தின் அத்துமீறிய ஆக்கிரமிப்புக்கு எதிராக 1790முதல் 1870கள் வரை நடைபெற்றது. அயர்லாந்துகாரர்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு பின்பு தியோபால்ட் உல்பட்டோன் தலைமை ஏற்றவுடன் போர்படையாக மாற்றப்பட்டு போராடியது. இந்த போராட்டத்தில் கத்தோலிக்கர்களும், புராட்ட°டன்டுகளும் இணைந்து அரசுப்படையுடன் மோதினர். இதன் தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக 1823ல் டேனியல் ஒ கன்னல் கத்தோலிக்க சங்கத்தை உருவாக்கி கூடவே இணைப்பு ரத்து கழகம் என்ற அமைப்பையும் உருவாக்கி இங்கிலாந்து நாடாளுமன்றத்தோடு அயர்லாந்தின் அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட வேண்டும் என்ற கோசத்தோடு பிரிட்டிஸ் நாடாளுமன்றத்திற்கு தேர்வு பெற்றான். ஆனால் நிலப்பிரபுக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் பொறுப்பில் இருந்து விலகினான். இதிலிருந்த இளைஞர்கள் 1842லிருந்து இளம் அயர்லாந்து என்ற அமைப்பாக செயல்பட்டனர். ஓபிரையன், மெகர், டேவிஸ், டஃபீ, மைக்கேல், தில்லான் போன்ற இளைஞர்கள் தலைமை ஏற்று நடத்தினர். 1845ல் 1849 வரை அயர்லாந்தில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் விளைவு லட்சக்கணக்கான மக்கள் மடிந்தனர். வடஅமெரிக்காவிற்கு கப்பலில் பயணித்தவர்கள் ஆயிரக்கணக்கில் கப்பலிலேயே மரணித்தனர்.  இதற்கு சவபெட்டிகப்பல் என்ற பெயரும் வரலாறு சுமந்து நிற்கிறது. இந்த நெருக்கடிக்கு காரணமான இங்கிலாந்திற்கு எதிரான ஆயுதம் தாங்கிய எழுச்சி நடைபெற்றது. அமெரிக்காவில் ரகசியமாக ஐரீ° குடியரசு சகோதரத்துவம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு ரகசிய ராணுவ அமைப்பாக போராட்ட களத்தில் நின்றது. 1791-1803 வரை முதல் எழுச்சி டோன் ராபர்ட் எம்மட் ஆகியோராலும், இரண்டாவது எழுச்சி ஓபிரையன், டேவி° போன்றவர்களாலும், மூன்றாவது எழுச்சி கெல்லி, டிசே ஆகியோரால் ஆயுதம் தாங்கியும் நடத்தப்பட்டது.

1840ல் ஆ°திரியாவில் செயல்பட்ட இளம் வியன்னா இயக்கம்  தேச ஒற்றுமை, சமூகநீதி, பொருளாதார வளம் ஆகியவற்றை முன்னிறுத்தி அனைவருக்கும் வாக்குரிமை மற்றும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை முன்வைத்து போராடினார்கள். இதில் அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்ததற்கு இளம் வியன்னா இயக்கம் முக்கிய பங்காற்றியது. இதே போன்று போலாந்து, சுவிட்சர்லாந்து, இளம் அமெரிக்கா போன்ற அமைப்புகள் மன்னராட்சிiயும், ஜனநாயக கோரிக்கைகளுக்காகவும், ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் போராடினார்கள் என்றால் மிகையாகாது.

ருஷ்யா, சீனா, கியூபா, வியட்நாம், இந்தியா உள்ளிட்டு  பல்வேறு நாடுகளின் சுதந்திரப்போராட்ட வரலாற்றைப் பார்த்தால் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்களின் வீரம்செறிந்த போராட்டமும், தியாகமும் மெய்சிலிர்க்க வைக்கும். இவர்களோடு படைப்பாளிகளும் தங்களது படைப்புகளை இந்த எழுச்சிக்கு கொடுத்து உதவினார்கள், தட்டி எழுப்பினார்கள். அதே நேரத்தில் இந்த போராட்டங்களை மட்டுப்படுத்த மதரீதியான அமைப்புகளும் உருவாயின. 1855ல் இளம் ஆண்கள் கிறி°தவர்கள் கழகம், 1894ல் இளம் பெண்கள் கிறி°தவர்கள் கழகம்  1895ல் உலக கிறி°துவ மாணவர்கள் யூனியன் போன்றவையும் தோன்றின. அன்றைய சூழலில் கிறி°தவ மத பீடம் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கும் நிலையில் சுரண்டும் வர்க்கத்திற்கு ஆதரவாக இருந்தது.

இந்த வரலாற்றின் வெளிச்சத்தில் நாம் நமது இந்திய சமூகத்தை பார்த்தால் இன்றைய கிராமப்புற மற்றும் நகர்புறத்தில் அடித்தட்டில் உள்ள கோடானுகோடி இளைஞர்களை உலகமய நுகர்வியமும், ஊடகங்களும், ஆட்சியாளர்களின் கொள்கைகளும் தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது. 99 சதமான இளைஞர்களின் வாழ்க்கை நிலையை ஒளித்து வைத்துவிட்டு குறிப்பிட்ட 0.01 சத பணக்கார இளைஞர்களின் வாழ்க்கையை இந்திய இளைஞர்களின் ஒளிரும் வாழ்க்கை நிலைதான் இந்திய இளைஞர்களின் வாழ்க்கை நிலை என ஊதிக்கொண்டே இருக்கிறது.. இவைகளின் வஞ்சகத்தை, குள்ளநரித்தனத்தை தோலுரித்துக்காட்ட வேண்டியது இன்றைய இளைஞர்களின் கடமையாகும்.
இந்த வரலாற்றின் வெளிச்சத்தில் நாம் நமது இந்திய சமூகத்தை பார்த்தால் இன்றைய கிராமப்புற மற்றும் நகர்புறத்தில் அடித்தட்டில் உள்ள கோடானுகோடி இளைஞர்களை உலகமய நுகர்வியமும், ஊடகங்களும், ஆட்சியாளர்களின் கொள்கைகளும் தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது. 99 சதமான இளைஞர்களின் வாழ்க்கை நிலையை ஒளித்து வைத்துவிட்டு குறிப்பிட்ட 0.01 சத பணக்கார இளைஞர்களின் வாழ்க்கையை இந்திய இளைஞர்களின் ஒளிரும் வாழ்க்கை நிலைதான் இந்திய இளைஞர்களின் வாழ்க்கை நிலை என ஊதிக்கொண்டே இருக்கிறது.. இவைகளின் வஞ்சகத்தை, குள்ளநரித்தனத்தை தோலுரித்துக்காட்ட வேண்டியது இன்றைய இளைஞர்களின் கடமையாகும்..
இன்றைய உலகமயச்சூழலில் இளைஞர்களை ஆழமாக ஆட்கொண்டு இருப்பது  “விரும்பிய வாழ்க்கை பெறுவதற்கு,.. எதுவும் செய்யலாம்.. சுயமுன்னேற்றம், சுயபுகழ், உன்னைப்பற்றி மட்டுமே சிந்தி,.. அடுத்தவன் வாழ்க்கையை அவன் பார்த்துக் கொள்வான்.” என உலகமயம் நுகர்வியத்தை அடிப்படையாக கொண்டு தொடர்ந்து மூளையை சலவை செய்து கொண்டு இருக்கிறது. இதனால் இளைஞர்கள் தன்னுடைய வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றவாறு சுயநல நோக்கோடு எப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தாலும் முன்னேற துடிப்பதை சரி என சொல்லும் தொலைகாட்சி தொடர்கள்.. 24 மணி நேரமும் நிற்காமல் தொடர்ந்து போதித்து கொண்டு இருக்கிறது.

மறுபுறம் விளையாட்டுவீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் என மிகப் பெரிய பட்டாளம் பெரும் கொள்ளைக்கார நிறுவனங்களுக்கு ஆதரவாக விளம்பரம் என்ற பெயரால் இளைஞர்களின் சிந்தனையை மழுங்கடிக்கும் நடவடிக்கையை தொடர்ந்து செய்து வருகிறார்கள். உலகளாவிய அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது லாப வெறி காரணமாக தன்னுடைய ஏகபோக வளர்ச்சியை, செல்வாக்கை விஸ்தரிக்கும் நடவடிக்கையை தொடரும் வகையில் இன்று பல நாடுகளில்  தொழில், நிதி, சந்தை, தகவல்தொடர்பு, அழிவுக்கான ஆயுதங்கள் தயாரிப்பு என தனது வலையை அனைத்து தளங்களிலும் விரிக்கிறது.

கார்ப்ரேட் கலாச்சாரம் துhங்காமல் பணியாற்றுவதை திறமையாக, சிறப்பாக செயல்படுகிறார் என வர்ணிக்கிறது. இதனால் ஏற்படும் துhக்க கோளாறு நோய் பற்றி தெரியா வண்ணம் அவர்கள் வேலை வாங்கப்படுகின்றனர். தற்போது சென்னை போன்ற மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில்  வாரத்திற்கு 7-10 பேர் இப்பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய கால் சென்டர்களில் பணியாற்றும் 20-30 வயதிற்குள் இருக்கும் இளைஞர்கள், இளம்பெண்களில் 34 சதவீதம்பேர் பல்வேறு விதமான துhக்க கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாஸ்டர்கார்ட் நடத்திய ஆய்வில் 2015ம் ஆண்டில் இளைஞர்கள்  ஷாப்பிங்கிற்காக 14.4 பில்லியன் டாலர், பொழுது போக்கிற்கு 8 பில்லியன் டாலர், பயணம் மற்றும் ஒய்வுக்காக 13.6 பில்லியன் டாலர், வாகனம், செல்போன், கம்ப்யூட்டர்களுக்காக 8.9 பில்லியன் டாலர், சுகாதாரம் மற்றும் மருந்துக்கு 6.4 பில்லியன் என மொத்தம் 51.3  பில்லியன் டாலர் (20,961 கோடி ரூபாய்) நுகர்வுக்காக செலவிடப்படும்.. அதற்காக பொருளாதாரத்தை தேட இப்போதிருந்தே துhண்டப்படுகிறார்கள் என மேற்படி ஆய்வு தெரிவிக்கிறது.

இதை தங்களது லாப வெறிக்காக பயன்படுத்தும் கார்ப்ரேட் நிறுவனங்கள் இன்று ஆளும் ஏக போக ஆதிக்க அரசுகள் மூலம் யுத்தவெறியை கூட கிளப்பிவிட்டு குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்ளிட்டு சிவில் சொசைட்டி மீது ஆயுதம் கொண்டு தாக்கி அழித்து மீண்டும் மறு கட்டுமானம், புதிய சேவை என அழித்தலையும், புதிய ஆக்கத்திலிருந்து லாபத்தையும் உருவாக்கி கொள்கின்றனர்,(

முதல் உலக யுத்தத்திற்கு பின் ஹிட்லர் தனது யூத முகாம்களில் அடைபட்டிருக்கும் கைதிகளை ஏதாவது ஒரு காரணம் சொல்லி தினமும் இருவரை துhக்கிலிட்டு எஞ்சியவர்களை வரிசையாக நேரில் வந்து பார்க்க சொல்வது வழக்கம். அன்றும் அப்படிதான் ஒருவர் 45 வயது, அவர் செய்த குற்றம் பசிக்கிறதென்று கூடுதலாக ஒரு ரொட்டியை திருடி விட்டார் என்பது, மற்றொரு சிறுவன் 14 வயது, அவன் செய்த குற்றம் காய்ச்சல் காரணமாக ரொட்டியை சாப்பிடாமல் வைத்திருந்தது. இருவரையும் துhக்கிலிட்டார்கள். 45 வயதுக்காரர் எடை மிகுதி காரணமாக உடனே கயிறு இறுக்கி இறந்துவிட்டார். 14 வயது சிறுவன் எடை குறைவுகாரணமாகவும், முகாமில் சித்திரவதை காரணமாக உடல் மெலிந்திருந்தால் உயிர் பிரியாமல் மரணத்தின் பக்கத்தில் நின்று துடித்துக் கொண்டிருந்தான். பார்த்து கொண்டிருந்த கைதிகள் கண்ணீர்விட்டு கதறுகிறார்கள், அதில் அந்த சிறுவனின் தந்தையும் கதறுகிறான், “கடவுள் எங்கேயிருக்கிறார்’’ என்று, பக்கத்திலிருந்த கைதி சொல்கிறான், “கடவுள் தான் கயிற்றில் தொங்குகிறார்’’ என்று. மனிதன் மனிதன் மேல் எதை எய்த விரும்புகிறான்? இதுதான் அவர் கேட்ட கேள்வி.. சமூகத்தில் எய்த வேண்டிய ஆயுதம் அன்பு. அந்த அன்பையும், பாசத்தையும், சகோதரத்துவத்தையும், மனித நேயத்தையும் விதைக்கும் அனைவருக்குமான பூபாளத்தை உருவாக்கும் அமைப்பாக இன்றைய இளைஞர் இயக்கத்தின் தளபதியாக டிஒய்எப்ஐ செயல்படுகிறது.

டிஒய்எப்ஐ அமைபபு துவங்கப்பட்ட 1980 களில் இருந்து இன்று வரை இந்திய இளைஞர்களின் வளர்ச்சியில் டிஒய்எப்ஐ அமைப்பின் பங்கை புறக்கணிக்க முடியாது. 18 வயதில் இளைஞர்களுக்கான வாக்குரிமை, வேலையில்லா கால நிவாரணம், வேலை என்பது அடிப்படை உரிமை, கிராமப்புற வேலை உறுதிச் சட்டம் உள்ளிட்ட சாதனைகளை சொல்ல முடியும். கல்வி வியாபாரமயமாக்கலுக்கு எதிரான நீண்ட நெடிய போராட்டத்தில் டிஒய்எப்ஐ புறக்கணித்து வரலாற்றை சொல்ல முடியாது.

அனைவருக்கும் கல்வி. வேலை. சுகாதாரம் கேட்டு போராடுவது மட்டுமல்ல,, இரத்ததம் கேட்பவர்களுக்கு   இரத்ததானம், மருத்துவ முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், உழைப்புதானங்கள், இரவுபள்ளிகள், சமூக நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு பெற்றுதருதல், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, மக்கள் ஒற்றுமை விளையாட்டுவிழாக்கள்,        இயற்கை  சீற்றங்களின் பாதிப்பு நிவாரணம், சுனாமி மீட்பு என மக்கள் சேவையில் மகத்தான பங்கை ஆற்றி வரும் இளமை ததும்பும் அமைப்பாக டிஒய்எப்ஐ பரிணமித்து வருகிறது, இன்று உலக இளைஞர் இயக்கங்களின் வழிகாட்டிடும் அமைப்பாக வளர்ந்து வருகிறது.

1928ம் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நவஜவான் பாரத் சபா வெளியிட்ட அறிக்கையை இன்றைய இளைஞர்கள் நினைவுபடுத்திக் கொள்வது ஒன்றே அவர்களின் வளர்ச்சியை, முன்னேற்றத்தை, இந்திய சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யும்.. அந்த அறிக்கை,.

“ஒரு தேசத்தின் உருவாக்கம் தங்களது சொந்த நலன்களையும், சுகங்களையும், உயிர்களை காட்டிலும் தங்களது     நாட்டு நலனையே பெரிதெனப் பேணும் ஆயிரக்கணக்கான பெயர் தெரியாத ஆண்கள், பெண்கள் தியாகங்களையே வேண்டுகிறது” இளைஞர்கள் சுதந்திரமாக, அமைதியாக பரபரப்பு ஏதுமின்றி பொறுமையாக சிந்திக்கட்டும். இளைஞர்கள் முழு மனதோடும், உண்மையோடும் சேவை, துன்பம், தியாகம் என்ற மூன்று குறிக்கோள்களை வழிகாட்டியாக கொள்ளட்டும்..

மேற்கண்ட சுதந்திரப்போராட்ட வீரர்களின், அமைப்பின் கனவை நனவாக்க “போர் முரசுகளை கொட்டிடும்   அமைப்பாக மட்டுமல்லாது பூக்களோடு கொஞ்சும் அமைப்பாக’’ மழலையர்களை, மாணவர்களை, இளைஞர்களை தேசிய கட்டுமானத்தில் ஒருங்கிணைக்கும் வரலாற்றுக்கடமையை சரியான திசை வழியில் நின்று செயலாற்றும் அமைப்பு டிஒய்எப்ஐ.


நுhல்ஆதாரம் : உலக இளைஞர் இயக்க எழுச்சியும்- இயக்கமும் (அ.பாக்கியம் )

                    இசையானது (கிருஷ்ணா டாவின்ஸி )
                    கம்யூனி°ட் கட்சி அறிக்கையின் வெற்றிப்பயணம் ( ஆர்பிஎ°)
                    இந்திய வரலாற்றில் இளைஞர்கள் ( ச.தமிழ்செல்வன்)
                    டிஒய்எப்ஐ அமைப்புச்சட்டம்

No comments:

Post a Comment