‘இளைஞர்களுக்கு வேலை கொடு’ எனக் கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் 3000 கி.மீ சைக்கிள் பயணம் கோவை, சென்னை, பாண்டிச்சேரி, குமரி ஆகிய மையங்களில் இருந்து ஏப்ரல் 21 அன்று துவங்கி நடத்தி வருகிறார்கள். மே 1 திருச்சியில் சங்கமிக்கி றார்கள்.
‘அறிவை அகண்டமாக்கு, விசாலப்பார்வை யால் விழுங்கு மக்களை, மானுட சமுத்திரம் நானென்று கூவு’ என்ற பாவேந்தரின் கனவு களோடு, வாளின் பதத்தோடு, வறுமையின் கோபத்தோடு, பசித்த வயிற்றின் எரிகனலோடு வாலிப சேனை வருகிறது.நீட், கியூட், மத்திய பல்கலைக்கழகம் செல்ல நுழைவுத் தேர்வு என புதிய கல்விக் கொள்கையின் பெயரால் கொள்ளையடிக்கும் கோச்சிங் மையங்களை, நிறுவனங்களை உரு வாக்கிக் கொண்டு இருக்கிறது ஒன்றிய அரசு. புதிய சூழலில் மிகப் பெரும் வர்த்தகமாக உரு வெடுத்து வருகிறது கோச்சிங் துறை. இந்தியாவில் ஏறத்தாழ 70000 கோடி ரூபாய் கோச்சிங் துறையில் புரள்கிறது.
NEET, JEE, CUET, GMAT, GRE, IELTS மற்றும் TOEFL போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு ஆண்டுக்கு 25 லட்சம் பேர் நுழைவு தேர்வு மையங்களை தேடி வரு கிறார்கள். இவற்றிற்காக பல ஆயிரம் கோடி செலவழிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு குடும்பமும் தனது மாத வருமானத்தில் 12 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை செலவு செய்வதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது. இதற்காக மாதம் ரூ. 5000 வரை குறைந்தபட்சம் செலவு செய்யப்படுகிறது. தற்போது பேக்கேஜ் அடிப்படையில் 1.25 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் அதிகாரவர்க்க கருவிகளை உருவாக்க பயிற்சி மையங்கள் நடத்தப்படுகிறது. குறிப்பாக மத்திய பொது தேர்வாணையம் நடத்தும் பல்வேறு விதமான துறை சார்ந்த தேர்வுகளுக்கு பயிற்சி மையம் என்பது புற்றீசல் போல் முளைத்துக் கொண்டே இருக்கிறது. இத்தனை மையங்கள் துவங்கப்பட்டு தேர்வில் வெற்றி பெற்று வந்தாலும், இன்றைய வேலை வாய்ப்புச் சந்தை அதற்கு தகுந்தாற் போல் இல்லை. ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறு வனங்களில் இருந்து வெளிவரும் மாணவர்களுக்கே இங்கு வேலைவாய்ப்பு உள்ளது.
ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 30 ஆண்டுகளாக பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை நூறு லட்சங்களை கடந்து செல்லும். 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலை யின்மையின் அளவு அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசுப் பணிகளில் மட்டும் சுமார் 8.75 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ரயில்வே, பாதுகாப்பு, தபால், இன்சூரன்ஸ், வங்கி உள்ளிட்டு இன்று அரசு நிறுவனங்களே தேவைக் கேற்ப நிரந்தர ஊழியர்களை தேர்வு செய்வ தற்கு பதில் ஒப்பந்தமுறையில் தேர்வு செய்வது என்பது அதிகரித்து வருகிறது. இதற்கு சாதகமாக இந்தியாவின் தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டு, சிலவற்றை ஒழித்துக் கட்டி 4 சட்ட தொகுப்புகளாக ஒன்றிய அரசு மாற்றியுள்ளது.
இதன் விளைவாக குறைந்தபட்சம் ஊதியமான ரூ. 21000 என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டு, இன்று வெறும் ரூ.7ஆயிரம் முதல் ரூ.12000 வரை ஊதியம் பெறுபவர்களாக, அதிலும் பல பிடித்தங்களுக்குப் பின் கையில் சொற்ப தொகையே பெறுபவர்களாக மாறி யுள்ளனர்.
கௌரவமான வேலை, வருமானமுள்ள வேலை, சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை, சமூக தேவைக்கான உற்பத்தியோடு சம்பந்தப் பட்ட வேலை என்பதற்கு மாறாக உண்மையில் உண்மையான ஊதியத்தை குறைத்த வேலை என்பதே இன்று பொதுத்துறைகளில் கூட பொருத்தப்படுகிறது.
சமூக நீதியை, இடஒதுக்கீட்டை, தொடர்ச்சி யாக காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டிய பொதுத்துறை நிறுவனங்கள் பல பத்தாண்டுகளாக நிரப்பாமல் ஏமாற்றி வருவதை எந்த நீதிமன்றமும் கேள்விக்குள்ளாக்குவதில்லை. ஆற்றில் அடித்துச் செல்லும் ஒருவன் கிடைக்கும் சிறு குச்சியை பிடித்துக் கொண்டு உயிர் பிழைக்க முயற்சி செய்வதைப் போல் வேலைகளுக்கு எப்படியாவது சேர வேண்டும் என்று சேர்ந்தவர்களை சட்டத்திற்கு புறம்பாக சேர்ந்தவர்கள் என்று கூறி, அவர்கள் பல பத்தாண்டு பணியாற்றியிருந்தாலும் ஒரே உத்தர வில் வேலையை விட்டு அனுப்பும் நிலை நீடிக்கிறது.
குறைந்தபட்சம், தொழிலாளர் நலச் சட்டங்கள் சொல்லும் 240 நாட்கள் பணி யாற்றியவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற சட்ட அடிப்படைகளைக் கூட மீறுவதா கவே அரசு மற்றும் பொதுத்துறையின் பல்வேறு பிரிவுகள் இன்றும் செயல்பட்டு வருகின்றன. இதில் நடைபெறும் அத்து மீறல்களை தடுத்து நிறுத்த நீதிமன்றங்கள் முயலுவதில்லை. இது குறித்த வழக்குகளில் பெரும் பகுதி பாதிக்கப் பட்டவர்களே மீண்டும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
எடுத்துக்காட்டாக, 1990 களில் இந்திய ரயில்வேகளில் சுமார் 16.5 லட்சம் பேர் நிரந்த ரத் தன்மையும், சுமார் 4 லட்சம் பேர் தற்காலி கத் தொழிலாளர்களாகவும் இருந்த நிலையில் தற்போது ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்கிறது ஒன்றிய அரசு. அதற்காக 4 லட்சம் தற்காலிக பணியிடங்களை ஒழித்துக் கட்டியும், 4 லட்சம் நிரந்தர தொழிலாளர்களை குறைத்து அத்துக்கூலிகளாகவும், அவுட்சோர்சிங்காகவும் மாற்றியுள்ளது. இவர்கள் மிக கொடூரமான முறையில் சுரண்டப்படுகின்றனர். பல மாதங் கள் ஊதியம் வழங்காமல் அதில் கமிசன் பெற்று சொற்ப ஊதியம் வழங்கும் ஒப்பந்த கம்பெனிகள் என நிலைமை கடும் நெருக்கடியாக மாறியுள்ளது.
பெரும் பகுதி மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவமனைகளில் காவலர், மருத்துவ கடைநிலை பணியாளர்கள், துப்புரவுப் பணி ாளர்கள் உள்ளிட்டோர் சொற்ப ஊதியத்தில் ஒப்பந்தக் கம்பெனிகளால் அமர்த்தப்படு கின்றனர். எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலை யில் இன்று அந்தப் பணியிடங்கள் சுருங்கி வருகின்றன. பெரும் பகுதி அரசு மருத்துவமனை களில் நோயாளிகள் தூய்மையற்ற நிலையில் மிகவும் அவதியுறும் நிலைக்கு தள்ளப்படு கின்றனர்.
இன்றும் கிராமப்புறங்களில் தற்கொலைச் சாவுகளையும், பட்டினிச் சாவுகளையும், இடப் பெயர்வுகளையும் தடுத்து நிறுத்தியதில் மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்திற்கு பங்குண்டு. இவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதை ஒன்றிய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தியும் கேள்விக்குள்ளாக்கியும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலின் கோரிக்கைகளோடு இளைய இந்தியாவின் பிரதிநிதிகள் நம்மைத் தேடி வருகிறார்கள்.
அனைவருக்கும் வேலை என்ற முழக்கத்தோடு இயற்கையை மாசுபடுத்தாமல், தங்களது கால்களின் பலத்தோடு இரு சக்கரங்கள் சுழல நகர்ந்து வருகிறார்கள். அடிக்கும் வெயிலையும், காற்றின் வேகத்தையும் பறவையின் லாவகத்தோடு கிழித்துக் கொண்டு முன்னேறி வருகிறார்கள்.
ஒற்றைக் கலாச்சாரத்தை நிலைநிறுத்த முயற்சிக்கும் கார்ப்பரேட் நல - பாசிச ஒன்றிய பாஜக அரசின் திட்டங்களை முறியடிக்கும் விதத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பன்மைத் துவ கலாச்சாரத்தின் பின்புலத்தோடு இளை ஞர் பட்டாளம் நம்மைச் சந்திக்க வருகிறார்கள். அவர்களை வரவேற்போம், பாராட்டுவோம்! எம் நெஞ்சமெல்லாம் முழு நம்பிக்கை, நாம் வெல்லுவோம்!
செ.முத்துக்கண்ணன் டிஒய்எப்ஐ முன்னர்ள் மாநிலத்தலைவர்
No comments:
Post a Comment