”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

புனிதம் என்பது வார்த்தைகளில்லை செயல்களில்


 

என் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டில்தான் எனது செயல்கள் மேம்படும். அதுவே எனது கட்சி கொடுத்த பணி,. இது தான் உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகளின் பால பாடம்.

 அன்று பிளேக்கிற்கு எதிராக

    1943ல் பிளேக் நோய் தாக்குதல் கோவையில் அதிகரித்தது. மக்கள் கொத்து கொத்தாக பலியானார்கள். எனவே தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வும், பாதுகாப்பு குறித்தும் மருத்துவ ரீதியாக முன்னெடுக்க வேண்டிய நெருக்கடியில் சற்று தாமதிக்காமல் கம்யூனிஸ்ட்டுகளும், தொழிற்சங்க அமைப்பும் அனைத்து மில்களிலும் களத்தில் இறங்கியது.  

    பிளேக் நோயால் இறந்வர்களின்  உடல்களை  இடுகாட்டில் அடக்கம் செய்தனர். இதற்காக கால்களில் மண்ணெண்ணெய் யை  பூசிக் கொண்டு செனஜன் கியாஸ் வீடு விடாக அடித்து சென்றனர். இதில் தோழர். சி.ஏ.பாலன் பாதிக்கப்பட்டு கடும் போராட்டத்திற்கு பின் மருத்துவர் களால் காப்பாற்றப்பட்டார். இந்த நேரத்தில் காலராநோயும் சேர்ந்து பரவ ஆரம்பித்தது.

    சென்னையில் இருந்து தோழர்கள் ஆர்.உமாநாத், எஸ்.கிருஷ்ணன், கே.ரமணி, சி.ஏ.பாலன், பி.ராமசாமி உள்ளிட்டோர் வீடு விடாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரமும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணங்கள் பொதுமக்களிடம் வசூல் செய்து வழங்க வழிகாட்டி வழங்கினார்கள். மேலும் பணஉதவி, வைத்திய உதவி வழங்கியதோடு அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தி னார்கள். உயிரை பணயம் வைத்து சேவை பணியாற்றினார்கள்.

 உணவுக்கும், உடைக்கும்

    1944ல் தமிழகத்தில் உணவு, உடை இரண்டிற்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு பஞ்சத்தை நோக்கி சென்ற போது பதுக்கல்காரர்களுக்கும், கள்ள சந்தை பேர்வழிகளுக்கும் எதிராக செங்கொடி இயக்கம் தமிழகம் முழுவதும் களத்தில் நின்று போராடியது. அப்போது மக்கள் உணவு தானிய மண்டிகள் மற்றும் கடைகள் முன்பு காலை முதல் இரவு வரை காத்திருந்த தருணத்தில்  மக்களை வரிசைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் உணவும், உடையும் கிடைக்க வழிசெய்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் செந்தொண்டர்கள்.

    இந்த பின்னணியில் திருப்பூரில் கலாஸ், ஜவுளி, கைவண்டி, மளிகை, தானிய மண்டிகளில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் ஒன்றிணைந்து இதற்கு எதிராக போராடியதோடு  தங்கள் குழந்தைகளை கொண்டு பாலர் சங்கத்தை உருவாக்கி னார்கள். சிறுவர்கள் இயல்பிலேயே அறச்சீற்றத்தோடு இருப்பவர்கள். எனவே துணியும், தானியமும் கடத்தப்படாமல்  இருப்பதை கண்காணித்து சொன்னார்கள். இதன் தொடர்ச்சியாக  தமிழகத்தில் முதன் முதலாக நியாய விலைகடை அமைக்கப் பட்டது. அத்தோடு அல்லாமல்  ஜின்னிங் போன்ற இடங்களில் வேலை செய்த தொழிலாளிகளுக்கு கால் மூட்டை உணவு தானியம்  கூலியோடு சேர்த்து பெறும் உரிமையை வட்ட ஆட்சியர் மூலம் பெற்றுத் தரப்பட்டது.

 சேவையில்

    திருப்பூரின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண கீரணி ஆபிஸ் எதிர்புறம் அவிநாசி, பிஎன் ரோடு சாலை ஆக்கிரமிப்பில் இருந்த போது அதனை அப்புறப்படுத்தி சாலை கிடைக்க செய்ததும், இன்றைய பேப்ரிகேசன் சாலை முள்ளும், புதருமாக சாக்கடை கழிவுகளோடு இருந்த இடத்தை தூய்மைப்படுத்தி சாலை அமைத்த இயக்கம்.

 வாழ்வின் அடிப்படை தேவைக்கு

    திருப்பூரில் வெளிமாவட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போது 1997, 2003, 2010ம் ஆண்டுகளில் தொடர்ந்து ரேசன் கார்டு கேட்டு பல்லாயிரக் கணக்கில் மக்களை திரட்டி போராடி லட்சத்திற்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகள் கிடைக்க காரணமாக இருந்தது மார்க்சிஸ்ட் கட்சியும், வாலிபர் இயக்கமாகும்.

    குடிநீர், பஸ்கட்டண உயர்வு, சாலைகள் பராமரிப்பு, கழிப்பறை, சாக்கடை, தெருவிளக்கு, மருத்துவம், வீட்டுமனை பட்டா என வாழ்வின் அடிப்படை பிரச்சனைகளுக்கு எல்லா காலத்திலும் தொடர்ந்து போராடி வரும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

 

சேவையே புதிய பண்பாடாய்

2005ம் ஆண்டு திருப்பூரின் பாழ்பட்டு இருந்த அரசு தலைமை மருத்துவமனைகளில் 1100க்கும் மேற்பட்ட இளைஞர்களை கொண்டு உழைப்புதானம் மூலம் தூய்மைப்பணி செய்து இரண்டு வாரத்தில் திருப்பூரே பாராட்டும் வகையில் புது பொழிவுடன் மாற்றியது மட்டுமல்ல தொடர்ச்சியாக திருப்பூரின் பல்வேறு சுடுகாடுகள், பள்ளிகள், ஆரம்ப சுகாதார மையங்களை தூய்மைப்பணி மூலம் பொழிவுற வைத்தது. 

கடந்த 34 ஆண்டுகளாக இரத்ததான கழகம் மூலம் ரத்ததானம், மருத்துவமுகாம், உழைப்பு தானம் என சுனாமி முதல் மழைவெள்ளம், கொரோனா வரை உயிரை பணயம் வைத்து  சேவைப்பணியில் ஈடுபட்டு வரும் மக்கள் அமைப்பாகும்.

·          

இன்று கொரோனா ஒழிப்பு யுத்தத்தில்

·         நேரடியாக நோயால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் இருப்பவர்களுக்கு 50க்கும் மேற்பட்ட உதவி மைய ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உட்பட வாங்கி விநியோகம் சலிப்பில்லாமல் பொறுமையாக தோழர்கள், நிதானத்தோடு பணியாற்றினார்கள்.

·                 அவிநாசி அரசு கல்லூரி கொரோன சிகிச்சை மையத்தினை அமைத்தது, நோயாளிகள் பராமரிப்பில் நிர்வாகத்தோடு இணைந்து இந்திய மாணவர் சங்கத்தினர் 8 பேர் 24 மணி நேரமும் பாராட்டத்தக்க பணியாற்றினார்கள்

·         வாலிபர் அமைப்பின் இரத்ததான கழகத்தின் மூலம் சில அமைப்புகள் மற்றும் நண்பர்கள் உதவியோடு 270 லிட்டர் குளிர்சாதனப்பெட்டி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரத்த வங்கிக்கும், பல்லடத்தில் உள்ள அரசு சிகிச்சை மையத்திற்கு கோவிட் உதவி மையம் மூலம் 165 லிட்டர் குளிர்சாதனப் பெட்டி வழங்கப்பட்டது. மேலும் தணிக்கையாளர் அமைப்பு மற்றும் இதர நண்பர்கள் உதவியோடு ஆக்சிஜன் அவசர தேவைக்கு 20 சிலிண்டர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. தற்போது தனியாகவும் இரண்டு சிலிண்டர்கள் வைத்து அவசரதேவைக்கு உதவி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

·         நோயாளிகளை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி அரசு மருத்துவமனை,  வேலம்பாளையம் சிகிச்சை மையம், ஆம்புலன்சிற்கு என 9 வழங்கப்பட்டது. இறந்த கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்வதற்கான பாதுகாக்கப்பட்ட 50 பைகளை சவக்கிடங்கிற்கு வாங்கி அளிக்கப்பட்டது.

·         மாநகராட்சி நிர்வாகத்தோடு இணைந்து 4 இலவச ஆம்புலன்ஸ் வாகனங்கள் நோயாளி களை கொரோனா தடுப்பு மையம், அரசு மருத்துவமனைகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட நோயாளிகளை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

·         அன்னவாசல் திட்டம் மூலம் மாவட்டம் முழுவதும் நாள்தோறும் 10 முதல் 26 நாட்கள் வரை சுமார் 2600 உணவுப் பொட்டலங்கள் தயார் செய்து தினசரி வழங்கப்பட்டது.

·         திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு கிளைப் பகுதிகளில் ஒரு மாத காலமாக கபசூர குடிநீர், மூலிகை தேநீர், துண்டறிக்கை விநியோகம் என ஒவ்வொரு பகுதியிலும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் உள்ள கொரோனா நோய் தொற்று சூழலின் அபாய நிலையை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்திற்குத் தெரிவித்து, போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை செய்தோம்.

இக்காலத்தில் மாநில முதல்வர் தனிப்பிரிவு, சுகாதாரத்துறை அமைச்சர், மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், மருத்துவக் கல்லூரி முதல்வர், மண்டல சுகாதாரதுறை அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர், நகர் நல அதிகாரி  மற்றும் துறை சார்ந்த கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரின் கவனத்திற்கு  தேவையான கோரிக்கைகளை மனுக்களாகவும், நேரடியாகவும் தொடர்ந்து 25க்கும் முறைக்கு மேல் கொண்டு சென்று  உடனுக்குடன் தலையீடு செய்ய வைத்துள்ளோம். 

·                குறிப்பாக தனியார் மருத்துவமனை கட்டண கொள்ளைக்கு எதிராக உடனடி தலையீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முடிந்தது.

·                     10 சதவீத பணியாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் வேலை செய்யலாம் என்ற அறிவிப்பை ரத்து செய்து தொழிலாளர்களின் வாழ்க்கையை பாதுகாக்க உறுதி செய்ய வேண்டும் என முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டது.

 கொரோனா நோயாளிகளுக்கு உரிய உணவு வழங்கப்படுவதில்லை என அதிமுக ஆட்சியின் போது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து மே மாத இறுதியில் தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தரமான உணவு நோயாளிகளுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் அதை கண்காணித்து தொடர்ச்சியாக அறிக்கை அளிக்க தனி மருத்துவர்களை பொறுப்பாக வேண்டும் என  உத்தரவிட்டது குறிப்பிட்டத்தக்கது.

பொது மக்களுக்கு அச்சத்தைப் போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி நோயை எதிர் கொள்வதற்கான நம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்க மனநல ஆலோசனை வழங்குவது என பன்முகமான ஆலோசனைகள் கோரிக்கைகளாக அரசு நிர்வாகத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டன. கம்யூனிஸ்டுகளுக்கே உண்டான உளசுத்தியோடு.,

No comments:

Post a Comment