”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

இமை மூடா போராளியே

 

உள்ளத்தை
மக்களுக்காக தந்தாய் !
சிந்தனையை
தத்துவமாய் வளர்த்தாய் !
பாசிச இருளை அகற்ற
மார்க்சிய ஓளியானாய் !
வரலாற்றை போதித்தாய் !
எளிய மக்களின் கதைகளோடு..
நாடாளுமன்றத்தின் சிம்ம குரலோனாய்!
உழைக்கும் மக்களின் போர்வாளாய்..
ஒப்பற்ற தொழிலாளிவர்க்க படைதளபதியாய் !
இமை மூடா போராளியே ! 
மறந்து இமை மூடினாயா ? 
ஜனனத்தையும், மரணத்தையும் 
அறிவியலாய் பார்த்தாயே எம் தோழர !.. 
இன்று உடலையும் தானமாய் தந்துவிட்டாய்! 
காவியங்கள் கர்ணனை சொல்கிறது 
காலம் உன்னை சொல்கிறது தோழனே..

No comments:

Post a Comment