குதிரை மிரண்ட சத்தத்தைக்கேட்டு கும்பினிப் படையினர் ஓடிவந்துவிட்டார்கள். ஓடி வந்தவுடன் இவன் என்ன செய்தான் தெரியுமா? குதிரையை விட்டுவிட்டு அங்கே இருக்கக்கூடிய புல்லை எடுத்து மேலேபோட்டு அந்தப் புல்லுக்குள் படுத்துக் கொண்டான். தேடிவந்த காவலர்கள் என்ன குதிரை கட்டுத் தறியைவிட்டு ஓடிவந்து இருக்கிறதே என்று குதிரையின் கயிற்றைபிடித்து சரி இதைக்கொண்டுபோய் லாயத்தில் கட்டவேண்டாம். இங்கேயே கட்டிவிடுவோம் என்று அங்கே முளையை அடிக்கிறார்கள். முளை உள்ளே இறங்குகிறது. முளை அடிக்கிற இடத்தில் படுத்துக்கிடக்கின்றான் ஒண்டிவீரன்.
வெற்றி வீரன் ஒண்டிப் பகடை
வீரன் அழகுமுத்துக்கோன்.
வரலாறு சில அதிசயங்கள் நிகழ்த்துவதுண்டு. துரோகத்திற்கு அடையாளமாக இன்றும் எட்டப்பனை கூறுகிறோம். ஆனால் கட்டபொம்மனின் பாட்டனார் பொல்லாப்பாண்டி பிரிட்டிஷ் கும்பினியாரிடம் சமரசமாக நடந்து கொண்டார். கப்பம் கட்டினார். அவருக்கு நேர் எதிராக எட்டப்பனின் மூதாதையர்கள் கும்பினியாரை எதிர்த்துள்ளனர். இந்த பாளையங்கள் எப்போதும் நேர்ரெதிர் நிலையையே மேற்கொண்டு வந்துள்ளன.
அன்றைய திருநெல்வேலி மாவட்டமே சின்னாபின்னப் படுத்தப்பட்டதாக கால்டுவெல் எழுதுகிறார். திருநெல்வேலி கெஜட் டியாரிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய முக்குலத்து மாவீரன் அழகுமுத்து நேருக்கு நேர் சந்திக்க பயந்தது கும்பினியப்படை அதனால் கான்சாகிப் மூலம் அழகுமுத்துவை சந்திக்க நினைத்தது.இதற்கிடையில் பெருநாழி காட்டில் இருந்தே படை திரட்டி 1959ல் கான்சாகிப்போடு அழகுமுத்து போர் நடத்தி தோல்வியை சந்தித்தான்.
மாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரித்துக்கொண்டிருந்தது.
வீரன் பூலித்தேவன்.
காத்தப்ப பூலித்தேவனுக்கு ஒரு நெடியவரலாறு இருக்கிறது. சரித்திரத்தின் சுழற்சியில் வரலாற்றுக் குறிப்பு சுவடுகளின் அடிப்படையில் 1378 ஆம் ஆண்டு வரகுராம சிந்தாமணி பூலித்தேவர் தொடங்கி இந்தாண்டோடு சரியாக 633 ஆண்டுகள் ஆகின்றன. வழிவழியாக ஒவ்வொரு பிள்ளைக்கும் பெயர் சூட்டுகிற போது பாட்டனின் பெயரை பேரனுக்குச் சூட்டுகிற வழக்கம் நம் நாட்டில் பல குலங்களில் உள்ள காரணத்தால் காத்தப்ப பூலித்தேவன் என்ற பெயர் தொடர்ந்து பேரன்களுக்கு நான்காவது பெயராக 1715 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி சித்திரபுத்திர தேவருக்கும் சிவஞான நாச்சியாருக்கும் பிள்ளையாக பிறந்த மாமன்னன் தான் காத்தப்ப பூலித்தேவர் ஆவார். 11 வயதிலேயே, அரியணைக்கு வரநேர்ந்த சின்னஞ்சிறு பிள்ளையான மாவீரன்தான் காத்தப்ப பூலித்தேவன். 2015 ம் ஆண்டு வந்தால் 300 பிறந்து ஆண்டுகளாகிறது.
கிழக்கே குவளைக்கண்ணி. மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை. தெற்கே முத்துக்குளம் சிவகிரிக்குப் பக்கத்தில் வடக்கே தலைவன் கோட்டை. இதுதான் அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்ட சட்டப்பூர்வமான பகுதியாக முதலில் இருந்தது.
வாசுதேவநல்லூர் கோட்டைக்கு ஈடான கோட்டை எதுவும் இல்லை என்றும் பரங்கியர் சொன்னார்கள். இது தென்னாட்டில் இருக்கின்ற மற்றக் கோட்டைகளைவிட, அபூர்வமான கோட்டை. பொறியியல் நுட்பத்தோடு கட்டப்பட்டு இருக்கின்ற கோட்டை. அந்தக் கோட்டையின் நீளம் 650 கெஜம். அகலம் 300 கெஜம். கோட்டையின் அடிமட்டத்தின் அகலம் 15 அடி. உச்சியின் அகலம் 5 அடி. கோட்டையின் மூலைகளில் கொத்தளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்தக் கொத்தளங்களுக்குள்ளே நிலவறைகளைப்போல வீரர்கள் உள்ளே இருந்து சண்டை செய்வதற்கு ஏற்ற அமைப்புகள் இருந்தன. வெளியே இருந்து பார்த்தால் வீரர்கள் இருப்பது தெரியாது. அதில் அமைக்கப்பட்டு இருந்த துவாரங்கள் வழியாக அவர்கள் ஆயுதங்களை ஏவக்கூடிய அமைப்பு இருந்தது. சுண்ணாம்பும், பதநீரும், கருப்பட்டியும், கம்பப் பசையும் மற்றும் பல்வேறு பொருட்களையும் கொண்டு அமைத்த பீரங்கிக் குண்டுகள் கூட துளைக்க முடியாத மிகச்சிறந்த கோட்டை.
1755 ஆம் ஆண்டு பரங்கிப்படையின் கர்னல் ஹீரான், ஆர்க்காடு நவாப்பின் துணையோடும், மாபூஸ் கானையும் துணைக்கு அழைத்துக்கொண்டு களக்காட்டுக் கோட்டையைக் கைப்பற்றினார்கள். அப்போது வாசுதேவநல்லூரில் இருந்த பூலித்தேவருக்கு களக்காடு வீழ்ந்ததன் காரணத்தை அறியவும், மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்றும் நினைத்தார். களக்காடு கோட்டையை கைப்பற்றுவது மட்டுமல்ல, கும்பினிபடைக்கு எதிராகவும், ஆற்காடு நவாபிற்கு எதிராகவும் எப்போதும் வெற்றி பெறும் வகையில் முதன் முதலாக ஒரு கூட்டமைப்பை உருவாக்குகினார்.
ஆறடி உயரமும், இரும்புபோன்ற தேகமும், ஒளிவீசும் கண்களும், பகைவருக்கு அஞ்சாத உள்ளமும், நட்புக்குத் தலை வணங்குகின்ற பண்புமும், அடக்குமுறைக்கு அஞ்சாத நெஞ்சுறுதியும், குதிரையில்லா விட்டாலும் 40 கல் தொலைவு வேகமாக நடக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மகத்தான மாவீரனாக பூலித்தேவன் இருந்தார். பூலித்தேவர் நடந்தால் உடன் வரும் வீரர்கள் தொடர்ந்து ஓடித்தான் வரவேண்டும் என்றும் அவரைப்பற்றி நாட்டுப்பாடல் சொல்கிறது. 40 கல் தொலைவும் அயர்வின்றி ஒரு குதிரையின் ஓட்டத்தில் நடக்கக்கூடிய ஆற்றல் மன்னர் பூலிக்கு இருந்தது என்று நாட்டுப்பாடல்கள் தெரிவிக்கின்றன.
1756 மார்ச் 21 இல் திருநெல்வேலியில் மீண்டும் போர் நடத்தி வெள்ளையரை தோற்கடித்தார் மன்னர் பூலித்தேவன். அந்தப் போரில் முடேமியா என்கின்ற இஸ்லாமியத் தளபதியின் மார்பில் குண்டு பாய்ந்து இரத்த வெள்ளத்தில் அவன் புரண்டு கொண்டிருந்த வேளையில் மன்னர் பூலித்தேவருக்குத் தகவல் கிடைத்து, ஓடிச்சென்று முடேமியாவை எடுத்து மடியிலே கிடத்தி இந்த மண்ணில் அந்நியனை எதிர்த்த போரில் வீரத்தின் விளை நிலமாக திகழ்ந்து உன் ஆவி பிரிகிற வேளையில் உன்மேனியில் இருந்து இரத்தம் என் மடியில் பாய்கிறது என்று உச்சி மோந்து அவனை அரவணைத்துக் கொண்டார். இஸ்லாமியக் குலத்தில் பிறந்து நவாப் படையில் வளர்ந்து, தன்னோடு வந்து படையிலே சேர்ந்து போரிலே உயிர் விட்டவனுக்கு நடுகல் எழுப்பினார் பூலித்தேவன்.
இதற்கிடையில் கும்பினி படைக்கு எதிராக மாறி வீரமுடன் போராடிய மருதநாயகத்தை 1964ல் பிரிட்டிஷார் தூக்கிலிட்டனர்.
ஆனால், பூலித்தேவரின் மறவர்கள் அந்த ஓட்டைகளை அடைப்பதற்கு பனை ஓலைகளையும், ஈரமண்ணையும் கொண்டுவந்து அந்த ஓட்டைகளை அடைத்தார்கள். இந்த வீரத்தை எங்கும் பார்த்தது இல்லை. மறவர்கள் சிலரின் உடலைப் பீரங்கிகுண்டுகள் துண்டு துண்டாகவும் சின்னாபின்னமாகவும் சிதறவைத்தன. குண்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. பக்கத்தில் நிற்பவன் செத்து விழுகிறான். அதைப்பற்றிக் கவலைப்படாமல் அந்த இடத்தின் சிதிலமான பகுதிகளை செப்பனிடுவதில் பனை ஓலைகளையும், ஈரமண்ணையும் கொண்டுவந்து அந்த ஓட்டைகளை அடைப்பதிலே உறுதியாக இருக்கக்கூடிய வீரர்களை இந்த உலகத்தில் எங்கே பார்க்க முடியும். வாசுதேவநல்லூரில் தான் பார்க்க முடிந்தது என்று தனது குறிப்பில் எழுதிவைத்துள்ளான்.
''பூங்கமலத்தயன் மால் அறியா உமைசங்கரனே
புகலக் கேண்மின்
தீங்குபுரி மூவாலிச வினையே – சிக்கி
உழறும் அடியேன் தன்னை
ஓங்கையில் சூழ் உலகமதில் உனை அன்றி
எனைக்காக்க ஒருவருண்டோ
ஈங்கெழுந் தருள்புரியும் இன்பவாருதியே
இறைவனே போற்றி போற்றி''
1. திருநெல்வேலி சரித்திரம் - கால்டுவெல்
2. விடுதலை தழும்புகள் - சுபொஅகத்தியலிங்கம்
3. திரு. வைகோ அவர்கள் பேசிய உரையிலிருந்து..